ஆதி:41: 14, 38 அப்பொழுது பார்வோன் யோசேப்பை அழைப்பித்தான்; அவனைத் தீவிரமாய் காவல்கிடங்கிலிருந்து கொண்டுவந்தார்கள். அவன் சவரம் பண்ணிக்கொண்டு, வேறு வஸ்திரம் தரித்து, பார்வோனிடத்தில் வந்தான். அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி; தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப் போல வேறொருவன் உண்டோ என்றான் இன்றைய தியானத்தை எழுத யோசேப்பின் வாழ்க்கையை ஆராய்ந்த போது, பவுல் எழுதிய இந்த வார்த்தைகள் தான் என் ஞாபகத்துக்கு வந்தது. கலா:6: 7 மோசம் போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார். மனுஷன்… Continue reading இதழ்: 1038 அநீதிகளைப் பார்த்துக் கண்களை மூடிக்கொள்ள கடவுள் என்ன பைத்தியமா?
Category: கிறிஸ்தவ குடும்பங்களுக்கு
இதழ்: 1037 ஒளிமயமான எதிர்காலம் தெரியும்!
ஆதி: 39:20 “ யோசேப்பின் எஜமான் அவனைப் பிடித்து ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான், அந்த சிறைச்சாலையில் அவன் இருந்தான்.” யாக்கோபின் செல்லக் குமாரனுக்கு நடந்தது என்ன? திருமதி போத்திபாரினால் பொய் பழி சுமத்தப்பட்டு, சிறைச்சாலையில் வந்தடைகிறான் யோசேப்பு. அமைதியாய் அன்பான தகப்பனோடே, செல்லமாய் வாழ்ந்த வாழ்க்கை எங்கு மறைந்ததது? திடீரென்று அவன் வாழ்க்கையில் வீசிய புயல் எங்கிருந்து வந்தது? ஒன்றுக்கு பின்னால் ஒன்றாக நடந்த சம்பவங்கள், அவனை இருண்ட சிறைச்சாலைக்கே கொண்டு வந்து… Continue reading இதழ்: 1037 ஒளிமயமான எதிர்காலம் தெரியும்!
இதழ்: 1036 தனிமையில்….யாரும் காணாத வேளையில்???
ஆதி: 39:14 – 15 அவள் தன் வீட்டு மனிதரைக் கூப்பிட்டு: பாருங்கள், எபிரேய மனுஷன் நம்மிடம் சரசம்பண்ணும்படிக்கு அவனை நமக்குள் கொண்டுவந்தார், அவன் என்னோடே சயனிக்கும்படி என்னிடத்தில் வந்தான்; நான் மிகுந்த சத்தமிட்டு கூப்பிட்டேன். நான் சத்தமிட்டு கூப்பிடுகிறதை அவன் கண்டு, தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு வெளியே ஓடிப்போய்விட்டான் என்றாள். போத்திபாரின் மனைவி யோசேப்பின் மேல் கண்ணைப் போட்டு வலை வீசினாள் என்று நேற்று பார்த்தோம்! அவனது சௌந்தர்யம், இளமை, திறமை, இவை அவளை காந்தம்… Continue reading இதழ்: 1036 தனிமையில்….யாரும் காணாத வேளையில்???
இதழ்: 1035 கொஞ்சம் அனுசரித்து போனால்தானே வேலையில் இருக்க முடியும்????
ஆதி: 39:7 சிலநாள் சென்றபின், அவன் எஜமானின் மனைவி யோசேப்பின்மேல் கண்போட்டு, என்னோடே சயனி என்றாள். யோசேப்பை அவன் சகோதரர் இஸ்மவேலருக்கு விற்ற பின் யூதா, தாமார் என்ற இருவரின் கதை வேதத்தில் இடம் பெற்றுள்ளதைப் பார்த்தோம். இன்று நான் யோசேப்பைப் பின் தொடரலாம்! யோசேப்பை ஏற்றிக்கொண்டு இஸ்மவேலரின் வண்டி வேகமாய் பாலைவனத்தை கடந்து சென்றது! யாக்கோபு ராகேலுக்கு பிறந்த செல்ல குமாரன், 17 வயதான யோசேப்பு, இப்பொழுது அடிமையாக எகிப்து தேசத்துக்கு அழைத்து செல்லப்படுகிறான்! என்றுமே… Continue reading இதழ்: 1035 கொஞ்சம் அனுசரித்து போனால்தானே வேலையில் இருக்க முடியும்????
இதழ்:1034 இந்த மா பெரும் தயவைப் பெற எனக்கு என்ன தகுதி உண்டு?
ஆதி: 38: 25 – 26 “ அவள் (தாமார்) வெளியே கொண்டுவரப் பட்டபோது, அவள் தன் மாமனிடத்துக்கு அந்த அடைமானத்தை அனுப்பி, இந்த பொருட்களை உடையவன் எவனோ அவனாலே நான் கர்ப்பவதியானேன்; இந்த முத்திரை மோதிரமும், இந்த கோலும், இந்த ஆரமும் யாருடைவகள் பாரும் என்று சொல்லி அனுப்பினாள். யூதா அவைகளை பார்த்தறிந்து, என்னிலும் அவள் நீதியுள்ளவள், அவளை என் குமாரனாகிய சேலாவுக்கு கொடாமற்போனேனே என்றான். அப்புறம் அவன் அவளை சேரவில்லை.” அன்பானவர்களே! நாம் தாமாரைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறோம்.… Continue reading இதழ்:1034 இந்த மா பெரும் தயவைப் பெற எனக்கு என்ன தகுதி உண்டு?
இதழ் 1033 பிறரை சுயநலமாக உபயோகிக்கும் கேவலம்!
ஆதி: 38:16 ( யூதா ) அந்தவழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடம் சேரும்படி வருவாயா என்றான்; அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேரும்படி எனக்கு என்ன தருவீர் என்றாள். தாமார் தன் கைம்பெண் வேஷத்தை கலைத்து தன்னை வேசியைப்போல அலங்கரித்து, முக்காடிட்டு, திம்னாவுக்கு போகிற வழியில் நீருற்றண்டையில் அமர்ந்தாள் என்று பார்த்தோம். இந்த திம்னா என்ற ஊர் எபிரோனுக்கு தெற்காக ஏழு மைல் தூரத்தில் இருந்தது. ஆடுகளுக்கு மயிர்கத்தரிக்கும் காலம்… Continue reading இதழ் 1033 பிறரை சுயநலமாக உபயோகிக்கும் கேவலம்!
இதழ்: 1032 ஒரு முகத்திரைக்குப் பின்னால்…..
ஆதி: 38:14,15 சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாக கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களை களைந்து போட்டு, முக்காடிட்டு தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்கு போகிற வழியிலிருக்கிற நீருற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள். யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்த படியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து... நேற்று நாம் தாமாருக்கு இழைக்கப் பட்ட அநியாயத்தை கர்த்தர் கண்டார் என்று பார்த்தோம். இன்றைய வேத பகுதியில் நான் தாமார் நடந்து கொண்ட விதத்தை… Continue reading இதழ்: 1032 ஒரு முகத்திரைக்குப் பின்னால்…..
இதழ்: 1031 ஒரு பெண்ணுக்கு அளிக்கப்பட்ட அநீதி!
ஆதி: 38:6,7 “யூதா தன் மூத்த மகனாகிய ஏர் என்பவனுக்கு தாமார் என்னும் பேருள்ள ஒரு பெண்ணைக் கொண்டான். யூதாவின் மூத்த மகனாகிய ஏர் என்பவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனாயிருந்ததினால் கர்த்தர் அவனை அழித்து போட்டார்.” நேற்று நாம் யோசேப்பை அவன் சகோதரர் இஸ்மவேலருக்கு விற்று போட்டதைப் பற்றி பார்த்தோம். யோசேப்பின் வாழ்வை நாம் தொடரு முன் வேதத்தில் தாமார் என்ற பெண்ணின் கதையை வாசிக்கிறோம். நம்முடைய இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் (மத்: 1:3) இடம் பெற்ற இந்த… Continue reading இதழ்: 1031 ஒரு பெண்ணுக்கு அளிக்கப்பட்ட அநீதி!
இதழ்:1030 மனிதர் நினைப்பதையா தேவனும் நினைக்கிறார்?
ஆதி: 37:3 “ இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்பு தனக்கு பிறந்ததினால் இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்கு பலவருணமான அங்கியை செய்வித்தான்” இந்தப் புதிய மாதத்தை நாம் காண உதவி செய்த தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம். இந்த மாதம் நமக்கு மிகுந்த ஆசீர்வாதமாக இருக்கும்படியாக ஜெபிப்போம்! அப்பாவுக்கு தம்பியை தான் மிகவும் பிடிக்கும், அவனுக்கு தான் எல்லாம் செய்வார்கள், அம்மாவுக்கு அக்கா தான் உயிர், அவளுக்குத்தான் எல்லாம் கிடைக்கும், நான் என்றால் ஆகாது… என்றெல்லாம் பிள்ளைகள்… Continue reading இதழ்:1030 மனிதர் நினைப்பதையா தேவனும் நினைக்கிறார்?
இதழ்:1029 எப்பிராத்தா எனப்பட்ட பெத்லெகேமே!!!
ஆதி: 35: 19 – 20 “ ராகேல் மரித்து பெத்லேகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்கு போகிற வழியில் அடக்கம் பண்ணப் பட்டாள்.அவள் கல்லறையின் மேல் யாக்கோபு ஒரு தூணை நிறுத்தினான்; அதுவே இந்நாள் வரைக்கும் இருக்கிற ராகேலுடைய கல்லறையின் தூண். ராகேலுக்கு பிரசவ வேதனை கடுமையாக இருந்ததையும், அவள் பிறந்த குழந்தைக்கு பெனோனி என்று பேரிட்டதை யாக்கோபு மாற்றி பென்யமீன் என்று பேரிட்டான் என்று பார்த்தோம். ராகேல் தான் மறுபடியும் கர்ப்பவதியாய் இருப்பதை அறிந்தவுடன் பெரு மகிழ்ச்சி அடைந்திருப்பாள். ஏனெனில்… Continue reading இதழ்:1029 எப்பிராத்தா எனப்பட்ட பெத்லெகேமே!!!
