ஆதி: 34:13 அப்பொழுது யாக்கோபின் குமாரர் தங்கள் சகோதரியாக தீனாளை சீகேம் என்பவன் தீட்டு படுத்தினபடியால், அவனுக்கும் அவன் தகப்பன் ஏமோருக்கும் வஞ்சகமான மறுமொழியாக... யாராவது உங்களை வஞ்சகமாக ஏமாற்றிய கசப்பான அனுபவம் உங்களுக்கு உண்டா? பொய்யை உண்மையைப்போல சித்தரித்து கூறி நம்ப வைத்து கழுத்தறுக்கப்பட்ட அனுபவம் உண்டா? இவர்கள் பேசுவது உண்மையா அல்லது பொய்யா என்று நம்மை திணற வைக்கக் கூடிய அளவு பேசுகிறவர்கள் பலரை நம் ஒவ்வொருவர் வாழ்விலும் கண்டிருப்போம்! நான் நிச்சயமாகப் பார்த்திருக்கிறேன்! யாக்கோபின்… Continue reading இதழ்: 1025 அவர்கள் செய்தால் நாமும் செய்வதா???
Category: The word of God
இதழ்:1024 சிக்கி விடாதே! சிக்கி விட்டால் அவமானம்!
ஆதி: 34:2-4 அவளை ஏவியனான ஏமோரின் குமாரனும், அத்தேசத்தின் பிரபுவுமாகிய சீகேம் என்பவன் கண்டு அவளைக் கொண்டுபோய், அவளோடே சயனித்து அவளைத் தீட்டு படுத்தினான்.அவனுடைய மனம் யாக்கோபின் குமாரத்தியாகிய தீனாள் மேல் பற்றுதலாயிருந்தது; அவன் அந்தப் பெண்ணை நேசித்து, அந்தப் பெண்ணின் மனதுக்கு இன்பமாய்ப் பேசினான்.சீகேம் தன் தகப்பனாகிய ஏமோரை நோக்கி: இந்தப் பெண்ணை எனக்கு கொள்ள வேண்டும் என்று சொன்னான். நேற்று நாம், தீனாள் தன் கூடாரத்தின் பாதுகாப்பையும், தேவனின் சித்தத்தையும் விட்டு வெளியேறி அத்தேசத்து பெண்களோடு… Continue reading இதழ்:1024 சிக்கி விடாதே! சிக்கி விட்டால் அவமானம்!
இதழ் 1023 ஆடம்பரத்தைத் தேடிய மகள்!
ஆதி:34:1 “ லேயாள் யாக்கோபுக்கு பெற்ற குமாரத்தியாகிய தீனாள் தேசத்துப் பெண்களைப் பார்க்க புறப்பட்டாள்.” யாக்கோபு தன்னுடைய சகோதரனாகிய ஏசாவை எதிர்கொண்டு தன்னுடைய உறவைப் புதுப்பித்த பின்னர் ஏசா தான் வந்த வழியேத் திரும்பிப் போனான். யாக்கோபு சீகேமுடைய பட்டணத்துக்கு அருகே சென்று அந்தக் கானானியப் பட்டணத்துக்கு எதிரே சாலேம் என்னும் இடத்தில் கூடாரம் போட்டான். கானான் தேசத்துக்குள் நுழையும்போதே யாக்கோபின் குடும்பத்தில் என்ன நடக்கிறது பார்க்கலாம்! நாம் நம் வாழ்க்கையில் என்றாவது தவறான முடிவுகள் எடுத்து பின்னர் அதற்காக… Continue reading இதழ் 1023 ஆடம்பரத்தைத் தேடிய மகள்!
இதழ் 1022 உறவுக்கு விலை உண்டோ?
ஆதி: 32: 27, 28 “ அவர் உன் பேர் என்ன என்று கேட்டார்; யாக்கோபு என்றான்.அப்பொழுது அவர்; இனி உன் பேர் யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும், தேவனோடும், மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்.” யாக்கோபின் குடும்பத்தார் தேவன் காட்டிய புதிய வாழ்வைத் தேடி,தொடர்ந்து நடந்தனர். அவர்கள் எதிர்காலத்தை எதிர்நோக்கி செல்லும்போது இதோ ஏசா 400 பேர் கொண்ட பெரிய படையோடு யாக்கோபை எதிர்கொண்டு வருகிறான் என்று. யாக்கோபுக்கு தான் ஏசாவை ஏமாற்றி பிறப்புரிமையைப் பறித்தது தான் ஏசாவின் கோபத்துக்கு காரணம்… Continue reading இதழ் 1022 உறவுக்கு விலை உண்டோ?
இதழ் 1021 யாக்கோபோடு ஒரு நாள் பயணம்!
ஆதி:32: 9-11 பின்பு யாக்கோபு, என் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும், என் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனுமாய் இருக்கிறவரே: உன் தேசத்துக்கும், உன் இனத்தாரிடத்துக்கும் திரும்பிப் போ உனக்கு நன்மை செய்வேன் என்று என்னுடனே சொல்லியிருக்கிற கர்த்தாவே , அடியேனுக்கு தேவன் காண்பித்த எல்லா தயவுக்கும், எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும், கையுமாய் இந்த யோர்தானைக் கடந்து போனேன், இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன்.என் சகோதரனாகிய ஏசாவின் கைக்கு என்னைத் தப்புவியும்; அவன் வந்து… Continue reading இதழ் 1021 யாக்கோபோடு ஒரு நாள் பயணம்!
இதழ்:1020 உடைந்த கண்ணாடியை ஒட்ட முடியுமா?
ஆதி:31:13 நீ தூணுக்கு அபிஷேகஜ்செய்து , எனக்கு ஒரு பொருத்தனை பண்ணின பெத்தேலிலே உனக்கு தரிசனமான தேவன் நானே, இப்பொழுது நீ எழுந்து, இந்த தேசத்தைவிட்டு புறப்பட்டு உன் இனத்தாரிருக்கிற தேசத்துக்கு திரும்பிப் போஎன்றார் என்றான். பல வருடங்களாக யாக்கோபு , பேராசைக்காரன், ஏமாற்றுக்காரனான லாபானுடைய ஆதிக்கத்துக்குக் கீழே வாழ்ந்தான் என்று பார்த்தோம். பதிநான்கு வருடங்கள் தன்னுடைய மனைவிமாருக்காக உழைத்தான். பின்னர் பிள்ளைகள் பிறந்தனர். ஆக மொத்தம் இருபது வருடங்கள் ஓடி விட்டன! தேவனாகிய கர்த்தர் யாக்கோபின்… Continue reading இதழ்:1020 உடைந்த கண்ணாடியை ஒட்ட முடியுமா?
இதழ்: 1019 தற்செயலாய் நடந்ததா?
ஆதி: 29: 9-11 “ அவர்களோடே அவன் பேசிக் கொண்டிருக்கும்போதே , தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ராகேல் அந்த ஆடுகளை ஒட்டிக்கொண்டு வந்தாள்.யாக்கோபு தன் தாயின் சகோதரனாகிய லாபானுடைய குமாரத்தியாகிய ராகேலையும், தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளையும் கண்டபோது, யாக்கோபு போய், கிணற்றின் வாயிலிருக்கிற கல்லைப் புரட்டி தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளுக்கு தண்ணீர் காட்டினான். பின்பு யாக்கோபு ராகேலை முத்தஞ் செய்து, சத்தமிட்டு அழுது....... நாம் சில தினங்களுக்கு முன் ரெபெக்காள் தண்ணீர் மொள்ள வந்த… Continue reading இதழ்: 1019 தற்செயலாய் நடந்ததா?
இதழ்:1018 ஏமாற்றினவன் நிச்சயமாக ஏமாற்றப்படுவான்!
ஆதி: 28: 1,2 “ ஈசாக்கு யாக்கோபை அழைத்து, அவனை ஆசிர்வதித்து, நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண் கொள்ளாமல், எழுந்து புறப்பட்டு பதான் அராமிலிருக்கிற உன் தாயினுடைய தகப்பனாகிய பெத்துவெலுடைய வீட்டுக்கு போய், அவ்விடத்தில் உன் தாயின் சகோதரனாகிய லாபானின் குமாரத்திகளுக்குள் பெண்கொள் என்று அவனுக்கு கட்டளையிட்டான்.” யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கை ஏமாற்றி பொய் சொல்லி ஆசீர்வாதத்தை பெற்றவுடன் , ஏசா அவன் மீது மூர்க்கம் கொண்டிருப்பதை அறிந்து ஈசாக்கும், ரெபெக்காளும் அவனை, ரெபேக்களின் குடும்பம் வசித்து வந்த ஆரானுக்கு அனுப்புகிறார்கள்.… Continue reading இதழ்:1018 ஏமாற்றினவன் நிச்சயமாக ஏமாற்றப்படுவான்!
இதழ் 1017 பிள்ளைகளை வளர்ப்பதில் தவறிய ஒரு தேவனை அறிந்த குடும்பம்!
ஆதி: 27:13 “அதற்கு அவன் தாய், என் மகனே, உன்மேல் வரும் சாபம் என்மேல் வரட்டும்; என் சொல்லை மாத்திரம் கேட்டு , நீ போய், அவைகளை என்னிடத்தில் கொண்டுவா என்றாள்.” யாக்கோபு தன் தாயின் நேசத்தை பெற்றான். ஈசாக்கு வயதான போது குடும்பத்தின் ஆசீர்வாதத்தை மூத்த குமாரனுக்கு வழங்கும் நேரம் வந்த போது, ரெபெக்காள் தன் இளைய குமாரனுக்கு அந்த ஆசீர்வாதம் கிடைக்க வேண்டுமென்று எண்ணுகிறாள். ஆண்டவர் வாக்குத்தத்தம் பண்ணிய பிள்ளையை பெற்றுக்கொள்ள சாராள் அவசரப்பட்டு ஆகாரை… Continue reading இதழ் 1017 பிள்ளைகளை வளர்ப்பதில் தவறிய ஒரு தேவனை அறிந்த குடும்பம்!
இதழ்: 1016 பிள்ளைகளால் மன நோவா? யார் காரணம்?
ஆதி: 26 :27 “ஏசா நாற்பது வயதானபோது, ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும் ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும், விவாகம் பண்ணினான். அவர்கள் ஈசாக்குக்கும், ரேபெக்காளுக்கும் மனநோவாயிருந்தார்கள்.” ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று சொல்லுவார்கள் அல்லவா? அதற்கு சிறு பிராயத்தில் நாம் எப்படி வளர்க்கப்படுகிறோமோ அப்படித்தான் நாம் முதிர்வயதில் இருப்போம் என்றுதானே அர்த்தம்! சிறுவயதில் சரியான பாதையில் நடத்தி, பிள்ளைகளை உருவாக்குவது ஒரு தாயின் கடமையல்லவா? பல ஆசிரியர்கள் ஒரு மனிதன் உருவாவதற்கு காரணமாயிருந்தாலும், எல்லாரையும் விட… Continue reading இதழ்: 1016 பிள்ளைகளால் மன நோவா? யார் காரணம்?
