1 சாமுவேல் 11: 26,27 தன் புருஷனாகிய உரியா செத்தான் என்று அவன் மனைவி கேள்விப்பட்டபோது, அவள்தன் நாயகனுக்காக இழவு கொண்டாடினாள். துக்க நாள் சென்றபின்பு, தாவீது அவளை அழைத்தனுப்பி, தன் வீட்டிலே சேர்த்துக் கொண்டான். அவள் அவனுக்கு மனைவியாகி ஒரு குமாரனைப் பெற்றாள். கற்பு என்பது நமக்கும் அழகு! நம்முடைய ஆத்துமத்துக்கும் அழகு! பாவத்துக்கு பயந்து வாழும் வாழ்க்கையை விட கற்புடன் வாழ்வதை நேசித்தால் நலம்! இதை வாசிக்கும் போது இன்றைய வேதாகமப்பகுதியில் இருந்து என்ன… Continue reading இதழ்:2174 ஐயோ! எங்கேயோ கரிந்த வாடை வருகிறதே!!!
Category: To the Tamil Christian community
இதழ்:2172 ஒருவரை பழிவாங்க எண்ணி எத்தனை பேரை துன்புறுத்துகிறோம்?
2 சாமுவேல் 11: 18 - 21 அப்பொழுது யோவாப் அந்த யுத்தத்தின் செய்திகளையெல்லாம் தாவீதுக்கு அறிவிக்க ஆள் அனுப்பி ...... நீங்கள் அலங்கத்திற்கு இத்தனை கிட்டப்போனது என்ன என்று உன்னோடே சொன்னால் உரியா என்னும் ஏத்தியனும் செத்தான் என்று சொல் என்றான். தாவீது, பத்சேபாள், உரியா என்னும் முக்கோணத்தில் கவனிக்கப்படாமல் போகும் பகுதி இன்றைய வேதபகுதி என்று நினைக்கிறேன். இந்த வசனங்கள் நமக்கு இஸ்ரவேல் அம்மோனியரோடு செய்த யுத்தத்தை விளக்குகிறது. இதுவரை இஸ்ரவேலின் சேவகர் நன்றாகத்தான்… Continue reading இதழ்:2172 ஒருவரை பழிவாங்க எண்ணி எத்தனை பேரை துன்புறுத்துகிறோம்?
இதழ்:2170 கண்ணீர் யாவையும் துடைப்பார்!
2 சாமுவேல்: 11: 17 பட்டணத்து மனுஷர் புறபட்டு வந்து யோவாப்போடே யுத்தம்பண்ணுகையில், தாவீதின் சேவகராகிய ஜனத்தில் சிலர் பட்டார்கள். ஏத்தியனாகிய உரியாவும் செத்தான். இமாலய மலையில் மலையில் அமைந்துள்ள தரம்சாலா என்ற பட்டணத்துக்கு சென்றபோது உய்ரமான ஒரு மலைக்கு சென்றோம். ஒருபக்கத்தில் அழகிய லேக் இருக்கும் அந்த மலையின் அடுத்தபகுதி கண்கொள்ளாத பள்ளத்தாக்கு. மேலிருந்து பார்க்கும்போது ஆங்காங்கே காணப்பட்ட வீடுகள் பொம்மை வீடுகள் போல இருந்தன. அங்கே தென்பட்ட ஒரு நீர்வீழ்ச்சி ஏதோ வெள்ளைக் கோடு… Continue reading இதழ்:2170 கண்ணீர் யாவையும் துடைப்பார்!
இதழ்:2169 அக்கினிக்குள் தள்ளப்பட்டம் வாழ்க்கை!
2 சாமுவேல்: 11:15 அந்த நிருபத்திலே: மும்முரமாய் நடக்கிற போர்முகத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு அவனைவிட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதியிருந்தான். இந்த வருடத்தின் கடைசி மாதத்தைக் காணச் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்! தேவனுடைய குமாரன் இந்த மண்ணுலகில் மானிடனாய் வந்த நாளை நாம் நினைவு கூறும் மாதம்! மகிழ்ச்சியும் சமாதானமும் நம்மை வந்தடைய தேவன் நமக்கு கிருபை செய்வாராக! எனக்கு மிகப்பிடித்த ஒரு ஆங்கில மாத இதழ் உண்டு. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு… Continue reading இதழ்:2169 அக்கினிக்குள் தள்ளப்பட்டம் வாழ்க்கை!
இதழ்:2168 ஜாக்கிரதை! கீழே விழுந்து விடாதீர்கள்!
2 சாமுவேல்: 11:15 அந்த நிருபத்திலே: மும்முரமாய் நடக்கிற போர்முகத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு அவனைவிட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதியிருந்தான். தாவீதின் நகரமாகிய எருசலேமில் சூரியன் அஸ்தமித்துவிட்டது! ராஜாவாகிய தாவீது தன்னுடைய படுக்கை அறையில் தூக்கமில்லாமல் புரளுகிறான். அவன் மனது படபடத்தது. அவன் பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறான். அதிலிருந்து எப்படி வெளியே வருவது என்றேத் தெரியவில்லை. அவன் எல்லாமே சுலபமாக முடிந்துவிடும் என்று தவறாக எண்ணி தன்னை இச்சைக்குட்படுத்தி விட்டான். இப்பொழுது… Continue reading இதழ்:2168 ஜாக்கிரதை! கீழே விழுந்து விடாதீர்கள்!
இதழ்:2167 சோதனை என்ற தடைகளைத் தாண்டும் விசுவாசம்!
2 சாமுவேல் 11:11 உரியா தாவீதை நோக்கி: பெட்டியும், இஸ்ரவேலும், யூதாவும் கூடாரங்களிலே தங்கி, என் ஆண்டவனாகிய யோவாபும், என் ஆண்டவனின் சேவகரும் வெளியே பாளயமிறங்கியிருக்கையில் நான் புசிக்கிறதற்கும், குடிக்கிறதற்கும் என் மனைவியோடே சயனிக்கிறதற்கும் என் வீட்டிற்குள் பிரவேசிப்பேனா? நான் அப்படி செய்கிறதில்லை என்று உம்முடைய பேரிலும், உம்முடைய ஆத்துமாவின் பேரிலும் ஆணையிட்டுச் சொல்கிறேன் என்றான். இன்றைய வேதாகம வசனத்தில் பார்க்கும் சம்பவத்தில் உரியா ராஜாவகிய தாவீதுக்கு முன்னால் நின்றது என் கற்பனையில் வந்தது. நான் அவ்விடத்தில்… Continue reading இதழ்:2167 சோதனை என்ற தடைகளைத் தாண்டும் விசுவாசம்!
இதழ்:2166 பிரிவினை என்ற சுவர் இன்றி சேவை செய்!
2 சாமுவேல் 11: 11 ..... பெட்டியும், இஸ்ரவேலும், யூதாவும் கூடாரங்களிலே தங்கி, என் ஆண்டவனாகிய யோவாபும், என் ஆண்டவனின் சேவகரும் வெளியிலே பாளயமிறங்கியிருக்கையில்.....நான் அப்படி செய்கிறதில்லை என்று உம்முடைய பேரிலும், உம்முடைய ஆத்துமாவின் பேரிலும் ஆணையிட்டுச் சொல்கிறேன் நாம் ஒவ்வொருவரும் ஒரு நோக்கத்தோடு வாழத்தானே ஆசைப்படுகிறோம்? சிலருக்கு வாழ்வில் உயருவதே நோக்கம், சிலருக்கு பிள்ளைகளைக் குறித்த நோக்கம். என் வாழ்க்கையில் நோக்கமே இல்லை, நான் எதையும் பற்றிக் கவலைப்படாமல் எனக்காகவே வாழ்கிறேன் என்று சொல்பவரை நான் இதுவரைப்… Continue reading இதழ்:2166 பிரிவினை என்ற சுவர் இன்றி சேவை செய்!
இதழ்:2165 கர்த்தரைத் தன் வெளிச்சமாய்க் கொண்ட ஒருவன்!
2 சாமுவேல் 11:11 உரியா தாவீதை நோக்கி: பெட்டியும், இஸ்ரவேலும், யூதாவும் கூடாரங்களிலே தங்கி, என் ஆண்டவனாகிய யோவாபும், என் ஆண்டவனின் சேவகரும் வெளியே பாளயமிறங்கியிருக்கையில் நான் புசிக்கிறதற்கும், குடிக்கிறதற்கும் என் மனைவியோடே சயனிக்கிறதற்கும் என் வீட்டிற்குள் பிரவேசிப்பேனா? நான் அப்படி செய்கிறதில்லை என்று உம்முடைய பேரிலும், உம்முடைய ஆத்துமாவின் பேரிலும் ஆணையிட்டுச் சொல்கிறேன் என்றான். தாவீதைப் பற்றியே படித்துக் கொண்டிருக்கும் நாம் உரியாவைப் பற்றி ஏன் சற்று படிக்கக்கூடாது என்று நினைத்து ஆரம்பித்தேன். ஆனால் உரியா… Continue reading இதழ்:2165 கர்த்தரைத் தன் வெளிச்சமாய்க் கொண்ட ஒருவன்!
இதழ்:2164 தனிமையில் நீ வாழும் வாழ்க்கை!
2 சாமுவேல் 11:14 காலமே தாவீது யோவாபுக்கு ஒரு நிருபத்தை எழுதி உரியாவின் கையில் கொடுத்து அனுப்பினான். இன்றைய வேதாகமப்பகுதியைத் தொடர உதவிசெய்த கர்த்தரை மனமாரத் துதிக்கிறேன். தொடர்ந்து ஒவ்வொருநாளும் இந்த வேதாகம தியானத்தை வாசிக்கும் உலகத்தின் பல பாகங்களில் வாழும் என்னுடைய வாசகர்களுக்கு மனமார்ந்த நன்றி! ஒரு டெலிவிஷன் ஷோ பார்த்துக்கொண்டிருந்தேன். அது ஒரு அறிவுப்பரீட்சை. அதில் என்ன விசேஷம் என்றால் அந்த பரீட்சையில் வரப்போகும் கேள்விகளுக்கு பதில் எழுதப்பட்ட ஒரு கவர் அவர்கள் ஒவ்வொருவர்… Continue reading இதழ்:2164 தனிமையில் நீ வாழும் வாழ்க்கை!
இதழ்:2163 இன்று எங்களை தீமையினின்று இரட்சியும்!
2 சாமுவேல் 11: 12, 13 அப்பொழுது தாவீது உரியாவை நோக்கி; இன்றைக்கும் நீ இங்கேயிரு. நாளைக்கு உன்னை அனுப்பிவிடுவேன் என்றான்..... தாவீது அவனைத் தனக்கு முன்பாகப் புசித்துக் குடிக்கிறதற்கு அழைத்து, அவனை வெறிக்கப்பண்ணினான்.ஆனாலும் அவன் தன் வீட்டுக்குப் போகாமல் சாயங்காலத்திலே தன் ஆண்டவனின் சேவகரோடே தன் படுக்கையிலே படுத்துக்கொண்டான். தாவீது தந்திரமான மயக்கும் வார்த்தைகளாலும், ருசியான பதார்த்தங்களாலும் உரியாவை மயக்கி அவனுடைய வீட்டுக்கு அனுப்பும் முயற்சியில் தவறிப்போனான். அதனால் இப்பொழுது புதிய முயற்சியில் ஈடுபடுகிறான். அவனைத்… Continue reading இதழ்:2163 இன்று எங்களை தீமையினின்று இரட்சியும்!
