Tamil Bible study

இதழ்:2275 அவரின் பேரன்பு அருளும் மனமகிழ்ச்சி!

1 இராஜாக்கள் 8:52  அவர்கள் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவரீர் அவர்களுக்குச் செய்யும்படி, உம்முடைய கண்கள் உமது அடியானின் வேண்டுதலுக்கும், உமது ஜனமாகிய இஸ்ரவேலின் வேண்டுதலுக்கும் திறந்திருப்பதாக..... 8:66 எட்டாம் நாளில் ஜனங்களுக்கு விடை கொடுத்து அனுப்பினான். அவர்கள் ராஜாவை வாழ்த்தி, கர்த்தர் தமது தாசனாகிய தாவீதுக்கும், தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் செய்த எல்லா நன்மைக்காகவும் சந்தோஷப்பட்டு மனமகிழ்ச்சியோடே தங்கள் கூடாரங்களுக்கு போய்விட்டார்கள். சாலொமோன் வாக்குத்தத்தின் பிள்ளை. தன்னுடைய வயதுக்கு மீறிய ஞானத்தை கர்த்தரின் அருளால் பெற்றவன்.… Continue reading இதழ்:2275 அவரின் பேரன்பு அருளும் மனமகிழ்ச்சி!

Tamil Bible study

இதழ்:2274 இன்று எதற்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்?

1 இராஜாக்கள்; 6:38  பதினோராம் வருஷம் பூல் என்னும் எட்டாம் மாதத்திலே , அந்த ஆலயமுழுதும் சகல சட்டதிட்டத்தின்படியே ஒரு பங்கும் குறையாமல் கட்டித் தீர்ந்தது. அவன் அதைக்கட்டி முடிக்க ஏழுவருஷம் சென்றது. 7:1  சாலொமோன் தன் அரமனை முழுதையும் கட்டிமுடிக்கப் பதின்மூன்று வருஷம் சென்றது. சாலொமோனின் வாழ்வில் தேவனுடைய வாக்குத்தத்தம் நிறைவேறியதைப் பார்த்தோம். இன்று நாம் பார்க்கப் போகும் இரண்டாவது  வார்த்தை முக்கியத்துவம் என்பது. இன்றைய இரண்டு வேதாகமப்பகுதிகளை ஆழமாகப் படித்தபோது, சாலொமோனுக்கு தேவனுடைய ஆலயத்தை… Continue reading இதழ்:2274 இன்று எதற்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்?

Tamil Bible study

இதழ்:2273 ஆம் என்றும் ஆமென் என்றும் உள்ள அவரது வாக்கு!

1 இராஜாக்கள்: 6: 12 -13  நீ என் கட்டளைகளின்படி நடந்து, என் நீதி நியாயங்களை நிறைவேற்றி, என் கற்பனைகளின்படியெல்லாம்நடந்து கொள்ளும்படிக்கு அவைகளைக் கைக்கொண்டால், நீ கட்டுகிற இந்த ஆலயத்தைக்குறித்து நான் உன் தகப்பனாகிய தாவீதோடே சொன்ன என் வார்த்தையை உன்னிடத்தில் நிறைவேற்றி, இஸ்ரவேல் புத்திரர் நடுவிலே வாசம்பண்ணி, என் ஜனமாகிய இஸ்ரவேலைக் கைவிடாதிருப்பேன் என்றார். இன்றைய வேதாகமப் பகுதியையும், சாலொமோனுடைய வாழ்க்கையையும் ஆராய்ந்து படிக்கும்போது, மூன்று வார்த்தைகள் என் மனதில் வந்து கொண்டேயிருந்தன! இன்று என்… Continue reading இதழ்:2273 ஆம் என்றும் ஆமென் என்றும் உள்ள அவரது வாக்கு!

Tamil Bible study

இதழ்:2272 என்னை உம்முடைய வழியிலே நடத்தும்!

1 இராஜாக்கள்:6:1 இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நானூற்று எண்பதாம் வருஷத்திலும், சாலொமோன் இஸ்ரவேலின்மேல் ராஜாவான நாலாம் வருஷம் சீப்மாதமாகிய இரண்டாம் மாதத்திலும், அவன் கர்த்தரின் ஆலயத்தைக் கட்டத்தொடங்கினான். நாம் பிறந்த போதே தேவன் நம்முடைய வாழ்வில் ஏதோ நோக்கம் கொண்டிருந்தார் என்பதை உண்மையிலேயே விசுவாசிக்கிறாயா? அப்படியானால், தேவன் தம்முடைய நோக்கத்தை முதலிலிருந்து கடைசிவரை வெளிப்படுத்தியிருக்கிறாரா? இந்த இரண்டு கேள்விகளே சாலொமோனின் வாழ்விற்குத்தான் பொருத்தமாக உள்ளது என்ற எண்ணம் இன்றைய வேதாகமப் பகுதி எனக்குக் கொடுத்தது.… Continue reading இதழ்:2272 என்னை உம்முடைய வழியிலே நடத்தும்!

Tamil Bible study

இதழ்:2271 மரியாதை கொடுக்கத் தவறாதே!

1 இராஜாக்கள் 5:6, 7, 12   ஆதலால் லீபனோனில் எனக்காக கேதுருமரங்கள் வெட்டக் கட்டளையிடும்.சீதோனியரைப்போல மரவெட்டு வேலை அறிந்தவர்கள் எங்களுக்குள்ளே ஒருவருமில்லை என்பது உமக்குத் தெரியும் ...... நீர் சொல்வதின்படியெல்லாம் உம்முடைய வேலைக்காரரின் சம்பளத்தை உமக்குக் கொடுப்பேன் என்று சொல்லச் சொன்னான். ஈராம் சாலொமோனின் வார்த்தைகளைக் கேட்டபோது மிகவும் சந்தோஷப்பட்டு..... தாவீதுக்கு ஞானமுள்ள குமாரனைக் கொடுத்த கர்த்தர் இன்று ஸ்தோத்தரிக்கப்படுவாராக என்று சொல்லி,  ..... ஈராமுக்கும் சாலொமோனுக்கும் சமாதானம் உண்டாயிருந்து, இருவரும் உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள். இன்றைய… Continue reading இதழ்:2271 மரியாதை கொடுக்கத் தவறாதே!

Tamil Bible study

இதழ்:2270 உன் வாழ்வின் நோக்கத்தை அறிவாயா?

1 இராஜாக்கள் 5:2-5  அப்பொழுது சாலொமோன் ஈராமிடத்தில் ஆட்களை அனுப்பி..... ஆகையால் நான் உன் ஸ்தானத்தில் உன் சிங்காசனத்தின்மேல் வைக்கும் உன் குமாரனே என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான் என்று கர்த்தர் என் தகப்பனாகிய தாவீதினிடத்தில் சொன்னபடியே ஆலயத்தைக் கட்ட வேண்டும் என்று இருக்கிறேன். இஸ்ரவேலின் புதிய ராஜாவாகிய சாலொமோனை அண்டை நாடுகள் கவனிக்க ஆரம்பித்தன. தீருவின் ராஜாவாகிய ஈராம் முதலில் அவனுக்கு தன்னுடைய ஊழியர் மூல பரிசுகள் அனுப்பினான் என்று பார்த்தோம். இந்த நட்பு சாலொமோனுக்கு… Continue reading இதழ்:2270 உன் வாழ்வின் நோக்கத்தை அறிவாயா?

Tamil Bible study

இதழ்:2269 தாவீது புறஜாதியினரிடம் கொண்ட நெருங்கிய நட்பு!

1 இராஜாக்கள்: 5:1 சாலொமோனை அவனுடைய பிதாவின் ஸ்தானத்தில் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள் என்று தீருவின் ராஜாவாகிய ஈராம் கேள்விப்பட்டு, தன் ஊழியக்காரரை அவனிடத்தில் அனுப்பினான். ஈராம் தாவீதுக்குச் சகல நாளும் சிநேகிதனாயிருந்தான். இந்த வேதாகமப் பகுதியை நான் பலமுறை வாசித்து கடந்து சென்றிருக்கிறேன் ஆனால் இன்று இதை வாசித்தபோது இதில் ஒரு நல்ல நட்பை பார்த்தேன். இஸ்ரவேலின் ராஜாவாக இருந்த தாவீதுக்கும் , தீருவின் ராஜாவாகிய ஈராமுக்கும் நடுவில் இருந்த  நட்பு. இன்றைய நடைமுறைப்படி சொல்லப்போனால்… Continue reading இதழ்:2269 தாவீது புறஜாதியினரிடம் கொண்ட நெருங்கிய நட்பு!

Tamil Bible study

இதழ்:2268 உன் தேவையை அறிந்து உனக்கு அருளுவார்!

1 இராஜாக்கள்: 4:29,30,32   தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும், புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார். சகல கிழக்கத்திப் புத்திரரின் ஞானத்தையும் , எகிப்தியரின் சகல ஞானத்தையும் பார்க்கிலும் சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்தது. அவன் மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான், அவனுடைய பாட்டுக்கள் ஆயிரத்து ஐந்து. சாலொமோனுக்கு தேவன் அருளிய ஞானத்தைப் பற்றி படித்துக் கொண்டிருக்கிறோம். இன்றைய வேதாகமப் பகுதி கூறுகிறது, தேவன் அவனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும் ,கொடுத்தது மட்டுமல்லாமல்  மனோவிருத்தியையும் கொடுத்தார் என்று. தேவன் சாலொமோனுக்கு… Continue reading இதழ்:2268 உன் தேவையை அறிந்து உனக்கு அருளுவார்!

Tamil Bible study

A VERY BLESSED EASTER TO YOU ALL!

Prema Sunder RajMarch 31 HE IS RISEN! RISEN INDEED! The stone was moved - not for Jesus - but for the women: not so Jesus could come out, but so the women could see in...the darkness is gone!  The sun is up! The Son is out! நமக்காக மரித்து உயிர்த்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த இந்த நாள்… Continue reading A VERY BLESSED EASTER TO YOU ALL!

Tamil Bible study

இதழ்:2267 சிலுவையை நோக்கிப்பார்! பிழைப்பாய்!

எண்ணா:21:7 அதினால் ஜனங்கள் மோசேயிடத்தில் போய்: நாங்கள் கர்த்தருக்கும் உமக்கும் விரோதமாய்ப் பேசினதால் பாவஞ்செய்தோம்; சர்ப்பங்கள் எங்களைவிட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றார்கள்; மோசே ஜனங்களுக்காக விண்ணப்பம் பண்ணினான்.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காகத் தம்மைத்தாமே சிலுவை பரியந்தமும் தாழ்த்திய நாள் இன்று! அவர் அன்று பட்ட பாடுகள் அனைத்துமே எனக்காகவே, என்னை இரட்சிப்பதற்காகவே என்று நினைக்கும்போது உள்ளம் நன்றியால் நிரம்பி அவரை இன்னும் அதிகமாக நேசிக்க வேண்டும் என்ற உறுதியைக் கொடுக்கிறது! சில… Continue reading இதழ்:2267 சிலுவையை நோக்கிப்பார்! பிழைப்பாய்!