2 சாமுவேல் 12: 2 ஐசுவரியவானுக்கு ஆடுமாடுகள் வெகு திரளாயிருந்தது. சென்னையில் வெள்ளம் வந்தபோது தன்னுடைய இரண்டு மாடி வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும், இரண்டு கார்களையும் இழந்த ஒரு தம்பதியர் நாங்கள் ஒருவரையொருவர் இழக்கவில்லையே என்று கடவுளுக்கு நன்றி சொன்னது என் நினைவை விட்டு விலகவில்லை! இன்றைய வேதாகம வசனம் ஆடுமாடுகள் வெகு திரளாயிருந்த ஒரு ஐசுவரியவானைப் பற்றி கூறுகிறது. இவன் வெறும் ஆடுகளை மாத்திரம் வைத்திருந்ததாகவோ அல்லது மாடுகளை வளர்த்தவனாகவோ அல்ல ஆடுகளும்,மாடுகளும் வெகு… Continue reading இதழ்:2179 அழிந்து போகும் செல்வத்துக்கா முக்கியத்துவம்?
Month: December 2024
இதழ்:2178 எல்லாமே உண்டு ஆனால் தேவ பிரசன்னம் இல்லையே!
2 சாமுவேல் 12: 1 ... ஒரு பட்டணத்தில் இரண்டு மனுஷர் இருந்தார்கள். ஒருவன் ஐசுவரியவான், மற்றவன் தரித்திரன். இன்று நாம் இந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிற கதையைப் படிக்க ஆரம்பிக்கிறோம். இதை முதலில் வாசிக்கும்போது தாவீதிடம் அவன் பத்சேபாளுடன் செய்த பாவத்தையும், உரியாவை கொலை செய்ததையும் குறித்து கண்டிக்கவே இந்தக் கதை சொல்லப்பட்டது என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் இதை முழுதும் வாசித்து முடிக்கும்போதுதான் இந்தக் கதை தாவீதுக்கே சொல்லப்பட்டது போல இருந்தாலும் உனக்கும் எனக்குமே… Continue reading இதழ்:2178 எல்லாமே உண்டு ஆனால் தேவ பிரசன்னம் இல்லையே!
இதழ்:2177 கதையின் மூலம் எச்சரிக்கப்பட்ட சம்பவம்!
2 சாமுவேல் 12: 1-4 ... ஒரு பட்டணத்தில் இரண்டு மனுஷர் இருந்தார்கள். ஒருவன் ஐசுவரியவான், மற்றவன் தரித்திரன். ஐசுவரியவானுக்கு ஆடுமாடுகள் வெகு திரளாயிருந்தது. தரித்திரனுக்குத் தான் கொண்டு வளர்த்த ஒரே ஒரு சின்ன ஆட்டுக்குட்டியைத் தவிர வேறொன்றும் இல்லாதிருந்தது. அது அவனோடும் அவன் பிள்ளைகளோடுங்கூட இருந்து வளர்ந்து, அவன் வாயின் அப்பத்தைத் தின்று, அவன் பாத்திரத்திலே குடித்து, அவன் மடியிலே படுத்துக் கொண்டு, அவனுக்கு ஒரு மகளைப்போல இருந்தது. அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான்.… Continue reading இதழ்:2177 கதையின் மூலம் எச்சரிக்கப்பட்ட சம்பவம்!
இதழ்:2176 உன்னை இன்று அனுப்புவாரானால் கீழ்ப்படிவாயா?
2 சாமுவேல் 12:1 கர்த்தர் நாத்தானைத் தாவீதினிடத்தில் அனுப்பினார். இவன் அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி.... தாவீது, பத்சேபாள் இருவருடைய வாழ்விலும் முக்கியமான ஒரு இடத்தைப் பிடித்தவர் தான் இந்த தேவனுடைய மனுஷனான நாத்தான். இன்றைய வேதாகம வசனம் நமக்கு மூன்று காரியங்களை கூறுகிறது. அனுப்பினார், வந்து, நோக்கி என்ற வார்த்தைகளை கவனியுங்கள்! தாவீது பத்சேபாளின் கணவனாகிய உரியாவை நடத்திய விதம் கர்த்தரின் மனதை புண்படுத்தியது. தாவீது செய்த எல்லா அநியாயங்களும் கர்த்தரின் பார்வையில் பட்டன. ஆதலால் கர்த்தர்… Continue reading இதழ்:2176 உன்னை இன்று அனுப்புவாரானால் கீழ்ப்படிவாயா?
இதழ்:2175 அடகு வைக்கப்பட்ட பொருளைப்போல யாரையும் நடத்தாதே!
2 சாமுவேல் 11:27 .... தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பாயிருந்தது. எனக்கு நம்முடைய டிவி யில் பார்க்கவே பிடிக்காத ஒரு நிகழ்ச்சி எது என்றால் அது அரசியல்வாதிகளின் பேச்சுதான்! அவர்கள் எந்தக் கட்சியினராகவும் இருக்கட்டும், யாருமே நேரிடையாக ஆம் அல்லது இல்லை என்ற பதிலை சொல்லவே மாட்டார்கள். இந்த குத்துசண்டை வீரர்கள் தலைக்கு வரும் ஆபத்தை கையால் தடுப்பதுபோலத்தான் சுத்தி வளைத்து பேசுவார்கள். இங்கே வேதம் சுத்தி வளைத்து பேசவில்லை. நேரிடையாக, தாவீது… Continue reading இதழ்:2175 அடகு வைக்கப்பட்ட பொருளைப்போல யாரையும் நடத்தாதே!
இதழ்:2174 ஐயோ! எங்கேயோ கரிந்த வாடை வருகிறதே!!!
1 சாமுவேல் 11: 26,27 தன் புருஷனாகிய உரியா செத்தான் என்று அவன் மனைவி கேள்விப்பட்டபோது, அவள்தன் நாயகனுக்காக இழவு கொண்டாடினாள். துக்க நாள் சென்றபின்பு, தாவீது அவளை அழைத்தனுப்பி, தன் வீட்டிலே சேர்த்துக் கொண்டான். அவள் அவனுக்கு மனைவியாகி ஒரு குமாரனைப் பெற்றாள். கற்பு என்பது நமக்கும் அழகு! நம்முடைய ஆத்துமத்துக்கும் அழகு! பாவத்துக்கு பயந்து வாழும் வாழ்க்கையை விட கற்புடன் வாழ்வதை நேசித்தால் நலம்! இதை வாசிக்கும் போது இன்றைய வேதாகமப்பகுதியில் இருந்து என்ன… Continue reading இதழ்:2174 ஐயோ! எங்கேயோ கரிந்த வாடை வருகிறதே!!!
இதழ்:2173 உள்ளத்தில் ஏற்பட்ட காயத்தை ஆற்ற வல்லவர்!
2 சாமுவேல் 11: 25 அப்பொழுது தாவீது அந்த ஆளை நோக்கி: நீ யோவாபினிடத்தில் போய் இந்தக் காரியத்தைப்பற்றி விசாரப்படவேண்டாம்..... நீ யுத்தத்தை பலக்கப்பண்ணி, பட்டணத்தை இடித்துப்போடு என்று அவனுக்குத் திடஞ்சொல் என்றான். வேதத்தில் நாம் படிக்கிற சில அதிர்ச்சியான சம்பவங்களில் ஒன்றுதான் நாம் படித்துக்கொண்டிருக்கிற உரியாவின் கதையும்! நாம் தாவீது, பத்சேபாள், உரியாவின் சரித்திரத்தைத் தொடரும்போது, தாவீது யுத்தத்திலிருந்து செய்தி கொண்டுவந்த ஆளிடம் தன்னுடைய ஆர்மி ஜெனெரல் யோவாபிடம் கூறும்படி சொல்லிய வார்த்தைகள் அவனுடைய… Continue reading இதழ்:2173 உள்ளத்தில் ஏற்பட்ட காயத்தை ஆற்ற வல்லவர்!
இதழ்:2172 ஒருவரை பழிவாங்க எண்ணி எத்தனை பேரை துன்புறுத்துகிறோம்?
2 சாமுவேல் 11: 18 - 21 அப்பொழுது யோவாப் அந்த யுத்தத்தின் செய்திகளையெல்லாம் தாவீதுக்கு அறிவிக்க ஆள் அனுப்பி ...... நீங்கள் அலங்கத்திற்கு இத்தனை கிட்டப்போனது என்ன என்று உன்னோடே சொன்னால் உரியா என்னும் ஏத்தியனும் செத்தான் என்று சொல் என்றான். தாவீது, பத்சேபாள், உரியா என்னும் முக்கோணத்தில் கவனிக்கப்படாமல் போகும் பகுதி இன்றைய வேதபகுதி என்று நினைக்கிறேன். இந்த வசனங்கள் நமக்கு இஸ்ரவேல் அம்மோனியரோடு செய்த யுத்தத்தை விளக்குகிறது. இதுவரை இஸ்ரவேலின் சேவகர் நன்றாகத்தான்… Continue reading இதழ்:2172 ஒருவரை பழிவாங்க எண்ணி எத்தனை பேரை துன்புறுத்துகிறோம்?
இதழ்:2171 அக்கிரமத்தில் கைகோர்ப்பதும் நட்பா?
2 சாமுவேல் 11:16 அப்படியே யோவாப் அந்தப்பட்டணத்தைச் சூழக் காவல்போட்டிருக்கையில் பராக்கிரமசாலிகள் இருக்கிறார்கள் என்று தான் அறிந்த இடத்தில் உரியாவை நிறுத்தினான். தமிழில் ஒரு பழமொழி உண்டு அல்லவா? உன் நண்பனைக் காட்டு உன்னைப்பற்றி சொல்லுகிறேன் என்று. நம்முடைய நட்பை வைத்து நாம் எப்படிப்பட்டவர்கள் என்று உலகம் கணித்து விடும். ஒரு நல்ல நட்பு கிடைப்பது அரிது தானே! இன்றைய வேதாகம வசனம் எனக்கு தாவீது கொண்டிருந்த நட்பைத்தான் சிந்திக்க வைத்தது. 1 சாமுவேல் 18:1 ல் ஒரு… Continue reading இதழ்:2171 அக்கிரமத்தில் கைகோர்ப்பதும் நட்பா?
இதழ்:2170 கண்ணீர் யாவையும் துடைப்பார்!
2 சாமுவேல்: 11: 17 பட்டணத்து மனுஷர் புறபட்டு வந்து யோவாப்போடே யுத்தம்பண்ணுகையில், தாவீதின் சேவகராகிய ஜனத்தில் சிலர் பட்டார்கள். ஏத்தியனாகிய உரியாவும் செத்தான். இமாலய மலையில் மலையில் அமைந்துள்ள தரம்சாலா என்ற பட்டணத்துக்கு சென்றபோது உய்ரமான ஒரு மலைக்கு சென்றோம். ஒருபக்கத்தில் அழகிய லேக் இருக்கும் அந்த மலையின் அடுத்தபகுதி கண்கொள்ளாத பள்ளத்தாக்கு. மேலிருந்து பார்க்கும்போது ஆங்காங்கே காணப்பட்ட வீடுகள் பொம்மை வீடுகள் போல இருந்தன. அங்கே தென்பட்ட ஒரு நீர்வீழ்ச்சி ஏதோ வெள்ளைக் கோடு… Continue reading இதழ்:2170 கண்ணீர் யாவையும் துடைப்பார்!
