2 சாமுவேல் 13:5 அப்பொழுது யோனதாப் அவனைப்பார்த்து: நீ வியாதிக்காரனைப்போல உன் படுக்கையின்மேல் படுத்துக்கொள். உன்னைப் பார்க்கிறதற்கு உன் தகப்பனார் வரும்போது, நீ என் சகோதரியாகிய தாமார் வந்து, எனக்குப் போஜனம் கொடுத்து, அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு நான் பார்க்க என் கண்களுக்கு முன்பாக சமைக்கும்படி தயவு செய்யவேண்டும் என்று சொல் என்றான். இந்த உலகத்தின் எல்லா மூலைகளிலும் உண்மை காணாமல் போய் விட்டது என்பதை நாம் ஒவ்வொருநாளும் டிவியில் பார்க்கும் செய்திகள் காட்டுகின்றன அல்லவா? அப்பா!… Continue reading இதழ்: 769 மசாலா சேர்ந்த மாபெரும் நடிப்பு!
இதழ்: 768 பரிசுத்தமற்ற ஆசைகள்!
2 சாமுவேல் 13:4 அவன் இவனைப்பார்த்து, ராஜகுமாரனாகிய நீ நாளுக்கு நாள் எதினாலே இப்படி மெலிந்து போகிறாய், எனக்கு சொல்ல மாட்டாயா?என்றான். அதற்கு அம்னோன்: என் சகோதரன் அப்சலோமின் சகோதரியாகிய தாமாரின்மேல் நான் ஆசை வைத்திருக்கிறேன்என்றான். நாம் தொடர்ந்து படிக்கும் அம்னோன் தாமார் என்ற இருவரின் வாழ்க்கையில் இன்று தாவீதின் குமாரனாகிய அம்னோனின் வாயிலிருந்து புறப்பட்ட சுவாரஸ்யமான வார்த்தைகளைப் பார்க்கிறோம். அவனது நண்பனும் உறவினனுமான யோனதாப் வற்புறுத்தி கேட்டதால் அம்னோன் தன்னுடைய நோய்க்கு காரணம் தான் இதுவரை… Continue reading இதழ்: 768 பரிசுத்தமற்ற ஆசைகள்!
இதழ் 767 பெருமை தேவனுக்கே விரோதமானது!
2 சாமுவேல் 13:4 அவன் இவனைப்பார்த்து, ராஜகுமாரனாகிய நீ நாளுக்கு நாள் எதினாலே இப்படி மெலிந்து போகிறாய், எனக்கு சொல்ல மாட்டாயா?என்றான். அம்னோனின் உள்ளம் தன்னுடைய சகோதரியாகிய தாமார் மேல் காதல் கொண்டது. அது தேவனால் தடைபட்ட உறவு என்று அறிந்தும் அதை இச்சித்தான். அந்த இச்சையை அடைய அவனுடைய உறவினனும் நண்பனுமாகிய யோனதாப் அவனுக்கு உதவி செய்ய முன்வருகிறான். அந்த நண்பன் யோனதாபை வேதம் மகா தந்திரவாதி என்று கூறியதையும் பார்த்தோம். இன்று யோனதாப் தந்திரமாய்… Continue reading இதழ் 767 பெருமை தேவனுக்கே விரோதமானது!
இதழ் 766 நட்பு வாழ்க்கையையே மாற்றும்!
2 சாமுவேல் 13:3 அம்னோனுக்கு தாவீதுடைய தமையன் சிமியாவின் குமாரனாகிய யோனதாப் என்னும் பேருள்ள ஒரு சிநேகிதன் இருந்தான். அந்த யோனதாப் மகா தந்திரவாதி. நாம் இன்னும் ஒரு சில நாட்கள் படிக்கப்போகும் இந்த சம்பவம் தாமார் அவளுடைய சகோதரனால் கற்பழிக்கப்பட்ட சம்பவம். இது வேதத்தை சற்று படித்த எல்லோருமே அறிந்த ஒரு சம்பவம் தான். இந்த சம்பவம் தாவீதின் பிள்ளைகள் அத்தனைபேரையும் இதில் சம்பந்தப்படுத்தியது என்பதும் நமக்குத் தெரியும். ஆனால் இதை ஆழமாக படிக்கும்போதுதான் இந்த… Continue reading இதழ் 766 நட்பு வாழ்க்கையையே மாற்றும்!
இதழ் 765 ஷ் கவனம்! பிள்ளைகள் பார்க்கிறார்கள்!
2 சாமுவேல் 13:1,2 இதற்குப்பின்பு தாவீதின் குமாரனாகிய அப்சலோமுக்குத் தாமார் என்னும் பேருள்ள சவுந்தரியமுள்ள ஒரு சகோதரி இருந்தாள். அவள்மேல் தாவீதின் குமாரன் அம்னோன் மோகங் கொண்டான். தன் சகோதரியாகிய தாமாரின் நிமித்தம் ஏக்கங்கொண்டு வியாதிப்பட்டான். தாவீது இஸ்ரவேலுக்கும், யூதாவுக்கும் ராஜா. ஒரு பாடகன், இசைக்கருவி வாசிக்கும் கலைஞன், ஒரு மகா பெரிய யுத்த வீரன். மற்றும் காதலில் மன்னன் கூட! அவன் மனது விரும்பும் யாரையும் அடையத் தவற மாட்டான் - அரண்மனை நிறைந்திருந்த அவனுடைய… Continue reading இதழ் 765 ஷ் கவனம்! பிள்ளைகள் பார்க்கிறார்கள்!
இதழ் 764 ஒரு மா பெரும் அதிசயம்!
யோவான் 3:16 தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் அன்புகூர்ந்தார். தாவீதையும் பத்சேபாளையும் குறித்து அநேக வாரங்கள் படித்து விட்டோம். தாவீதின் வாழ்க்ககையைத் தொடருமுன் ஒரு சிறிய இடைவேளை எடுக்கலாம் என்று நினைத்தேன். இந்த வருடத்தின் கடைசி மூன்று மாதங்களுக்குள் வந்திருக்கிறோம்.கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் நாட்கள் அதிக தூரம் இல்லை. தேவன் நம்மேல் கூர்ந்த மாபெரும் அன்பைக் கொண்டாடும் நாட்கள் அவை. நாம்… Continue reading இதழ் 764 ஒரு மா பெரும் அதிசயம்!
இதழ்: 763 வேறொருவரும் அறியாத உன் பெயர்!
2 சாமுவேல் 12: 24 - 25 அவள் ஒரு குமாரனைப் பெற்றாள். அவனுக்கு சாலொமோன் என்று பேரிட்டாள். அவனிடத்தில் கர்த்தர் அன்பாயிருந்தார். அவர் தீர்க்கதரிசியாகிய நாத்தானை அனுப்ப, அவன் கர்த்தரின் நிமித்தம் அவனுக்கு யெதிதியா என்று பேரிட்டான். எத்தனை முறை நாம் காலையில் ஒரு வசனத்தைப் படிக்கும்போது, இன்று இது எனக்காகவே எழுதப்பட்டது என்று நினைக்கிறோம்! நாம் இவ்வளவு நாட்கள் நாம் படித்த தாவீதின் வாழ்க்கை நம்மில் பலரோடு பேசியிருக்கும் என்று நம்புகிறேன். தாவீது தன்னுடைய… Continue reading இதழ்: 763 வேறொருவரும் அறியாத உன் பெயர்!
இதழ்: 762 பெண்ணுக்குரிய மரியாதை!
2 சாமுவேல் 12:24 பின்பு தாவீது தன் மனைவியாகிய பத்சேபாளுக்கு ஆறுதல் சொல்லி..... நான் சில நாட்களில் இந்த தியானத்தை எழுத அதிகமாய் ஆசைப்படுவதுண்டு. அப்படிப்பட்ட நாட்களில் ஒன்றுதான் இது. தாவீதின் வாழ்க்கையில் பாவத்தினால் ஏற்பட்ட புயல் ஓய்ந்து, ஒரு திருப்புமுனை ஏற்பட்ட நேரம் இது. இந்த வேதாகம தியானத்தை படிக்கும் ஒவ்வொரு ஆணுக்கும், பெண்களின் இருதயத்தில் ஏற்படும் ஒரு பெரிய ஏக்கத்தை வெளிப்படுத்தும் வேதப் பகுதி இது! தாவீதின் வாழ்க்கையை நாம் இதுவரை பார்த்ததின் மிகச்… Continue reading இதழ்: 762 பெண்ணுக்குரிய மரியாதை!
இதழ்: 761 கண்ணீர் மூலம் காணும் வானவில்!
2 சாமுவேல் 12: 14 உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய்ச் சாகும். நாம் என்றைக்காவது கடவுளிடம் நம்முடைய வேதனை, கண்ணீர், மனக்குளைச்சல் இவற்றைப்பற்றி நேரிடையாக பேச முடியும் என்று நினைக்கிறீர்களா? முடியாது என்று நினைத்தால் எரேமியா தீர்க்கதரிசியின் வார்த்தைகளைப் பாருங்கள்! கர்த்தாவே உம்மோடே நான் வழக்காடப்போனால் தேவரீர் நீதியுள்ளவராமே, ஆகிலும் உம்முடைய நியாங்களைக் குறித்து உம்மோடே நான் பேசும்படி வேண்டுகிறேன். ஆகாதவர்களின் வழி வாய்க்கிறதென்ன? துரோகஞ்செய்துவருகிற அனைவரும் சுகித்திருக்கிறதென்ன? (எரே12:1) இந்த மனிதனின் துணிச்சல் எனக்கு மிகவும்… Continue reading இதழ்: 761 கண்ணீர் மூலம் காணும் வானவில்!
இதழ்: 760 ருசித்து பாருங்கள்!
2 சாமுவேல் 12:23 ....கர்த்தர் எனக்கு இரங்குவாரோ, எப்படியோ, என்று உபவாசித்து அழுதேன். இந்த 2 சாமுவேல் 12 ம் அதிகாரத்தில் நம்முடைய பரமபிதா ஏதோ நமக்கு சத்து நிறைந்த உணவு கொடுப்பது போல புதைந்திருக்கிறது இந்த அருமையான வசனம். தாவீது தன்னுடைய ஊழியரைப்பார்த்து தன்னுடைய குழந்தை உயிரோடு இருந்தபோது உபவாசித்து அழுததைப்பற்றிக் கூறும்போது, ஒருவேளை கர்த்தர் அந்தக் குழந்தை மேல் இரக்கம் காட்டுவாரோ என்று நினைத்ததாகக் கூறுகிறான். இங்கு தாவீது கர்த்தருடைய இரக்க குணத்தின்மேல் சந்தேகப்பட்டு… Continue reading இதழ்: 760 ருசித்து பாருங்கள்!
