Tamil Bible study

இதழ்:2297 கர்த்தருடைய ஆலோசனையை தேடாமல் இருந்து விடாதே!

1 இராஜாக்கள் 12:8  முதியோர் தனக்கு சொன்ன ஆலோசனையை அவன் தள்ளிவிட்டு, தன்னோடே வளர்ந்து தன் சமுகத்தில் நிற்கிற வாலிபரோடே ஆலோசனை பண்ணி நான் அன்று அந்த முடிவு எடுத்திராவிடில் என்ன நடந்திருக்கும் என்று நினைக்கும் என்று என்றாவது நினைத்த தருணம் உண்டா? ஒருவேளை அது ஒரு மிகச்சிறிய முடிவாக இருக்கலாம் அதனால் பெரிய பாதிப்பு இல்லாமல் போயிருந்திருக்கும். ஒரு பெரிய விஷயத்தில் நாம் எடுத்த முடிவு தவறாயிருந்திருந்தால் அது எவ்வளவுதூரம் நம்மையும் நம் குடும்பத்தையும் பாதித்திருக்கும்!… Continue reading இதழ்:2297 கர்த்தருடைய ஆலோசனையை தேடாமல் இருந்து விடாதே!

Tamil Bible study

இதழ்:2296 மனுஷராகிய நம்மேல் விழுந்த கடமை!

1 இராஜாக்கள் 11:41 சாலொமோனின் மற்ற நடபடிகளும், அவன் செய்தவை அனைத்தும், அவனுடைய ஞானமும், சாலொமோனுடைய நடபடிப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. நமக்கெல்லாருக்கும் நோபெல் பரிசு என்பது இந்த உலகத்தில் அமைதிக்காக போராடும் ஒருவருக்கு வழங்கப்படுவது தெரியும். அது ஆல்பிரட் நோபெல் என்ற விஞ்ஞானியின் பெயரால் கொடுக்கப்படுகிறது. அவரைப்பற்றிய ஒரு கட்டுரையை நான் ஒருமுறை வாசிக்க நேர்ந்த போது  அவர் தான் டைனமைட் என்ற கொடூரமாக வெடிக்கக்கூடிய ஒரு வெடியைக் கண்டுபிடித்தவர் என்று அறிந்து இவர் பெயரில் அல்லவா… Continue reading இதழ்:2296 மனுஷராகிய நம்மேல் விழுந்த கடமை!

Tamil Bible study

இதழ்:2295 படுகுழியில் விழாமலிருக்க தடுப்பு முறைகள்!

மத்தேயு 26:41  நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள், ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். நாங்கள் இப்பொழுது பெங்களூரு பட்டணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்கள் வீட்டிலிருந்து ஒரு 40 நிமிடங்களில் தேசிய நெடுஞ்சாலையை அடைந்து விடலாம். ஆனால் அதற்கு போகிற வழிதான் பயங்கரமானது. சற்று கண்கள் அசதியானால் போதும், வண்டி ஏதாவது குழியில் இறங்கி ஏறிவிடும். மழை காலங்களில் எங்கே குழி இருக்கிறது என்று தெரியவும் செய்யாது. இன்று நாம் நான்காவது நாளாக சாலொமோனின் வாழ்க்கையிலிருந்து… Continue reading இதழ்:2295 படுகுழியில் விழாமலிருக்க தடுப்பு முறைகள்!

Tamil Bible study

இதழ்:2294 எச்சரிக்கைகளை அனுபவித்திருக்கிறாயா?

1 இராஜாக்கள் 11:14,23,  கர்த்தர் ஏதோமியனான ஆதாத் என்னும் ஒரு விரோதியை சாலொமோனுக்கு எழுப்பினார். எலியாதாவின் குமாரனாகிய ரேசோன் என்னும் வேறொரு விரோதியை தேவன் எழுப்பினார் ...யெரோபெயாம் என்ற சாலொமோனின் ஊழியக்காரனும் ராஜாவுக்கு விரோதமாக கையெடுத்தான். தேவன் நமமை ஆளுகை செய்கிறார் என்ற உண்மை எத்தனை பேருக்கு பிடிக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. நாம் செய்யும் வேலையாயிருக்கட்டும், நாம் சந்திக்கும் மனிதராயிருக்கட்டும் எல்லாமே தேவனுடைய ஆளுகைக்கு உட்பட்டதே. தேவன் நம்மை பரலோகத்திலிருந்து கொண்டு நூல் கட்டி ஆட்டும்… Continue reading இதழ்:2294 எச்சரிக்கைகளை அனுபவித்திருக்கிறாயா?

Tamil Bible study

இதழ்:2293 உலக சிற்றின்பங்களுக்கு நேரத்தை செலவிடாதே!

1 இராஜாக்கள் 11:3,4 அவனுக்கு பிரபுக்கள் குலமான எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறுமறு மனையாட்டிகளும் இருந்தார்கள் ... சாலொமோன் வயதுசென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நிய தேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள். இன்று சாலொமோனுடைய வாழ்விலிருந்து நாம் நேரிடையாகல் லற்றுக் கொள்ளும் இன்னொரு காரியம், தேவன் நமக்கு கிருபையாய் அளித்திருக்கும் நேரம் என்பது. அவனுடைய ராஜ்யபாரத்தின் ஆரம்பத்தில் சாலொமோனுடைய வாழ்க்கையின் நோக்கம் தேவனுடைய நாமத்தை மகிமைப் படுத்துவதாக இருந்தது. ஆனால் காலம் கடந்தபோது அவனுடைய இருதயத்தில் மாறுதல் ஏற்பட்டது. பிளவு பட்ட… Continue reading இதழ்:2293 உலக சிற்றின்பங்களுக்கு நேரத்தை செலவிடாதே!

Tamil Bible study

இதழ்:2292 உம்மையன்றி யாரை விரும்புவேன் இப்பூமியில்!

1 இராஜாக்கள் 11:4 சாலொமோன் வயது சென்றபோது அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நிய தேவர்களை பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்.அதினால் அவன் இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப் போல தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை. 11:5 சாலொமோன் சீதோனியரின் தேவியாகிய அஸ்தரோத்தையும்,அம்மோனியரின் அருவருப்பாகிய மில்கோமையும் பின்பற்றினான். இஸ்ரவேல் தேசம் இரண்டாய் பிளவு பட்டதைப் பற்றி நாம் படிக்கும் முன்னர், சாலொமோனை இன்னும் ஒருமுறை உற்றுப்பார்த்து நம்முடைய வாழ்க்கைக்கு வேண்டிய பாடங்களை கற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். சாலொமோனின்… Continue reading இதழ்:2292 உம்மையன்றி யாரை விரும்புவேன் இப்பூமியில்!

Tamil Bible study

இதழ்:2291 அதிகமாக எச்சரிக்கப்பட்ட பாவம்!

லூக்கா 12:15 பின்பு அவர் அவர்களை நோக்கி; பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார். கடந்த நாட்களீல் நாம் மாம்ச இச்சை, விக்கிரக வழிபாடு, பேராசை போன்ற வார்த்தைகள், இஸ்ரவேலின் சரித்திரத்தில் இடம் பெற்றதைப் பற்றிப் பார்த்தோம். பழைய ஏற்பாடு முழுவதும் தேவனுடைய சித்தத்தை அறிந்த தேவனுடைய பிள்ளைகள் தங்கள் பாதையை விட்டு வழுவி தங்களுடைய் சித்தத்தின்படி நடந்து நமக்கு முன்பான சாட்சியாக வாழத் தவறினாலும்,… Continue reading இதழ்:2291 அதிகமாக எச்சரிக்கப்பட்ட பாவம்!

Tamil Bible study

இதழ்:2290 பேராசைப் படுகிறவன் தான் உண்மையான ஏழை!

1 இராஜாக்கள் 11:43 ,சாலொமோன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தன் தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான், அவன் குமாரனாகிய ரெகொபெயாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். 12:14  என் தகப்பன் உங்கள் நுகத்தைப் பாரமாக்கினார், நான் உங்கள் நுகத்தை அதிக பாரமாக்குவேன் , என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று ஜனங்களுக்கு கடினமான உத்தரவு கொடுத்தான். சாலொமோனின் வாழ்வு இந்த வேதப்பகுதியில் முடிவடைகிறது. அவன் தன் பிதாக்களோடே தாவீதின் நகரத்தில் அடக்கம்… Continue reading இதழ்:2290 பேராசைப் படுகிறவன் தான் உண்மையான ஏழை!

Tamil Bible study

இதழ்:2289 எதைக் கொண்டு உன்னை திருப்திபடுத்துகிறாய்?

1 இராஜாக்கள் 11:4,9,10   சாலொமோன் வயதுசென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நியதேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்.....ஆகையால் தேவனாகிய கர்த்தர் சாலொமோனுக்கு இரண்டுவிசை தரிசனமாகி, அந்நிய தேவர்களைப் பின்பற்றவேண்டாம் என்று கட்டளையிட்டிருந்தும்.... அவர் கற்பித்ததைக் கைக்கொள்ளாமற்போனதினால் கர்த்தர் அவன்மேல் கோபமானார். தானியேலின் புத்தகம் 3 ம் அதிகாரத்தில் பாபிலோனின் ராஜாவாகிய நெபுகாத்நேச்சார் ஒரு பொற்சிலையை பண்ணுவித்து, கீத வாக்கியங்களின் சத்ததைக் கேட்கும்போது அதைத் தாழ் விழுந்து பணிந்து கொள்ள வேண்டும் என்று தன்னுடைய சகல தேசத்தின் எல்லா… Continue reading இதழ்:2289 எதைக் கொண்டு உன்னை திருப்திபடுத்துகிறாய்?

Tamil Bible study

இதழ்:2288 வயிறு வலிக்கும் வரை சாப்பிடுவோம் அல்லவா?

1 இராஜாக்கள் 11:3  அவனுக்கு பிரபுக்கள் குலமான எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறு மறுமனையாட்டிகளும் இருந்தார்கள். அவனுடைய ஸ்திரீகள் அவன் இருதயத்தை வழுவிப்போகப் பண்ணினார்கள். நமக்கு பிடித்தமான உணவு ஒன்றை யோசித்து பாருங்கள். கொஞ்ச நாட்கள் அதை சாப்பிடமுடியாமல் போய்விட்டால் அதைக் கண்டவுடன் வயிறு வலிக்கும் வரை சாப்பிடுவோம் அல்லவா? ஆம்! வயிறு வலிக்கும் வரை - இங்குதான் இன்றைய தியானத்தை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். எண்ணாகமம் 11 ல் இஸ்ரவேல் மக்கள், எகிப்திலிருந்து அவர்களோடு புறப்பட்ட கொஞ்சம்… Continue reading இதழ்:2288 வயிறு வலிக்கும் வரை சாப்பிடுவோம் அல்லவா?