நியா: 5: 31 “அவரில் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடே உதிக்கிற சூரியனைப்போல இருக்கக்கடவர்கள் என்று பாடினார்கள். பின்பு தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது.” வால்பாறையில் உள்ள சோலையார் அணை பகுதியில் எங்களுடைய ரிசார்ட் ஒன்று இருக்கிறது. அங்கே வெயில் காலம் என்றழைக்கப்படும் மார்ச் மாதத்தில், சில்லென்று காற்று அடித்தாலும், சூரியனின் வெப்பத்தை சற்று அதிகமாகவே உணர முடியும். சூரியனுக்கு அருகாமையில் இருப்பதுபோல வெப்பம் கூர்மையாகத் தாக்கும். அணையில் உள்ள நீரில் சூரியனின் பிரதிபலிப்பு அதிகமாக இருக்கும் என்பதை… Continue reading இதழ்:1907 இரட்டிப்பான சமாதானம் வேண்டுமா?
Category: வேதாகம தியானம்
இதழ்:1906 மனப்பூர்வமாய் கொடுத்தால் வெற்றி உண்டு!
நியா: 5: 1 – 3 “அந்நாளிலே தெபோராளும் அபினோகாமின் குமாரன் பாராக்கும் பாடினதாவது: கர்த்தர் இஸ்ரவேலுக்காக நீதியை சரிக்கட்டினதினிமித்தமும், ஜனங்கள் மனப்பூர்வமாய்த் தங்களை ஒப்புக்கொடுத்ததினிமித்தமும் அவரை ஸ்தோத்தரியுங்கள். ராஜாக்களே கேளுங்கள்; அதிபதிகளே செவிகொடுங்கள்; நான் கர்த்தரைப் பாடி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைக் கீர்த்தனம் பண்ணுவேன்.” இன்றைக்கு நாம் நியாதிபதிகளின் புத்தகம் 5 வது அதிகாரத்தில் எழுதப்பட்டுள்ள, இந்த “தெபோராளின் ஜெபம்” என்றழைக்கப்படும் பகுதியின் மூன்று நாள் தியானத்தை ஆரம்பிக்கப் போகிறோம். இந்தப்பாடலின் மூலம் தேவனாகிய கர்த்தர் தம்… Continue reading இதழ்:1906 மனப்பூர்வமாய் கொடுத்தால் வெற்றி உண்டு!
இதழ்:1905 வெதுவெதுப்பாய் இராதே!
நியா: 4: 24 “இஸ்ரவேல் புத்திரரின் கை கானானியரின் ராஜாவாகிய யாபீனை நிர்மூலமாக்குமட்டும் அவன் மேல் பலத்துக் கொண்டேயிருந்தது.” இன்று காலை ஒரு கப் தேநீரை சூடுபண்ணி வைத்துவிட்டு , சற்று நேரம் ராஜாவின் மலர்களுக்காக டைப் செய்து கொண்டிருந்தேன். அருகில் வைத்த தேநீரை மறந்து விட்டேன். திடீரென்று ஞாபகம் வர, தேநீர் கப்பை எடுத்து வாயில் வைத்தேன்! அது வெதுவெதுப்பாகி ருசியற்று இருந்தது. “உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது… Continue reading இதழ்:1905 வெதுவெதுப்பாய் இராதே!
இதழ்:1903 உன் நேரத்தை அர்ப்பணிப்பாயா?
நியா: 4: 22 பின்பு சிசெராவைத் தொடருகிற பாராக் வந்தான், அப்பொழுது யாகேல் வெளியே அவனுக்கு எதிர்கொண்டு போய் வாரும், நீர் தேடுகிற மனுஷனை உமக்குக் காண்பிப்பேன் என்று சொன்னாள். அவன் அவளிடத்திற்கு வந்த போது, இதோ சிசெரா செத்துக்கிடந்தான்; ஆணி அவன் நெற்றியில் அடித்திருந்தது. இந்த மலர்த்தோட்டத்தில் உங்களோடு சேர்ந்து வேதத்தை ஆராய ஆரம்பித்தபின்னர், உங்களையும் என்னையும் போன்ற சாதாரண மக்களைத் தான் கர்த்தர் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றும் பணியில் உபயோகப்படுத்துகிறார் என்ற அதிசயம் எனக்கு தெளிவாக… Continue reading இதழ்:1903 உன் நேரத்தை அர்ப்பணிப்பாயா?
இதழ்:1902 உன் எதிரியை இளைப்பாற விடாதே!
நியா: 4:21 “பின்பு ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஒரு கூடார ஆணியை எடுத்து, தன் கையிலே சுத்தியைப் பிடித்துக் கொண்டு, மெள்ள அவனண்டையில் வந்து, அவன் நெற்றியிலே அந்த ஆணியை அடித்துப்போட்டாள்; அது உருவிப்போய் தரையிலே புதைந்தது; அப்பொழுது ஆயாசமாய்த் தூங்கின அவன் செத்துப்போனான்” ஒருநாள் அதிகாலையில் நானும் என் கணவரும் காலை உடற்பயிற்சிக்காக நடந்து கொண்டிருந்தபோது, ஒரு மோட்டார் பைக் பின்னால் வந்து இடித்ததால் கீழே விழுந்த என் கணவருக்கு ஒரு கையின் எலும்பு உடைந்து… Continue reading இதழ்:1902 உன் எதிரியை இளைப்பாற விடாதே!
இதழ்:1901 தெளிந்த புத்தியோடு விழித்திருங்கள்!
நியா: 4 : 20 அப்பொழுது அவன் : நீ கூடாரவாசலிலே நின்று, யாராவது ஒருவன் வந்து, இங்கே யாராகிலும் இருக்கிறார்களா என்று உன்னிடத்தில் கேட்டால், இல்லை என்று சொல் என்றான். நாம் யாகேலின் கூடாரத்துக்குள் நுழைந்த சிசெராவைப் பற்றிப் பார்த்தோம்! அந்த கூடாரத்துக்குள் நடந்ததை சற்று கூர்ந்து கவனிப்போம்! சிசெரா, யாகேலின் கணவன் ஏபேர் இல்லாதபோது உள்ளே புகுந்தான். யாகேல் கொடுத்த பாலைப் பருகினான். இப்பொழுது யாகேல் கொடுத்த சமுக்காளத்தை மூடிக்கொண்டு தூங்கப் போகிறான். அதற்காக… Continue reading இதழ்:1901 தெளிந்த புத்தியோடு விழித்திருங்கள்!
இதழ்:1896 சிற்றின்பங்களை புதைக்காதே!
நியா: 4 : 16 ” பாராக் ரதங்களையும், சேனையையும் புறஜாதிகளுடைய அரோசேத் மட்டும் துரத்தினான்; சிசெராவின் சேனையெல்லாம் பட்டயக்கருக்கினால் விழுந்தது; ஒருவனும் மீதியாயிருக்கவில்லை.” நாம் கடைசியாக சிசெராவைப் பற்றி நியா: 4:15 லிருந்து படித்த போது, கர்த்தர் சிசெராவின் சேனையைக் கலங்கப் பண்ணினார் என்று பார்த்தோம். கலங்கடித்தார் என்பதற்கு முறியடித்தார் அல்லது முற்றும் அழித்தார் என்ற அர்த்தத்தையும் பார்த்தோம். இன்றைய வேத பகுதியில், தேவனுடைய மக்களின் சேனைத் தலைவனாகிய பாராக், சிசெராவின் ரதங்களையும், சேனையையும் புறஜாதிகளுடைய அரோசேத்… Continue reading இதழ்:1896 சிற்றின்பங்களை புதைக்காதே!
இதழ்:1893 தாழ்விலிருந்து உயர நோக்கு!
நியா: 4:14 “அப்பொழுது தொபோராள் பாராக்கை நோக்கி; எழுந்து போ; கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; “ அருமையான காலைப்பொழுது! பறவைகளின் சத்தம் காதுகளில் தொனித்தது! இன்றைய பொழுது எப்படியாக இருக்குமோ என்ற எண்ணத்துடன் கண் விழித்து பார்த்தான் பாராக்! பாராக்! எழுந்திரு! எழுந்திரு! என்ற வார்த்தைகள் அவன் காதுகளில் துன்னியமாக தொனித்தன! எழுந்திரு! கர்த்தர் இன்று சிசெராவை உன்னுடைய கரங்களில் ஒப்புவித்தார் என்று உரத்த சத்தமாய் கூறினாள் தெபோராள். இதை வாசிக்கும்… Continue reading இதழ்:1893 தாழ்விலிருந்து உயர நோக்கு!
இதழ்:1892 முழுமனதோடு தேவனுடைய பணிக்கு அர்ப்பணி!
நியாதிபதிகள் : 4: 9 “அதற்கு அவள்: நான் உன்னோடேகூட நிச்சயமாக வருவேன்….. என்று சொல்லி , தெபோராள் எழும்பி, பாராக்கோடேக் காதேசுக்குப் போனாள். நாம் இஸ்ரவேலின் தீர்க்கசரியான தெபோராளைப் பற்றிப் படித்துக்கொண்டிருக்கிறோம். கானானானிய ராஜாவாகிய யாபீனின் சேனாதிபதி சிசெராவை எதிர்த்து போராட செல்லும்படியாக பாராக்கிடம் தெபோராள் கூறியபோது, அவன் நீ என்னோடே கூட வந்தால் போவேன்; என்னோடே கூட வராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான் என்று பார்த்தோம். இன்றைய வேதாகமப் பகுதியில் தெபோராள் அவனுக்கு பிரதியுத்தரமாக நிச்சயமாக… Continue reading இதழ்:1892 முழுமனதோடு தேவனுடைய பணிக்கு அர்ப்பணி!
இதழ்:1891 சிறு பனித்துளிகள் பனிக்கட்டியாவது போல!
நியாதிபதிகள் : 4 : 8 “அதற்கு பாராக்; நீ என்னோடே கூட வந்தால் போவேன்; என்னோடே கூட வராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான். இரண்டு கைகள் சேர்ந்து தட்டினால் தான் ஓசை வரும் என்பது தமிழ் பழமொழி. என்னுடைய 42 வருட குடும்ப வாழ்க்கையிலும், ஊழியத்திலும், தொழில் சம்பந்தமான காரியங்களிலும், நானும் என் கணவரும் சேர்ந்து, இருவருடைய தாலந்துகளையும் ஒன்று படுத்தி செய்த காரியங்கள் எல்லாம் வெற்றியாகவே முடிந்திருக்கின்றன. நம்முடைய நாட்டில் எல்லோருக்கும் கிரிக்கெட்… Continue reading இதழ்:1891 சிறு பனித்துளிகள் பனிக்கட்டியாவது போல!
