2 சாமுவேல்: 7: 15 உனக்கு முன்பாக நான் தள்ளிவிட்ட சவுலிடத்திலிருந்து என் கிருபையை விலக்கினது போல அவனைவிட்டு விலக்கமாட்டேன். பரலோகத்தின் ஆசீர்வாதத்தைப் பெற்ற தாவீதிடம் கர்த்தருக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. உன்னை ஆசீர்வதிப்பேன் என்று சொல்லும் கர்த்தருக்கு உன்னிடமும் பெரிய எதிர்பார்ப்பு உண்டு! சங்கீதம் 139:16 ல் என் கருவை உம் கண்கள் கண்டது. என் அவயங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும்.... உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது என்ற தாவீதின் வார்த்தைகள் எனக்கு பயத்தைக் கொடுக்கும்… Continue reading இதழ்:2141 பரலோக தேவனை பரிகாரத்துக்குள்ளாகாதே!
Category: வேதாகம தியானம்
இதழ்:2140 உன் சந்ததியை ஆசீர்வதிக்க ஆவலாயிருக்கும் தேவன்!
2 சாமுவேல்: 7: 12 உன் நாட்கள் நிறைவேறி, நீ உன் பிதாக்களோடே நித்திரைபண்ணும்போது, நான் உனக்குப் பின்பு உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி அவன் ராஜ்யத்தை நிலைபடுத்துவேன். இங்கு தாவீதுக்கு கர்த்தர் ஒரு பெரிய ஆசீர்வாதமான வாக்குத்தத்தைக் கொடுப்பதைப் பார்க்கிறோம். அவனுடைய தலைமுறைக்கான ஆசீர்வாதம். தாவீது தன்னுடைய வேலைகளை விட்டு இளைப்பாறி, கர்த்தரோடு உறவாடி அவரை நோக்கிப்பார்த்தபோது கர்த்தர் அவனுக்கு கொடுத்த ஆசீர்வாதம். தாவீது தன்னுடைய வாழ்க்கையில் இடம்பெற்ற பெண்கள்மீது அதிக அக்கறையும் பாசமும்… Continue reading இதழ்:2140 உன் சந்ததியை ஆசீர்வதிக்க ஆவலாயிருக்கும் தேவன்!
இதழ்:2139 நிரந்தரமான் தேவ பிரசன்னமே தேவன் அருளிய வாக்குத்தத்தம்!
2 சாமுவேல்: 7: 8,9 இப்போதும் நீ என் தாசனாகிய தாவீதை நோக்கி: சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீ இஸ்ரவேல் என்கிற என் ஜனங்களுக்கு அதிபதியாயிருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை நான் ஆட்டுமந்தையை விட்டு எடுத்து, நீ போன எவ்விடத்திலும் உன்னோடே இருந்து, உன் சத்துருக்களையெல்லாம் உனக்கு முன்பாக நிர்மூலமாக்கி, பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்துக்கு ஒத்த பெரிய நாமத்தை உனக்கு உண்டாக்கினேன். 2 சாமுவேல் 7: 8-29 தேவனுடைய சித்தத்துக்குள் நாம் நடக்கும் போது… Continue reading இதழ்:2139 நிரந்தரமான் தேவ பிரசன்னமே தேவன் அருளிய வாக்குத்தத்தம்!
இதழ்:2138 உன் தரிசனம் உன் விசுவாசமாகட்டும்!
2 சாமுவேல் 7: 2,3 ராஜா தீர்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், கேதுருமரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் வாசம்பண்ணும்போது,தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே வாசமாயிருக்கிறதே என்றான். அப்பொழுது நாத்தான் ராஜாவை நோக்கி: நீர் போய் உம்முடைய இருதயத்தில் உள்ளபடியெல்லாம் செய்யும். கர்த்தர் உம்மோடு இருக்கிறாரே என்றான். உங்களுடைய மனதில் என்றாவது ஒரு பாரம் அழுத்துவது போல உணர்ந்திருக்கிறீர்களா? ஆனால் அது என்ன பாரம் என்றே தெரியவில்லை அல்லவா? ஒருவேளை யாருக்கோ ஒருவருக்கு நம்முடைய உதவி தேவைப்படுகிறது என்ற… Continue reading இதழ்:2138 உன் தரிசனம் உன் விசுவாசமாகட்டும்!
இதழ்:2137 தவறான வெளிச்சத்தை பின் தொடர்ந்து விடாதே!
2 சாமுவேல் 7:1 கர்த்தர் ராஜாவைச் சுற்றியிருந்த அவனுடைய எல்லாச் சத்துருக்களுக்கும் அவனை நீங்கலாக்கி, இளைப்பாறப்பண்ணினபோது... நான் என்னுடைய அவசரத்தால் 2 சாமுவேல் 11 ம் அதிகாரத்தில் உள்ள தாவீதும் பத்சேபாளும் கதைக்குத் தாவ முயன்றபோது கர்த்தர் அஅற்கு தடைபோட்டர். தாவீதுக்கும் மீகாளுக்கும் வாரிசு இல்லாமல் இருந்தது என்பதை முடித்தவுடன், தாவீதுக்கும் பத்சேபாளுக்கும் ஒரு வாரிசு பிறந்ததை ஆரம்பிக்க நினைத்த என்னை கர்த்தர் இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் உள்ள அதிகாரங்களை படிக்கத் தூண்டினார். 2 சாமுவேல்… Continue reading இதழ்:2137 தவறான வெளிச்சத்தை பின் தொடர்ந்து விடாதே!
இதழ்:2136 பிரச்சனைகளை பாலமாகப் பாருங்கள்!
2 சாமுவேல் 6: 23 அதினால் சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு மரணமடையும் நாள் மட்டும் பிள்ளை இல்லாதிருந்தது. தனிமை என்னைக் கொல்கிறது என்று சொல்லும் அநேகரைப் பார்த்திருக்கிறேன். வாழ்க்கையின் கொடுமையால் தனிமைக்குள் தள்ளப்பட்டவர்கள், பிள்ளைகளோடு வாழ மறுத்து தனிமையைத் தெரிந்து கொண்டவர்கள் என்று பலரைப் பார்த்திருக்கிறேன். இந்த அதிகாரத்தின் கடைசி வசனமாகிய இன்றைய வசனம் கூறுகிறது, சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு குழந்தை இல்லை என்று. மீகாள் என்ற பெயரின் அர்த்தம், ஒரு நீரோடை என்பதுதான். அவள் வாழ்க்கையில்… Continue reading இதழ்:2136 பிரச்சனைகளை பாலமாகப் பாருங்கள்!
இதழ்:2135 பதிலுக்கு பதிலாக வீசும் வார்த்தைகள்!
2 சாமுவேல் 6:21 அதற்குத் தாவீது மீகாளைப் பார்த்து: உன் தகப்பனைப் பார்க்கிலும் அவருடைய எல்லா வீட்டாரைப் பார்க்கிலும், என்னை இஸ்ரவேலாகிய கர்த்தருடைய ஜனத்தின்மேல் தலைவனாகக் கட்டளையிடும்படிக்குத் தெரிந்துகொண்ட கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக ஆடிப்பாடினேன். என்னை யாராவது தீண்டி விட்டால் சும்மா இருக்கமாட்டேன் என்று சிலர் கூறுவதை கேட்டிருக்கிறோம் அல்லவா! தாவீதும், மீகாளும் அப்படிதான் இங்கு நடந்து கொண்டனர். என்னைப்பற்றி நீ அவதூறு சொன்னால் நான் மட்டும் சும்மா இருப்பேனா என்று தாவீதும் மீகாளிடம் பேசுவதை இன்றைய… Continue reading இதழ்:2135 பதிலுக்கு பதிலாக வீசும் வார்த்தைகள்!
இதழ்:2134 தாம் தெரிந்து கொண்டவருக்கு தகுதியையும் அவரே கொடுப்பார்!
2 சாமுவேல் 6: 20 .. சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதுக்கு எதிர்கொண்டு வந்து, அற்பமனுஷரில் ஒருவன் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போடுகிறதுபோல, இன்று தம்முடைய ஊழியக்காரருடைய பெண்களின் கண்களுக்கு முன்பாகத் தம்முடைய வஸ்திரங்களை உரிந்து போட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எத்தனை மகிமைப்பட்டிருந்தார் என்றாள் என்னுடைய சிறிய வயதில் சங்கீதம் ஒவ்வொரு அதிகாரமாக படித்து ஒப்புவித்தால் மட்டுமே ஞாயிறு அன்று மணக்க மணக்க கறிக்குழம்பு சாப்பாடு கிடைக்கும். அதனால் சங்கீதங்களின் அர்த்தம் புரியாமலே மனப்பாடம் பண்ணுவேன். அப்படிப்பட்ட… Continue reading இதழ்:2134 தாம் தெரிந்து கொண்டவருக்கு தகுதியையும் அவரே கொடுப்பார்!
இதழ்:2133 மனதில் உள்ளவற்றை நேரிடையாக பேசி விடு!
2 சாமுவேல் 6: 20 .. சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதுக்கு எதிர்கொண்டு வந்து, அற்பமனுஷரில் ஒருவன் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போடுகிறதுபோல, இன்று தம்முடைய ஊழியக்காரருடைய பெண்களின் கண்களுக்கு முன்பாகத் தம்முடைய வஸ்திரங்களை உரிந்து போட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எத்தனை மகிமைப்பட்டிருந்தார் என்றாள் இன்றைய வேத வசனத்தில் மீகாள் தாவீதின் மீது வீசும் கடுமையான வார்த்தைகளைப் பார்க்கிறோம். மீகாள் தாவீதை நேசித்து திருமணம் செய்தவள். அவளுடைய தகப்பனாகிய சவுல் தாவீதை வெறுத்தபோதும், அவளுடைய காதல் திருமணத்தால்… Continue reading இதழ்:2133 மனதில் உள்ளவற்றை நேரிடையாக பேசி விடு!
இதழ்:2132 குடும்பத்துகுள் வீசப்படும் கடுஞ்சொற்கள்!
2 சாமுவேல் 6:20 தாவீது தன் வீட்டாரை ஆசீர்வதிக்கிறதற்குத் திரும்பும்போது நாம் வீட்டுக்கு வரும்போதும், வீட்டை விட்டு போகும்போதும் கர்த்தருடைய ஆசீர்வாதத்தை உச்சரித்து செல்வோமானால் எவ்வளவு ஆசீர்வாதமாயிருக்கும் என்று இன்றைய வேதாகமப் பகுதி என்னை சிந்திக்கத் தூண்டியது. 2 சாமுவேல் 6 ல் கடைசி வசனங்களை வாசிக்கும்போது, தாவீது தன் வீட்டாரை சந்திக்க ஆவலாயிருப்பது தெரிய வருகிறது. தாவீது தன் குடும்பத்தை விட்டு 3 மாதங்கள் பிரிந்திருந்ததை மறந்து விடாதீர்கள். தாவீது கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டியை எடுத்து… Continue reading இதழ்:2132 குடும்பத்துகுள் வீசப்படும் கடுஞ்சொற்கள்!
