ஆதி: 21: 1 – 7 தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்! நாட்கள் உருண்டோடின! கர்த்தர் வாக்குறைத்த படியே சாராள் மேல் கடாட்சமானார். சாராள் தன் முதிர் வயதிலே கர்ப்பவதியாகி ஆபிரகாமுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். அவள் ஏந்திய பாரம், நிந்தனை, வேதனை, அவமானம், மலடி என்ற பட்டம், ஆகாரினால் வந்த நிந்தை அத்தனைக்கும் முடிவாக ஈசாக்கு பிறந்தான். ஆபிரகாம் என்பதற்கு ‘ திரளான ஜனத்துக்கு தகப்பன்” என்று அர்த்தம். சாராளிடம் அவள் கணவன் பேரைக்… Continue reading மலர்:1 இதழ்: 25 விசுவாசமுண்டு! பொறுமை எங்கே!
மலர்:1 இதழ்: 24 உன் சாட்சி என்ன ஆச்சி?
ஆதி: 19: 3 – 38 தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்! லோத்தின் மனைவி சோதோமை விட்டு பிரிய மனதில்லாமல், திரும்பிப் பார்த்து உப்புத்தூணானாள் என்று நேற்று பார்த்தோம். இஸ்ரவேல் நாட்டிலே உப்புக்கடல் எனப்படுகிற கடல் பகுதியை நாங்கள் பார்க்க சென்ற போது, வழியில் தூரமாய் ஓரிடத்தை காண்பித்து சரித்திரத்தின் படி, இந்த இடத்தில் தான் லோத்தின் மனைவி உப்புத்துணாய் நின்றிருப்பாள் என்று எங்கள் வழிகாட்டி கூறினார். Dead sea என்றழைக்கப்படும் உப்புக் கடல் பகுதியில்… Continue reading மலர்:1 இதழ்: 24 உன் சாட்சி என்ன ஆச்சி?
மலர்:1 இதழ்: 23 காத்துக் கொள் உன் பரம அழைப்பை!
ஆதி: 19: 15 – 29 தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்! லோத்தின் குடும்பம் சோதோமை நோக்கி கூடாரம் போட்டனர், பின்னர் சோதோமுக்குள்ளேயே குடியேறினர் என்று நேற்று பார்த்தோம். லோத்தின் குடும்பத்தை உலகப்பிரகாரமான ஆசைகள் பிணைத்திருந்ததால் அவர்கள் ரோமர்: 12:2 ல் கூறப்பட்டுள்ளது போல ‘இந்த பிரபஞ்சத்துக்குரிய வேஷம்’ தரித்து வாழ்ந்தனர்! ஆனால் அதன் விளைவு என்ன தெரியுமா? அவர்கள் சோதோமில் சம்பாதித்த அத்தனையும் கரியாகிப் போயிற்று. தேவன் அந்தப் பட்டணங்களையும், சமபூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின்… Continue reading மலர்:1 இதழ்: 23 காத்துக் கொள் உன் பரம அழைப்பை!
மலர்:1 இதழ்: 22 ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால்!
ஆதி: 19: 1 - 15 தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்! லோத்துவின் குடும்பத்தை எகிப்தின் ஆடம்பரம், ஆஸ்தி , பட்டண வாழ்க்கை, சுகபோகம் என்ற பல ஆசைகள் கட்டியிருந்தன. அதனால் தான் சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டான், என்று நேற்று பார்த்தோம். லோத்துவின் குடும்பம் ஒவ்வொரு நாளும் தூங்கி எழும்போது சோதோமைப் பார்த்து ஏங்கியிருப்பார்கள். ஆதி : 13: 12 ல், சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டான் என்று வாசிக்கிறோம். நாம் அடுத்த… Continue reading மலர்:1 இதழ்: 22 ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால்!
மலர்:1 இதழ்: 21 ஆடம்பரம் ஆழ்த்திவிடும் !
ஆதி: 16 – 33 தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்! சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தம்மால் ஆகாதது ஒன்றுமில்லையென்று வயது முதிர்ந்த ஆபிரகாமுக்கும், சாராளுக்கும் உறுதியளித்த பின், சோதோமை நோக்கி சென்றார். அவரோடு வந்த தூதர்கள் சற்று முன்னே செல்ல, கர்த்தர் தம்மை வழியனுப்ப வந்த ஆபிரகாமோடு தான் செய்யப் போகிற காரியங்களைப் பகிர்ந்து கொள்கிறார். ( ஆதி: 19:1). ஆபிரகாமை தேவன் அறிந்ததால் அவனுக்கு தாம் சோதோமுக்கு செய்யப்போகிற காரியங்களை வெளிப்படுத்தினார்! என்ன ஆச்சரியம்!… Continue reading மலர்:1 இதழ்: 21 ஆடம்பரம் ஆழ்த்திவிடும் !
ஜெபக் கூடாரம்!
2000 வருடங்களுக்கு மேலாக நமக்காக எறேடுக்கப்படும் ஜெபம் ! ரோமர் : 8 : 34 “...கிறிஸ்துவே மரித்தவர்: அவரே எழுந்துமிருக்கிறவர்: அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்: நமக்காக வேண்டுதல்செய்கிறவரும் அவரே.” நம்முடைய கிறிஸ்துவானவர் நமக்காக 2000 வருடங்களுக்கும் மேலாக வேண்டுதல் செய்து கொண்டிருக்கிறார்! நாம் இன்று, நம்முடைய ஜெபக் கூடாரத்தில் அவருடன் இணைந்து நம்முடைய தேவைகளுக்காக ஜெபிப்போம். விசேஷ ஜெபக்குறிப்புகள் இருக்குமானால் premasunderraj@gmail.com என்ற விலாசத்துக்கு அனுப்புங்கள்! நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்… Continue reading ஜெபக் கூடாரம்!
மலர்:1 இதழ்: 20 கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ?
ஆதி: 18: 9 - 15 தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்! ஆபிரகாம் விருந்தினரை உபசரித்ததை பற்றி நேற்று பார்த்தோம். வாசலில் நின்ற மூன்று புருஷரையும் வருந்தியழைத்து, விருந்தளித்த பின்னர், சாராள் மற்ற வேலைகளைப் பார்க்க கூடாரத்துக்குள் திரும்பினாள். ஆபிரகாம் விருந்தாளிகளோடு மரத்துக்கடியில் நின்று கொண்டிருந்தான். சாராள் உள்ளே வேலை செய்து கொண்டிருந்தாலும், அவள் காது வந்தவர்கள் என்ன பேசுகிறார்கள்? அவர்கள் யார்? என்பதை அறிய கவனமாயிருந்தது. அவர்கள் ஆபிரகாமிடம் உன் மனைவி சாராள்… Continue reading மலர்:1 இதழ்: 20 கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ?
மலர்:1 இதழ்:19 உபசரித்தல் ஊழியமா?
ஆதி: 18: 1- 10 தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்! காலங்கள் உருண்டு ஒடின! ஆகார் வனாந்திரத்திலிருந்து திரும்பி வந்து இஸ்மவேலைப் பெற்ற பின் பதின்மூன்று வருடங்கள் கழிந்து விட்டன! இப்பொழுது ஆபிராமுக்கு வயது 99. (ஆதி: 17:5) கர்த்தர் ஆபிராமுக்கு தரிசனமாகி, “இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால் , உன் பேர் ஆபிரகாம் என்னப்படும்” என்றும் , ( ஆதி: 17:15) “சாராய்… Continue reading மலர்:1 இதழ்:19 உபசரித்தல் ஊழியமா?
மலர்:1 இதழ்:18 நீர் என்னைக் காண்கிற தேவன்! – II
ஆதி: 16 : 9 தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்! தேவன் ஆகாரை, அவள் மரணத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் வனாந்திரத்தில் கண்டார். ஆதி: 16:13 “ என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன்” என்றாள் ஆகார் என்று நேற்று பார்த்தோம். அவள் கடினமான வனாந்திரத்தில் அலைந்து திரிந்த போது கர்த்தர் அவளை நோக்கி, “ நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப் போய், அவள் கையின் கீழ் அடங்கியிரு” என்று சொல்வதைக் காண்கிறோம். ஒரு பெண் கடினமாக நடத்தப்பட்டாள்… Continue reading மலர்:1 இதழ்:18 நீர் என்னைக் காண்கிற தேவன்! – II
மலர்:1 இதழ்:17 நீர் என்னைக் காண்கிற தேவன்!
ஆதி: 16 தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்! கர்த்தருக்கு கீழ்ப்படிந்து , அவருக்கு காத்திராமல், அவசரமாக எடுத்த முடிவால் தங்களுடைய உள்ளத்திலும், இல்லத்திலும் நிம்மதியை இழந்து தவித்தனர் ஆபிராம், சாராய் தம்பதியினர் என்று பார்த்தோம். இவர்கள் நிம்மதியிழக்கக் காரணமான ஆகாரைப் பற்றி சிறிது சிந்திப்போம் இன்று. இந்த ஆகார் யார்?, இவள் பெயருக்கு அர்த்தம் என்ன? வேதம் அவளைப் பற்றி எதுவும் கூறவில்லை. அவள் ஒரு அடிமைப் பெண் என்றும், இஸ்மவேலின் தாய் என்றும் அறிவோம். இந்த… Continue reading மலர்:1 இதழ்:17 நீர் என்னைக் காண்கிற தேவன்!
