1 சாமுவேல் 27:10 இன்று எத்திசையில் போய் கொள்ளையடித்தீர்கள் என்று ஆகீஸ் கேட்கும்போது தாவீது: யூதாவுடைய தென் திசையிலும்,....கேனியருடைய தென் திசையிலும் என்பான். 2 சாமுவேல் 5:3 இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் எப்ரோனிலே ராஜாவினிடத்தில் வந்தார்கள். தாவீதுராஜா எப்ரோனிலே கர்த்தருக்கு முன்பாக அவர்களோடே உடன்படிக்கை பண்ணினபின்பு அவர்கள் தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள். இன்றைய வேதாகமப்பகுதியில் நாம் தாவீதின் வாழ்க்கையைப் பார்க்கும்போது, ஒரு மனிதனுக்கு ஏமாற்றவும் தெரியும், அதே சமயம் நேர்மையாய் இருக்கவும் தெரியும் என்று… Continue reading இதழ்: 681 ஏமாற்றுதலுக்கு பதிலாய் நேர்மை!
Category: கிறிஸ்தவ குடும்பங்களுக்கு
இதழ்: 680 பழிவாங்குதலுக்கு பதிலாய் மன்னிப்பு!!
1 சாமுவேல்: 26:8,9 அப்பொழுது அபிசாய் தாவீதைப் பார்த்து: இன்று தேவன் உம்முடைய சத்துருவை உம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார். இப்பொழுதும் நான் அவனை ஈட்டியினால் இரண்டு குத்தாகக் குத்தாமல், ஒரே குத்தாக நிலத்தில் உருவக்குத்தட்டுமா என்றான். தாவீது அபிசாயைப் பார்த்து: அவரைக் கொல்லாதே. கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர்மேல் தன் கைகளைப்போட்டு, குற்றமில்லாமல் போகிறவன் யார்? என்று சொன்னான். தாவீது இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுலுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தான். கோலியாத்தைக் கொன்றபின்னர் சவுலின் சேவகனாகவும், சவுல் அசுத்த… Continue reading இதழ்: 680 பழிவாங்குதலுக்கு பதிலாய் மன்னிப்பு!!
இதழ்: 679 கோபத்துக்கு பதிலாய் பொறுமை!
1 சாமுவேல் 25:13 அப்பொழுது தாவீது தன் மனுஷரைப் பார்த்து: நீங்கள் அவரவர் உங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொள்ளுங்கள் என்றான். 2 சாமுவேல் 2:1 பின்பு தாவீது கர்த்தரை நோக்கி: நான் யூதாவின் பட்டணங்கள் ஒன்றிலே போய் இருக்கலாமா என்று விசாரித்தான். தாவீது பத்சேபாளுடன் கொண்ட உறவைப்பற்றி நாம் தொடர்ந்து படிக்கும் போது தாவீதின் சில அடிப்படை குண நலன்களை நாம் பார்க்காமல் கடந்து போகக்கூடாது. இன்றைய வசனங்கள் நமக்கு தாவீதின் குணத்தின் இரு பக்கங்களைக் காட்டுகிறது. ஒருபக்கம்… Continue reading இதழ்: 679 கோபத்துக்கு பதிலாய் பொறுமை!
இதழ்: 678 உன் இருதயம் எப்படியிருக்கிறது?
2 சாமுவேல் 5:10 தாவீது நாளுக்கு நாள் விருத்தியடைந்தான். சேனைகளின் தேவனாகிய அவனோடேகூட இருந்தார். தேவனாகிய கர்த்தர் அவருடைய பிள்ளைகளாகிய நம்மோடு ஏற்படுத்தும் அழகிய உறவைப்பற்றி பார்த்தபின்னர், நாம் இன்று தாவீதின் வாழ்க்கையைத் தொடருகிறோம். தாவீதைப்பற்றி எல்லோருடைய மனதிலும் எழும் ஒரே கேள்வி, கர்த்தருடைய இருதயத்திற்கேற்ற ஒருவன் என்று அழைக்கப்பட்ட தாவீது எப்படி பெண்களோடு கொண்ட உறவில் தவறு செய்தான் என்று! தாவீதைப் பற்றி கடந்த சில நாட்களில் அதிகமாக படித்தபோது, தன் இள வயதில் தேவனோடு… Continue reading இதழ்: 678 உன் இருதயம் எப்படியிருக்கிறது?
இதழ்: 677 எதிர்பார்த்தல் 4: பொறுப்பு!
மத்தேயு:10:29 ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல் அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. ஒருநாள் மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தபோது ஒரு கூட்டம் ( பைசன்) காட்டு எருமைகளைப் பார்த்தோம். உடனே காரை ஓரமாக நிறுத்திவிட்டு போட்டோ எடுக்க ஆரம்பித்தோம். அப்பொழுது பின்னால் இருந்த கூட்டத்துக்கு தலைவர் போல இருந்த ஒரு பலமான தோற்றம் கொண்ட ஒரு மாடு தலையை உயர்த்தி எங்களுடைய காரை முறைத்து பார்க்க ஆரம்பித்தது.… Continue reading இதழ்: 677 எதிர்பார்த்தல் 4: பொறுப்பு!
இதழ்: 676 எதிர்பார்த்தல் 3: திடமான குணம்!
எபிரேயர் 13:8 இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். என்னிடம் ஒரு பழைய வாஷிங் மெஷின் இருந்தது. ஒருநாளும் ரிப்பேர் என்று யாரிடமும் கொடுத்ததேயில்லை. நான் புதிய மெஷின் வாங்கியவுடன், எத்தனையோ வருடங்கள் உழைத்த அந்த மெஷினை என்னிடம் வேலை செய்த பெண்ணுக்கு கொடுத்தேன். சில வருடங்கள் கழித்து அவளை நான் பார்த்தபோது அந்த மெஷின் இன்னும் நன்றாக வேலை செய்கிறது என்றாள். அப்படிப்பட்ட திடமான மெஷினை விட திடமான ஒரு உறவை நாம்… Continue reading இதழ்: 676 எதிர்பார்த்தல் 3: திடமான குணம்!
இதழ்: 675 எதிர்பார்த்தல் 2: நம்பிக்கை!
எரேமியா: 17:7 கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். நம்பிக்கை! இந்த வார்த்தைக்கு அர்த்தத்தைத் தேடி நான் அகராதிக்கு போகவேண்டாம்! அந்த வார்த்தையின் அர்த்தத்தை என் அம்மாவிடம் கண்டிருக்கிறேன். தன்னை நம்பி யார் எந்த பொறுப்பைக் கொடுத்தாலும் தன்னால் முடிந்தவரை சரியாக செய்து முடிக்கும் குணம் அம்மாவிடம் இருந்தது. ஒரு காரியத்தை மறுபடியும் ஞாபகப்படுத்தவே தேவையில்லை! எப்படியாவது அது நடந்து விடும்! ஆனால் அம்மாவைவிட நான் நம்பக்கூடியவர் யார் தெரியுமா? என்னுடைய… Continue reading இதழ்: 675 எதிர்பார்த்தல் 2: நம்பிக்கை!
இதழ்: 674 எதிர்பார்த்தல் 1: உண்மை
சங்: 34:8 கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள், அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். நம் ஒவ்வொருவருக்கும் எதிர்பார்ப்புகள் உண்டு. இந்த வாரம் நான்கு எதிர்பார்ப்புக்ளைப் பற்றிப்படிக்கப்போவதாக சொல்லியிருந்தேன். உங்களிடம் ஒரு கேள்வி! யாருடனாவது பழகும்போது அவர் மிகவும் நல்லவராகவும், மனதுக்கு பிடித்தவராகவும் இருந்து, பின்னால் நீங்கள் எதிர்பாராத அளவுக்கு முற்றிலும் மாறான குணம் படைத்தவர் என்று தெரிய வரும் போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது? நிச்சயமாக உங்கள் ஒவ்வொருவருக்கும் இப்படிப்பட்ட அனுபவம் இருக்கும் என்று நினைக்கிறேன்.… Continue reading இதழ்: 674 எதிர்பார்த்தல் 1: உண்மை
இதழ்: 673 உன் எதிர்பார்ப்பு என்ன?
சங்கீதம் 62:5 என் ஆத்துமாவே தேவனையே நோக்கி அமர்ந்திரு, நான் நம்புகிறது அவராலே வரும். பல வருடங்களுக்கு முன்பு என்னுடைய கம்பெனியின் தேவைக்காக ஒருவரை அணுகினோம். அவர் நேரில் வந்து எங்களோடு பேசிய பின்னர் எங்களுக்கு உதவுவதாக வாக்குக்கொடுத்தார். ஆனால் அதன்பின்னர் நாங்கள் பலமுறை அணுகியும் அவர் வாக்குக்கொடுத்ததை காப்பாற்றவில்லை. நாங்கள் அவரை நம்பி ஏமாந்தது தான் மிச்சம். இதைப்பற்றி நான் அடிக்கடி யோசிப்பதுண்டு! இந்த என்னுடைய ஏமாற்றத்துக்கு காரணம் நான் கேட்டது கிடைக்காததினால் அல்ல நான்… Continue reading இதழ்: 673 உன் எதிர்பார்ப்பு என்ன?
இதழ்: 672 பழிவாங்குதல் நமக்குரியது அல்ல!
2 சாமுவேல் 3: 26,27 யோவாப் தாவீதை விட்டு புறப்பட்டவுடனே அவன் அப்னேரைத் தாவீதுக்குத் தெரியாமல் கூட்டிக்கொண்டுவரும்படி ஆட்களை அனுப்பினான். அப்னேர் எப்ரோனுக்குத் திரும்பி வருகிறபோது, யோவாப் அவனோடே இரகசியமாய்ப் பேசப்போகிறவன்போல அவனை ஒலிமுகவாசலின்நடுவே ஒரு பக்கமாய் அழைத்துப்போய் தன் தம்பி ஆசகேலுடைய இரத்தப்பழியை வாங்க அங்கே அவனை வயிற்றிலே குத்திக் கொன்றுபோட்டான். இன்றைய வசனங்களை என்ன வார்த்தையால் விவரிப்பது என்றே தெரியவில்லை. முதலாவது அப்னேர் சவுலின் படைத்தலைவன், ஒரு வீரன். எத்தனையோ யுத்ததங்களையும், எத்தனையோ இரத்தவெள்ளத்தையும்… Continue reading இதழ்: 672 பழிவாங்குதல் நமக்குரியது அல்ல!
