ரூத்: 2: 10 “அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி; நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது என்றாள்”. ஒருதடவை நாங்கள் நேப்பால் நாட்டுக்கு காரில் பிரயாணமாய் சென்றுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தோம். பயங்கர சோர்வுடன் வந்து கொண்டிருந்த போது திடீரென்று பல்லாயிரக்கணக்கானோர் எங்களைப் பார்த்து புன்னகைப் பூப்பது போன்றத் தோற்றத்துடன் கண்களில் பட்டது ஒரு சூரியகாந்தி மலர்த் தோட்டம். அவற்றின் நிறம் அந்த இடத்துக்கே ஒரு வெளிச்சத்தைக்… Continue reading இதழ்: 1995 நூறு கவலைகளும் போக ஒரு வழி!
இதழ்:1994 அங்கும் இங்கும் அலைய வேண்டாமே!
ரூத்: 2: 21 “பின்னும் மோவாபிய ஸ்திரீயான ரூத்; அவர் என்னை நோக்கி, என் அறுப்பெல்லாம் அறுத்துத் தீருமட்டும் நீ என் வேலைக்காரிகளோடே கூடவே இரு என்று சொன்னார் என்றாள்.” இந்த புதிய மாதத்தைக் காணச் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்! நாம் காணும் ஒவ்வொரு நாளும் தேவன் நமக்களிக்கும் ஈவு என்பதை மறவாமல் அவருக்கு நன்றி செலுத்தி, இந்த மாதம் முழுவதும் நம்மை அவர் கரம் பிடித்து நடத்தும்படி அவரிடம் ஒப்புவிப்போம். நாம் ரூத்தைப் பற்றிப் படித்துக்… Continue reading இதழ்:1994 அங்கும் இங்கும் அலைய வேண்டாமே!
A VERY BLESSED EASTER TO YOU ALL
HE IS RISEN! RISEN INDEED! நமக்காக மரித்து உயிர்த்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த இந்த நாள் நம் ஒவ்வொருவருக்கும் நம்பிக்கையயும் , சந்தோஷத்தையும் அருளட்டும்! உங்கள் குடும்பங்களில் அவருடைய அன்பும் சந்தோஷமும் நிரம்பியிருக்கட்டும்! HIS LOVE ENDURES FOREVER ( John 3:16) Happy Easter! உங்கள் சகோதரி பிரேமா சுந்தர் ராஜ்
இதழ்:1993 நீ அறியாத திட்டங்கள் உனக்காக காத்திருக்கிறது!
ரூத்: 1 : 16 “அதற்கு ரூத் : நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக் குறித்து,என்னோடே பேச வேண்டாம்;” கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்மை சிலுவை பரியந்தம் தாழ்த்தி, தம்முடைய பிதாவின் சித்தத்தின்படி, தம்மையே நமக்காக ஜீவபலியாக ஒப்புக்கொடுத்த நாள் இது! அவர் தம்முடைய மரணத்தின் மூலம் நமக்கு பெற்றுத்தந்த இரட்சிப்புக்காகவும், பாவத்தின்மேலும் மரணத்தின் மேலும் கொடுத்த ஜெயத்திற்காகவும் இன்று நாம் அவரை ஸ்தோத்தரிப்போம். நாம் ரூத்தின் சரித்திரத்தை தொடரலாம்! தாவீதின் கதையைக்கேளுங்க!… Continue reading இதழ்:1993 நீ அறியாத திட்டங்கள் உனக்காக காத்திருக்கிறது!
இதழ்:1992 உறுதியான விசுவாசம் கொண்ட ஒரு புறஜாதியாள்!
ரூத்: 2: 11 ” அதற்கு போவாஸ் பிரதியுத்தரமாக; உன் புருஷன் மரணமடைந்த பின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், நீ உன் தகப்பனையும், உன் தாயையும், உன் ஜந்மதேசத்தையும் விட்டு, முன்னே நீ அறியாத ஜனங்களிடத்தில் வந்ததும், எல்லாம் எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது.” சில வருடங்களுக்கு முன்னால் நாங்கள் குன்னூருக்கு காரில் சென்று கொண்டிருந்தோம். போகும் வழியில் மலைப் பாதையில், சாலையின் இரண்டு பக்கமும் வானுயர்ந்த மரங்கள் நின்றன. அவற்றின் நடுவே வானைத்தொடும் நெருப்பு போல… Continue reading இதழ்:1992 உறுதியான விசுவாசம் கொண்ட ஒரு புறஜாதியாள்!
இதழ்:1991 நம்பிக்கையற்ற உன் வாழ்வின் நம்பிக்கை அவரே!
ரூத்: 4:15 ” அவன் உன் ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவனும், உன் முதிர் வயதிலே உன்னை ஆதரிக்கிறவனுமாயிருக்கக்கடவன்”. சில நாட்களாக நகோமியுடனும், ரூத்துடனும் நாம் மோவாபை விட்டு, பெத்லெகேமுக்குக் கடந்து வந்தோம். மோவாபின் கசப்பை பின் வைத்து, அவர்கள் அறுவடையின் காலத்தில் பெத்லெகேமில் நுழைந்தவுடன் அவர்களுக்கு போவாஸுடைய தாராளமான கிருபையால் அவனுடைய சுதந்தரத்துக்குள் பிரவேசிக்கும் சிலாக்கியம் கிடைத்தது. அவர்களுடைய பசி, தாகம் தீர்க்கப்பட்டது. அவர்கள் பரலோகப் பிதாவினாலும், போவாஸ் என்னும் இரட்சகராலும் ஆசீர்வதிக்கப்பட்டார்கள். போவாஸ் பட்டணத்து மூப்பரின்… Continue reading இதழ்:1991 நம்பிக்கையற்ற உன் வாழ்வின் நம்பிக்கை அவரே!
இதழ்:1990 தமக்கு சொந்தமானவைகளை மீட்டுக் கொள்பவர்!
லேவியராகமம்: 25: 25 ” உங்கள் சகோதரன் தரித்திரப்பட்டு, தன் காணியாட்சியிலே சிலதை விற்றால், அவன் இனத்தான் ஒருவன் வந்து , தன் சகோதரன் விற்றதை மீட்கக்கடவன்”. காலையில் கிழக்கு வெளுத்ததுமே ரூத் எழும்பி விட்டாள்! இன்று என்ன நடக்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு அவள் உள்ளத்தில் அதிகமாக இருந்தது. தன்னுடைய நாட்டை விட்டு ஒரு புதிய நாட்டுக்குள், புதிய ஜனத்துக்குள் வந்திருக்கிறாள். அன்று என்ன நடக்கப்போகிறது என்று அறியாதவளாய் ரூத், வேலைக்கு செல்லும் மற்ற பெண்களோடு இணைந்து… Continue reading இதழ்:1990 தமக்கு சொந்தமானவைகளை மீட்டுக் கொள்பவர்!
இதழ்:1989 வேதனையால் சுவாசம் பெருமூச்சாய் மாறும் வேளை!
ரூத்: 2: 13 ” அதற்கு அவள்: என் ஆண்டவனே, உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்க வேண்டும்; நான் உம்முடைய வேலைக்காரிகளில் ஒருத்திக்கும் சமானமாயிராவிட்டாலும், நீர் எனக்கு ஆறுதல் சொல்லி உம்முடைய அடியாளோடே பட்சமாய்ப் பேசினீரே என்றாள்.” இன்றைய வேதாகமப் பகுதியை வாசித்தவுடன், இது ஒரு மனதைத் தொடும் வசனம் இதை எழுதி வைக்க வேண்டும் என்ற எண்ணம்தான் வந்தது. இஸ்ரவேலரில் மதிப்பும் மரியாதையும் பெற்றிருந்த போவாஸிடம் ரூத் வந்தபோது, அவனுடைய தகுதிக்கும், மதிப்பும், முன்னால் தான்… Continue reading இதழ்:1989 வேதனையால் சுவாசம் பெருமூச்சாய் மாறும் வேளை!
இதழ்:1988 எனக்கு எதினாலே இந்த தயவு கிடைத்தது ஐயா?
ரூத்: 2 : 9 “…உனக்குத் தாகம் எடுத்தால், தண்ணிர்க்குடங்களண்டைக்குப் போய் வேலைக்காரர் மொண்டுகொண்டு வருகிறதிலே குடிக்கலாம் என்றான்.” யோவான்: 4: 13, 14 “இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக; இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்”. தண்ணீர்க்குடம், தாகம் என்ர வார்த்தைகளைக் கேட்டதும் நமக்கு ஞாபகத்துக்கு வருபவள் சமாரிய ஸ்திரீ தான் அல்லவா! கர்த்தராகிய… Continue reading இதழ்:1988 எனக்கு எதினாலே இந்த தயவு கிடைத்தது ஐயா?
இதழ்:1987 நன்றியால் நிறைந்த ஆவி வேண்டும் ஐயா!
ரூத்: 2: 10 அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது என்றாள். கடந்த வருடம் எங்களுக்கு மழைகாலமே இல்லாததுபோல மழையே இல்லை! குளிர்ந்த காற்றையும், மழைத்தூரலையும் பார்க்க உள்ளமும், சரீரமும் ஏங்க ஆரம்பித்தது. அப்படிப்பட்ட வறண்ட நேரத்தில் ஒருநாள் திடீரென்று கருமேகங்கள் கூடி , குளிர்ந்த காற்றோடு மழை பெய்ய ஆரம்பித்தவுடன் எல்லார் முகத்திலும் ஒரு மகிழ்சி காணப்பட்டது. நான்… Continue reading இதழ்:1987 நன்றியால் நிறைந்த ஆவி வேண்டும் ஐயா!
