ஆதி: 3:17 பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்ததினாலே, பூமி உன்நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்.நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். பத்து வருடங்களுக்கு முன்பு ஆகஸ்ட் மாதம் இந்த ராஜாவின் மலர்கள் எழுத ஆரம்பித்தேன். அப்பொழுது தமிழில் டைப் பண்ண மிகவும் கஷ்டப்படுவேன். அதனால் நான் எழுதியது கூட சுருக்கமாகவே இருக்கும். அதனால் முதல் வருடம் எழுதிய பாகத்தை… Continue reading இதழ்:988 ஏதேன் தோட்டத்தில் ஒரு பார்வை!
Category: Tamil Bible study
இதழ்: 987 ஆழ்ந்து போகும் வேளை கதறும் நாம் சற்று ஜாக்கிரதையாய் அதைத் தடுக்கலாமே!
மத்தேயு: 26: 41 நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். நாம் ரூத்தின் புத்தகத்தை முடித்து விட்டோம். நாளைக்கு புதிய புத்தகத்தை ஆரம்பிக்குமுன்னர் இந்த செய்தியை பகிர்ந்து கொள்ள கர்த்தர் என்னை ஏவினார். தம்முடைய சீஷர்களோடு தனிமையில் நேரம் செலவிடுவது நம்முடைய ஆண்டவருக்கு இது முதல் தடவையல்ல! ஆனால் அந்த இரவு முற்றிலும் மாறுபட்ட ஒரு இரவு! மத்தேயு கூறுகிறார் அந்த இரவில் உணவு அருந்தி விட்டு… Continue reading இதழ்: 987 ஆழ்ந்து போகும் வேளை கதறும் நாம் சற்று ஜாக்கிரதையாய் அதைத் தடுக்கலாமே!
இதழ்: 986 கணக்கை எண்ண கற்றுக்கொடுக்கிறோம் ஆனால் வாழ்வில் எண்ண வேண்டியவைகளை?
ரூத்: 4: 16 “நகோமி அந்தப் பிள்ளையை எடுத்து, தன் மடியிலே வைத்து, அதை வளர்க்கிற தாயானாள்.” இந்த புதிய மாதத்தை காணச் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்! அவருடைய கரம் நம்மைத் தொடர்ந்து வழி நடத்துமாறு ஜெபிப்போம்! வானவில் என்ற வார்த்தையே எனக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொண்டு வரும்! பெருமழை பெய்து கொண்டிருந்த ஒரு சமயம், மழையினால் பெரிய இழப்புகள் நேர்ந்து, இந்த மழை எப்பொழுது நிற்கும் என்று எல்லோரும் ஏங்கிக் கொண்டிருந்த சமயம், ஒருநாள் காலை… Continue reading இதழ்: 986 கணக்கை எண்ண கற்றுக்கொடுக்கிறோம் ஆனால் வாழ்வில் எண்ண வேண்டியவைகளை?
இதழ்: 985 குடும்பத்தை சரியான பாதையில் நடத்தும் ஞானம்!
ரூத்: 3: 18 ” அப்பொழுது அவள் : என் மகளே, இந்தக் காரியம் என்னமாய் முடியும் என்று நீ அறியுமட்டும் பொறுத்திரு: அந்த மனுஷன் இன்றைக்கு இந்தக் காரியத்தை முடிக்குமுன் இளைப்பாறமாட்டான் என்றாள். சாலொமோன் ராஜாவாக முடிசூடப்பட்ட பின்னர், கர்த்தர் அவனுக்கு சொப்பனத்திலே தரிசனமாகி நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் ( 1 ராஜாக்கள்: 3: 5 – 9) என்ற சம்பவம் வேதத்தில் எனக்கு பிடித்தமான சம்பவங்களில் ஒன்று. அச்சமயம் சாலொமோன் ஒன்றும் வயதானவரும்,… Continue reading இதழ்: 985 குடும்பத்தை சரியான பாதையில் நடத்தும் ஞானம்!
ஜெபமே ஜெயம்!
நமக்காக ஜெபிக்கும் ஒரு இரட்சகர்! ரோமர் : 8 : 34 “…கிறிஸ்துவே மரித்தவர்: அவரே எழுந்துமிருக்கிறவர்: அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்: நமக்காக வேண்டுதல்செய்கிறவரும் அவரே.” நம்முடைய கிறிஸ்துவானவர் நமக்காக 2000 வருடங்களுக்கும் மேலாக வேண்டுதல் செய்து கொண்டிருக்கிறார்! நாமே நமக்காக ஜெபிக்கத் தவறும்போதும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவானவர் நமக்காக வேண்டுதல் செய்கிறார். நம்முடைய இன்றைய யுத்தம் அவருக்குத் தெரியும்! நம்மை சுற்றியிருக்கும் சோதனைகளை அவர் அறிவார்! உன் கண்ணீரையும், கவலையையும் அறிந்தவர்… Continue reading ஜெபமே ஜெயம்!
இதழ்: 984 செவி சாய்ப்பதே நம் அன்பின் அடையாளம்!
ரூத்: 1:18 “அவள் தன்னோடேகூட வர மன உறுதியாயிருக்கிறதைக் கண்டு, அப்புறம் அதைக்குறித்து அவளோடே ஒன்றும் பேசவில்லை.” நான் சிறியவளாக இருந்தபோது யாரோ ஒருவர் மூலமாக நான் கற்றுக்கொண்ட ” நமக்கு கர்த்தர் ஒரு வாயும், இரண்டு செவிகளும் கொடுத்திருப்பது நாம் குறைவாய் பேசவும், நிறைய கேட்கவும் தான்” என்ற பேருண்மை என் மனதில் என்றும் தங்கி விட்டது. என்னுடைய வாழ்நாளில் இந்த உண்மை என்னை பல இக்கட்டான சம்பவங்களில் காப்பாற்றியிருக்கிறது. அதுமட்டுமல்ல என்னிடம் வேலை செய்த… Continue reading இதழ்: 984 செவி சாய்ப்பதே நம் அன்பின் அடையாளம்!
இதழ்: 983 புன்னகை பூக்கும் சூரிய காந்தி போல!
ரூத்: 2: 10 “அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி; நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது என்றாள்”. ஒருதடவை நாங்கள் நேப்பால் நாட்டுக்கு காரில் பிரயாணமாய் சென்றுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தோம். பயங்கர சோர்வுடன் வந்து கொண்டிருந்த போது திடீரென்று பல்லாயிரக்கணக்கானோர் எங்களைப் பார்த்து புன்னகைப் பூப்பது போன்றத் தோற்றத்துடன் கண்களில் பட்டது ஒரு சூரியகாந்தி மலர்த் தோட்டம். அவற்றின் நிறம் அந்த இடத்துக்கே ஒரு வெளிச்சத்தைக்… Continue reading இதழ்: 983 புன்னகை பூக்கும் சூரிய காந்தி போல!
இதழ்: 982 நீ எங்கும் அலைய வேண்டிய அவசியமே இல்லை!
ரூத்: 2: 21 “பின்னும் மோவாபிய ஸ்திரீயான ரூத்; அவர் என்னை நோக்கி, என் அறுப்பெல்லாம் அறுத்துத் தீருமட்டும் நீ என் வேலைக்காரிகளோடே கூடவே இரு என்று சொன்னார் என்றாள்.” நாம் ரூத்தின் குணநலன்களைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறோம். இஸ்ரவேல் மக்களை பாவத்தில் விழப்பண்ணிய மோவாபிய பெண்களின் மரபில் வந்த இவள், மோவாபைத் துறந்து, தேவனாகிய கர்த்தரை விசுவாசித்து, அவருக்குத் தன்னை ஒப்புக்கொடுத்ததாள் என்று பார்த்தோம். விசுவாசம் மட்டுமல்லாமல் , தைரியத்தோடு அவள் எடுத்த முடிவால் , கர்த்தர்… Continue reading இதழ்: 982 நீ எங்கும் அலைய வேண்டிய அவசியமே இல்லை!
இதழ் 981 கனவில் காணாத வாழ்க்கை!
ரூத்: 1 : 16 “அதற்கு ரூத் : நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக் குறித்து,என்னோடே பேச வேண்டாம்;” தாவீதின் கதையைக்கேளுங்க! பிள்ளைகளே தாவீதின் கதையைக் கேளுங்க! இளைஞன் தாவீது, வீரன் தாவீது, இஸ்ரவேலின் தேவனுக்கு பயந்த தாவீது அந்த தாவீதின் கதையைக் கேளுங்க! இந்தப் பாடல் என் காதுகளில் தொனிக்கும் போதெல்லாம், சின்னத் தாவீது எப்படி எட்டடி உயரமுள்ள பெலிஸ்த வீரனின் முன்னால் கூழாங்கற்களோடு தைரியமாக யுத்தத்துக்கு சென்றானோ, அந்தக் காட்சி… Continue reading இதழ் 981 கனவில் காணாத வாழ்க்கை!
இதழ்:980 நான் தவறவிட்ட புதை பொருட்கள்!
ரூத்: 2: 11 ” அதற்கு போவாஸ் பிரதியுத்தரமாக; உன் புருஷன் மரணமடைந்த பின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், நீ உன் தகப்பனையும், உன் தாயையும், உன் ஜந்மதேசத்தையும் விட்டு, முன்னே நீ அறியாத ஜனங்களிடத்தில் வந்ததும், எல்லாம் எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது.” சில வருடங்களுக்கு முன்னால் நாங்கள் ஊட்டிக்கு காரில் சென்று கொண்டிருந்தோம். போகும் வழியில் மலைப் பாதையில், சாலையின் இரண்டு பக்கமும் வானுயர்ந்த மரங்கள் நின்றன. அவற்றின் நடுவே வானைத்தொடும் நெருப்பு போல… Continue reading இதழ்:980 நான் தவறவிட்ட புதை பொருட்கள்!
