யோசுவா 7:26 ..” அவன்மேல் இந்நாள் வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இப்படியே கர்த்தர் தன் கோபத்தின் உக்கிரத்தை விட்டு மாறினார்; ஆகையால் அவ்விடம் இந்நாள்வரைக்கும் ஆகோர் பள்ளத்தாக்கு என்னப்படும். ஒசியா: 2:15 அவளுக்கு திராட்சத்தோட்டங்களையும், நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்.” நான் முதன்முறையாக ஆகானின் கதையை என்னுடைய சன்டே ஸ்கூலில் கேட்ட ஞாபகம் இருக்கிறது! அன்று எனக்கு பழைய ஏற்பாட்டின் தேவன் மீது அதிக பயம் வந்தது. கடவுள் ஆகானுக்கு மட்டும் அல்ல,… Continue reading இதழ்:2470 இளப்பாறுதல் தரும் பள்ளத்தாக்கு!
Month: January 2026
இதழ்:2469 ஒன்றும் இல்லை என்று ஏமாற்றிக் கொள்ளாதே!
யோசுவா: 7:21 ”கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும், நான் கண்டு அவைகளை இச்சித்து, எடுத்துக்கொண்டேன். இதோ அவைகள் என் கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைந்திருக்கிறது. பலநாட்களாக நாம் ஆகானைப்பற்றி படித்துக்கொண்டிருக்கிறோம். இஸ்ரவேலின் சேனையில் ஒரு போர்வீரனாக, தேவனாகிய கர்த்தரின் சித்தப்படி எரிகோவை அழிக்கப் புறப்பட்ட இந்த வீரன், பொருளாசை என்ற சலனத்துக்கு சற்று இடம் கொடுத்ததால், அவன் நோக்கம் தடுமாறி, கண்களால் கண்ட பொருட்களை இச்சித்து,… Continue reading இதழ்:2469 ஒன்றும் இல்லை என்று ஏமாற்றிக் கொள்ளாதே!
இதழ்:2468 சொந்தமல்லாதவற்றை சொந்தமாக்கிக் கொள்வது அன்று ஆரம்பித்த ஒன்று!
யோசுவா: 7:21 ”கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும், நான் கண்டு……” ஆதி:3:6 அப்பொழுது ஸ்திரியானவள் அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியை தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு…. கர்த்தரால் மனிதனுக்காக உருவாக்கப்பட்ட ஏதேன் தோட்டத்தில் புத்தியைத் தெளிவிக்கும் என்று ஒரு கனியைக் காட்டி வஞ்சகம் பேசி சாத்தான் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கண்ணி வைத்து தன் வலையில் விழ வைத்தான். நாம்கூட… Continue reading இதழ்:2468 சொந்தமல்லாதவற்றை சொந்தமாக்கிக் கொள்வது அன்று ஆரம்பித்த ஒன்று!
இதழ்:2467 சிறுதுளி விஷம் போன்றது தான் சிற்றின்பமும்!
யோசுவா: 7:20 அப்பொழுது ஆகான் யோசுவாவுக்கு பிரதியுத்தரமாக: மெய்யாகவே நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்; இன்னின்ன பிரகாரமாக செய்தேன். நான் யோசேப்பைப் பற்றி எழுதும்போது, ஒரே ஒரு கணம் சிற்றின்பம் தவறா? என்ற தலைப்பில் யோசேப்பின் வாழ்க்கையிலிருந்து எழுதியிருந்தேன். எனக்கு ஆச்சரியமூட்டும் உண்மை என்னவெனில், ஒவ்வொரு வருடமும், மிகவும் அதிகமாக என்னுடைய வாசகர்களால் வாசிக்கப்படுகிற இதழ் அதுவேயாகும். ஏனெனில் யாராவது ஒருவர் ஒரு கணம் அனுபவிக்கும் சிற்றின்பங்கள் பாவம் இல்லை என்று சொல்லிவிட மாட்டார்களா… Continue reading இதழ்:2467 சிறுதுளி விஷம் போன்றது தான் சிற்றின்பமும்!
இதழ்:2466 நீ பள்ளத்தாக்கிலா விழுந்து கிடக்கிறாய்? எழுந்திரு!
யோசுவா: 6:27 இவ்விதமாகக் கர்த்தர் யோசுவாவோடேகூட இருந்தார்; அவன் கீர்த்தி தேசமெங்கும் பரம்பிற்று. எனக்கு மிகவும் பிடித்தமான கிறிஸ்மஸ் அலங்காரங்களில் ஒன்று நாங்கள் மேலை நாட்டிலிருந்து வாங்கிவந்த மெழுகுவர்த்தி ஸ்டாண்ட். அதில் ஆறு மெழுகுவர்த்திகளோடு மூன்று அடுக்குகள் சிவப்பும் வெள்ளையுமான கிறிஸ்மஸ் மலர்கள் சுற்றி வளைந்து இருந்ததால், பார்க்க மிகவும் அழகாக இருக்கும். போனவருடத்திற்கு முந்தின வருடம் கிறிஸ்மஸ் முடிந்தவுடன் எல்லா அலங்காரப் பொருட்களையும் எடுத்து வைக்கும்போது நான் அந்த மெழுகுவர்த்தி ஸ்டாண்டை மாத்திரம் தனியே எடுத்து… Continue reading இதழ்:2466 நீ பள்ளத்தாக்கிலா விழுந்து கிடக்கிறாய்? எழுந்திரு!
இதழ்:2465 கண்ணால் கண்டவற்றை நாடிப் போகலாமா?
யோசுவா:7:1 “………. ஆகான் என்பவன் சாபத்தீடானதிலே சிலதை எடுத்துக்கொண்டான்; நாங்கள் அடிக்கடி வால்ப்பாறை போவது வழக்கம். அது மலைமேல் அமைந்திருக்கும் ஒரு பட்டணம்! மலைகளில் கார் ஏற ஆரம்பித்தவுடன், கண்ணாடியை இறக்கிவிட்டு, சில்லென்ற இயற்கை காற்றை அனுபவிப்போம். போகும்வழியில் குரங்குகள் ஏராளமாய் அங்கும் இங்கும் தாவி ஓடிக்கொண்டிருக்கும். அங்கே உள்ள ஒரு அருவியில் குளிக்க ஏராளமான மக்கள் வருவார்கள். அவர்கள் குரங்குகளுக்கு ஏதாவது கொடுப்பது வழக்கம். ஒருநாள் நான் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்தபோது ஒரு குரங்கு கையில்… Continue reading இதழ்:2465 கண்ணால் கண்டவற்றை நாடிப் போகலாமா?
இதழ்:2464 அன்றாட வாழ்க்கையின் சிறு பிரச்சனைகளுக்குக் கர்த்தர் தேவையில்லையோ?
யோசுவா: 7: 2 – 3 “…… அந்த மனுஷர் போய் ஆயியை வேவுபார்த்து, யோசுவாவினிடத்தில் திரும்பி வந்து அவனை நோக்கி, ஜனங்கள் எல்லாரும் போகவேண்டியதில்லை, ஏறக்குறைய இரண்டாயிரம் மூவாயிரம் பேர் போய் ஆயியை முறிய அடிக்கலாம்; இஸ்ரவேல் நாட்டிற்குப் போயிருந்தபோது, கெனேசரேத்து என்ற கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த கிபுட்ஸ் கெனேசரேத் என்ற ஹோட்டலில் தங்கியிருந்தோம். இயேசு கிறிஸ்து கடலின் மேல் நடந்த கெனேசரின் கடற்கரையில் அமைந்த ஊர் அது. இஸ்ரவேல் நாட்டின் விசேஷ உணவு வகைகளோடு பேதுரு… Continue reading இதழ்:2464 அன்றாட வாழ்க்கையின் சிறு பிரச்சனைகளுக்குக் கர்த்தர் தேவையில்லையோ?
இதழ்:2463 நம் வாழ்க்கையை கனியற்றுப் போகச் செயும் சிறு நரிகள்!
யோசுவா: 7: 2 – 4 “…… அந்த மனுஷர் போய் ஆயியை வேவுபார்த்து, யோசுவாவினிடத்தில் திரும்பி வந்து அவனை நோக்கி, ஜனங்கள் எல்லாரும் போகவேண்டியதில்லை, ஏறக்குறைய இரண்டாயிரம் மூவாயிரம் பேர் போய் ஆயியை முறிய அடிக்கலாம்; அவர்கள் கொஞ்சம் பேர்தான் என்றார்கள். அப்படியே ஜனங்களில் ஏறக்குறைய மூவாயிரம் பேர் அவ்விடத்திற்குப் போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஆயியின் மனுஷருக்கு முன்பாக முறிந்தோடினார்கள். நாங்கள் சென்னையில் வசித்தபோது, எங்கள் வீட்டின் முதல் மாடியில் என் மகனும், மருமகளும் குடியிருந்தார்கள்.… Continue reading இதழ்:2463 நம் வாழ்க்கையை கனியற்றுப் போகச் செயும் சிறு நரிகள்!
இதழ்:2462 கர்த்தரின் கிரியைக் காணப் பொறுமையாய்க் காத்திரு!
யோசுவா 2: 10 நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட போது கர்த்தர் உங்களுக்கு முன்பாக சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப்போகப்பண்ணினதையும், நீங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் சங்காரம் பண்ணின எமோரியரின் இரண்டு ராஜாக்களாகிய சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் கேள்விப்பட்டோம். ராகாபின் சரித்திரத்தைப் படிக்க ஆரம்பித்தபோது பதினைந்து நாட்கள் நாம் தியானிக்கும்படி என்னால் எழுத முடியும் என்று நான் நிச்சயமாக எண்ணவேயில்லை. பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலுமிருந்து ராகாபைப் பற்றி படிக்க ஆரம்பித்தபோதுதான், இந்தப் பெண்மணியின் வாழ்க்கையைப் பற்றி ஒரு புத்தகமே… Continue reading இதழ்:2462 கர்த்தரின் கிரியைக் காணப் பொறுமையாய்க் காத்திரு!
இதழ்:2461 உன்னுடைய மதிலுக்கு வெளியே நிற்கும் தேவன்!
யோசுவா: 6:1 எரிகோ இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது; ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை. இஸ்ரவேல் மக்கள் கானானின் எல்லையை நெருங்கிவிட்டனர். நாம் முன்னர் படித்தவிதமாக மோசே பன்னிரண்டு வேவுகாரரை கானானுக்குள் அனுப்பியிருந்தான். அதில் காலேபும், யோசுவாவும் கானானைப் பற்றி பாலும் தேனும் ஓடுகிற தேசம் என்ற மகிழ்ச்சியோடு வந்தனர், ஆனால் மற்ற பத்துபேரும் அந்த தேசம் நமக்கு அழிவும் அழுகையும்தான் என்று துக்கமுகமாய் வந்தனர். தங்களை வழிநடத்தி வரும் தேவனாகிய கர்த்தரைப்… Continue reading இதழ்:2461 உன்னுடைய மதிலுக்கு வெளியே நிற்கும் தேவன்!
