யோசுவா: 8:1 நீ பயப்படாமலும், கலங்காமலும் இரு; நீ யுத்த ஜனங்கள் யாவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து ஆயிபட்டணத்தின்மேல் போ, இதோ, ஆயியின் ராஜாவையும், அவன் பட்டணத்தையும், அவன் நாட்டையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன். அமெரிக்கா தேசத்தின் ஆரிசோனா மாநிலத்தில் இருக்கும், ’தி கிராண்ட் கேனன்’ என்ற உலகப்புகழ் பெற்ற மலைக் கணவாயைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உலகத்திலேயே மிகப் பெரிய, மிக அழகான கணவாய் இது என்றால் மிகையாகாது. சிவப்பு நிறத் துணியை மடித்ததுபோல சிவப்புக் கற்களான பாறைகள்… Continue reading மலர் 6 இதழ்: 437 வெற்றியை உன் கண்களால் பார்!
Author: Rajavinmalargal
மலர் 6 இதழ்: 436 பெலன் தாரும் எனக்கு!
யோசுவா: 8:1 ”… நீ யுத்த ஜனங்கள் யாவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து ஆயிபட்டணத்தின்மேல் போ,..” சில வருடங்களுக்கு முன்பு என்னுடைய எண்பது வயதான அப்பா படுக்கையில் இருந்தார்கள். இருதயக் கோளாரினால் பாதிக்கப்பட்ட அவர்களால் தானாக எழும்பவோ அல்லது எதையும் செய்யவோ முடியவில்லை. இந்திய ராணுவத்தில் இருந்த அவர்களுடைய கைகளில் நல்ல பெலன் இருந்ததது, மனதில் தைரியம் இருந்தது ஆனால் கால்களும், சரீரமும் பெலனிழந்து போய்விட்டன. இரண்டு மூன்று தடவை தானாக எழும்ப முயற்சி செய்ததால் கீழே விழுந்து… Continue reading மலர் 6 இதழ்: 436 பெலன் தாரும் எனக்கு!
மலர் 6 இதழ்: 435 பள்ளத்தாக்கான வாழ்க்கை மாறும்!
யோசுவா 7:26 ..” அவன்மேல் இந்நாள் வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இப்படியே கர்த்தர் தன் கோபத்தின் உக்கிரத்தை விட்டு மாறினார்; ஆகையால் அவ்விடம் இந்நாள்வரைக்கும் ஆகோர் பள்ளத்தாக்கு என்னப்படும். ஒசியா: 2:15 அவளுக்கு திராட்சத்தோட்டங்களையும், நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்.” நான் முதன்முறையாக ஆகானின் கதையை என்னுடைய சன்டே ஸ்கூலில் கேட்ட ஞாபகம் இருக்கிறது! அன்று எனக்கு பழைய ஏற்பாட்டின் தேவன் மீது அதிக பயம் வந்தது. கடவுள் ஆகானுக்கு மட்டும் அல்ல,… Continue reading மலர் 6 இதழ்: 435 பள்ளத்தாக்கான வாழ்க்கை மாறும்!
மலர் 6 இதழ்: 434 எதை ஒளித்து வைத்திருக்கிறாய்?
யோசுவா: 7:21 ”கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும், நான் கண்டு அவைகளை இச்சித்து, எடுத்துக்கொண்டேன். இதோ அவைகள் என் கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைந்திருக்கிறது. பலநாட்களாக நாம் ஆகானைப்பற்றி படித்துக்கொண்டிருக்கிறோம். இஸ்ரவேலின் சேனையில் ஒரு போர்வீரனாக, தேவனாகிய கர்த்தரின் சித்தப்படி எரிகோவை அழிக்கப் புறப்பட்ட இந்த வீரன், பொருளாசை என்ற சலனத்துக்கு சற்று இடம் கொடுத்ததால், அவன் நோக்கம் தடுமாறி, கண்களால் கண்ட பொருட்களை இச்சித்து,… Continue reading மலர் 6 இதழ்: 434 எதை ஒளித்து வைத்திருக்கிறாய்?
மலர் 6 இதழ்: 433 பார்வைக்கு இன்பமானவைகளை அடையக் கூடாதா?
யோசுவா: 7:21 ”கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும், நான் கண்டு……” ஆதி:3:6 அப்பொழுது ஸ்திரியானவள் அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியை தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு…. கர்த்தரால் மனிதனுக்காக உருவாக்கப்பட்ட ஏதேன் தோட்டத்தில் புத்தியை தெளிவிக்கும் என்று ஒரு கனியைக் காட்டி வஞ்சகம் பேசி சாத்தான் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கண்ணி வைத்து தன் வலையில் விழ வைத்தான். நாம்கூட… Continue reading மலர் 6 இதழ்: 433 பார்வைக்கு இன்பமானவைகளை அடையக் கூடாதா?
மலர் 6 இதழ்: 432 சிறு துளி விஷம் போன்றது சிற்றின்பம்!
யோசுவா: 7:20 அப்பொழுது ஆகான் யோசுவாவுக்கு பிரதியுத்தரமாக: மெய்யாகவே நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்; இன்னின்ன பிரகாரமாக செய்தேன். நான் சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜாவின்மலர்களில் ஒரே ஒரு கணம் சிற்றின்பம் தவறா? என்ற தலைப்பில் யோசேப்பின் வாழ்க்கையிலிருந்து எழுதியிருந்தேன். எனக்கு ஆச்சரியமூட்டும் உண்மை என்னவெனில், மிகவும் அதிகமாக என்னுடைய வாசகர்களால் வாசிக்கப்படுகிற இதழ் அதுவேயாகும். நாம் பாவம் செய்வது தவறு என்று நமக்கு தெரிந்திருந்தாலும், ஒரே ஒரு கணம் சிற்றின்பத்தை அனுபவித்தால் கூடத்… Continue reading மலர் 6 இதழ்: 432 சிறு துளி விஷம் போன்றது சிற்றின்பம்!
மலர் 6: இதழ் 431: நீ மறந்து போன தேவன்!
யோசுவா: 6:27 இவ்விதமாகக் கர்த்தர் யோசுவாவோடேகூட இருந்தார்; அவன் கீர்த்தி தேசமெங்கும் பரம்பிற்று. எனக்கு மிகவும் பிடித்தமான கிறிஸ்மஸ் அலங்காரங்களில் ஒன்று நாங்கள் மேலை நாட்டிலிருந்து வாங்கிவந்த மெழுகுவர்த்தி ஸ்டாண்ட். அதில் ஆறு மெழுகுவர்த்திகளோடு மூன்று அடுக்குகள் சிவப்பும் வெள்ளையுமான கிறிஸ்மஸ் மலர்கள் சுற்றி வளைந்து இருந்ததால், பார்க்க மிகவும் அழகாக இருக்கும். போனவருடத்திற்கு முந்தின வருடம் கிறிஸ்மஸ் முடிந்தவுடன் எல்லா அலங்காரப் பொருட்களையும் எடுத்து வைக்கும்போது நான் அந்த மெழுகுவர்த்தி ஸ்டாண்டை மாத்திரம் தனியே எடுத்து… Continue reading மலர் 6: இதழ் 431: நீ மறந்து போன தேவன்!
மலர் 6 இதழ்: 430 கண்கள் கண்டதை அடையும் ஆசை!
யோசுவா:7:1 “………. ஆகான் என்பவன் சாபத்தீடானதிலே சிலதை எடுத்துக்கொண்டான்; நாங்கள் அடிக்கடி வால்ப்பாறை என்னும் மலைப் பட்டணத்துக்கு போவது வழக்கம். மலைகளில் கார் ஏற ஆரம்பித்தவுடன், கண்ணாடியை இறக்கிவிட்டு, சில்லென்ற இயற்கை காற்றை அனுபவிப்போம். போகும்வழியில் குரங்குகள் ஏராளமாய் அங்கும் இங்கும் தாவி ஓடிக்கொண்டிருக்கும். அங்கே உள்ள ஒரு அருவியில் குளிக்க ஏராளமான மக்கள் வருவார்கள். அவர்கள் குரங்குகளுக்கு ஏதாவது உண்ணக்கொடுப்பது வழக்கம். ஒருநாள் நான் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்தபோது ஒரு குரங்கு கையில் ஒரு பொட்டலத்தை… Continue reading மலர் 6 இதழ்: 430 கண்கள் கண்டதை அடையும் ஆசை!
மலர் 6 இதழ்: 429 அந்தக் குருவிகளைக் காண்பவர்!
யோசுவா: 7: 2 - 3 “…… அந்த மனுஷர் போய் ஆயியை வேவுபார்த்து, யோசுவாவினிடத்தில் திரும்பி வந்து அவனை நோக்கி, ஜனங்கள் எல்லாரும் போகவேண்டியதில்லை, ஏறக்குறைய இரண்டாயிரம் மூவாயிரம் பேர் போய் ஆயியை முறிய அடிக்கலாம்; சில ஆண்டுக்ளுக்கு முன்பு இஸ்ரவேல் நாட்டிற்குப் போயிருந்தபோது, கெனேசரேத்து என்ற கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த கிபுட்ஸ் கெனேசரேத் என்ற ஹோட்டலில் தங்கியிருந்தோம். இயேசு கிறிஸ்து கடலின் மேல் நடந்த கெனேசரின் கடற்கரையில் அமைந்த ஊர் அது. அங்கு இஸ்ரவேல் நாட்டின்… Continue reading மலர் 6 இதழ்: 429 அந்தக் குருவிகளைக் காண்பவர்!
மலர் 6 இதழ்: 428 சிறு அலட்சியம் பெரும் சேதாரம்!
யோசுவா: 7: 2 – 4 “…… அந்த மனுஷர் போய் ஆயியை வேவுபார்த்து, யோசுவாவினிடத்தில் திரும்பி வந்து அவனை நோக்கி, ஜனங்கள் எல்லாரும் போகவேண்டியதில்லை, ஏறக்குறைய இரண்டாயிரம் மூவாயிரம் பேர் போய் ஆயியை முறிய அடிக்கலாம்; அவர்கள் கொஞ்சம் பேர்தான் என்றார்கள். அப்படியே ஜனங்களில் ஏறக்குறைய மூவாயிரம் பேர் அவ்விடத்திற்குப் போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஆயியின் மனுஷருக்கு முன்பாக முறிந்தோடினார்கள். எங்கள் வீட்டின் முதல் மாடியில் என் மகனும், மருமகளும் குடியிருக்கிறார்கள். ஒருநாள் அவர்கள் புதிதாய்… Continue reading மலர் 6 இதழ்: 428 சிறு அலட்சியம் பெரும் சேதாரம்!
