நியா: 8: 22 ” அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் கிதியோனை நோக்கி: நீர் எங்களை மீதியானியர் கைக்கு நீங்கலாக்கிவிட்டபடியினால் நீரும் உம்முடைய குமாரனும், உம்முடைய குமாரனின் குமாரனும், எங்களை ஆளக்கடவீர்கள் என்றார்கள்.” என்னுடைய கல்லூரி நாட்களில், எனக்கு சரித்திர கதைப்புத்தகங்கள் வாசிப்பது மிகவும் பிடிக்கும். அதிலும் விசேஷமாக நம்மை ஆண்ட மன்னர்களின் கதைகள் மேல் தான் பிரியம். போரில் வெற்றி பெற்ற வீரர்கள் பிடிக்கும். கைகளில் செங்கோல் ஏந்திய மன்னர்கள் பிடிக்கும். நான் மட்டுமல்ல! நம்மில் அநேகர் இவ்விதமாக,வெற்றிவாகை… Continue reading இதழ்: 904 உன்னிடம் யாருடைய ஆளுகை நடக்கிறது?
COME
It was a long and weary day for Elijah on Mt Carmel. And now, as the sun sets, Elijah had a message for Ahab. “And Elijah said unto Ahab, Get thee up, eat and drink; for there is a sound of abundance of rain. So Ahab went up to eat and to drink. And Elijah… Continue reading COME
இதழ்: 903 உன் பிள்ளை ஒரு பராக்கிரமசாலியாவான்!
நியா: 6: 12 “கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.” கர்த்தரின் சித்தத்தை நிறைவேற்றக் கர்த்தரால் உபயோகப்படுத்தப்பட்ட தெபோராள், பாராக், யாகேல் என்ற மூவரைப் பற்றி நாம் படித்தோம். தெபோராளின் வாழ்க்கையிலிருந்து அநேக காரியங்களைக் கற்றுக்கொண்டோம். ராஜாவின் மலர்களில் நாம் பெண்களைப்பற்றி மாத்திரம் படிப்பதில்லை, ஆபிரகாம், லோத்து, யாக்கோபு, மோசே போன்ற அநேக ஆண்களின் சரித்திரத்தையும் நாம் அலசிப்பார்த்திருக்கிறோம் அல்லவா! இப்பொழுது நியாதிபதிகள் 6 ம் அதிகாரத்தில் நாம் கிதியோனின் வாழ்க்கைக்கு கடந்து… Continue reading இதழ்: 903 உன் பிள்ளை ஒரு பராக்கிரமசாலியாவான்!
இதழ்: 902 என்னுடைய படகோ மிக சிறியது! ஆனாலும்!!!!
நியா: 4 : 8, 9 அதற்கு பாராக்; நீ என்னோடேகூட வந்தால் போவேன்; என்னோடே கூட வராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான். அதற்கு அவள்; நான் உன்னோடே நிச்சயமாக வருவேன்….என்று சொல்லி, தெபோராள் எழும்பி, பாராக்கோடே கூடக் கேதேசுக்குப் போனாள். சென்னையில், கடற்கரை சென்று விட்டாலே , துறைமுகத்தை நோக்கி வரும் கப்பல்களைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிரியமானக் காரியம். கப்பல்கள் துறைமுகத்தை அடைந்துவிட்டால் அவை பத்திரமாக ஆபத்து இல்லாத இடத்துக்கு வந்துவிட்டன என்ற திருப்தி எனக்கு.… Continue reading இதழ்: 902 என்னுடைய படகோ மிக சிறியது! ஆனாலும்!!!!
இதழ்: 901 மன உறுதியே வெற்றிக்குள் நடத்தும்!
நியா: 4:10 அப்பொழுது பாராக்; செபுலோன் மனுஷரையும், நப்தலி மனுஷரையும் கேதேசுக்கு வரவழைத்து, தன்னைப் பின்செல்லும் பதினாயிரம் பேரோடே போனான்; தெபோராளும் அவனோடேகூடப் போனாள். தனிப்பட்ட வாழ்க்கையில் சிறந்த தாலந்துகளை வெளிப்படுத்தும் கலைஞர்களை நான் வாயைப் பிளந்து பார்ப்பதுண்டு! எனக்கு எந்தக் கலையிலும் தாலந்து என்று சொல்லிக்கொள்ள எதுவுமே கிடையாது! ஆனால் சாலை ஒரங்களில் படம் வரைந்து பணம் வசூலிக்கும் கலைஞன் முதல், கல்லில் சிலை வடிக்கும் சிற்பக் கலைஞன் வரை, பல்வேறு கலைகளில் சிறந்து விளங்குபவர்கள்… Continue reading இதழ்: 901 மன உறுதியே வெற்றிக்குள் நடத்தும்!
இதழ்: 900 ஜாக்கிரதையாய் வேலை செய்தால் ராஜாவுக்கு சேவகம் செய்வாய்!
நியா: 4: 4 அக்காலத்திலே லபிதோத்தின் மனைவியாகிய தெபோராள் என்னும் தீர்க்கதரிசியானவள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தாள். என்னிடம் பாத்திரம் கழுவும் இயந்திரம் உள்ளது . மேலை நாடுகளில் வாழும் உங்களில் சிலருக்கு இது ஒன்றும் புதிதல்ல! இன்று காலையில், நல்ல சுடு தண்ணீரில் பாத்திரங்களை கழுவி உலர்த்திய, அந்த மெஷினிலிருந்து பள பளவென்று பாத்திரங்களை வெளியே எடுத்து அடுக்கும்போது என்னுடைய அம்மா ஞாபகம்தான் அதிகமாக வந்தது. அம்மா பள பளவென்று பாத்திரம் விளக்குவார்கள். கழுவிய பாத்திரங்களை துடைத்து… Continue reading இதழ்: 900 ஜாக்கிரதையாய் வேலை செய்தால் ராஜாவுக்கு சேவகம் செய்வாய்!
இதழ்: 899 சூரியனின் பிரகாசத்தைப் போல் இருப்பாய்!
நியா: 5: 31 “அவரில் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடே உதிக்கிற சூரியனைப்போல இருக்கக்கடவர்கள் என்று பாடினார்கள். பின்பு தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது.” ஆனைமலை என்றழைக்கப்படும் மலைப்பிரதேசத்தில் அமைந்துள்ள வால்பாறை என்ற பட்டணத்துக்கு நான் அடிக்கடி செல்வதுண்டு. மலையின் மேல் இருக்கும் நாட்களில் , சில்லென்று காற்று அடித்தாலும், சூரியனின் வெப்பத்தை சற்று அதிகமாகவே உணர முடியும். சூரியனுக்கு அருகாமையில் இருப்பதுபோல வெப்பம் கூர்மையாகத் தாக்கும். அதேவிதமாக ஒருமுறை வெப்பத்தின் கூர்மையை நான் சென்னையில் உணர்ந்தேன். என்னிடம் வேலை… Continue reading இதழ்: 899 சூரியனின் பிரகாசத்தைப் போல் இருப்பாய்!
LOOK UP AND LIVE!
There is a television awareness advertisement that comes often these days! Coronavirus like a spiked ball walks on the street ( music at the background) When everyone shuts the door it does not find anyone to attack. Suddenly a man appears on the road on his bike, Corona immediately climbs on his shoulder and goes… Continue reading LOOK UP AND LIVE!
இதழ்:898 கழுகுகளைப் போல ஏற்றம் பெறுவீர்கள்!
நியா: 5: 1 – 3 “அந்நாளிலே தெபோராளும் அபினோகாமின் குமாரன் பாராக்கும் பாடினதாவது: கர்த்தர் இஸ்ரவேலுக்காக நீதியை சரிக்கட்டினதினிமித்தமும், ஜனங்கள் மனப்பூர்வமாய்த் தங்களை ஒப்புக்கொடுத்ததினிமித்தமும் அவரை ஸ்தோத்தரியுங்கள். ராஜாக்களே கேளுங்கள்; அதிபதிகளே செவிகொடுங்கள்; நான் கர்த்தரைப் பாடி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைக் கீர்த்தனம் பண்ணுவேன்.” இன்றைக்கு நாம் நியாதிபதிகளின் புத்தகம் 5 வது அதிகாரத்தில் எழுதப்பட்டுள்ள, இந்த “தெபோராளின் ஜெபம்” என்றழைக்கப்படும் பகுதியின் மூன்று நாள் தியானத்தை ஆரம்பிக்கப் போகிறோம். இந்தப்பாடலின் மூலம் தேவனாகிய கர்த்தர் தம்… Continue reading இதழ்:898 கழுகுகளைப் போல ஏற்றம் பெறுவீர்கள்!
இதழ்: 897 நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்!
நியா: 4: 24 “இஸ்ரவேல் புத்திரரின் கை கானானியரின் ராஜாவாகிய யாபீனை நிர்மூலமாக்குமட்டும் அவன் மேல் பலத்துக் கொண்டேயிருந்தது.” இன்று காலை ஒரு கப் தேநீரை சூடுபண்ணி வைத்துவிட்டு , சற்று நேரம் ராஜாவின் மலர்களுக்காக டைப் செய்து கொண்டிருந்தேன். அருகில் வைத்த தேநீரை மறந்து விட்டேன். திடீரென்று ஞாபகம் வர, தேநீர் கப்பை எடுத்து வாயில் வைத்தேன்! அது வெதுவெதுப்பாகி ருசியற்று இருந்தது. “உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; ” (வெளி: 3:15… Continue reading இதழ்: 897 நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்!
