Bible Study, Call of Prayer, To the Tamil Christian community

எங்கே உன் கூடாரம்?

  ஆதி: 33:18“ யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின் கானான்தேசத்திலிருக்கிற சாலேம் என்னும், சீகேமுடைய பட்டணத்திற்கு அருகே  சென்று பட்டணத்திற்கு எதிரே கூடாரம் போட்டான்.”   கீழ்படிதலினால் வருகிற கஷ்டங்களை விட கீழ்ப்படியாமையினால் வரும் கஷ்டங்கள் மிகவும் அதிகம் என்று ஒருவர் கூறியிருக்கிறார். இது நமக்கும் தெரிந்த உண்மையே, ஆனாலும் நம்மில் பலருக்கு கீழ்ப்படிதல் என்றால் அறவே பிடிக்காது. பிள்ளைகளுக்கு பெற்றோருக்கு கீழ்ப்படிய பிடிக்காது, பெரியவர்களுக்கு அதிகாரத்துக்கு கீழ்ப்படிந்து நடக்க பிடிக்காது. சிலருக்கு யாரும் புத்தி சொன்னால் … Continue reading எங்கே உன் கூடாரம்?

Bible Study, Call of Prayer, To the Tamil Christian community

கலங்காதே! நீ கலங்கத் தேவையில்லை!

யோசுவா: 8:1 “அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி;  நீ பயப்படாமலும், கலங்காமலும் இரு;” பல வருடங்களுக்கு முன்னால் சென்னையில் உள்ள கல்யாணி மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி பள்ளியில் (Nurses Training School) பயிற்சி பெறும் பெண்களுக்கு இரண்டு வருடங்கள் ஆங்கிலம் கற்றுக் கொடுத்தேன். அப்பொழுது அவர்களுடைய பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைத்தது. அவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அயராத சேவைக்கு அர்ப்பணிக்கும் காட்சி என்றும் மனதில் தங்கிய ஒன்று. தன் வாழ்வை மருத்துவ சேவையில்… Continue reading கலங்காதே! நீ கலங்கத் தேவையில்லை!

Bible Study, Call of Prayer, To the Tamil Christian community

பயப்படாதே! நீ பயப்பட ஒன்றுமிலை!

யோசுவா: 8:1 “அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி;  நீ பயப்படாமலும், கலங்காமலும் இரு;” நேற்று நான் வால்ப்பாறைக்கு பயணம் செய்தேன். மழைக்காலத்தில் காரில் பிரயாணம் பண்ணுவது நாங்கள் விரும்பாத ஒரு காரியம். பொள்ளாச்சி அருகில் சென்றபோது பயங்கர மழை பெய்ய ஆரம்பித்தது. நாங்கள் மலைப்பகுதியை நெருங்க நெருங்க மலைகளிருந்து நீர் ஊற்றிக்கொண்டிருந்ததால், மலைப்பகுதிகளிலும் நல்ல மழை பெய்துகொண்டிருப்பது தெரிந்தது. மலைகளில் கார் ஏறிய போது இருள் சூழ்ந்த மேகத்தோடு மழை கொட்டிக்கொண்டிருந்ததால் ’பனிப்படரும் பகுதி’ ’கற்கள் விழும்… Continue reading பயப்படாதே! நீ பயப்பட ஒன்றுமிலை!

Bible Study, Call of Prayer, To the Tamil Christian community

மலர் 3 இதழ் 233 அடம் பிடிக்கும் குணம் உண்டா?

நியாதிபதிகள்: 14:2 (சிம்சோன்) திரும்ப வந்து தன் தாயையும் தகப்பனையும் நோக்கி; திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டேன்; அவளை எனக்குக் கொள்ள வேண்டும் என்றான். என்னுடைய வாழ்க்கையில் சிறு வயது முதல் இது வரைக்கும் ஏதாவது ஒரு பொருளைப் பார்த்து , அதன்மேல் ஆசைப்பட்டு அதை எப்படியாவது அடையவேண்டும் என்று அடம் பிடித்து அழுத ஞாபகம் எனக்கு இல்லவே இல்லை. சிறு வயதிலிருந்தே இதை'செய்யாதிருப்பாயாக' , அதை விரும்பாதிருப்பாயாக என்ற கட்டளைகளை எனக்கு நானே… Continue reading மலர் 3 இதழ் 233 அடம் பிடிக்கும் குணம் உண்டா?

Bible Study, Call of Prayer, To the Tamil Christian community

மலர் 3 இதழ் 232 திசை திருப்பும் சிற்றின்பங்கள்!

நியாதிபதிகள்: 14: 1 " சிம்சோன் திம்னாத்துக்குப் போய் திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டு," நாங்கள் ஆந்திராவில் உள்ள கர்நூல் என்ற பட்டணத்தில் பல வருடங்கள் வாழ்ந்தோம். எங்கள் வீட்டுக்கு பின்பாக துங்கபத்திரா ஆறு ஓடியது. மும்பையில் மழை அதிகமாக இருந்தால் துங்கபத்திராவில் தண்ணீர் மிகவும் அதிகமாக ஓடும். ஒருவருடம் ஆற்று நீர் கரைபுரண்டு ஊருக்குள் புகுந்து விட்டது. ஆற்றில் ஓடியவரை சுத்தமாக ஓடிக்கொண்டிருந்த நீர், ஊருக்குள் புகுந்த போது வழியில் உள்ள எல்லா… Continue reading மலர் 3 இதழ் 232 திசை திருப்பும் சிற்றின்பங்கள்!

Bible Study, Call of Prayer, To the Tamil Christian community

மலர் 3 இதழ் 231 தேவனுக்கு சேவை செய்ய இதயம் துடிக்கிறதா?

நியாதிபதிகள்:13 : 25  "அவன் சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவிலுள்ள தாணின் பாளயத்தில் இருக்கையில் கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவத்துவக்கினார்." ஒருநிமிடம் நாம் இந்த தாணின் பாளயத்தில் வாழ்வதாக நினைத்துப் பார்ப்போம். நம்மை சுற்றிலும் வாழும் பெலிஸ்தியர் எப்பொழுதும் நம் சரீர வாழ்க்கையை  மட்டும் அல்ல நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையையும் தரைமட்டமாக்க காத்துக்கொண்டிருந்தால் நம்மால் சந்தோஷமாக ஒருநாளாவது வாழ முடியுமா? அப்படி நாம் உயிரைக் கையில் பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கையில், ஒருநாள் நம் பகுதியில் குழந்தையே இல்லாமல் வாழ்ந்த… Continue reading மலர் 3 இதழ் 231 தேவனுக்கு சேவை செய்ய இதயம் துடிக்கிறதா?

Bible Study, Call of Prayer, To the Tamil Christian community

மலர் 3 இதழ் 230 தாயின் கருவிலிருந்து உனக்கு ஆசீர்வாதம்!

நியாதிபதிகள்: 13:24 " பின்பு அந்த ஸ்திரீ ஒரு குமாரனைப் பெற்று அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள்; அந்தப் பிள்ளை வளர்ந்தது, கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார். நேற்று இரவு எனக்குத் தூக்கமே பிடிக்கவில்லை. விடியற்காலை  எங்கள் குக்கூ கடிகாரத்தில் உள்ள குருவி மூன்று முறை அடித்தவுடன் எழும்பிவிட்டேன். ஜன்னல் வழியே வெளியே சற்று நேரம் பார்த்தேன். என்னால் நம்பவே முடியவில்லை. இருண்ட மேகத்தைக் கிழித்துக்கொண்டு சந்திரனின் ஒளிக்கதிர்கள் வீசிக்கொண்டிருன்தன. இருண்ட வானமும், ஊடுருவி வீசிய ஒளியும் என் தேவனாகிய… Continue reading மலர் 3 இதழ் 230 தாயின் கருவிலிருந்து உனக்கு ஆசீர்வாதம்!

Bible Study, Call of Prayer, To the Tamil Christian community

மலர் 3 இதழ் 229 நம் பிள்ளைகளுக்கு நாம் விட்டுசெல்லும் ஆசீர்வாதம்?

நியாதிபதிகள்: 13:24 " பின்பு அந்த ஸ்திரீ ஒரு குமாரனைப் பெற்று அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள்; அந்தப் பிள்ளை வளர்ந்தது, கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார். இன்றைக்கு ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு சொத்து சுகங்களை விட்டு செல்ல ஆசைப்படுகிறார்கள். நான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சரி என் பிள்ளைகள் சுகமாக வாழ வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் கனவும். சொத்துப் பத்திரங்களையும், சுகபோக வாழ்க்கையையும், பொன் ஆபரணங்களையும், உலகப்பிரகாரமான ஞானத்தையும் அள்ளி அள்ளி கொடுக்கும் நம்மில் பலர் ஆவிக்குரிய… Continue reading மலர் 3 இதழ் 229 நம் பிள்ளைகளுக்கு நாம் விட்டுசெல்லும் ஆசீர்வாதம்?

Bible Study, Call of Prayer, To the Tamil Christian community

மலர் 3 இதழ் 228 பிள்ளைகளை வளர்ப்பது எப்படி?

நியாதிபதிகள்: 13:8 "....பிறக்கப்போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்யவேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக என்று வேண்டிக்கொண்டான்". ஒருநாள் அமெரிச்காவில் வாழும் ஒரு இளம் பெண் என்னிடம் , " அக்கா நீங்கள் வேலையும் செய்து கொண்டு, எப்படி உங்கள் இரண்டு பிள்ளைகளையும் நன்கு படிக்க வைத்து,கர்த்தருக்குள் வளர்த்து, இரண்டு பேருக்கும் நல்ல வாழ்க்கைத்துணையையும் கண்டுபிடித்தீர்கள் என்று கேட்டாள். நான் அதற்கு பதிலாக புன்னகைக்கத்தான் முடிந்தது. இன்றும் என்னிடம் யாராவத் கேட்டால் பதிலுக்கு ஒரு புன்முறுவல்தான் வரும். ஏனெனில் எனக்கு ஒவ்வொரு… Continue reading மலர் 3 இதழ் 228 பிள்ளைகளை வளர்ப்பது எப்படி?