ஆதி: 18: 1-2, ....அவன் பகலிலே உஷ்ணவேளையில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது இதோ மூன்று புருஷர் அவனுக்கு எதிரே நின்றார்கள்... காலத்தின் சக்கரங்கள் வேகமாய் உருண்டு ஒடின! ஆகார் வனாந்திரத்திலிருந்து திரும்பி வந்து இஸ்மவேலைப் பெற்ற பின் பதின்மூன்று வருடங்கள் கழிந்து விட்டன! இப்பொழுது ஆபிராமுக்கு வயது 99. (ஆதி: 17:5) கர்த்தர் ஆபிராமுக்கு தரிசனமாகி, “இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால் ,… Continue reading இதழ் 1005 இன்று யார் விருந்துக்கு வருகிறார்கள்?
ஜெபமே ஜெயம்!
தேவ தூதன் மூலமாய் பதிலை வரவழைத்த ஜெபம்! தானியேல்: 9: 21 – 23 அப்படி நான் ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கும்போதே, முதல் தரிசனத்திலே நான் கண்ட புருஷனாகிய காபிரியேல், வேகமாய்ப் பறந்து வந்து, அந்திப்பலியின் நேரமாகிய வேளையிலே என்னைத் தொட்டான்………… ஆதலால் நீ வேண்டிக் கொள்ளத் தொடங்கின போதே கட்டளை வெளிப்பட்டது, நான் அதை அறிவிக்க வந்தேன்…..” தானியேல் ஒரு சாதாரண மனிதன் தான். அவன் ஜெபித்துக் கொண்டிருந்த போது தேவன் அந்த ஜெபத்துக்கு… Continue reading ஜெபமே ஜெயம்!
இதழ்: 1004 ஒரு மெழுகுவர்த்தியைப் போலவாவது பிரகாசிக்கக் கூடாதா?
ஆதி: 16:13 அப்பொழுது அவள்எ: ன்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பேரிட்டாள். கர்த்தருக்கு கீழ்ப்படிந்து , அவருக்கு காத்திராமல், அவசரமாக எடுத்த முடிவால் தங்களுடைய உள்ளத்திலும், இல்லத்திலும் நிம்மதியை இழந்து தவித்தனர் ஆபிராம், சாராய் தம்பதியினர் என்று பார்த்தோம். இவர்கள் நிம்மதியிழக்கக் காரணமான ஆகாரைப் பற்றி சிறிது சிந்திப்போம் இன்று. இந்த ஆகார் யார்?, இவள் பெயருக்கு அர்த்தம் என்ன?… Continue reading இதழ்: 1004 ஒரு மெழுகுவர்த்தியைப் போலவாவது பிரகாசிக்கக் கூடாதா?
இதழ்: 1003 காற்றில் பறந்து விட்ட சாட்சி!
ஆதி: 16:5 அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி: எனக்கு நேரிட்ட அநியாயம் உமதுமேல் சுமரும்…… கர்த்தர் எனக்கும், உமக்கும் நடுநின்று நியாயம் தீர்ப்பாராக என்றாள். மனைவியை திருப்தி படுத்துவதாக எண்ணி , தேவன் வாக்குத்தத்தம் பண்ணின குழந்தையை பெற்று கொள்ளும் முயற்சியில் , சாராயுடைய திட்டத்தின் படி ஆகாரோடு இணைந்தான் ஆபிராம் என்று நாம் பார்த்தோம். இதனால் விளைந்தது என்ன? சாராய் நினைத்தது ஓன்று , ஆனால் நடந்தது வேறு! ஆதி:16: 4 கூறுகிறது, “… Continue reading இதழ்: 1003 காற்றில் பறந்து விட்ட சாட்சி!
இதழ்: 1002 நம்மை சிக்கவைக்கும் ஒரு வலை!
ஆதி 16:4 அவன் ஆகாரோடே சேர்ந்தபோது, அவள் கர்ப்பந்தரித்தாள். அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் நாச்சியாரை அற்பமாய் எண்ணினாள். நேற்று நாம் சாராய் தீட்டிய திட்டத்தைப் பற்றியும், அதை அவள் தன் கணவனிடம் கூறும்போது, தேவன் மேல் போட்ட பழியைப் பற்றியும் பார்த்தோம். கர்த்தர் ,ஆதாமையும், ஏவாளையும் உருவாக்கி, ஒருவன் தன் தகப்பனையும், தாயையும் விட்டு தன் மனைவியோடு இசைந்திருப்பான் ( ஆதி 2:24) என்ற கட்டளையை மனித குலத்துக்கு கொடுத்ததை ஒரு கணம் நினைவு கூர்ந்திருந்தால்… Continue reading இதழ்: 1002 நம்மை சிக்கவைக்கும் ஒரு வலை!
இதழ்: 1001 ஆகா என்ன ஆசை! என்ன திட்டம்!
ஆதி: 16:2 சாராய் ஆபிராமை நோக்கி: நான் பிள்ளை பெறாதபடி கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார் .... என்றாள். மிகுந்த ஆஸ்தியோடு எகிப்தைவிட்டு புறப்பட்டு கானானை நோக்கி சென்றார்கள் ஆபிராம், சாராய் தம்பதியினர் என்று பார்த்தோம். போகும் வழியில், எகிப்தின் சுகபோகத்தை அனுபவித்திருந்த, ஆபிராமின் சகோதரன் மகனாகிய லோத்து, எகிப்தை போல செழிப்பாயிருந்த சோதோமுக்கு அருகான சமபூமியை எடுத்துக் கொண்டான். பின்னர் லோத்து சோதோமுக்கு அருகாமையில் கூடாரம் போட்டான். அப்புறம் சோதோமிலேயே குடியேறிவிட்டான் என்று பார்க்கிறோம். எகிப்தின் சுகபோகமான… Continue reading இதழ்: 1001 ஆகா என்ன ஆசை! என்ன திட்டம்!
இதழ்: 1000 எகிப்தில் கிடைத்த வெகுமதிகள் தேவையா?
ஆதி 16:1 எகிப்து தேசத்தாளாகிய ஆகார் என்னும் பேர்கொண்ட ஓர் அடிமைப்பெண் அவளுக்கு ( சாராய்க்கு) இருந்தாள். தேவனுடைய சித்தத்துக்கு மாறாய் எகிப்துக்கு போய், தேவனை மகிமைப்படுத்தாமல், சொந்த முயற்சியில் பிரச்சனைகளை தீர்க்க, முயன்று, பேராபத்தில் சிக்கிய ஆபிராம், சாராய் தம்பதியினரை தேவன் தம் கிருபையால் தப்புவித்தார். இந்த சம்பவத்தை திரும்பிப் படிக்கும்போது ஒரு காரியம் கண்ணைப் பறிக்கிறது. சாராயின் அழகில் மயங்கிய பார்வோன் அவளுக்கும், ஆபிராமுக்கும்,பரிசாக ஆடு மாடுகளும், கழுதைகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும், கோளிகைக் கழுதைகளும்,… Continue reading இதழ்: 1000 எகிப்தில் கிடைத்த வெகுமதிகள் தேவையா?
ஜெபமே ஜெயம்!
நம்முடைய ஜெபம் தேவனைக் கிரியை செய்ய வைக்கும்! “ எலியா என்பவன் நம்மைப் போல பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழை பெய்யாதப்படிக்கு கருத்தாய் ஜெபம் பண்ணினான், அப்பொழுது மூன்று வருஷமும், ஆறு மாதமும் பூமியின் மேல் மழை பெய்யவில்லை. மறுபடியும் ஜெபம் பண்ணினான் அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது பூமி தன் பலனைத் தந்தது. (யாக்கோபு: 5: 17,18) நம்மைப் போல தினசரி பாடுள்ள சாதாரண ஒரு மனிதனின் ஜெபத்துக்கு கர்த்தரை கிரியை செய்ய வைக்க வல்லமையுண்டு… Continue reading ஜெபமே ஜெயம்!
இதழ்: 999 வெள்ளைப் பொய்யா? சொல்லலாமா?
நீதி:12:19 சத்திய உதடுகள் என்றும் நிலைத்திருக்கும்: பொய்நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும். ஆபிராமும், சாராயும் தேவனால் அழைக்கப்பட்டார்கள், வழி நடத்தப்பட்டார்கள், ஆனால் போகும் வழியில், பஞ்சம் என்ற தடை வந்தவுடன் அவர்கள் வாழ்க்கை என்னும் பயணத்தை கானானை நோக்கி தொடராமல், எகிப்தை நோக்கி தொடர்ந்தனர். ஆபிராம் அழைக்கப் பட்டது கானானுக்குள் பிரவேசிக்கத்தான்! தங்களுக்கு இருந்த அத்தனை சொத்து சுகங்களை விட்டு விட்டுத்தான் அந்தக் குடும்பம் புறப்பட்டனர். பஞ்சம் வந்தவுடன் யார் அவர்களை வழி நடத்துகிறார் என்று மறந்தே… Continue reading இதழ்: 999 வெள்ளைப் பொய்யா? சொல்லலாமா?
இதழ்: 998 திசை மாறிய வண்டியின் சக்கரங்கள்!
ஆதி: 12:10 அத்தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று. தேசத்திலே பஞ்சம் கொடியதாயிருந்தபடியால், ஆபிராம் எகிப்து தேசத்திலே தங்கும்படி அவ்விடத்துக்குப் போனான். ஆபிராம் சாராயுடைய குடும்ப வண்டியின் சக்கரம் வேகமாய் சுழன்றன! ஆபிராம் மோரே என்ற சமபூமிக்கு வந்த போது கர்த்தர் தரிசனமாகி ‘ உன் சந்ததிக்கு இந்த தேசத்தைக் கொடுப்பேன் ’ என்றார். ஆபிராம் அங்கிருந்து புறப்பட்டு தெற்கே பிரயாணம் பண்ணினான். புழுதியான பாதையில் வண்டியின் சக்கரங்கள் கானான் தேசத்தை நோக்கி வேகமாக சேற்று கொண்டிருக்கும்போது, அந்ததேசத்தில் பஞ்சம்… Continue reading இதழ்: 998 திசை மாறிய வண்டியின் சக்கரங்கள்!
