2 சாமுவேல்: 11:15 அந்த நிருபத்திலே: மும்முரமாய் நடக்கிற போர்முகத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு அவனைவிட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதியிருந்தான். தாவீதின் நகரமாகிய எருசலேமில் சூரியன் அஸ்தமித்துவிட்டது! ராஜாவாகிய தாவீது தன்னுடைய படுக்கை அறையில் தூக்கமில்லாமல் புரளுகிறான். அவன் மனது படபடத்தது. அவன் பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறான். அதிலிருந்து எப்படி வெளியே வருவது என்றேத் தெரியவில்லை. அவன் எல்லாமே சுலபமாக முடிந்துவிடும் என்று தவறாக எண்ணி தன்னை இச்சைக்குட்படுத்தி விட்டான். இப்பொழுது… Continue reading இதழ்:2168 ஜாக்கிரதை! கீழே விழுந்து விடாதீர்கள்!
Month: November 2024
இதழ்:2167 சோதனை என்ற தடைகளைத் தாண்டும் விசுவாசம்!
2 சாமுவேல் 11:11 உரியா தாவீதை நோக்கி: பெட்டியும், இஸ்ரவேலும், யூதாவும் கூடாரங்களிலே தங்கி, என் ஆண்டவனாகிய யோவாபும், என் ஆண்டவனின் சேவகரும் வெளியே பாளயமிறங்கியிருக்கையில் நான் புசிக்கிறதற்கும், குடிக்கிறதற்கும் என் மனைவியோடே சயனிக்கிறதற்கும் என் வீட்டிற்குள் பிரவேசிப்பேனா? நான் அப்படி செய்கிறதில்லை என்று உம்முடைய பேரிலும், உம்முடைய ஆத்துமாவின் பேரிலும் ஆணையிட்டுச் சொல்கிறேன் என்றான். இன்றைய வேதாகம வசனத்தில் பார்க்கும் சம்பவத்தில் உரியா ராஜாவகிய தாவீதுக்கு முன்னால் நின்றது என் கற்பனையில் வந்தது. நான் அவ்விடத்தில்… Continue reading இதழ்:2167 சோதனை என்ற தடைகளைத் தாண்டும் விசுவாசம்!
இதழ்:2166 பிரிவினை என்ற சுவர் இன்றி சேவை செய்!
2 சாமுவேல் 11: 11 ..... பெட்டியும், இஸ்ரவேலும், யூதாவும் கூடாரங்களிலே தங்கி, என் ஆண்டவனாகிய யோவாபும், என் ஆண்டவனின் சேவகரும் வெளியிலே பாளயமிறங்கியிருக்கையில்.....நான் அப்படி செய்கிறதில்லை என்று உம்முடைய பேரிலும், உம்முடைய ஆத்துமாவின் பேரிலும் ஆணையிட்டுச் சொல்கிறேன் நாம் ஒவ்வொருவரும் ஒரு நோக்கத்தோடு வாழத்தானே ஆசைப்படுகிறோம்? சிலருக்கு வாழ்வில் உயருவதே நோக்கம், சிலருக்கு பிள்ளைகளைக் குறித்த நோக்கம். என் வாழ்க்கையில் நோக்கமே இல்லை, நான் எதையும் பற்றிக் கவலைப்படாமல் எனக்காகவே வாழ்கிறேன் என்று சொல்பவரை நான் இதுவரைப்… Continue reading இதழ்:2166 பிரிவினை என்ற சுவர் இன்றி சேவை செய்!
இதழ்:2165 கர்த்தரைத் தன் வெளிச்சமாய்க் கொண்ட ஒருவன்!
2 சாமுவேல் 11:11 உரியா தாவீதை நோக்கி: பெட்டியும், இஸ்ரவேலும், யூதாவும் கூடாரங்களிலே தங்கி, என் ஆண்டவனாகிய யோவாபும், என் ஆண்டவனின் சேவகரும் வெளியே பாளயமிறங்கியிருக்கையில் நான் புசிக்கிறதற்கும், குடிக்கிறதற்கும் என் மனைவியோடே சயனிக்கிறதற்கும் என் வீட்டிற்குள் பிரவேசிப்பேனா? நான் அப்படி செய்கிறதில்லை என்று உம்முடைய பேரிலும், உம்முடைய ஆத்துமாவின் பேரிலும் ஆணையிட்டுச் சொல்கிறேன் என்றான். தாவீதைப் பற்றியே படித்துக் கொண்டிருக்கும் நாம் உரியாவைப் பற்றி ஏன் சற்று படிக்கக்கூடாது என்று நினைத்து ஆரம்பித்தேன். ஆனால் உரியா… Continue reading இதழ்:2165 கர்த்தரைத் தன் வெளிச்சமாய்க் கொண்ட ஒருவன்!
இதழ்:2164 தனிமையில் நீ வாழும் வாழ்க்கை!
2 சாமுவேல் 11:14 காலமே தாவீது யோவாபுக்கு ஒரு நிருபத்தை எழுதி உரியாவின் கையில் கொடுத்து அனுப்பினான். இன்றைய வேதாகமப்பகுதியைத் தொடர உதவிசெய்த கர்த்தரை மனமாரத் துதிக்கிறேன். தொடர்ந்து ஒவ்வொருநாளும் இந்த வேதாகம தியானத்தை வாசிக்கும் உலகத்தின் பல பாகங்களில் வாழும் என்னுடைய வாசகர்களுக்கு மனமார்ந்த நன்றி! ஒரு டெலிவிஷன் ஷோ பார்த்துக்கொண்டிருந்தேன். அது ஒரு அறிவுப்பரீட்சை. அதில் என்ன விசேஷம் என்றால் அந்த பரீட்சையில் வரப்போகும் கேள்விகளுக்கு பதில் எழுதப்பட்ட ஒரு கவர் அவர்கள் ஒவ்வொருவர்… Continue reading இதழ்:2164 தனிமையில் நீ வாழும் வாழ்க்கை!
இதழ்:2163 இன்று எங்களை தீமையினின்று இரட்சியும்!
2 சாமுவேல் 11: 12, 13 அப்பொழுது தாவீது உரியாவை நோக்கி; இன்றைக்கும் நீ இங்கேயிரு. நாளைக்கு உன்னை அனுப்பிவிடுவேன் என்றான்..... தாவீது அவனைத் தனக்கு முன்பாகப் புசித்துக் குடிக்கிறதற்கு அழைத்து, அவனை வெறிக்கப்பண்ணினான்.ஆனாலும் அவன் தன் வீட்டுக்குப் போகாமல் சாயங்காலத்திலே தன் ஆண்டவனின் சேவகரோடே தன் படுக்கையிலே படுத்துக்கொண்டான். தாவீது தந்திரமான மயக்கும் வார்த்தைகளாலும், ருசியான பதார்த்தங்களாலும் உரியாவை மயக்கி அவனுடைய வீட்டுக்கு அனுப்பும் முயற்சியில் தவறிப்போனான். அதனால் இப்பொழுது புதிய முயற்சியில் ஈடுபடுகிறான். அவனைத்… Continue reading இதழ்:2163 இன்று எங்களை தீமையினின்று இரட்சியும்!
இதழ்:2162 வாழ்க்கையை நரகமாக்கிய சிற்றின்பம்!
2 சாமுவேல் 11:10 உரியா தன் வீட்டுக்குப்போகவில்லையென்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது உரியாவை நோக்கி, நீ பயணத்திலிருந்து வந்தவன் அல்லவா, நீ உன் வீட்டிற்கு போகாதிருக்கிறது என்ன என்று கேட்டான். என்னுடைய அம்மா நன்றாக லேஸ் பின்னுவார்கள். என்னையும் ஏதாவது ஒரு டிசைனைப் பின்பற்றி பின்னச் சொல்வார்கள். ஒருநாள் நான் பின்னிய போது ஒரு சிறு தவறு பண்ணிவிட்டேன். ஒரே ஒரு பின்னல்தானே விட்டு விட்டேன் ஒன்றும் ஆகாது என்று அதைத் தொடர்ந்து பின்னிக் கொண்டிருந்தேன். அம்மா… Continue reading இதழ்:2162 வாழ்க்கையை நரகமாக்கிய சிற்றின்பம்!
இதழ்:2161 சோதனையை சகிக்கும்படியான மனஉறுதி தேவை!
2 சாமுவேல் 11:9 ஆனாலும் உரியா தன் வீட்டுக்கு போகாமல், ராஜ அரமனையின் வாசலிலே தன் ஆண்டவனுடைய எல்லாச் சேவகரோடுங்கூடப் படுத்துக் கொண்டிருந்தான். மீன்கள் கண்ணுக்கு படாத வரைக்கும் கொக்கு பரிசுத்தமாய் இருக்கும் என்று ஒரு வங்காள பழமொழி உண்டு ! ஒருவேளை உங்களுக்கு ஐஸ்கிரீம் பிடிக்காமல் இருக்குமானால் ஒரு பெரிய கிண்ணத்தில் ஐஸ்கிரீம் உங்கள் பக்கத்தில் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் ஐஸ்கிரீம் என்றாலே நாக்கில் தண்ணீர் வருபவராக இருந்து ஏதோ ஒரு காரணத்தால் நீங்கள் அதை… Continue reading இதழ்:2161 சோதனையை சகிக்கும்படியான மனஉறுதி தேவை!
இதழ்:2160 நீ யாரென்பதை மறந்து போகாதே!
2 சாமுவேல் 11:8 பின்பு தாவீது உரியாவை நோக்கி: நீ உன் வீட்டுக்குப்போய் பாதசுத்தி செய் என்றான். உரியா ராஜ அரமனையிலிருந்து புறப்பட்டபோது ராஜாவினிடத்திலிருந்து உச்சிதமான பதார்த்தங்களவன் பின்னாலே அனுப்பப்பட்டது. நாம் 1 சாமுவேல் 15:17 ல் சாமுவேல் சவுலைப் பார்த்து நீர் உம்முடைய பார்வைக்கு சிறியவராயிருந்தபோது அல்லவோ ...... கர்த்தர் உம்மை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணுவித்தாரே என்பதைப் பார்க்கிறோம். அடிக்கடி யாராவது நம் ஒவ்வொருவருக்கும் இதை ஞாபகப்படுத்தினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். பதவியும்… Continue reading இதழ்:2160 நீ யாரென்பதை மறந்து போகாதே!
இதழ்:2159 இனிய வார்த்தைகளால் திசை திருப்பும் வஞ்சகன்!
2 சாமுவேல் 11:7 உரியா அவனிடத்தில் வந்தபோது, தாவீது அவனைப் பார்த்து: யோவாப் சுகமாயிருக்கிறானா, ஜனங்கள் சுகமாயிருக்கிறார்களா யுத்தத்தின் செய்தி நற்செய்தியா என்று விசாரித்தான். இந்த மாய வித்தைகள் செய்பவரைப் பார்த்திருப்பீர்கள்! நான் ஹை ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்த போது ஒருவர் வந்து அநேக வித்தைகள் செய்தார். நான் ஈடுபாடு காட்டாமல் உட்கார்திருந்தேன். அவர் என்னிடம் வந்து அவன் கைகளில் இருந்த சீட்டுக் கட்டுகளில் ஒன்றை எடுத்து அதில் ஒரு குறியைப் போட வைத்தார். அந்த சீட்டை… Continue reading இதழ்:2159 இனிய வார்த்தைகளால் திசை திருப்பும் வஞ்சகன்!
