Bible Study

மலர்:1 இதழ்: 56 கோபுரமோ! குப்பை குழியோ!

ஆதி:41: 14, 38 அப்பொழுது பார்வோன் யோசேப்பை அழைப்பித்தான்; அவனைத்  தீவிரமாய் காவல்கிடங்கிலிருந்து கொண்டுவந்தார்கள். அவன் சவரம் பண்ணிக்கொண்டு, வேறு வஸ்திரம் தரித்து, பார்வோனிடத்தில் வந்தான். அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி; தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப் போல வேறொருவன் உண்டோ என்றான் இன்றைய தியானத்தை எழுத யோசேப்பின் வாழ்க்கையை ஆராய்ந்த போது, பவுல் எழுதிய இந்த வார்த்தைகள் தான் ஞாபகத்துக்கு வந்தது. கலா:6: 7  மோசம் போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார்.… Continue reading மலர்:1 இதழ்: 56 கோபுரமோ! குப்பை குழியோ!

Bible Study

மலர்:1இதழ்: 77 தலைக்கு வந்த ஆபத்து!

யாத்தி:4: 20, 24, 25 அப்பொழுது மோசே தன் மனைவியையும், தன் பிள்ளைகளையும் கழுதையின் மேல் ஏற்றிக் கொண்டு எகிப்து தேசத்துக்கு திரும்பினான்.... வழியில் தாங்கும் இடத்தில் கர்த்தர் அவனுக்கு வெளிப்பட்டு அவனைக் கொல்லப் பார்த்தார். அப்பொழுது சிப்போராள் ஒரு கருக்கான கல்லை எடுத்து, தன் புத்திரனுடைய  நுனித்தோலை அறுத்து, அதை அவன் கால்களுக்கு முன்பாக எறிந்து நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன் என்றாள்.  நாம் டிசெம்பர் மாதம் முதல் வாரத்தில், மோசேயின் மனைவியாகிய சிப்போராளைப்… Continue reading மலர்:1இதழ்: 77 தலைக்கு வந்த ஆபத்து!

Bible Study

மலர்:1இதழ்: 76 2011 புத்தாண்டு சிறப்பு மலர்!

யோவான்: 14: 6 “அதற்கு இயேசு; நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில்  வரான்” கடந்த மாதம், நானும் என் மகனும், தென்னிந்தியாவில் உள்ள பல மாகாணங்களில் உள்ள எங்கள் ஊழிய மையங்களுக்கு, கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள , காரில் பிரயாணப்பட்டோம்.  எங்களுடைய காரில் GPS என்ற வழி காட்டும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஒருநாள் நாங்கள் தேசிய நெடுஞ்சாலை ஒன்றில், நான்கு வழி சாலையில் வந்து கொண்டிருந்த போது எங்களுடைய வழிகாட்டும் கருவியிலிருந்து… Continue reading மலர்:1இதழ்: 76 2011 புத்தாண்டு சிறப்பு மலர்!

Bible Study

மலர்:1இதழ்: 75 பாலைவனத்தில் கிடைத்த நீரோடை!

  யாத்தி: 2: 21, 22 மோசே அந்த மனிதனிடத்தில் தங்கியிருக்க சம்மதித்தான்; அவன் சிப்போரள் என்னும் தன் குமாரத்தியை மோசேக்கு  கொடுத்தான்; அவள் ஒரு குமாரனைப் பெற்றாள்; நான் அந்நிய தேசத்தில் பரதேசியாய் இருக்கிறேன் என்று சொல்லி அவனுக்கு கேர்சொம் என்று பேரிட்டான்.          மோசே!    40 வருடங்கள் அரண்மனையில் வாழ்ந்தான்! பார்வோன் குமாரத்தியின் செல்லக் குமாரனாய், பார்வோன் ராஜாவின் பேரனாய் எல்லாவித செல்வங்களையும் அனுபவித்து வளர்ந்தான். எகிப்து ராஜ்யத்தை ஆளவேண்டிய  ராஜகுமாரன் ஒருநாள் எபிரேயரைக்… Continue reading மலர்:1இதழ்: 75 பாலைவனத்தில் கிடைத்த நீரோடை!

Bible Study

மலர்:1இதழ்: 74 குடும்பம் ஒரு பரிசு!

யோவான்:13: 34 “ நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்கு கொடுக்கிறேன்” உங்களில் யாராவது ராஜாவின் மலர்களுக்கு புதிதாக வந்திருப்பீர்களானால், ஒரு சிறு முன்னுரை கொடுக்க விரும்புகிறேன்! நாம் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆதியாகமத்திலிருந்து ஆரம்பித்தோம். நம்முடைய வேத ஆராய்ச்சியில் நாம் பெண்களைப்பற்றி மாத்திரம் படிக்கவில்லை. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு என்று பலரைப் பற்றிப் படித்தோம். ஆனால் வேதத்தில் ஏதாவது ஒரு பெண்ணின்பெயர் வரும்போது… Continue reading மலர்:1இதழ்: 74 குடும்பம் ஒரு பரிசு!

Bible Study

மலர்:1இதழ்: 73 ஆத்துமத்தில் குஷ்டரோகம்?????

  எண்ணா:12: 13, 15 அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி; தேவனே அவளை குணமாக்கும் என்று கெஞ்சினான். அப்படியே மிரியாம் ஏழுநாள் பாளயத்துக்கு புறம்பே விலகப்பட்டிருந்தாள். மிரியாம் சேர்த்துக்கொள்ளப்படுமட்டும் ஜனங்கள் பிரயாணம் பண்ணாதிருந்தார்கள்.   தேவனுடைய சேவைக்காக தங்களை அர்ப்பணித்த அநேக மிஷனரிகளைப் பற்றி படிக்கும்போது நாம் இவர்களை சந்திக்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே என்று எண்ணுவதுண்டு! அப்படிப்பட்டவர்களின் பட்டியலில் இடம் பெறுபவர் டாக்டர் பால் பிராண்ட் என்ற மருத்துவரும் அவர் மனைவி மார்கரெட் அம்மையாரும்.  அவர் நம்முடைய… Continue reading மலர்:1இதழ்: 73 ஆத்துமத்தில் குஷ்டரோகம்?????

Bible Study

மலர்:1இதழ்: 71 அதிகாலையில் துதிசெய்!

யாத்தி:15: 20, 21 “ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும், தன் கையில் தம்புருவை எடுத்துக்கொண்டாள்; சகல ஸ்திரீகளும் தம்புரோடும், நடனத்தோடும் அவளுக்கு பின்னே புறப்பட்டுப்போனார்கள்.  மிரியாம் அவர்களுக்கு  பிரதிவசனமாக; கர்த்தரைப் பாடுங்கள்; அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையும் குதிரை வீரனையும் கடலிலே தள்ளினார் என்று பாடினாள்.”   இன்று காலையில் எப்பொழுதும் எழும்புகிற நேரத்தைவிட சிறிது அதிக நேரம் படுத்திருக்க என் சரீரம் ஆசைப்பட்டது. ஆனால் என் வீட்டுத் தோட்டத்தில் உள்ள பறவைகளின் சத்தம் என்னை… Continue reading மலர்:1இதழ்: 71 அதிகாலையில் துதிசெய்!

Bible Study

மலர்:1இதழ்: 70 மிரியாம் ஒரு திடநம்பிக்கையுள்ள பெண்!

நாம் நேற்று மிரியாமை ஒரு ஞானமுள்ள பெண்ணாய்ப் பார்த்தோம். பார்வோன்  குமாரத்தியிடம் ஞானமாய் பேசி குழந்தையின் தாயே குழந்தையை வளர்க்கும் திட்டத்தைக் கொடுக்கிறாள்.  ஞானமுள்ளவள்  மட்டுமல்ல, மிரியாமை ஒரு திடமான பெண்ணாகக் கூட இங்கு காண்கிறோம்.  நாணலினால் செய்த பெட்டியில் அவள் தம்பி மோசே நைல் நதிக்கரையில் வைக்கப்பட்டபோது, யார் அந்தப் பக்கம் வருகிறார்களோ,  அந்தப் பெட்டி யார் கண்ணில் படப்போகிறதோ என்று ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். அந்தப் பெட்டி பார்வோனின் படை வீரர் கண்ணில் படுமானால் தன்… Continue reading மலர்:1இதழ்: 70 மிரியாம் ஒரு திடநம்பிக்கையுள்ள பெண்!

Bible Study

மலர்:1இதழ்: 69 மிரியாம் ஒரு ஞானமுள்ள பெண்!

சில நாட்கள் நாம்  மோசேயின் தாயாகிய யோகெபெத்தைப் பற்றி ஒரு பொறுப்புள்ள, பெலசாலியான, திறமைசாலியான, ஆசீர்வாதமான தாயாகப் பார்த்தோம். இன்று முதல் மோசேயின் தமக்கையாகிய மிரியாமைப் பற்றி ஒரு சில நாட்கள் படிப்போம். குழந்தை மோசேயை நாணல் பெட்டியில் வைத்து நைல் நதியோரமாய் நாணல் நிறைந்த கரையில் மிதக்க வைத்து, குழந்தையின் அக்காவாகிய மிரியாமை தூரத்தில் இருந்து காவல் காக்கும்படி செய்தாள் யோகெபெத். மிரியாமுக்கு அப்பொழுது பத்திலிருந்து பதின்மூன்று வயதிற்குள் இருக்கும். யார் அந்த நதிக்கரையோரமாக வருவார்களோ?… Continue reading மலர்:1இதழ்: 69 மிரியாம் ஒரு ஞானமுள்ள பெண்!

Bible Study

மலர்:1இதழ்: 68 நீ ஒரு ஆசீர்வாதமான தாயா?

எண்ணா: 26: 59 “ அம்ராமுடைய மனைவிக்கு யொகெபெத் என்று பேர்; அவள் எகிப்திலே லேவிக்கு பிறந்த குமாரத்தி; அவள் அம்ராமுக்கு ஆரோனையும், மோசேயையும், அவன் சகோதரியான மிரியாமையும் பெற்றாள்”  யோகெபெத்தை நாம் பொறுப்புள்ள ஒரு தாயாகவும், பெலசாலியான ஒரு தாயாகவும், திறமைசாலியான ஒரு தாயாகவும் பார்த்தோம். இந்த தாய் தன்னுடைய  பிள்ளைகளுக்கு மட்டும் அல்ல, இஸ்ரவேல் மக்களுக்கு எவ்விதமாய் ஒரு ஆசீர்வாதமாக இருந்தாள் என்று பார்க்கலாம்.  யோகெபெத் வாழ்ந்த சமயம் இஸ்ரவேல் மக்கள் அடிமைத்தனத்தில் இருந்தனர்.… Continue reading மலர்:1இதழ்: 68 நீ ஒரு ஆசீர்வாதமான தாயா?