கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:2139 நிரந்தரமான் தேவ பிரசன்னமே தேவன் அருளிய வாக்குத்தத்தம்!

2 சாமுவேல்: 7: 8,9  இப்போதும் நீ என் தாசனாகிய தாவீதை நோக்கி: சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீ இஸ்ரவேல் என்கிற என் ஜனங்களுக்கு  அதிபதியாயிருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை நான் ஆட்டுமந்தையை விட்டு எடுத்து, நீ போன எவ்விடத்திலும் உன்னோடே இருந்து, உன் சத்துருக்களையெல்லாம் உனக்கு முன்பாக நிர்மூலமாக்கி, பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்துக்கு ஒத்த பெரிய நாமத்தை உனக்கு உண்டாக்கினேன்.

2 சாமுவேல் 7: 8-29 தேவனுடைய சித்தத்துக்குள் நாம் நடக்கும் போது நம்முடைய வாழ்க்கை எப்படி அமையும் என்பதை போதிக்கும் ஒரு வேதாகமப் பகுதியாகும்.

தாவீது தன் கண்களை மேல் நோக்கிப் பார்த்து தேவனுடைய பெட்டி நிரந்தரமாகத் தங்கும் ஒரு ஆலயம் எழுப்ப வேண்டும் என்று தரிசனம் கண்ட பின், தேவனாகிய கர்த்தர் தாவீதுடைய நண்பனும், தீர்க்கதரிசியுமாகிய நாத்தான் மூலம் பேசிய காரியம் என்னவெனில், தாவீதிடம் சொல்லு, அவன் அல்ல! நானே அவனைத் தெரிந்துகொண்டேன்!, ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த அவனை என்னுடைய ஜனங்களுக்கு ராஜாவாக உயர்த்தினேன். சமன்வெளியில் அவனோடு இருந்த நான் சிம்மாசனத்திலும் அவனோடு இருப்பேன்!

எத்தனை பெரிய வாக்குத்தத்தம்! தாவீது தன் வாழ்வில் தேவனை மையமாக வைத்து, தேவனுடைய பணியைத் தன் தரிசனமாக கொண்டவுடன் கர்த்தர் அவனோடு கூட இருப்பதாக வாக்களிக்கிறார். தாவீது தரிசனமில்லாமல் அலைந்து கொண்டிருந்தபோது அவனுக்கு இந்த வாக்குத்தத்தம் அளிக்கப்படவில்லை. தேவனுடைய சித்தத்தை செய்ய அவன் சிந்திக்க ஆரம்பித்தபோதுதான் அளிக்கப்பட்டது.

தாவீது தேவனுடைய சித்தத்தின் கீழ் வாழ ஆரம்பித்தவுடன் அவனுக்கு கஷ்டமே வராது என்றுதானே கடவுள் சொன்னார்.  கர்த்தர் அவன் சத்துருக்களையெல்லாம் நிர்மூலமாக்குவேன் என்று சொன்னாரே!  

அப்படியானால் நானும் என்னை தேவனுடைய சித்தத்துக்கு ஒப்புக்கொடுத்து விட்டால் எனக்கு துன்பமே வராது அல்லவா? என்று நீங்கள் கேட்கலாம்!  உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் அதற்கு என் பதில், நிச்சயமாக அப்படியல்ல என்பதுதான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறியவிதமாய், முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூட கொடுக்கப்படும். ( மத்:6:33)

இவைகளெல்லாம் என்றால் எவைகள்? கஷடமில்லாத, துன்பமில்லாத வாழ்க்கையா?  இல்லை! நிரந்தரமான தேவ பிரசன்னம்! எல்லாவற்றிலும், எல்லா நேரங்களிலும் நம்மோடிருக்கும் தேவபிரசன்னம்!

ஒருவேளை இன்று தீர்க்கதரிசியாகிய நாத்தான் நம்மிடம் வந்து தாவீதைப்போல கர்த்தருடைய ஆசீர்வாதம் உன்னுடைய வாழ்க்கையில் இருக்கிறது என்று சொல்வாரானால் நாம் எதை கர்த்தரிடம் எதிர்பார்ப்போம்?

நிரந்தரமான அவருடைய பிரசன்னத்தையா அல்லது இலகுவான உலக வாழ்க்கையையா?  எவைகள் முக்கியம்? யோசித்துப் பார்!

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment