2 நாளாகமம் 20 :1 -3 இதற்குப்பின்பு மோவாப் புத்திரரும், அம்மோன் புத்திரரும் அவர்களோடே அம்மோனியருக்கு அப்புறத்திலுள்ள மனுஷருங்கூட யோசபாத்திற்கு விரோதமாய் யுத்தம் பண்ண வந்தார்கள். சிலர் வந்து யோசபாத்தை நோக்கி உமக்கு விரோதமாய் ஏராளமான ஜனங்கள் கடலுக்கு அக்கறையிலிருக்கிற சிரியாவிலிருந்து வருகிறார்கள்; இதோ அவர்கள் எங்கேதியாகிய ஆசாசோன் தாமாரில் இருக்கிறார்கள் என்று அறிவித்தார்கள். அப்பொழுது யோசபாத் பயந்து , கர்த்தரைத் தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான். இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து தான் 2… Continue reading இதழ்:1594 நமக்கு எதிராய் வரும் முப்படைகள்!
Category: The word of God
இதழ்:1593 ஜெபிக்கத் தேவையானது வல்லமை அல்ல! உறவுதான்!
யாக்கோபு 5 :17 ,18 எலியா என்பவன் நம்மை போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும் மழை பெய்யாதபடிக்கு கருத்தாய் ஜெபம் பண்ணினான், அப்பொழுது மூன்று வருடமும் ஆறு மாதமும் பூமியின் மேல் மழை பெய்யவில்லை .மறுபடியும் ஜெபம் பண்ணினான் அப்பொழுது வானம் மழையை பொழிந்தது, பூமி தன் பலனைத்தந்தது. கிறிஸ்துவுக்கு பின்னால் 48வது வருடம் கழித்து யாக்கோபு இந்த ஐந்தாவது அதிகாரத்தை எழுதும் பொழுது , அந்தக் காலத்தின் இளம் திருச்சபையாருக்கு , நடைமுறை கிறிஸ்தவ வாழ்க்கையைக் குறித்து ஒரு… Continue reading இதழ்:1593 ஜெபிக்கத் தேவையானது வல்லமை அல்ல! உறவுதான்!
இதழ்:1592 சர்வ வல்லவரின் கரத்தில் உள்ள மண்பாண்டங்கள்!
யாக்கோபு 5:17 எலியா என்பவன் நம்மைப் போலப் பாடுள்ள மனுஷனாயிருந்தும்.... எலியாவைப்பற்றி படிக்க ஆரம்பிக்கிறோம். நான் படித்து எழுத மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேதப்பகுதி இது. இன்றைய வேதாகமப்பகுதி எலியாவைப் பற்றி நம்மைப்போல சாதாரணமான, பாடுகளுள்ள மனிதன் என்று பார்க்கிறோம். இந்த சாதாரணத்துவமே தேவன் எலியாவைத் தெரிந்து கொண்டதன் காரணமாயிருக்குமோ என்று நான் நினைப்பதுண்டு. வேதாகம வல்லுநர் மாத்யூ ஹென்ரி இதைப் பற்றி விளக்கும்போது, நாம் பூமியின் மண்ணினால் உருவாக்கப்பட்டோம். வெறுமையிலிருந்து உலகத்தை உருவாக்கிய அதே தேவன்,… Continue reading இதழ்:1592 சர்வ வல்லவரின் கரத்தில் உள்ள மண்பாண்டங்கள்!
இதழ்:1591 காலத்தால் அழிக்க முடியாத வார்த்தைகள்!
1 இராஜாக்கள் 16 :34 அவன் நாட்களில் பெத்தேல் ஊரானாகிய ஈயேல் எரிகோவைக் கட்டினான், கர்த்தர் நூனின் குமாரனாகிய யோசுவாவைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது, அபிராம் என்னும் தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது செகூப் என்னும் தன் இளையகுமாரனையும் சாகக் கொடுத்தான். நான் இன்று எலியாவை பற்றி எழுத ஆரம்பிக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் இந்த அதிகாரத்தை விட்டு வெளியேறு முன்னர் தேவனாகிய கர்த்தர் ஒரு அருமையான சத்தியத்தை வெளிப்படுத்தினார்.… Continue reading இதழ்:1591 காலத்தால் அழிக்க முடியாத வார்த்தைகள்!
இதழ்:1590 யெகோவா-யீரே நம் தேவைகளை சந்திப்பார்!
ஆதியாகமம் 22 :14 ஆபிரகாம் அந்த இடத்துக்கு யகோவாயீரே என்று பெயரிட்டான் அதனாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக் கொள்ளப்படும் என்று இந்நாள் வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வருடமாக நான் எழுத ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு வேதபகுதிக்கு வந்திருக்கிறோம். நாம் 1 இராஜாக்கள் , 2 இராஜாக்கள் புத்தகங்களைப் படிக்கும் பொழுது தேவனாகிய கர்த்தருடைய பிள்ளைகள் எவ்வாறு கீழ்ப்படியாமல் போனார்கள் என்பதைப் பார்த்தோம். அப்படிப்பட்டதொரு இருண்ட நாட்களில், பழிவாங்குதலும், விக்கிரக ஆரதனையும் தலைவிரித்து ஆடிக்… Continue reading இதழ்:1590 யெகோவா-யீரே நம் தேவைகளை சந்திப்பார்!
இதழ்:1589 நான் ஜெயித்ததால் உங்களுக்கும் ஜெயம் உண்டு!
1 ராஜாக்கள் 16 :25 உம்ரி கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்து தனக்கு முன்னிருந்த எல்லாரைப் பார்க்கிலும் கேடாய் நடந்து, ஒவ்வொரு நாளும் உலகத்தில் நடப்பவைகளை பார்க்கும் போதும், கேள்விப்படும் பொழுதும், செய்தித்தாள்களில் வாசிக்கும் போதும், என் மனதில் விழும் கேள்வி , இன்னும் எவ்வளவு தூரம்தான் இந்த உலகம் கீழ்நோக்கி செல்லும் என்பதுதான். இஸ்ரவேலை ஆண்ட ராஜாக்கள் ஒவ்வொருவராக 'ஒரு நன்மையும் இல்லை ' என்ற முத்திரையைப் பதித்த பின், ராஜாவாகிய உம்ரி பதவி ஏற்கிறான். அவன் தனக்கு… Continue reading இதழ்:1589 நான் ஜெயித்ததால் உங்களுக்கும் ஜெயம் உண்டு!
இதழ்: 1588 உன்னுடைய வார்த்தைகள் அல்ல! வாழ்க்கை பேசட்டும்!
1 ராஜாக்கள் 15:11 ஆசா தன் தகப்பனாகிய தாவீதை போல கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்தான். இன்று நாம் மறுபடியும் 1 ராஜாக்களின் புத்தகத்தைத் தொடரப் போகிறோம். இன்றைய வேதாகமப் பகுதி ஒரு இருண்ட வேளையில் வீசும் ஒளிக்கதிர் போல உள்ளது. ஒவ்வொரு ராஜாக்களும் தேவனை பின்பற்றத் தவறிக் கொண்டிருந்த வேளையில் இந்த ஒரு மனிதன் தாவீதைப் போல கர்த்தருடைய பார்வைக்கு செம்மையானத செய்தான் என்று பார்க்கிறோம். தேவனை அறியாத, மற்றும் கர்த்தருக்கு கீழ்ப்படியாத மக்கள் வாழும் ஒரு… Continue reading இதழ்: 1588 உன்னுடைய வார்த்தைகள் அல்ல! வாழ்க்கை பேசட்டும்!
இதழ்:1587 A VERY BLESSED NEW YEAR 2023!
எனது அன்பான சகோதர சகோதரிகளே! உலகத்தின் பல்வேறு நாடுகளிலிருந்து என்னுடைய ராஜாவின் மலர்கள் தோட்டத்துக்கு வருகை தரும் உங்கள் யாவருக்கும் நம்முடைய இரட்சகராகிய இயேசுவின் நாமத்தில் புத்தாண்டு வாழ்த்துக்கள்! ராஜாவின் மலர்களை வாசிப்போர் 60 க்கும் மேற்ப்பட்ட நாடுகளிலிருந்து இந்த இணைய தளத்திற்கு வருகை தருவதைப் பார்த்து ஆச்சரியமடைந்து என் தேவனை ஸ்தோத்தரித்தேன். அது போக 650 பேர் இதை தினமும் உங்களது ஈமெயில் மூலம் பெற்றுக் கொள்கிறீர்கள். அநேகர் இதை தினமும் வாட்ஸ்அப் மூலம் உங்கள்… Continue reading இதழ்:1587 A VERY BLESSED NEW YEAR 2023!
இதழ்:1586 தேவனே நம் உள்ளிந்திரியங்களை ஆராய்ந்து அறிபவர்!
யோசுவா: 7:21 ”கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும், நான் கண்டு அவைகளை இச்சித்து, எடுத்துக்கொண்டேன். இதோ அவைகள் என் கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைந்திருக்கிறது. பலநாட்களாக நாம் ஆகானைப்பற்றி படித்துக்கொண்டிருக்கிறோம். இஸ்ரவேலின் சேனையில் ஒரு போர்வீரனாக, தேவனாகிய கர்த்தரின் சித்தப்படி எரிகோவை அழிக்கப் புறப்பட்ட இந்த வீரன், பொருளாசை என்ற சலனத்துக்கு சற்று இடம் கொடுத்ததால், அவன் நோக்கம் தடுமாறி, கண்களால் கண்ட பொருட்களை இச்சித்து, தனக்கு… Continue reading இதழ்:1586 தேவனே நம் உள்ளிந்திரியங்களை ஆராய்ந்து அறிபவர்!
இதழ்: 1585 தேவனே நம் பயங்களை நீக்குபவர்!
நியா: 4 : 8, 9 அதற்கு பாராக்; நீ என்னோடேகூட வந்தால் போவேன்; என்னோடே கூட வராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான். அதற்கு அவள்; நான் உன்னோடே நிச்சயமாக வருவேன்….என்று சொல்லி, தெபோராள் எழும்பி, பாராக்கோடே கூடக் கேதேசுக்குப் போனாள். சென்னையில் கடற்கரை சென்று விட்டாலே , துறைமுகத்தை நோக்கி வரும் கப்பல்களைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிரியமானக் காரியம். கப்பல்கள் துறைமுகத்தை அடைந்துவிட்டால் அவை பத்திரமாக ஆபத்து இல்லாத இடத்துக்கு வந்துவிட்டன என்ற திருப்தி எனக்கு.… Continue reading இதழ்: 1585 தேவனே நம் பயங்களை நீக்குபவர்!
