1 சாமுவேல் 25: 35 அவள் தனக்குக் கொண்டுவந்ததைத் தாவீது அவள் கையிலே வாங்கிக்கொண்டு, அவளைப்பார்த்து; நீ சமாதானத்தோடே உன் வீட்டுக்குப் போ. இதோ நான் உன் சொல்லைக்கேட்டு, உன் முகத்தைப்பார்த்து, இப்படிச் செய்தேன் என்றான். இதை எழுதும்போது ஒரு கட்டிட வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தேன். ஒரு பிளாக்குக்கு மேலாக இன்னொரு பிளாக்கை வைத்து ஒவ்வொரு சுவராக ஒரு கட்டிடம் உருவமைந்தது! இன்றைய வேதாகமப்பகுதி, தாவீதுக்கும், அபிகாயிலுக்கும் நடுவே ஏற்ப்பட்ட உறவு, வெற்றிகரமாக கட்டி முடித்த ஒரு… Continue reading இதழ்:2088 செவி கொடுத்தலும் முக்கியம் தானே!
Category: வேதாகம தியானம்
இதழ்:2087 உம் வார்த்தைகளை எதிரொலிக்க பெலன் தாரும்!
1 சாமுவேல்: 25: 32 அப்பொழுது தாவீது அபிகாயிலை நோக்கி : உன்னை இன்றையதினம் என்னைச் சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம். மிகப்பிரமாதமான விருந்தோடும், சாந்தமான வார்த்தைகளோடும் வந்த அபிகாயில் பேசி முடித்தவுடனே தாவீது அவளிடம் கூறிய வார்த்தைகளைத்தான் இந்த வசனத்தில் பார்க்கிறோம். உண்மையை சொன்னால் இந்த வார்த்தைகள் பல காரணங்களுக்காக என்னை மிகவும் தொட்டு விட்டன! முதலாக தாவீது அவளை தேவன் தாமே அனுப்பியதாகக் கூறுகிறான். ஏனெனில் அவள் தாவீதிடம் பேசிய வார்த்தைகள்,… Continue reading இதழ்:2087 உம் வார்த்தைகளை எதிரொலிக்க பெலன் தாரும்!
இதழ்:2086 உன்னை நடத்தும் தேவனை மகிமைப்படுத்து!
1 சாமுவேல் 25: 26 - 27 இப்போதும் என் ஆண்டவனே, நீர் இரத்தம் சிந்தவும்,உம்முடைய கை நீதியைச் சரிக்கட்டவும் கர்த்தர் உமக்கு இடம்கொடுக்கவில்லை என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக் கொண்டும், உம்முடைய ஜீவனைக் கொண்டும் சொல்லுகிறேன்..... இப்போதும் உமது அடியாள் என் ஆண்டவனுக்குக் கொண்டுவந்த காணிக்கையை ஏற்றுக் கொண்டு, என் ஆண்டவனைப் பின்பற்றுகிற வாலிபருக்குக் கொடுப்பீராக. உமது அடியாளின் பாதகத்தை மன்னியும். எத்தனையோ வருடங்கள் வேதத்தை ஆழமாகப் படித்திருந்தாலும், வற்றாத நீரோடை போல, ஒவ்வொரு நாளும் நமக்கு… Continue reading இதழ்:2086 உன்னை நடத்தும் தேவனை மகிமைப்படுத்து!
இதழ்:2085 ஏமாற்றமான திருமண வாழ்வா?
1 சாமுவேல் 25:25 என் ஆண்டவனாகிய நீர் நாபால் என்னும் இந்தப் பேலியாளின் மனுஷனை ஒரு பொருட்டாக எண்ண வேண்டாம். அவன் பெயர் எப்படியோ அப்படியே அவனும் இருக்கிறான். அவன் பெயர் நாபால். அவனுக்குப் பயித்தியமும் இருக்கிறது. அபிகாயில் தன்னை எதிர்கொண்ட பிரச்சனைகளுக்கு யாரையும் குற்றம் சுமத்தாமல், பழியைத் தானே ஏற்றுக்கொண்டு, சாந்தமான வார்த்தைகளால் தாவீதிடம் பேசினாள் என்று பார்த்தோம். அவள் பேச ஆரம்பித்தவுடனே அவள் எவ்வளவு பேசினாள் என்பதை படிக்கும் போது எனக்கு ஆச்சரியமாக… Continue reading இதழ்:2085 ஏமாற்றமான திருமண வாழ்வா?
இதழ்:2084 பெருமையை களைந்து போடு!
1 சாமுவேல் 25: 24 ........உம்முடைய அடியாளுடைய வார்த்தைகளை நீர் கேட்கும்பொருட்டாக உம்முடைய அடியாள் உமது செவிகேட்கப் பேசவேண்டும். நாபாலைத் திருமணம் செய்த குற்றம் அல்லாமல் வேறு குற்றம் அறியாத ஒரு பெண்தான் நம்முடைய அபிகாயில். இந்த அழகியப் பெண்ணின் குணநலன்களைத் தான் நாம் படித்துக்கொண்டிருக்கிறோம். அவளுடைய புத்திசாலித்தனம், கவனித்து செயல் படும் குணம், நேரத்தை வீணாக்கமல் செயல் படும் தன்மை, தாழ்மையான குணம் என்று பல நற்குணங்களை பார்த்துவிட்டோம். அலைபாயும் நீருக்கு அணை கட்டுவதுபோல,… Continue reading இதழ்:2084 பெருமையை களைந்து போடு!
இதழ்:2083 தாவீதின் பட்டயத்தை இறங்க செய்த வார்த்தைகள்!
1 சாமுவேல் 25:24 அவன் பாதத்திலே விழுந்து; என் ஆண்டவனே இந்தப் பாதகம் என் மேல் சுமரட்டும். மற்றவர்கள் செய்த குற்றத்துக்கு பழியை சுமப்பது என்பது என்னால் என்றுமே முடியாத ஒன்று. நான் செய்யும் தவறுகளுக்கு மற்றவர்கள் மேல் பழியை சுமத்தவும் மாட்டேன். இன்றைய வேதாகம வசனம் நிச்சயமாக என் மனதை நெகிழ வைத்தது. அவள் தாவீதண்டை சென்று தன் கணவனாகிய நாபால் செய்த அட்டூழியத்துக்கு பழியைத் தானாக முன்வந்து தன்மேல் ஏற்றுக் கொண்ட ஒரு தைரியமானப்… Continue reading இதழ்:2083 தாவீதின் பட்டயத்தை இறங்க செய்த வார்த்தைகள்!
இதழ்:2082 மழை நீர் மலைகளில் தங்குவதில்லை!
1 சாமுவேல் 25: 23 அபிகாயில் தாவீதைக் காண்கையில், தீவிரமாய் கழுதையை விட்டு இறங்கி, தாவீதுக்கு நேராகத் தரையில் முகங்குப்புற விழுந்து பணிந்து.. இந்த புதிய மாதத்தைக் காணச் செய்த தேவாதி தேவனை ஸ்தோத்தரிப்போம்! இந்த மாதம் முழுவதும் கர்த்தருடைய கரம் நம்மை நடத்துமாறு அவருடைய கரத்தில் நம்மை ஒப்புவிப்போம். தாவீதும் அவனோடிருந்த 400 பேரும் தங்களுடைய உதவியை உதாசீனப்படுத்தின நாபாலுக்கு தங்களுடைய வீரத்தைக் காண்பிக்க பட்டயத்தை ஏந்தி கோபத்துடன் விரைந்தனர். அவர்களுடைய முகத்தில் கொலைவெறி காணப்பட்டது.… Continue reading இதழ்:2082 மழை நீர் மலைகளில் தங்குவதில்லை!
இதழ்:2081 பகையை விலக்க ஒரு நல்ல முயற்சி!
1 சாமுவேல்: 25:18 அபொழுது அபிகாயில் தீவிரமாய் இருநூறு அப்பங்களையும், இரண்டு துருத்தி திராட்சரசத்தையும், சமையல் பண்ணப்பட்ட ஐந்து ஆடுகளைதும், ஐந்துபடி வறுத்த பயற்றையும், வற்றலாக்கப்பட்ட நூறு திராட்சக்குலைகளையும், வற்றலான இருனூறு அத்திப்பழ அடைகளையும் எடுத்து கழுதைகள் மேல் ஏற்றி அபிகாயில் என்ற இந்த அழகும், அறிவும் வாய்ந்த பெண் தன்னுடைய ஊழியக்காரன் தன்னிடம் கூறிய வார்த்தைகளை எடை போட்டு, தன்னுடைய கணவன் நாபாலின் புத்திகெட்ட செயலால் விளையப்போகும் தீங்கை உணர்ந்து சற்றும் தாமதியாமல் செயலில் இறங்குகிறாள்… Continue reading இதழ்:2081 பகையை விலக்க ஒரு நல்ல முயற்சி!
இதழ்:2080 நான் கண்ட ஒரு நடைமுறை புத்திசாலித்தனம்!
1 சாமுவேல் 25: 15 -17 அந்த மனுஷரோ எங்களுக்கு மிகவும் உபகாரிகளாயிருந்தார்கள். நாங்கள் வெளியிடங்களில் இருக்கும்போது அவர்கள் எங்களிடத்தில் நடமாடின நாளெல்லாம் அவர்கள் எங்களை வருத்தப்படுத்தினதுமில்லை. நமது பொருளில் ஒன்றும் காணாமற்போனதுமில்லை. நாங்கள் ஆடுகளை மேய்த்து அவர்களிடத்தில் இருந்த நாளெல்லாம் அவர்கள் இரவும் பகலும் எங்களைச் சுற்றிலும் மதிலாயிருந்தார்கள். இப்போதும் நீர் செய்யவேண்டியதைக் கவனித்துப் பாரும். ஒருவேளை கடவுள் இந்த வேதப்புத்தகத்தை கட்டுரைகளாக எழுதியிருந்தால் எப்படி அவை மனதில் நின்றிருக்குமோ என்னவோ? ஆனால் கர்த்தர்… Continue reading இதழ்:2080 நான் கண்ட ஒரு நடைமுறை புத்திசாலித்தனம்!
இதழ்:2079 முள்ளுக்குள் கட்டப்பட்ட வாழ்க்கை!
1 சாமுவேல் 25: 14 அப்பொழுது வேலைக்காரரில் ஒருவன் நாபாலுடைய மனைவியாகிய அபிகாயிலை நோக்கி: இதோ நம்முடைய எஜமானுடைய சுகசெய்தி விசாரிக்கத் தாவீது வனாந்திரத்திலிருந்து ஆட்களை அனுப்பினான். அவர்கள்பேரில் அவர் சீறினார். ராஜாவின் மலர்களில் நான் அபிகாயிலைப்பற்றி சில நாட்கள் எழுதலாம் என்றிருக்கிறேன். தயவுசெய்து என்னோடுகூட மிகப்பழமையான காலத்துக்கு, அபிகாயிலும் நாபாலும் வாழ்ந்த கர்மேலுக்கு பிரயாணம் பண்ண ஆயத்தமாயிருங்கள்! அபிகாயிலைப்பற்றி அநேகர் எழுதியிருக்கிறதைப் படித்து விட்டேன். பலர் அபிகாயிலை ஒரு சந்தர்ப்பவாதியாகப் பார்க்கிறார்கள். சிலர் அவளை ஒரு… Continue reading இதழ்:2079 முள்ளுக்குள் கட்டப்பட்ட வாழ்க்கை!
