Tamil Bible study

A VERY BLESSED EASTER TO YOU ALL!

Prema Sunder RajMarch 31 HE IS RISEN! RISEN INDEED! The stone was moved - not for Jesus - but for the women: not so Jesus could come out, but so the women could see in...the darkness is gone!  The sun is up! The Son is out! நமக்காக மரித்து உயிர்த்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த இந்த நாள்… Continue reading A VERY BLESSED EASTER TO YOU ALL!

Tamil Bible study

இதழ்:2267 சிலுவையை நோக்கிப்பார்! பிழைப்பாய்!

எண்ணா:21:7 அதினால் ஜனங்கள் மோசேயிடத்தில் போய்: நாங்கள் கர்த்தருக்கும் உமக்கும் விரோதமாய்ப் பேசினதால் பாவஞ்செய்தோம்; சர்ப்பங்கள் எங்களைவிட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றார்கள்; மோசே ஜனங்களுக்காக விண்ணப்பம் பண்ணினான்.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காகத் தம்மைத்தாமே சிலுவை பரியந்தமும் தாழ்த்திய நாள் இன்று! அவர் அன்று பட்ட பாடுகள் அனைத்துமே எனக்காகவே, என்னை இரட்சிப்பதற்காகவே என்று நினைக்கும்போது உள்ளம் நன்றியால் நிரம்பி அவரை இன்னும் அதிகமாக நேசிக்க வேண்டும் என்ற உறுதியைக் கொடுக்கிறது! சில… Continue reading இதழ்:2267 சிலுவையை நோக்கிப்பார்! பிழைப்பாய்!

Tamil Bible study

இதழ்:2266 மக்கள் கண்கூடாகப் பார்த்த ஞானம்!

1 இராஜாக்கள்: 3:27 அப்பொழுது ராஜா உயிரோடிருக்கிற பிள்ளையைக்கொல்லாமல் அவளுக்குக் கொடுத்து விடுங்கள், அவளே அதின் தாய் என்றான். இந்த வேதாகமப் பகுதியை இன்று நான் வாசித்த போது, சாலொமோனின் அரங்கத்தில் கூடியிருந்த மக்களின் முகத்தில் காணப்பட்ட ஆச்சரியத்தை என்னால் காண முடிந்தது. அங்கிருந்த மக்கள் அப்படியே வாயடைத்து நிற்கும்படியாக சாலொமோன்  கொடுத்த நியாயத்தீர்ப்பு இருந்தது மட்டும் அல்லாமல், இது மனிதனுடைய ஞானத்தினால் அல்ல, தேவனுடைய ஞானத்தினால் மட்டுமே ஆகும் என்று இஸ்ரவேல் முழுவதும் உள்ள மக்கள் கண்டறிந்தனர். இந்த… Continue reading இதழ்:2266 மக்கள் கண்கூடாகப் பார்த்த ஞானம்!

Tamil Bible study

இதழ்:2265 இருவருக்கும் சரிபாதி!

1 இராஜாக்கள்3: 24-27  ஒரு பட்டயத்தை கொண்டுவாருங்கள் என்றான், அவர்கள் ஒரு பட்டயத்தை ராஜாவினிடத்தில் கொண்டுவந்தார்கள்.   ராஜா உயிரோடிருக்கிற பிள்ளையை இரண்டாகப் பிளந்து, பாதியை இவளுக்கும் பாதையை அவளுக்கும் கொடுங்கள் என்றான். அப்பொழுது உயிரோடிருக்கிற பிள்ளையின் தாய், தன் பிள்ளைக்காக அவள் குடல் துடித்ததினால், ராஜாவை நோக்கி; ஐயோ என் ஆண்டவனே, உயிரோடிருக்கிற பிள்ளையைக் கொல்ல வேண்டாம், அதை அவளுக்கே கொடுத்து விடும் என்றாள். மற்றவள் அது எனக்கும் வேண்டாம், உனக்கும் வேண்டாம் என்றாள். அப்பொழுது… Continue reading இதழ்:2265 இருவருக்கும் சரிபாதி!

Tamil Bible study

இதழ்:2264 நன்மை தீமையை வகையறுக்கும் பட்டயம்!

1 இராஜாக்கள்3: 24,25 ஒரு பட்டயத்தை கொண்டுவாருங்கள் என்றான், அவர்கள் ஒரு பட்டயத்தை ராஜாவினிடத்தில் கொண்டுவந்தார்கள்.  ராஜா உயிரோடிருக்கிற பிள்ளையை இரண்டாகப் பிளந்து, பாதியை இவளுக்கும் பாதையை அவளுக்கும் கொடுங்கள் என்றான். உண்மை பெலவீனமாகத் தோன்றினாலும் உண்மை எப்பொழுதுமே மிகவும் பெலமுள்ளது என்று சொல்வார்கள். இரண்டு தாய்மார்! ஒரு குழந்தை! இருவரும் சொந்தம் கொண்டாடுகிறார்கள்! யாரிடம் உண்மை உள்ளது? யார் பொய் சொல்கிறார்கள்? தேவனாகிய கர்த்தர் வாலிபனாகிய சாலொமொன் கேட்ட ஞானத்தை அவனுக்கு கொடுத்தது மட்டுமல்லாமல், அவனுடைய… Continue reading இதழ்:2264 நன்மை தீமையை வகையறுக்கும் பட்டயம்!

Tamil Bible study

இதழ்:2263 பொய்யராக வாழ வேண்டாமே!

சங்கீதம் 19: 14  என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக. இன்று நாம் 1 இராஜாக்கள் 3: 17-22 ல் நடந்த சம்பவத்தை நாம் இன்று படிக்கிறோம். வேதாகமத்தை திறந்து ஒருமுறை வாசித்து விடுங்கள். என்னுடைய கற்பனையின்படி அன்றைய எருசலேம் செய்தித் தாள் இருந்திருக்குமானால்,  இந்தத் தலைப்போடு தான் வந்திருக்கும்; இரண்டு வேசிகள் ஒரு பிள்ளையின் உரிமைக்காக சண்டை: மன்னர் சாலொமோனின் தீர்ப்பு இன்று ! அன்று எருசலேம் முழுவதுமே… Continue reading இதழ்:2263 பொய்யராக வாழ வேண்டாமே!

Tamil Bible study

இதழ்:2262 உம்மைப் பிரியப்படுத்தும் ஞானம் தாரும்!

1 இராஜாக்கள் 3: 16  அப்பொழுது வேசிகளான இரண்டு ஸ்திரீகள் ராஜாவினிடத்தில் வந்து, அவனுக்கு முன்பாக நின்றார்கள். சாலொமோன் புதிதாக சிங்காசனம் ஏறியிருக்கிற ராஜா என்று பார்த்தோம். கிபியோனில் கர்த்தர் அவனுக்கு தரிசனமாகி உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது, அவன் உம்முடைய ஜனத்தை நியாயம் தீர்க்க ஞானம் வேண்டும் என்று கேட்டான். அந்த விண்ணப்பம் கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருந்தது. இன்று ஒருவேளை கர்த்தர் நமக்கு தரிசனமாகி நாம் வேண்டிய ஞானத்தை அருளினால், அவர் நமக்கு ஞானம்… Continue reading இதழ்:2262 உம்மைப் பிரியப்படுத்தும் ஞானம் தாரும்!

Tamil Bible study

இதழ்:2261 உம்மைப் பிரியப்படுத்தும் வாஞ்சையைத் தாரும்!

1 இராஜாக்கள் 3: 5 - 10 ........சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது.  இன்று நான் ஜெபித்து முடித்தவுடனே கர்த்தர் என்னைப் பார்த்து, உன் விண்ணப்பம் எனக்கு உகந்ததாயிருந்தது என்றால் நான் எப்படி துள்ளிக் குதிப்பேன் என்று சற்று யோசித்து பார்த்தேன். என் வார்த்தைகள் அவருக்கு பிரியமாயிருந்தன என்று நினைக்கும்போதே சந்தோஷம் பொங்கும். இன்றைய வேதாகமப் பகுதியின் உண்மை என்னவென்றால் சாலொமோனின் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டது. தேவனாகிய கர்த்தர் சாலொமோனுடைய விண்ணப்பத்தின் மேல்… Continue reading இதழ்:2261 உம்மைப் பிரியப்படுத்தும் வாஞ்சையைத் தாரும்!

Tamil Bible study

இதழ்:2260 சாலையோர வழிகாட்டி பலகைகள் போன்ற எச்சரிப்புகள்!

1 இராஜாக்கள்: 2:1-4  தாவீது தன்னுடைய மரண காலம் சமீபித்தபோது, அவன் தன் குமாரனாகிய சாலொமோனுக்குக் கட்டளையிட்டு சொன்னது: நான் பூலோகத்தார் யாவரும் போகிற வழியே போகிறேன், நீ திடன்கொண்டு புருஷனாயிரு....... மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி, நீ உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும், சாட்சிகளையும் கைக்கொள்ள, அவர் வழிகளில் நடக்கும்படிக்கு அவருடைய காவலைக் காப்பாயாக. இன்று தொடர்ந்து தாவீது தன்னுடைய மரணப் படுக்கையில் சாலொமோனுக்கு விட்டு சென்ற அறிவுரையைப் படிக்கிறோம். முதலில் நான் இதைப்… Continue reading இதழ்:2260 சாலையோர வழிகாட்டி பலகைகள் போன்ற எச்சரிப்புகள்!

Tamil Bible study

இதழ்:2259 ஒரே ஒரு ஆவல் இந்த பூமியில்!

1 இராஜாக்கள் 2:4  ... நீ உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும், சாட்சிகளையும் கைக்கொள்ள, அவர் வழிகளில் நடக்கும்படிக்கு அவருடைய காவலைக் காப்பாயாக. நாம் சில நாட்களாக, இஸ்ரவேலை ஆண்டதாவீது ராஜாவும், ஆளப்போகிற சாலொமோன் ராஜாவும் பேசிக் கொண்டிருப்பதை படித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு அனுபவம் மிக்க தகப்பன் தன்னுடைய குமாரனுக்குக் கொடுத்த அறிவுரை இது. தாவீது சாலொமோனை நோக்கி,அவர் வழிகளில் நடக்கும்படிக்கு அவருடைய காவலைக் காப்பாயாக என்பதைப் பார்க்கிறோம். சாலொமோனை ராஜாவாகும்படி தெரிந்து கொண்ட… Continue reading இதழ்:2259 ஒரே ஒரு ஆவல் இந்த பூமியில்!