எண்ணா:12: 1, 2 “எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயை மோசே விவாகம்பண்ணியிருந்தபடியினால் மிரியாமும் ஆரோனும்,அவன் விவாகம் பண்ணியிருந்த எத்தியோப்பிய தேசத்து ஸ்திரீயினிமித்தம் அவனுக்கு விரோதமாய்ப் பேசி: கர்த்தர் மோசேயைக்கொண்டு மாத்திரம் பேசினாரோ, எங்களைக் கொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள். கர்த்தர் அதைக் கேட்டார். சில நேரங்களில் நம்மை சுற்றி நடக்கும் ஆபத்து, விபத்துகளைப் பற்றி கேள்விப்படும்போது, “அதன் பின்னர் அவர்கள் என்றென்றும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள்” என்ற வாக்கியம் கதைகளுக்கு மாத்திரம் அல்ல நம் வாழ்க்கைக்கும் சொந்தமாயிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்… Continue reading இதழ்: 1052 மாறுபட்ட மனம் துதியை மாற்றி விடும்!
Category: Tamil Bible study
இதழ்: 1051 துதித்துப் பாடிட பாத்திரர்!
யாத்தி:15: 20, 21 “ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும், தன் கையில் தம்புருவை எடுத்துக்கொண்டாள்; சகல ஸ்திரீகளும் தம்புரோடும், நடனத்தோடும் அவளுக்கு பின்னே புறப்பட்டுப்போனார்கள். மிரியாம் அவர்களுக்கு பிரதிவசனமாக; கர்த்தரைப் பாடுங்கள்; அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையும் குதிரை வீரனையும் கடலிலே தள்ளினார் என்று பாடினாள்.” இந்த புதிய மாதத்தில் பிரவேசிக்கும் கிருபையை அளித்த தேவனை ஸ்தோத்தரித்து இந்த வருடத்தின் கடைசி மாதத்தை நாம் அவருடைய கரத்தில் அர்ப்பணிப்போம்! நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகையை… Continue reading இதழ்: 1051 துதித்துப் பாடிட பாத்திரர்!
இதழ்: 1050 இந்த வயதில் எங்கிருந்து வந்தது இந்த தைரியம்!
சங்கீ: 16: 1 “தேவனே என்னைக் காப்பாற்றும். நான் உம்மை நம்பியிருக்கிறேன்” நாம் கடந்த வாரம் மிரியாமைப்பற்றிப் படிக்க ஆரம்பித்தோம்! அவள் பார்வோன் குமாரத்தியிடம் ஞானமாய் பேசி குழந்தையின் தாயே குழந்தையை வளர்க்கும் திட்டத்தைக் கொடுக்கிறாள். ஞானமுள்ளவள் மட்டுமல்ல, மிரியாமை ஒரு திடமான, தைரியமான பெண்ணாகக் கூட இங்கு காண்கிறோம். இந்த சம்பவம் நடந்த போது மிரியாமுக்கு ஏழிலிருந்து பத்து வயதுக்குள் இருந்திருக்கும் என்று கருதுகின்றனர்! நாணலினால் செய்த பெட்டியில் அவள் தம்பி மோசே நைல் நதிக்கரையில் வைக்கப்பட்டபோது, யார்… Continue reading இதழ்: 1050 இந்த வயதில் எங்கிருந்து வந்தது இந்த தைரியம்!
இதழ்:1049 இத்தனைத் தெளிவு எங்கிருந்து வந்தது?
சில நாட்கள் நாம் மோசேயின் தாயாகிய யோகெபெத்தைப் பற்றிப் பார்த்தோம். பின்னர் பார்வோன் குமாரத்தியைப் பற்றியும் பார்த்தோம். இன்று முதல் மோசேயின் தமக்கையாகிய மிரியாமைப் பற்றி ஒரு சில நாட்கள் படிப்போம். குழந்தை மோசேயை நாணல் பெட்டியில் வைத்து நைல் நதியோரமாய் நாணல் நிறைந்த கரையில் மிதக்க வைத்து, குழந்தையின் அக்காவாகிய மிரியாமை தூரத்தில் இருந்து காவல் காக்கும்படி செய்தாள் யோகெபெத். மிரியாமுக்கு அப்பொழுது பத்திலிருந்து பதின்மூன்று வயதிற்குள் இருக்கும். யார் அந்த நதிக்கரையோரமாக வருவார்களோ? யார்… Continue reading இதழ்:1049 இத்தனைத் தெளிவு எங்கிருந்து வந்தது?
இதழ்: 1048 மோசேயை நமக்களித்த ஒரு தாய்!
யாத்தி:2: 5,6 அப்பொழுது பார்வோனுடைய குமாரத்தி நதியில் ஸ்நானம் பண்ண வந்தாள்.அவளுடைய தாதிகள் நதியோரத்தில் உலாவினார்கள்; அவள் நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியைக் கண்டு, தன் தாதியை அனுப்பி அதைக் கொண்டுவரும்படி செய்தாள். அதைத் திறந்தபோது பிள்ளையைக் கண்டாள்; பிள்ளை அழுதது; அவள் அதின்மேல் இரக்கமுற்று இது எபிரேயர் பிள்ளைகளில் ஒன்று என்றாள்.” இன்று பார்வோன் குமாரத்தியைப் பற்றி சற்று சிந்திக்கலாம்! மோசே பிறந்த போது யார் பார்வோனாக இருந்தார் என்பதைக் குறித்து பல கேள்விகள் உள்ளன! பார்வோன் குமாரத்தியின்… Continue reading இதழ்: 1048 மோசேயை நமக்களித்த ஒரு தாய்!
இதழ்: 1046 பெண் என்றால் மலர் அல்ல!
யாத்தி :2:2, 9 “அந்த ஸ்திரி (யொகெபேத்) கர்ப்பவதியாகி, ஒரு ஆண் பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளதென்று கண்டு அதை மூன்று மாதம் ஒளித்து வைத்தாள்........ பார்வோனுடைய குமாரத்தி அவளை நோக்கி, நீ இந்தப் பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய் அதை எனக்கு வளர்த்திடு; நான் உனக்கு சம்பளம் கொடுக்கிறேன் என்றாள். அந்த ஸ்திரி பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய் அதை வளர்த்தாள்” பெண்கள் என்றாலே ஒரு பெலவீனப்பாண்டமாக உலகத்தார் நினைக்கிறார்கள். அது உண்மையா??? சரீரப்பிரகாரமாய் ஒருவேளை இருக்கலாம்! ஆனால் ஆவிக்குரிய வாழ்க்கையிலும், விசுவாசத்திலும்,… Continue reading இதழ்: 1046 பெண் என்றால் மலர் அல்ல!
இதழ்:1045 பிள்ளைகளே ஒரு தாய்க்குப் பெருமை!
யாத்தி:2:1,2 “லேவியின் குடும்பத்தாரில் ஒருவன் லேவியின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம் பண்ணினான். அந்த ஸ்திரி கர்ப்பவதியாகி, ஒரு ஆண் பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளதென்று கண்டு அதை மூன்று மாதம் ஒளித்து வைத்தாள். நாம் சிப்பிராள், பூவாள் என்ற மருத்துவச்சிகளின் தேவ பயத்தினால் எகிப்தில் வாழ்ந்த இஸ்ரவேல் மக்களை தேவனாகியக் கர்த்தர் பாதுகாத்தார் என்று பார்த்தோம். எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் அவர்களை கடின உழைப்பினால் வாதித்தான், ஆனாலும் இஸ்ரவேல் மக்கள் பலுகிப் பெருகினார்கள். அதனால் பார்வோன், புதிதாய்… Continue reading இதழ்:1045 பிள்ளைகளே ஒரு தாய்க்குப் பெருமை!
இதழ்:1044 சமுகத்தொண்டால் ஆசீர்வாதம்!
யாத்தி:1: 20, 21 “இதினிமித்தம் தேவன் மருத்துவச்சிகளுக்கு நன்மை செய்தார். ஜனங்கள் பெருகி மிகுதியும் பலத்துப் போனார்கள். மருத்துவச்சிகள் தேவனுக்கு பயந்ததினால் அவர்கள் குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார். சிப்பிராள் , பூவாள் என்ற இரு எபிரேய மருத்துவச்சிகள் பார்வோனுக்கு பயப்படாமல், தேவனுக்கு பயந்ததினாலே, அவர்கள் இருவரும் எபிரேயருக்கு பிறந்த ஆண்பிள்ளைகளை பார்வோன் கட்டளைப்படி கொலைசெய்யாமல் காப்பாற்றினர் என்று பார்த்தோம். கர்த்தருக்கு பயந்த பயம், ஞானமுள்ள வார்த்தைகள் இவையே அவர்கள் பார்வோனுக்கு முன்னால் உபயோப்படுத்திய ஆயுதம் என்று பார்த்தோம். இந்த… Continue reading இதழ்:1044 சமுகத்தொண்டால் ஆசீர்வாதம்!
இதழ்:1043 ஏற்றகாலத்தில் பேசிய ஞானமுள்ள வார்த்தைகள்!
யாத்தி:1: 18, 19 “அதினாலே எகிப்தின் ராஜா மருத்துவச்சிகளை அழைப்பித்து,; நீங்கள் ஆண்பிள்ளைகளை உயிரோடே காப்பாற்றுகிற காரியம் என்ன என்று கேட்டான். அதற்கு மருத்துவச்சிகள் பார்வோனை நோக்கி; எபிரேய ஸ்திரிகள், எகிப்திய ஸ்திரிகளைப் போல அல்ல, அவர்கள் நல்ல பலமுள்ளவர்கள்; மருத்துவச்சி அவர்களிடத்துக்கு போகுமுன்னமே அவர்கள் பிரசவித்தாகும் என்றார்கள்” “கடந்த இரு மாதங்களாக நாம் ஆதியாகமத்தை ஆராய்ந்து படித்தோம். ஆதாமிலிருந்து, யோசேப்பு வரை பலருடைய வாழ்க்கை நம்மை ஆழமாக சிந்திக்கத் தூண்டியது. என்னோடு ஆதியாகமத்தில் பயணித்த நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பீர்கள்… Continue reading இதழ்:1043 ஏற்றகாலத்தில் பேசிய ஞானமுள்ள வார்த்தைகள்!
இதழ்: 1042 கனவு நனவாகும் காலம் வெகுதூரமில்லை!
ஆதி:50: 20 நீங்கள் எனக்கு தீமை செய்ய நினைத்தீர்கள், தேவனோ இப்படி நடந்து வருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு அதை நன்மையாக முடியப்பண்ணினார். யோசேப்பு எகிப்துக்கு அதிகாரியான பின்னர், கர்த்தர் பார்வோனுக்கு சொப்பனத்தின் மூலமாய் உரைத்தது போலவே மிகப் பெரிய பஞ்சம் உண்டாயிற்று. கானான் தேசமும், எகிப்தும்தேசமும் பஞ்சத்தினாலே மெலிந்து போயிற்று. கானானிலே யாக்கோபும், அவன் குடும்பத்தாரும் பஞ்சத்தினாலே வாட ஆரம்பித்தனர். கானானில் மட்டும் அல்ல, எங்குமே உணவுப் பொருள் இல்லாததால், யாக்கோபு தன் குடும்பம் பஞ்சத்தினால்… Continue reading இதழ்: 1042 கனவு நனவாகும் காலம் வெகுதூரமில்லை!
