வாதையை நிறுத்திய ஜெபம்! 2 சாமு: 24:25 “அங்கே தாவீது கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும், சமாதான பலிகளையும் செலுத்தினான். அப்பொழுது கர்த்தர் தேசத்துக்காக செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார்; இஸ்ரவேலின் மேலிருந்த அந்த வாதை நிறுத்தப்பட்டது.” ஒவ்வொரு சனிக்கிழமையும் நாம் தேவனுடைய சமுகத்தில் நம் ஜெப வேண்டுதல்களோடு வருகிற நாள். இன்றைய வேத வசனத்தில், தாவீது செய்த ஜெபத்துக்கு தேவன் பதிலளித்து இஸ்ரவேலின் மேலிருந்த வாதையை நீக்கிப்போட்டார் என்று வாசிக்கிறோம். அன்பின் தேவனுடைய பிள்ளைகளே இன்று… Continue reading ஜெபமே ஜெயம்!
Category: Thought for today
இதழ்: 1009 பின் நோக்கேன் நான்! பின் நோக்கேன் நான்!
ஆதி:19: 26 அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து உப்புத்தூண் ஆனாள். லோத்தின் குடும்பம் சோதோமை நோக்கி கூடாரம் போட்டனர், பின்னர் சோதோமுக்குள்ளேயே குடியேறினர் என்று நேற்று பார்த்தோம். லோத்தின் குடும்பத்தை உலகப்பிரகாரமான ஆசைகள் பிணைத்திருந்ததால் அவர்கள் ரோமர்: 12:2 ல் கூறப்பட்டுள்ளது போல ‘இந்த பிரபஞ்சத்துக்குரிய வேஷம்’ தரித்து வாழ்ந்தனர்! ஆனால் அதன் விளைவு என்ன தெரியுமா? அவர்கள் சோதோமில் சம்பாதித்த அத்தனையும் கரியாகிப் போயிற்று. தேவன் அந்தப் பட்டணங்களையும், சமபூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின் எல்லா குடிகளையும்,… Continue reading இதழ்: 1009 பின் நோக்கேன் நான்! பின் நோக்கேன் நான்!
இதழ்:1008 சிற்றின்பங்கள் என்னும் சேற்றில் ஒரு கால்!
ஆதி: 19: 1 அந்த இரண்டு தூதரும்சாயங்காலத்திலே சோதோமுக்கு வந்தார்கள். லோத்து சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தான். இரக்கமும் கிருபையுமுள்ள தேவனாகிய கர்த்தர் நம்மை இந்தப் புதிய மாதத்தை காணச் செய்த தயவுக்காக அவரை ஸ்தோத்தரிப்போம். அவர் தமது கிருபையினால் இந்த மாதம் முழுவதும் நம்மோடிருந்து காத்து வழி நடத்தும்படியாய் ஒரு நிமிடம் நம்மைத் தாழ்த்தி அவரிடம் ஒப்புவிப்போம்! லோத்துவின் குடும்பத்தை எகிப்தின் ஆடம்பரம், ஆஸ்தி , பட்டண வாழ்க்கை, சுகபோகம் என்ற பல ஆசைகள் கட்டியிருந்தன. அதனால்… Continue reading இதழ்:1008 சிற்றின்பங்கள் என்னும் சேற்றில் ஒரு கால்!
இதழ்: 1007 அழிவை நோக்கி இழுத்துச் செல்லும் வாழ்க்கை!
ஆதி: 18:16 பின்பு அந்தப் புருஷர் எழுந்து அவ்விடம் விட்டு சோதோமை நோக்கிப் போனார்கள். ஆபிரகாமும் அவர்களோடே கூடப்போய் வழிவிட்டனுப்பினான். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தம்மால் ஆகாதது ஒன்றுமில்லையென்று வயது முதிர்ந்த ஆபிரகாமுக்கும், சாராளுக்கும் உறுதியளித்த பின், சோதோமை நோக்கி சென்றார். அவரோடு வந்த தூதர்கள் சற்று முன்னே செல்ல, கர்த்தர் தம்மை வழியனுப்ப வந்த ஆபிரகாமோடு தான் செய்யப் போகிற காரியங்களைப் பகிர்ந்து கொள்கிறார். ஆபிரகாமை தேவன் அறிந்ததால் அவனுக்கு தாம் சோதோமுக்கு செய்யப்போகிற காரியங்களை… Continue reading இதழ்: 1007 அழிவை நோக்கி இழுத்துச் செல்லும் வாழ்க்கை!
இதழ்:1006 ஆகாதது ஒன்றுண்டோ?
ஆதி: 18:13,14 அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: சாராள் நகைத்து நான் கிழவியாயிருக்க பிள்ளை பெறுவது மெய்யோ என்று சொல்வானேன்? கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? ஆபிரகாம் விருந்தினரை உபசரித்ததை பற்றி நேற்று பார்த்தோம். வாசலில் நின்ற மூன்று புருஷரையும் வருந்தியழைத்து, விருந்தளித்த பின்னர், சாராள் மற்ற வேலைகளைப் பார்க்க கூடாரத்துக்குள் திரும்பினாள். ஆபிரகாம் விருந்தாளிகளோடு மரத்துக்கடியில் நின்று கொண்டிருந்தான். சாராள் உள்ளே வேலை செய்து கொண்டிருந்தாலும், அவள் காது வந்தவர்கள் என்ன பேசுகிறார்கள்? அவர்கள் யார்?… Continue reading இதழ்:1006 ஆகாதது ஒன்றுண்டோ?
இதழ் 1005 இன்று யார் விருந்துக்கு வருகிறார்கள்?
ஆதி: 18: 1-2, ....அவன் பகலிலே உஷ்ணவேளையில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது இதோ மூன்று புருஷர் அவனுக்கு எதிரே நின்றார்கள்... காலத்தின் சக்கரங்கள் வேகமாய் உருண்டு ஒடின! ஆகார் வனாந்திரத்திலிருந்து திரும்பி வந்து இஸ்மவேலைப் பெற்ற பின் பதின்மூன்று வருடங்கள் கழிந்து விட்டன! இப்பொழுது ஆபிராமுக்கு வயது 99. (ஆதி: 17:5) கர்த்தர் ஆபிராமுக்கு தரிசனமாகி, “இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால் ,… Continue reading இதழ் 1005 இன்று யார் விருந்துக்கு வருகிறார்கள்?
ஜெபமே ஜெயம்!
தேவ தூதன் மூலமாய் பதிலை வரவழைத்த ஜெபம்! தானியேல்: 9: 21 – 23 அப்படி நான் ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கும்போதே, முதல் தரிசனத்திலே நான் கண்ட புருஷனாகிய காபிரியேல், வேகமாய்ப் பறந்து வந்து, அந்திப்பலியின் நேரமாகிய வேளையிலே என்னைத் தொட்டான்………… ஆதலால் நீ வேண்டிக் கொள்ளத் தொடங்கின போதே கட்டளை வெளிப்பட்டது, நான் அதை அறிவிக்க வந்தேன்…..” தானியேல் ஒரு சாதாரண மனிதன் தான். அவன் ஜெபித்துக் கொண்டிருந்த போது தேவன் அந்த ஜெபத்துக்கு… Continue reading ஜெபமே ஜெயம்!
இதழ்: 1004 ஒரு மெழுகுவர்த்தியைப் போலவாவது பிரகாசிக்கக் கூடாதா?
ஆதி: 16:13 அப்பொழுது அவள்எ: ன்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பேரிட்டாள். கர்த்தருக்கு கீழ்ப்படிந்து , அவருக்கு காத்திராமல், அவசரமாக எடுத்த முடிவால் தங்களுடைய உள்ளத்திலும், இல்லத்திலும் நிம்மதியை இழந்து தவித்தனர் ஆபிராம், சாராய் தம்பதியினர் என்று பார்த்தோம். இவர்கள் நிம்மதியிழக்கக் காரணமான ஆகாரைப் பற்றி சிறிது சிந்திப்போம் இன்று. இந்த ஆகார் யார்?, இவள் பெயருக்கு அர்த்தம் என்ன?… Continue reading இதழ்: 1004 ஒரு மெழுகுவர்த்தியைப் போலவாவது பிரகாசிக்கக் கூடாதா?
இதழ்: 1003 காற்றில் பறந்து விட்ட சாட்சி!
ஆதி: 16:5 அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி: எனக்கு நேரிட்ட அநியாயம் உமதுமேல் சுமரும்…… கர்த்தர் எனக்கும், உமக்கும் நடுநின்று நியாயம் தீர்ப்பாராக என்றாள். மனைவியை திருப்தி படுத்துவதாக எண்ணி , தேவன் வாக்குத்தத்தம் பண்ணின குழந்தையை பெற்று கொள்ளும் முயற்சியில் , சாராயுடைய திட்டத்தின் படி ஆகாரோடு இணைந்தான் ஆபிராம் என்று நாம் பார்த்தோம். இதனால் விளைந்தது என்ன? சாராய் நினைத்தது ஓன்று , ஆனால் நடந்தது வேறு! ஆதி:16: 4 கூறுகிறது, “… Continue reading இதழ்: 1003 காற்றில் பறந்து விட்ட சாட்சி!
இதழ்: 1002 நம்மை சிக்கவைக்கும் ஒரு வலை!
ஆதி 16:4 அவன் ஆகாரோடே சேர்ந்தபோது, அவள் கர்ப்பந்தரித்தாள். அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் நாச்சியாரை அற்பமாய் எண்ணினாள். நேற்று நாம் சாராய் தீட்டிய திட்டத்தைப் பற்றியும், அதை அவள் தன் கணவனிடம் கூறும்போது, தேவன் மேல் போட்ட பழியைப் பற்றியும் பார்த்தோம். கர்த்தர் ,ஆதாமையும், ஏவாளையும் உருவாக்கி, ஒருவன் தன் தகப்பனையும், தாயையும் விட்டு தன் மனைவியோடு இசைந்திருப்பான் ( ஆதி 2:24) என்ற கட்டளையை மனித குலத்துக்கு கொடுத்ததை ஒரு கணம் நினைவு கூர்ந்திருந்தால்… Continue reading இதழ்: 1002 நம்மை சிக்கவைக்கும் ஒரு வலை!
