ஆதி:41: 44, 45 பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி; நான் பார்வோன்; ஆகிலும் எகிப்து தேசத்திலுள்ளவர்களில் ஒருவனும் உன் உத்தரவில்லாமல் தன் கையையாவது, தான் காலையாவது அசைக்கக் கூடாது என்றான். மேலும் பார்வோன் யோசேப்புக்கு, சாப்நாத்பன்னேயா என்ற பெயரையிட்டு, ஒன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். யோசேப்பு எகிப்து தேசத்தை சுற்றிப்பார்க்கும்படி புறப்பட்டான். சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில், எங்களுடைய நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்த போது, அவர் மனைவி என்னிடம் வந்து,… Continue reading இதழ்:1041 குடும்பத்தில் சற்று உப்பு சேருங்கள்!
Category: Tamil Bible study
இதழ்:1040 உன் பிரசங்கம் அல்ல உன் வாழ்க்கையே பறைசாற்றும்!
ஆதி:41: 39” பின்பு பார்வோன் யோசேப்பை நோக்கி; தேவன் இவையெல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறபடியால்,உன்னைப் போல விவேகமும், ஞானமும் உள்ளவன் வேறோருவனும் இல்லை” யோசேப்பின் வாழ்க்கையைப் பற்றி அதிக நாட்கள் நாம் தியானிக்கிறோம் என்று நினைக்கிறேன். அவனுடைய வாழ்க்கையைப்பற்றி வாசிக்கும் போது, இன்னும் ஒரு பாடத்தை கர்த்தர் எனக்கு கற்றுக் கொடுத்தார். அதை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஆதி 29:3 ல், வேதம் கூறுகிறது, யோசேப்பு தன் சகோதர்களால் விற்கப் பட்ட பின், எகிப்தை வந்து அடைகிறான். ஒரு… Continue reading இதழ்:1040 உன் பிரசங்கம் அல்ல உன் வாழ்க்கையே பறைசாற்றும்!
ஜெபமே ஜெயம்!
தானியேலின் சீரான ஜெபம்! தானியேல் 9:3 நான் உபவாசம் பண்ணி, இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து, தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட என் முகத்தை அவருக்கு நேராக்கி .... இன்று சனிக்கிழமை! நாம் ஜெபத்தில் ஒருமனப் படும் நாள்! தானியேலின் வழ்க்கை ஜெபமே ஜெயம் என்ற வார்த்தைக்கு முன்னோடி என்று நமக்குத் தெரியும்! தானியேல் 2 ம் அதிகாரத்தில் அவனை வாலிபனாகவும், 6 ம் அதிகாரத்தில் அவனை ஒரு வயதானவனாகவும் பார்க்கிறோம்! ஆனால் ஜெப வாழ்க்கை ஒருபோதும்… Continue reading ஜெபமே ஜெயம்!
இதழ்: 1039 எல்லாவற்றையும் நன்மையாக்குவார்!
சங்கீ: 31: 3 என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும். நாம் தொடர்ந்து யோசேப்பின் வாழ்க்கையைப் பற்றிப் படிக்கும் முன்னர், இன்று சற்று நேரம் நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்தித்து பார்க்கலாம் என்று யோசித்தேன். ஒருமுறை மார்டின் லூதருடைய மனைவி கெத்தரின் ( Catherine )அம்மையார் எழுதிய சில வரிகளைப் படித்தேன். அவர்கள் “ஆண்டவரே என்னுடைய எல்லா துயரங்களுக்காகவும் நன்றி, அவைகள் மூலமாய் நான் உம்முடைய மகிமையை காண உதவி செய்தீர்,… Continue reading இதழ்: 1039 எல்லாவற்றையும் நன்மையாக்குவார்!
இதழ்: 1038 அநீதிகளைப் பார்த்துக் கண்களை மூடிக்கொள்ள கடவுள் என்ன பைத்தியமா?
ஆதி:41: 14, 38 அப்பொழுது பார்வோன் யோசேப்பை அழைப்பித்தான்; அவனைத் தீவிரமாய் காவல்கிடங்கிலிருந்து கொண்டுவந்தார்கள். அவன் சவரம் பண்ணிக்கொண்டு, வேறு வஸ்திரம் தரித்து, பார்வோனிடத்தில் வந்தான். அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி; தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப் போல வேறொருவன் உண்டோ என்றான் இன்றைய தியானத்தை எழுத யோசேப்பின் வாழ்க்கையை ஆராய்ந்த போது, பவுல் எழுதிய இந்த வார்த்தைகள் தான் என் ஞாபகத்துக்கு வந்தது. கலா:6: 7 மோசம் போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார். மனுஷன்… Continue reading இதழ்: 1038 அநீதிகளைப் பார்த்துக் கண்களை மூடிக்கொள்ள கடவுள் என்ன பைத்தியமா?
இதழ்: 1037 ஒளிமயமான எதிர்காலம் தெரியும்!
ஆதி: 39:20 “ யோசேப்பின் எஜமான் அவனைப் பிடித்து ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான், அந்த சிறைச்சாலையில் அவன் இருந்தான்.” யாக்கோபின் செல்லக் குமாரனுக்கு நடந்தது என்ன? திருமதி போத்திபாரினால் பொய் பழி சுமத்தப்பட்டு, சிறைச்சாலையில் வந்தடைகிறான் யோசேப்பு. அமைதியாய் அன்பான தகப்பனோடே, செல்லமாய் வாழ்ந்த வாழ்க்கை எங்கு மறைந்ததது? திடீரென்று அவன் வாழ்க்கையில் வீசிய புயல் எங்கிருந்து வந்தது? ஒன்றுக்கு பின்னால் ஒன்றாக நடந்த சம்பவங்கள், அவனை இருண்ட சிறைச்சாலைக்கே கொண்டு வந்து… Continue reading இதழ்: 1037 ஒளிமயமான எதிர்காலம் தெரியும்!
இதழ்: 1036 தனிமையில்….யாரும் காணாத வேளையில்???
ஆதி: 39:14 – 15 அவள் தன் வீட்டு மனிதரைக் கூப்பிட்டு: பாருங்கள், எபிரேய மனுஷன் நம்மிடம் சரசம்பண்ணும்படிக்கு அவனை நமக்குள் கொண்டுவந்தார், அவன் என்னோடே சயனிக்கும்படி என்னிடத்தில் வந்தான்; நான் மிகுந்த சத்தமிட்டு கூப்பிட்டேன். நான் சத்தமிட்டு கூப்பிடுகிறதை அவன் கண்டு, தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு வெளியே ஓடிப்போய்விட்டான் என்றாள். போத்திபாரின் மனைவி யோசேப்பின் மேல் கண்ணைப் போட்டு வலை வீசினாள் என்று நேற்று பார்த்தோம்! அவனது சௌந்தர்யம், இளமை, திறமை, இவை அவளை காந்தம்… Continue reading இதழ்: 1036 தனிமையில்….யாரும் காணாத வேளையில்???
இதழ்: 1035 கொஞ்சம் அனுசரித்து போனால்தானே வேலையில் இருக்க முடியும்????
ஆதி: 39:7 சிலநாள் சென்றபின், அவன் எஜமானின் மனைவி யோசேப்பின்மேல் கண்போட்டு, என்னோடே சயனி என்றாள். யோசேப்பை அவன் சகோதரர் இஸ்மவேலருக்கு விற்ற பின் யூதா, தாமார் என்ற இருவரின் கதை வேதத்தில் இடம் பெற்றுள்ளதைப் பார்த்தோம். இன்று நான் யோசேப்பைப் பின் தொடரலாம்! யோசேப்பை ஏற்றிக்கொண்டு இஸ்மவேலரின் வண்டி வேகமாய் பாலைவனத்தை கடந்து சென்றது! யாக்கோபு ராகேலுக்கு பிறந்த செல்ல குமாரன், 17 வயதான யோசேப்பு, இப்பொழுது அடிமையாக எகிப்து தேசத்துக்கு அழைத்து செல்லப்படுகிறான்! என்றுமே… Continue reading இதழ்: 1035 கொஞ்சம் அனுசரித்து போனால்தானே வேலையில் இருக்க முடியும்????
இதழ்:1034 இந்த மா பெரும் தயவைப் பெற எனக்கு என்ன தகுதி உண்டு?
ஆதி: 38: 25 – 26 “ அவள் (தாமார்) வெளியே கொண்டுவரப் பட்டபோது, அவள் தன் மாமனிடத்துக்கு அந்த அடைமானத்தை அனுப்பி, இந்த பொருட்களை உடையவன் எவனோ அவனாலே நான் கர்ப்பவதியானேன்; இந்த முத்திரை மோதிரமும், இந்த கோலும், இந்த ஆரமும் யாருடைவகள் பாரும் என்று சொல்லி அனுப்பினாள். யூதா அவைகளை பார்த்தறிந்து, என்னிலும் அவள் நீதியுள்ளவள், அவளை என் குமாரனாகிய சேலாவுக்கு கொடாமற்போனேனே என்றான். அப்புறம் அவன் அவளை சேரவில்லை.” அன்பானவர்களே! நாம் தாமாரைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறோம்.… Continue reading இதழ்:1034 இந்த மா பெரும் தயவைப் பெற எனக்கு என்ன தகுதி உண்டு?
இதழ் 1033 பிறரை சுயநலமாக உபயோகிக்கும் கேவலம்!
ஆதி: 38:16 ( யூதா ) அந்தவழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடம் சேரும்படி வருவாயா என்றான்; அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேரும்படி எனக்கு என்ன தருவீர் என்றாள். தாமார் தன் கைம்பெண் வேஷத்தை கலைத்து தன்னை வேசியைப்போல அலங்கரித்து, முக்காடிட்டு, திம்னாவுக்கு போகிற வழியில் நீருற்றண்டையில் அமர்ந்தாள் என்று பார்த்தோம். இந்த திம்னா என்ற ஊர் எபிரோனுக்கு தெற்காக ஏழு மைல் தூரத்தில் இருந்தது. ஆடுகளுக்கு மயிர்கத்தரிக்கும் காலம்… Continue reading இதழ் 1033 பிறரை சுயநலமாக உபயோகிக்கும் கேவலம்!
