Tamil Bible study

இதழ்:2328 காகம் மூலமோ அல்லது கப்பல் மூலமோ உன் தேவை சந்திக்கப்படும்!

1 இராஜாக்கள் : 17: 4 - 6  அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய், அங்கே உன்னைப் போஷிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார். அவன் போய்க் கர்த்தருடைய வார்த்தையின்படியே யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையிலே தங்கியிருந்தான். காகங்கள் அவனுக்கு விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டு வந்தது, தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தான். நாங்கள் சில வருடங்களுக்கு முன்பு வரை சென்னையில் வாழ்ந்து கொண்டிருந்தோம். அங்கு விடியற்காலை 5 மணிக்கே நாங்கள் இருவரும் நடப்பதற்காக வெளியே செல்லுவோம்.… Continue reading இதழ்:2328 காகம் மூலமோ அல்லது கப்பல் மூலமோ உன் தேவை சந்திக்கப்படும்!

Tamil Bible study

இதழ்:2327 உன்னை உருவாக்கும் தேவன்!

1 இராஜாக்கள் 17:2-3 பின்பு கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர்: இவ்விடத்தைவிட்டுக் கீழ்த்திசையை நோக்கிப்போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக் கொண்டிரு. கீலேயாத்தின் குடிகளிலிருந்து எலியா கர்த்தரால் அழைக்கப்பட்டு, இஸ்ரவேலில்  பாகால் வழிபடுதலை மையமாகக் கொண்டிருந்த சமாரியாவுக்கு கர்த்தரால் அனுப்பப்பட்டான் என்று பார்த்தோம். கர்த்தர் தனக்குக் கொடுத்த பணியை அவன் ஆகாபின் அரண்மனையில் செய்து முடித்தவுடன் கர்த்தர் அவனுக்கு இன்னொரு செய்தியை கொடுக்கிறார். அவர் இவ்விடத்தைவிட்டுக் கீழ்த்திசையை நோக்கிப்போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக்… Continue reading இதழ்:2327 உன்னை உருவாக்கும் தேவன்!

Tamil Bible study

இதழ்:2326 ஜெபிக்கும் வாஞ்சையைத் தந்தருளும்!

1 இராஜாக்கள் 17:1  கிலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி; என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான். அக்கிரமம் நிறைந்த ஆகாபின் முன்னால் எலியா ஜீவனுள்ள தேவனுடைய நாமத்தினால் வந்து நின்றான் என்று பார்த்தோம். தேவனுடைய பிள்ளைகளாய் வாழ்ந்து வந்த பலருக்கு, யெரொபெயாமிலிருந்து ஆரம்பித்த அந்த நீடிய 40 வருட காலகட்டம் தேவனால் மறக்கப்பட்ட காலம் போலத்… Continue reading இதழ்:2326 ஜெபிக்கும் வாஞ்சையைத் தந்தருளும்!

Tamil Bible study

இதழ்:2325 என் தேவன் எங்கே என்று சத்துரு கேட்கும் போது?

1 இராஜாக்கள் 17:1  கிலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி....... இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான். கடந்த சில வாரங்களாக நான் நேரம் கிடைக்கும்போதெல்லாம் எலியா வாழ்ந்த காலத்தைப் பற்றி படித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது என் உள்ளத்தில் ஒரு கேள்வி எழுந்தது! ஒருவேளை நான் ஆகாப் ஆளுகை செய்து கொண்டிருந்த வேளை அங்கே பெத்தேலில் வாழ்ந்து கொண்டிருந்திருப்பேன் என்றால் தேவன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற எண்ணம்… Continue reading இதழ்:2325 என் தேவன் எங்கே என்று சத்துரு கேட்கும் போது?

Tamil Bible study

இதழ்:2324 எரிமலை போன்ற வருகை தந்தவன்!

1 இராஜாக்கள்: 17:1 கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி என்னுடைய நண்பர்களில் பலருக்கு நல்ல குடும்பப் பின்னணி உண்டு! அவர்களுடைய சொந்தங்கள் எல்லா ஊரிலேயும் இருப்பார்கள். ஆனால் என்னுடைய பெற்றோரைப் பற்றி நினைக்கும்போது , அவர்கள் பிறந்த  குக்கிராமங்களைப் பற்றி யோசிக்கும்போது, இந்த உலகத்தில் நான் எந்த விசேஷமான அடையாளமும் இல்லாதவள் போலத்தோன்றும். உங்களில் யாருக்காவது என்னைப்போலத் தோன்றியது உண்டா? அப்படித் தோன்றியிருக்குமானால் நமக்கு ஒரு துணை உண்டு! அடுத்த இரண்டு வாரங்கள் நாம்… Continue reading இதழ்:2324 எரிமலை போன்ற வருகை தந்தவன்!

Tamil Bible study

இதழ்:2323 ஊழியத்தில் பேரார்வம் உண்டா?

1 இராஜாக்கள்: 16: 29 -30  யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தெட்டாம் வருஷத்தில்,உம்ரியின் குமாரனாகிய ஆகாப் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி சமாரியாவில் இஸ்ரவேலின்மேல் இருபத்திரண்டு வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான். உம்ரியின் குமாரனாகிய ஆகாப், தனக்கு முன்னிருந்த எல்லாரைப்பார்க்கிலும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.  வேதத்தை ஆராய்ந்து படிக்கும்போது சில தனிப்பட்ட நபர்களின் வாழ்க்கை எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறது என்று பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு விஷயம். காயீனுக்கும் ஆபேலுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்திருப்பீர்கள் அல்லவா? ஆபிரகாமும் லோத்தும்… Continue reading இதழ்:2323 ஊழியத்தில் பேரார்வம் உண்டா?

Tamil Bible study

இதழ்:2322 அன்றன்று தேவைகளை திட்டமிட்டு அளிக்கிறார்!

யாத்திராகமம் 23: 20, 23, 30  வழியில் உன்னை காக்கிறதற்கும், நான் ஆயத்தம் பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும் இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்பாக அனுப்புகிறேன். என் தூதனானவர் உனக்கு முன்சென்று, எமோரியரும் ஏத்தியரும் பெரிசியரும் கானானியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடத்துக்கு உன்னை நடத்திக்கொண்டுபோவார். அவர்களை நான் அதம்பண்ணுவேன். நீ விருத்தியடைந்து தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்வரைக்கும் அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாய் உன் முன்னின்று துரத்தி விடுவேன். கடந்த நாட்களில் நாம் 2 நாளாகம்… Continue reading இதழ்:2322 அன்றன்று தேவைகளை திட்டமிட்டு அளிக்கிறார்!

Tamil Bible study

இதழ்:2321 இளைப்பாறுதல் தரும் தேவனே!

2 நாளாகமம் 20 :30  இவ்விதமாய் தேவன் சுற்றுபுறத்தாரால் யுத்தம் இல்லாத இளைப்பாறுதலை அவனுக்கு கட்டளை யட்டதினால் யோசபாத்தின் ராஜ்யபாரம் அமரிக்கையாயிருந்தது. ராஜாவாகிய யோசபாத்தின்  சரித்திரத்தை நாம் படித்துக் கொண்டிருக்கிறோம்.  அவன் தேவனுக்காக வாழ தன் மனதிலே முடிவு செய்து, தேவனுக்காக ஊழியம் செய்து கொண்டிருந்தபோது, அவன் நெருப்பிலே புடமிடப்பட்டான், அவனை முப்படைகள் தாக்கின. எதிரிகளை சந்திக்க வனாந்தரத்துக்கு புறப்பட்டான் ஆனால் அங்கு ஆசீர்வாதத்தை சந்தித்தான் என்று பார்த்தோம்.  இன்றைய வேதாகமப் பகுதி தேவனை நான் இன்னும்… Continue reading இதழ்:2321 இளைப்பாறுதல் தரும் தேவனே!

Tamil Bible study

இதழ்:2320 எந்தன் நாவில் புதுப்பாட்டு!

2 நாளாகமம் 20 :27 ,28  பின்பு கர்த்தர் அவர்களை அவர்கள் சத்துருக்கள்பேரில் களிகூரச் செய்தபடியால் யூதா மனுஷர் யாவரும் எருசலேம் ஜனங்களும் அவர்களுக்கு முன்னாலே யோசபாத்தும்  மகிழ்ச்சியோடே  எருசலேமுக்குத்  திரும்பினார்கள்.  அவர்கள் தம்பருகளோடும் சுரமண்டலங்களோடும் பூரிகைகளோடும் எருசலேமிலிருக்கிற கர்த்தருடைய ஆலயத்திற்கு வந்தார்கள். இந்த புதிய மாதத்தைக் காணச்செய்த தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம்! இந்த மாதம் முழுவதும் கர்த்தர் தாமே நம்மோடிருந்து நம்மைக் காத்து வழிநடத்துவாராக! யூதாவின் ராஜாவாகிய யோசபாத் மும்முரமாக தேவனுக்காக ஊழியம் செய்த நாட்களில்… Continue reading இதழ்:2320 எந்தன் நாவில் புதுப்பாட்டு!

Tamil Bible study

இதழ்:2319 எண்ணிப்பார் நீ பெற்ற ஆசீர்வாதங்களை!

2 நாளாகமம் 20 :25 ,26 யோசபாத்தும் அவனுடைய ஜனங்களும் அவர்கள் உடைமைகளைக் கொள்ளையிட வந்த போது , அவர்கள் கண்ட ஏராளமான பொருள்களும் பிரேதங்களிலருந்து உரிந்து போட்ட ஆடை ஆபரணங்களும் , தாங்கள் எடுத்துக்கொண்டு போகக்கூடாதிருந்தது ;  மூன்று நாளாய் கொள்ளையிட்டார்கள் ; அது அவ்வளவு மிகுதியாயிருந்தது .  நாலாம் நாளில் பெராக்காவிலே கூடினார்கள்;  அங்கே கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்தினார்கள்; ஆதலால் அவ்விடத்திற்கு இந்நாள்வரைக்கும் இருக்கிற படி பெராக்கா என்னும் பேர் தரித்தார்கள். இன்று காலையிலிருந்து… Continue reading இதழ்:2319 எண்ணிப்பார் நீ பெற்ற ஆசீர்வாதங்களை!