யோசுவா: 14: 11,12 மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்த பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது. ஆகையால் கர்த்தர் அந்நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்கு தாரும்; அங்கே ஏனாக்கியரும் அரணிப்பான பெரிய பட்டணங்களும் உண்டென்று நீர் அந்நாளிலே கேள்விப்பட்டீரே; கர்த்தர் என்னோடிருப்பாரானால் கர்த்தர் சொன்னபடி அவர்களைத் துரத்தி விடுவேன் என்றான். நாம் இஸ்ரவேல் மக்கள் கானானுக்குள் பிரவேசித்த பின்னர்… Continue reading மலர் 6 இதழ்: 441 இதை என்னால் தாண்ட முடியுமா?
Tag: குடும்ப தியானம்
மலர் 6 இதழ்: 440 அளவிடக்கூடாத பரந்த உள்ளம்!
யோசுவா 14: 7,8 என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு மறு செய்தி கொண்டு வந்தேன். ஆனாலும் என்னோடேகூட வந்த என் சகோதரர் ஜனத்தின் இருதயத்தைக் கரையப்பண்ணினார்கள்; நானோ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினேன். இஸ்ரவேல் மக்கள் யோர்தானின் கரையிலே கூடியிருக்கின்றனர். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட, பாலும் தேனும் ஓடுகிற கானானுக்குள் பிரவேசிக்கும் நாள் நெருங்கி விட்டது. மோசே பன்னிரண்டு வாலிபரை தெரிந்து கொண்டு, அவர்களை கானானுக்குள் வேவு பார்த்து வரும்படி அனுப்புகிறான். அவர்களில் பத்துபேர் அழுது புலம்பி கொண்டு… Continue reading மலர் 6 இதழ்: 440 அளவிடக்கூடாத பரந்த உள்ளம்!
மலர் 6 இதழ்: 439 உன்னில் மறைந்திருக்கும் சிறப்பைக் காணும் தேவன்!
யோசுவா: 14:7 தேசத்தை வேவு பார்க்க கர்த்தரின் தாசனாகிய மோசே என்னைக் காதேஸ்பனெயாவிலிருந்து அனுப்புகிறபோது எனக்கு நாற்பது வயதாயிருந்தது; என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு மறு செய்தி கொண்டு வந்தேன். யோசுவாவின் புத்தகத்திலிருந்து காலேபைப் பற்றி நாம் படிக்க ஆரம்பித்திருக்கிறோம். காலேப் என்கிற ஒரு நல்ல தகப்பனிடமிருந்து நம்முடைய பரம தகப்பனுடைய அடையாளங்களை நாம் அறிந்து கொள்ளுகிறோம். அடையாளம் என்று சொல்லும்போது நமக்கு சரீர அடையாளங்கள் மனதுக்கு வரும். சில நாட்களுக்கு முன்பு மரித்துப் போன என்னுடைய அப்பாவின்… Continue reading மலர் 6 இதழ்: 439 உன்னில் மறைந்திருக்கும் சிறப்பைக் காணும் தேவன்!
Restore unto me the joy!
On this Sunday evening I was reading from Psalm 51:12 where David after his fall says ‘Restore unto me the joy of Thy salvation’. Fall? My God he did fall big! Whenever I review David's life, I always wonder what made him a leader after such a disastrous fall! He had multiple wives, rebellious children,… Continue reading Restore unto me the joy!
மலர் 6 இதழ் 438: காலேப் என்ற தகப்பனின் நற்குணம்!
யோசுவா:14:6 கேனாசியனான எப்புனேயின் குமாரனாகிய காலேப் அவனை நோக்கி; காதேஸ்பர்னேயாவிலே கர்த்தர் என்னைக்குறித்தும் உம்மைக்குறித்தும் தேவனுடைய மனுஷனாகிய மோசேயோடே சொன்ன வார்த்தையை நீர் அறிவீர். இதை எழுதும்போது என்னுடைய அப்பா இறந்து 4 1/2 வருடங்கள் ஓடிவிட்டன! எப்பொழுதோ வாசித்த வாசகம் "ஒரு பெண் தன் கணவனுக்கு ராணியாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் தன் தகப்பனுக்கு அவள் எப்பொழுதும் ஒரு ராஜகுமாரத்திதான்"என்றது நினைவுக்கு வந்தது. அப்பாவுடைய கண்களுக்கு தன் மகள்தான் உலகத்திலேயே அழகு மிக்கவளாகத் தெரிவாள். என்னுடைய அப்பாவின் கண்களுக்கு நான்… Continue reading மலர் 6 இதழ் 438: காலேப் என்ற தகப்பனின் நற்குணம்!
மலர் 6 இதழ்: 437 வெற்றியை உன் கண்களால் பார்!
யோசுவா: 8:1 நீ பயப்படாமலும், கலங்காமலும் இரு; நீ யுத்த ஜனங்கள் யாவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து ஆயிபட்டணத்தின்மேல் போ, இதோ, ஆயியின் ராஜாவையும், அவன் பட்டணத்தையும், அவன் நாட்டையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன். அமெரிக்கா தேசத்தின் ஆரிசோனா மாநிலத்தில் இருக்கும், ’தி கிராண்ட் கேனன்’ என்ற உலகப்புகழ் பெற்ற மலைக் கணவாயைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உலகத்திலேயே மிகப் பெரிய, மிக அழகான கணவாய் இது என்றால் மிகையாகாது. சிவப்பு நிறத் துணியை மடித்ததுபோல சிவப்புக் கற்களான பாறைகள்… Continue reading மலர் 6 இதழ்: 437 வெற்றியை உன் கண்களால் பார்!
மலர் 6 இதழ்: 436 பெலன் தாரும் எனக்கு!
யோசுவா: 8:1 ”… நீ யுத்த ஜனங்கள் யாவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து ஆயிபட்டணத்தின்மேல் போ,..” சில வருடங்களுக்கு முன்பு என்னுடைய எண்பது வயதான அப்பா படுக்கையில் இருந்தார்கள். இருதயக் கோளாரினால் பாதிக்கப்பட்ட அவர்களால் தானாக எழும்பவோ அல்லது எதையும் செய்யவோ முடியவில்லை. இந்திய ராணுவத்தில் இருந்த அவர்களுடைய கைகளில் நல்ல பெலன் இருந்ததது, மனதில் தைரியம் இருந்தது ஆனால் கால்களும், சரீரமும் பெலனிழந்து போய்விட்டன. இரண்டு மூன்று தடவை தானாக எழும்ப முயற்சி செய்ததால் கீழே விழுந்து… Continue reading மலர் 6 இதழ்: 436 பெலன் தாரும் எனக்கு!
மலர் 6 இதழ்: 435 பள்ளத்தாக்கான வாழ்க்கை மாறும்!
யோசுவா 7:26 ..” அவன்மேல் இந்நாள் வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இப்படியே கர்த்தர் தன் கோபத்தின் உக்கிரத்தை விட்டு மாறினார்; ஆகையால் அவ்விடம் இந்நாள்வரைக்கும் ஆகோர் பள்ளத்தாக்கு என்னப்படும். ஒசியா: 2:15 அவளுக்கு திராட்சத்தோட்டங்களையும், நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்.” நான் முதன்முறையாக ஆகானின் கதையை என்னுடைய சன்டே ஸ்கூலில் கேட்ட ஞாபகம் இருக்கிறது! அன்று எனக்கு பழைய ஏற்பாட்டின் தேவன் மீது அதிக பயம் வந்தது. கடவுள் ஆகானுக்கு மட்டும் அல்ல,… Continue reading மலர் 6 இதழ்: 435 பள்ளத்தாக்கான வாழ்க்கை மாறும்!
மலர் 6 இதழ்: 434 எதை ஒளித்து வைத்திருக்கிறாய்?
யோசுவா: 7:21 ”கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும், நான் கண்டு அவைகளை இச்சித்து, எடுத்துக்கொண்டேன். இதோ அவைகள் என் கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைந்திருக்கிறது. பலநாட்களாக நாம் ஆகானைப்பற்றி படித்துக்கொண்டிருக்கிறோம். இஸ்ரவேலின் சேனையில் ஒரு போர்வீரனாக, தேவனாகிய கர்த்தரின் சித்தப்படி எரிகோவை அழிக்கப் புறப்பட்ட இந்த வீரன், பொருளாசை என்ற சலனத்துக்கு சற்று இடம் கொடுத்ததால், அவன் நோக்கம் தடுமாறி, கண்களால் கண்ட பொருட்களை இச்சித்து,… Continue reading மலர் 6 இதழ்: 434 எதை ஒளித்து வைத்திருக்கிறாய்?
மலர் 6 இதழ்: 433 பார்வைக்கு இன்பமானவைகளை அடையக் கூடாதா?
யோசுவா: 7:21 ”கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும், நான் கண்டு……” ஆதி:3:6 அப்பொழுது ஸ்திரியானவள் அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியை தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு…. கர்த்தரால் மனிதனுக்காக உருவாக்கப்பட்ட ஏதேன் தோட்டத்தில் புத்தியை தெளிவிக்கும் என்று ஒரு கனியைக் காட்டி வஞ்சகம் பேசி சாத்தான் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கண்ணி வைத்து தன் வலையில் விழ வைத்தான். நாம்கூட… Continue reading மலர் 6 இதழ்: 433 பார்வைக்கு இன்பமானவைகளை அடையக் கூடாதா?
