ரூத் : 1 : 15 அப்பொழுது அவள்: இதோ உன் சகோதரி தன் ஜனங்களிடத்துக்கும் தன் தேவர்களிடத்துக்கும் திரும்பிப் போய் விட்டாளே; நகோமித் தன் மருமக்களைத் திரும்பிப்போங்கள் என்றவுடன் ஏற்பட்ட அழுகை நின்றுவிட்டது!ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து முத்தம் செய்தாயிற்று! ஒர்பாள் மெதுவாகத் திரும்பி மோவாபை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்! தன் ஜனங்களிடத்துக்கும் தன் தேவர்களிடத்துக்கும் திரும்பிப் போய் விட்டாள் என்ற வார்த்தையை நான் ஆழ்ந்து படிக்க ஆவலாகி எபிரேய அகராதிக்கு சென்றேன். அதில் அந்த வார்த்தைகளுக்கு கொடுக்கப்பட்டிருந்த அர்த்தம்… Continue reading இதழ்:1975 அந்த ஓர்பாளைப் போல நீயும் இன்று தேவைப்படுகிறாய்!
இதழ்:1974 உன்னை உபயோகப்படுத்தவே தேவன் சித்தம் கொண்டுள்ளார்!
ரூத்: 1: 6 “கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் (நகோமி) மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு, தன் மருமக்களோடேகூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து, ரூத்: 1: 7 தன் இரண்டு மருமக்களோடுங்கூடத் தானிருந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்பட்டாள். யூதாதேசத்திற்குத் திரும்பிப்போக அவர்கள் வழிநடக்கையில், “ ரூத்: 1: 8 நகோமி தன் இரண்டு மருமக்களையும் நோக்கி: நீங்கள் இருவரும் உங்கள் தாய்வீட்டுக்குத் திரும்பிப்போங்கள்; மரித்துப்போனவர்களுக்கும் எனக்கும் நீங்கள் தயைசெய்ததுபோல,… Continue reading இதழ்:1974 உன்னை உபயோகப்படுத்தவே தேவன் சித்தம் கொண்டுள்ளார்!
இதழ்: 1973 தேவனுடைய திட்டமின்றி எதுவும் நம்மை அணுகாது!
ரூத்: 1 : 13 “… என் மக்களே கர்த்தருடைய கை எனக்கு விரோதமாயிருக்கிறதினால் உங்கள் நிமித்தம் எனக்கு மிகுந்த விசனம் இருக்கிறது என்றாள்.” இந்த புதிய மாதத்தைக் காணக் கர்த்தர் செய்த கிருபைக்காக அவரை நன்றியோடு ஸ்தோத்தரிப்போம். ஏத்தனையோபேருக்கு கிடைக்காத மாதயவு இது! இந்த மாதம் முழுவதும் கர்த்தர் நம்மோடிருந்து வழி நடத்தும்படி அவருடைய கரத்துக்குள் நம்மை ஒப்புவித்து ஜெபிப்போம்! நாம் நகோமியின் வாழ்க்கையைப் பற்றி படித்துக் கொண்டிருக்கிறோம். அவள் தன் மருமக்களை நோக்கித்… Continue reading இதழ்: 1973 தேவனுடைய திட்டமின்றி எதுவும் நம்மை அணுகாது!
இதழ்:1972 பிறருக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் வாழ்க்கை!
ரூத்: 1: 8 – 10 நகோமி தன் இரண்டு மருமக்களையும் நோக்கி: நீங்கள் இருவரும் உங்கள் தாய்வீட்டுக்குத் திரும்பிப்போங்கள்; மரித்துப்போனவர்களுக்கும் எனக்கும் நீங்கள் தயைசெய்ததுபோல, கர்த்தர் உங்களுக்கும் தயை செய்வாராக. கர்த்தர் உங்கள் இருவருக்கும் வாய்க்கும் புருஷனுடைய வீட்டிலே நீங்கள் சுகமாய் வாழ்ந்திருக்கச் செய்வாராக என்று சொல்லி அவர்களை முத்தமிட்டாள். அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அழுது அவளைப் பார்த்து; உம்முடைய ஜனத்தண்டைக்கே உம்முடன் கூட வருவோம் என்றார்கள். என்னுடைய வாழ்வில் நான் இளம் வயதிலேயே ஒன்றுக்கு… Continue reading இதழ்:1972 பிறருக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் வாழ்க்கை!
இதழ்:1971 நம் வாழ்க்கை ஒர் பிரசங்கமா அல்லது மாய்மாலமா?
ரூத்: 1: 7 (நகோமி) தன் இரண்டு மருமக்களோடுங்கூடத் தானிருந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்பட்டாள். யூதாதேசத்திற்குத் திரும்பிப்போக அவர்கள் வழிநடக்கையில், “ இன்று நான் நகோமியின் வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தபோது பின்வரும் வாசகங்கள் தான் நினைவுக்கு வந்தன! “நாம் வாழும் வாழ்க்கை நாம் பிரசிங்கிக்கிற சிறந்த பிரசங்கம் போன்றது! நம்முடைய வாழ்க்கையின் மூலமாக நாம் என்ன செய்தியை பரப்புகிறோம்! நாம் வார்த்தைகளால் பிரசிங்கிப்பதை ஒருவேளை நம்மை சுற்றியுள்ள மக்கள் விசுவாசியாமல் போகலாம், ஆனால் வாழ்க்கையினால்… Continue reading இதழ்:1971 நம் வாழ்க்கை ஒர் பிரசங்கமா அல்லது மாய்மாலமா?
இதழ்:1970 தேவ சித்தம் நிறைவேறவே உருவாக்கப்பட்டாய்!
ரூத்: 1: 7 (நகோமி) தன் இரண்டு மருமக்களோடுங்கூடத் தானிருந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்பட்டாள். யூதாதேசத்திற்குத் திரும்பிப்போக அவர்கள் வழிநடக்கையில், சில நாட்களுக்கு முன்பு என்னுடைய வீட்டை சுத்தம் பண்ண ஆரம்பித்தேன். சில நேரங்களில் நாம் எதிர்பார்ப்பதை விட அதிகமாகவே வீட்டில் தேவையில்லாதவைகள் சேர்ந்துவிடுகின்றன. அடுக்கடுக்கான செய்தி தாள்கள் , அப்புறம் படிக்கலாம் என்று சேர்த்து வைத்த மாத இதழ்கள், முக்கியமானவைகள் என்று சேர்த்து வைத்த பலவிதமான விளம்பரங்கள் என்று கழித்துக்கட்ட வேண்டியவை… Continue reading இதழ்:1970 தேவ சித்தம் நிறைவேறவே உருவாக்கப்பட்டாய்!
இதழ்:1969 திருப்தியுள்ள வாழ்வு காத்திருக்கிறது!
ரூத்: 1: 6 “கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் (நகோமி) மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு, தன் மருமக்களோடேகூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து, நாம் ரூத் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறோம். அயல் நாட்டில் விதவையாக வாழ்ந்த நகோமி, தன் மருமக்களோடு கூட அப்பத்தின் வீடாகிய பெத்லேகேமுக்கு திரும்பி செல்ல முடிவு செய்தாள் என்று பார்த்தோம். பெண்களுக்கு பொதுவாகவே மன தைரியமும், பொறுமையும் அதிகம் என்று நினைப்பவள் நான். புற்று நோய் வந்த வாலிபரை… Continue reading இதழ்:1969 திருப்தியுள்ள வாழ்வு காத்திருக்கிறது!
இதழ்:1968 குறுகிய சிந்தை வேண்டாமே!
ரூத்: 1 : 6, 7 “கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் (நகோமி) மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு, தன் மருமக்களோடேகூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து, தன் இரண்டு மருமக்களோடுங்கூடத் தானிருந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்பட்டாள். இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு நாங்கள் எங்கள் வாழ்க்கையில் மாற்றத்துக்கான ஒரு முக்கியமான முடிவை எடுத்தோம். வட இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருந்த நாங்கள் இருவருமே வேலையை ராஜினாமா செய்துவிட்டு இரண்டு இளம் வயது… Continue reading இதழ்:1968 குறுகிய சிந்தை வேண்டாமே!
இதழ்:1967 வெட்டுக்கிளிகள் அரித்த நாட்கள்!!!!
ரூத்: 1 : 6 ” கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் (நகோமி) மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு, தன் மருமக்களோடேகூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து” நம்முடைய வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை மன அழுத்தத்துக்குள் கொண்டு செல்ல வல்லது என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். விசேஷமாக நம் குடும்பத்தில் ஏற்படும் திடீர் குழப்பங்கள், திடீர் மரணம், திடீர் வியாதி போன்றவை கடலில் திடீரென்று ஏற்படும் புயலுக்கொத்தவை. நகோமி… Continue reading இதழ்:1967 வெட்டுக்கிளிகள் அரித்த நாட்கள்!!!!
இதழ்:1966 கண்ணீர் மழையாய் சொரியும் வேளை!!!
ரூத்: 1: 3 – 5 ” நகோமியின் புருஷனாகிய எலிமெலேக்கு இறந்து போனான்;அவளும் அவளுடைய இரண்டு குமாரரும் மாத்திரம் இருந்தார்கள். இவர்கள் மோவாபியரில் பெண் கொண்டார்கள்; அவர்களில் ஒருத்தி பேர் ஒர்பாள், மற்றவள் பேர் ரூத்; அங்கே ஏறக்குறையப் பத்துவருஷம் வாசம் பண்ணினார்கள். பின்பு மக்லோன் கிலியோன் என்னும் அவர்கள் இருவரும் இறந்துபோனார்கள்; அந்த ஸ்திரீ தன் குமாரர் இருவரையும் தன் புருஷனையும் இழந்து தனித்தவளானாள். எலிமெலேக்கு என்னும் எப்பிராத்தான், அப்பத்தின் வீடாகிய பெத்லெகேமிலே பஞ்சம் வந்தபோது,… Continue reading இதழ்:1966 கண்ணீர் மழையாய் சொரியும் வேளை!!!
