சங்கீ: 16: 1 “தேவனே என்னைக் காப்பாற்றும். நான் உம்மை நம்பியிருக்கிறேன்” நாம் நேற்று மிரியாமை ஒரு ஞானமுள்ள பெண்ணாய்ப் பார்த்தோம். பார்வோன் குமாரத்தியிடம் ஞானமாய் பேசி குழந்தையின் தாயே குழந்தையை வளர்க்கும் திட்டத்தைக் கொடுக்கிறாள். ஞானமுள்ளவள் மட்டுமல்ல, மிரியாமை ஒரு திடமான பெண்ணாகக் கூட இங்கு காண்கிறோம். நாணலினால் செய்த பெட்டியில் அவள் தம்பி மோசே நைல் நதிக்கரையில் வைக்கப்பட்டபோது, யார் அந்தப் பக்கம் வருகிறார்களோ, அந்தப் பெட்டி யார் கண்ணில் படப்போகிறதோ என்று ஆவலுடன்… Continue reading இதழ்: 832 திடமான நம்பிக்கையினால் வரும் விசுவாசம்!
Category: தினசரி வேத தியானம்
இதழ்: 831 ஒரு தாய் விதைத்த நம்பிக்கை என்னும் விதை!
சங்கீ: 25: 4, 5 கர்த்தாவே உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்கு போதித்தருளும். உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி என்னைப் போதித்தருளும். நீரே என் இரட்சிப்பின் தேவன்; உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன். சில நாட்கள் நாம் மோசேயின் தாயாகிய யோகெபெத்தைப் பற்றி ஒரு பொறுப்புள்ள, பெலசாலியான, திறமைசாலியான, ஆசீர்வாதமான தாயாகப் பார்த்தோம். இன்று முதல் மோசேயின் தமக்கையாகிய மிரியாமைப் பற்றி ஒரு சில நாட்கள் படிப்போம். குழந்தை மோசேயை நாணல் பெட்டியில்… Continue reading இதழ்: 831 ஒரு தாய் விதைத்த நம்பிக்கை என்னும் விதை!
இதழ்: 830 ஒரு தாய் தன் பிள்ளைகளுக்கு கொடுக்கும் விலைமதிப்பற்ற சொத்து!
எண்ணா: 26: 59 “ அம்ராமுடைய மனைவிக்கு யொகெபெத் என்று பேர்; அவள் எகிப்திலே லேவிக்கு பிறந்த குமாரத்தி; அவள் அம்ராமுக்கு ஆரோனையும், மோசேயையும், அவன் சகோதரியான மிரியாமையும் பெற்றாள்” யோகெபெத்தை நாம் பொறுப்புள்ள ஒரு தாயாகவும், பெலசாலியான ஒரு தாயாகவும், திறமைசாலியான ஒரு தாயாகவும் பார்த்தோம். இந்த தாய் தன்னுடைய பிள்ளைகளுக்கு மட்டும் அல்ல, இஸ்ரவேல் மக்களுக்கு எவ்விதமாய் ஒரு ஆசீர்வாதமாக இருந்தாள் என்று பார்க்கலாம். யோகெபெத் வாழ்ந்த சமயம் இஸ்ரவேல் மக்கள் அடிமைத்தனத்தில் இருந்தனர்.… Continue reading இதழ்: 830 ஒரு தாய் தன் பிள்ளைகளுக்கு கொடுக்கும் விலைமதிப்பற்ற சொத்து!
இதழ்: 829 புல்லினால் செய்த அற்புத கிரியை!
யாத்தி: 2: 3 அவள் அதை அப்புறம் ஒளித்துவைக்கக் கூடாமல், ஒரு நாணற்ப்பெட்டியை எடுத்து, அதற்கு பிசினும், கீலும் பூசி , அதிலே பிள்ளையை வளர்த்தி, நதியோரமாய் நாணலுக்குள்ளே வைத்தாள். மோசே அழிவிலிருந்து மீட்கப்பட்ட இந்த கதையை மறுபடியும் வாசிக்கும்போது, கண்ணில் பட்ட இன்னுமொரு அருமையான காரியம், யோகெபெத்தின் கைவிரல்களின் சிருஷ்டிப்பு திறமை! பத்து விரல்களால் திறமையாக, அங்கே நைல் நதியண்டை கிடைக்கிற சாதாரண நாணல் என்னும் புல்லைக் கொண்டு, ஒரு பேழையை செய்தாள். அதில் தன்… Continue reading இதழ்: 829 புல்லினால் செய்த அற்புத கிரியை!
இதழ்:828 தீமைவழியை பின்பற்றாத பார்வோன் குமாரத்தி!
யாத்தி:2: 5,6 அப்பொழுது பார்வோனுடைய குமாரத்தி நதியில் ஸ்நானம் பண்ண வந்தாள்.அவளுடைய தாதிகள் நதியோரத்தில் உலாவினார்கள்; அவள் நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியைக் கண்டு, தன் தாதியை அனுப்பி அதைக் கொண்டுவரும்படி செய்தாள். அதைத் திறந்தபோது பிள்ளையைக் கண்டாள்; பிள்ளை அழுதது; அவள் அதின்மேல் இரக்கமுற்று இது எபிரேயர் பிள்ளைகளில் ஒன்று என்றாள்.” ஒருவரை முதுகெலிம்பில்லாதவர் என்று யாராவது சொல்லக் கேட்டால் அவரைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம்? ஒரு முடிவில் நிலைத்து நிற்பவர் அல்ல என்றுதானே! எல்லோரும்… Continue reading இதழ்:828 தீமைவழியை பின்பற்றாத பார்வோன் குமாரத்தி!
இதழ்: 827 பிள்ளைகளுக்காக எதை இன்று தியாகம் செய்கிறீர்கள்?
யாத்தி :2:2, 9 “அந்த ஸ்திரி (யொகெபேத்) கர்ப்பவதியாகி, ஒரு ஆண் பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளதென்று கண்டு அதை மூன்று மாதம் ஒளித்து வைத்தாள். பார்வோனுடைய குமாரத்தி அவளை நோக்கி, நீ இந்தப் பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய் அதை எனக்கு வளர்த்திடு; நான் உனக்கு சம்பளம் கொடுக்கிறேன் என்றாள். அந்த ஸ்திரி பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய் அதை வளர்த்தாள்” பெண்களை பெலவீனப்பாண்டமாக உலகத்தார் நினைக்கிறார்கள். அது உண்மையா??? சரீரப்பிரகாரமாய் ஒருவேளை இருக்கலாம்! ஆனால் ஆவிக்குரிய வாழ்க்கையிலும், விசுவாசத்திலும், நேர்மை,… Continue reading இதழ்: 827 பிள்ளைகளுக்காக எதை இன்று தியாகம் செய்கிறீர்கள்?
இதழ்: 826 ஒரு நல்ல தாயாக வாழும் சிலாக்கியம் உண்டா?
யாத்தி:2:1,2 “லேவியின் குடும்பத்தாரில் ஒருவன் லேவியின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம் பண்ணினான். அந்த ஸ்திரி கர்ப்பவதியாகி, ஒரு ஆண் பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளதென்று கண்டு அதை மூன்று மாதம் ஒளித்து வைத்தாள். நாம் சிப்பிராள், பூவாள் என்ற மருத்துவச்சிகளின் தேவ பயத்தினால் எகிப்தில் வாழ்ந்த இஸ்ரவேல் மக்களைக் கர்த்தர் காத்தார் என்று பார்த்தோம். பார்வோன் அவர்களை கடின உழைப்பினால் வாதித்தான், ஆனாலும் இஸ்ரவேல் மக்கள் பலுகிப் பெருகினார்கள். அதனால் பார்வோன், பிறந்த ஆண்பிள்ளைகளை நதியில் போட்டுவிட… Continue reading இதழ்: 826 ஒரு நல்ல தாயாக வாழும் சிலாக்கியம் உண்டா?
இதழ்: 825 கருச்சிதைவு செய்வது தவறா?
யாத்தி:1: 20, 21 “இதினிமித்தம் தேவன் மருத்துவச்சிகளுக்கு நன்மை செய்தார். ஜனங்கள் பெருகி மிகுதியும் பலத்துப் போனார்கள். மருத்துவச்சிகள் தேவனுக்கு பயந்ததினால் அவர்கள் குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார். சிப்பிராள் , பூவாள் என்ற இரு எபிரேய மருத்துவச்சிகள் பார்வோனுக்கு பயப்படாமல், தேவனுக்கு பயந்ததினாலே, அவர்கள் எபிரேயாருக்கு பிறந்த ஆண்பிள்ளைகளை பார்வோன் கட்டளைப்படி கொலைசெய்யாமல் காப்பாற்றினர் என்று பார்த்தோம். கர்த்தருக்கு பயந்த பயம், ஞானமுள்ள வார்த்தைகள் இவையே அவர்கள் பார்வோனுக்கு முன்னால் உபயோப்படுத்திய ஆயுதம் என்று பார்த்தோம். இந்த… Continue reading இதழ்: 825 கருச்சிதைவு செய்வது தவறா?
இதழ்: 824 பேசுவதில் ஞானம் என்றால் என்ன?
யாத்தி:1: 18, 19 “அதினாலே எகிப்தின் ராஜா மருத்துவச்சிகளை அழைப்பித்து,; நீங்கள் ஆண்பிள்ளைகளை உயிரோடே காப்பாற்றுகிற காரியம் என்ன என்று கேட்டான். அதற்கு மருத்துவச்சிகள் பார்வோனி நோக்கி; எபிரேய ஸ்திரிகள், எகிப்திய ஸ்திரிகளைப் போல அல்ல, அவர்கள் நல்ல பலமுள்ளவர்கள்; மருத்துவச்சி அவர்களிடத்துக்கு போகுமுன்னமே அவர்கள் பிரசவித்தாகும் என்றார்கள்” யோசேப்பின் மன்னிப்பையும், ஆதரவையும் பெற்ற யாக்கோபின் மிகப்பெரிய குடும்பம் எகிப்திலே, கோசேன் நாட்டிலே குடியிருந்தார்கள். அங்கே அவர்கள் பலுகிப் பெருகினார்கள். யாத்தி:1: 7, 8 கூறுகிறது, யோசேப்பும்,… Continue reading இதழ்: 824 பேசுவதில் ஞானம் என்றால் என்ன?
இதழ்: 823 உன்னைப் புண்படுத்திய ஒருவரை மன்னிக்க முடியுமா?
ஆதி:44: 18 “ அப்பொழுது யூதா அவனண்டையிலே சேர்ந்து, ஆ என் ஆண்டவனே , உமது அடியேன் உமது செவிகள் கேட்க ஒரு வார்த்தை சொல்லுகிறேன் கேட்பீராக; அடியேன் மேல் உமது கோபம் மூளாதிருப்பதாக; நீர் பார்வோனுக்கு ஒப்பாயிருக்கிறீர்” நாம் கடந்த ஆண்டின் கடைசி நாளில், யோசேப்புக்கு இழைக்கப்பட்ட தீங்கை பரலோக தேவன் எப்படி நன்மையாய், ஆசீர்வாதமாய் மாற்றியமைத்தார் என்று பார்த்தோம். இன்று நாம் யோசேப்பின் வாழ்விலிருந்து இன்னுமொரு காரியத்தை கற்று கொள்ளப் போகிறோம்! அதற்கு முன்னால்… Continue reading இதழ்: 823 உன்னைப் புண்படுத்திய ஒருவரை மன்னிக்க முடியுமா?
