யாத்தி: 14: 13 “...... நீங்கள் நின்று கொண்டு இன்றைக்கு கர்த்தர் உங்களுக்கு செய்யும் இரட்சிப்பை பாருங்கள்......” நாங்கள் கிராமங்களில் சிறு குழந்தைகளை ஒன்று சேர்க்கும்போது அவர்களை அமைதிப்படுத்துவது ஒரு கடினமான காரியமாய் இருக்கும். கட்டுக்கு அடங்காமல் பிள்ளைகள் கத்தும்போது சிலநேரம் உரத்தகுரலில் ‘இப்பொழுது அமைதியாய் இருக்கிறீர்களா இல்லையா’ என்று சத்தமிட்டால் தான் குழந்தைகள் அடங்குவார்கள். நான் யாத்தி: 14: 13 வாசித்தபோது இப்படித்தான் யோசித்தேன். இஸ்ரவேல் மக்களின் அழுகை, கூக்குரல், முறுமுறுப்பு இவற்றை கேட்ட தேவன்,… Continue reading மலர்:1இதழ் 84 ஷ்………… அமைதி!
Month: January 2011
மலர்:1இதழ் 83 பயப்படாதிருங்கள்!
யாத்தி:14: 13 “அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி பயப்படாதிருங்கள்...” யாத்திராகமத்தில் நாம் படிக்கிற விதமாக, சில காரியங்களை உங்கள் மனக்கண்கள் முன் படம் போல வைக்கிறேன்! இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வந்த தேவனாகிய கர்த்தர் அவர்களை பகலிலே மேக ஸ்தம்பத்திலும், இரவிலே அக்கினி ஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்று வழிநடத்தினார். எகிப்திலே மகா அற்புதத்தை கண்களால் கண்ட அவர்கள் தேவனாகிய கர்த்தர் மேல் தங்கள் முழு நம்பிக்கையையும் வைத்திருப்பார்கள் என்று… Continue reading மலர்:1இதழ் 83 பயப்படாதிருங்கள்!
மலர்:1இதழ்:82 யுத்தம் உண்டு! ஜெயம் யாருக்கு?
Red_Sea_Crossing யாத்தி: 14: 1,4 “கர்த்தர் மோசேயை நோக்கி: ஆகையால் பார்வோன் அவர்களைப் பின் தொடரும்படிக்கு நான் அவன் இருதயத்தை கடினப்படுத்தி, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறியும்படி, பார்வோனாலும், அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படுவேன் என்றார்....” கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை கானானை நோக்கி நடக்க விடாமல், அதற்கு எதிர் திசையில் வழிநடத்தி சமுத்திரத்துக்கும், வனாந்திரத்துக்கும் இடையே பாளையமிரங்க கட்டளையிட்டார் என்று பார்த்தோம். பார்வோனின் அரண்மனையில் பரபரப்பு! கோஷேன் நாட்டிலிருந்து புறப்பட்ட இஸ்ரவேலரை அவர்கள்… Continue reading மலர்:1இதழ்:82 யுத்தம் உண்டு! ஜெயம் யாருக்கு?
மலர்:1இதழ்:81 ஒருபுறம் வனாந்திரம் மறுபுறம் சமுத்திரம்????
யாத்தி:14: 1-3 கர்த்தர் மோசேயை நோக்கி: நீங்கள் திரும்பி மித்தோலுக்கும், சமுத்திரத்துக்கும் நடுவே...... சமுத்திரக்கரையிலே பாளயமிரங்குவீர்களாக. அப்பொழுது பார்வோன் இஸ்ரவேல் புத்திரரைக் குறித்து:அவர்கள் தேசத்திலே திகைத்து திரிகிறார்கள், வனாந்திரம் அவர்களை அடைத்துப் போட்டது என்று சொல்லுவான்’. எங்களுடைய கிராஸ் 2 கிராஸ் என்ற நிறுவனத்தில், எல்லாவிதமான தையல் வேலைகளும் நடைபெறுகிறது. கையினால் பூ போடுவதிலிருந்து, கம்ப்யூட்டர் மூலம் இயக்கப்படும் இயந்திரங்கள் மூலம் எம்ப்ரோயடேரி போடும் வேலை வரை நடைபெறுகிறது. சில நேரங்களில் பெண்கள் கையினால்… Continue reading மலர்:1இதழ்:81 ஒருபுறம் வனாந்திரம் மறுபுறம் சமுத்திரம்????
மலர்:1இதழ்:80 அமைதி காப்பது பொன்னுக்கு ஒப்பானது!
எண்ணா:12: 1, 2 “எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயை மோசே விவாகம்பண்ணியிருந்தபடியினால் மிரியாமும் ஆரோனும்,அவன் விவாகம் பண்ணியிருந்த எத்தியோப்பிய தேசத்து ஸ்திரீயினிமித்தம் அவனுக்கு விரோதமாய்ப் பேசி: கர்த்தர் மோசேயைக்கொண்டு மாத்திரம் பேசினாரோ, எங்களைக் கொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள். கர்த்தர் அதைக் கேட்டார். மோசேயின் மனைவியாகிய சிப்போராளின் மூலம் நம் குடும்பத்தில் கடைபிடிக்க வேண்டிய சில நல்ல குணநலன்களைப் பற்றி பார்த்துக் கொண்டு வருகிறோம். நேற்று நாம் மோசே தன் மாமனாரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து, அவருடைய ஆலோசனையைக்… Continue reading மலர்:1இதழ்:80 அமைதி காப்பது பொன்னுக்கு ஒப்பானது!
மலர்:1இதழ்: 79 மாமனாரிடம் ஆலோசனையா?????
யாத்தி:18:19 இப்பொழுது என் சொல்லைக்கேளும், உமக்கு ஒரு ஆலோசனை சொல்லுகிறேன், தேவனும் உம்மோடு கூட இருப்பார்.........” 18:24 மோசே தன் மாமன் சொல்கேட்டு அவன் சொன்னபடியெல்லாம் செய்தான். மோசேயின் குடும்பம் ஒன்று சேர்ந்த இடத்தில் சந்தோஷம் இருந்தது என்று பார்த்தோம். ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, குடும்ப நலனுக்காக முடிவு எடுத்து, விட்டு கொடுத்து வாழ்ந்த குடும்பம் என்று அவர்களைப் பற்றி பார்த்தோம். யாத்தி:18: 14 – 25 வசனங்களைப் படிக்கும் போது இன்னுமொரு சம்பவத்தைப் பற்றி படிக்கிறோம்.… Continue reading மலர்:1இதழ்: 79 மாமனாரிடம் ஆலோசனையா?????
மலர்:1இதழ்: 78 நல்லதொரு குடும்பம்!
யாத்தி: 18: 5 “மோசேயின் மாமனாகிய எத்திரோ, மோசேயின் குமாரரோடும், அவன் மனைவியோடுங்கூட, அவன் பாளயமிறங்கியிருந்த தேவ பர்வதத்தினிடத்தில் வனாந்திரத்துக்கு வந்து….” நாம் கடந்த நாட்களில் மோசேயுடைய வாழ்க்கையைப் பற்றி பார்த்தோம். பெண்கள் அவன் வாழ்க்கையில் முக்கிய இடம் வகுத்தனர் என்று அறிந்தோம். அவன் தாய் யோகெபெத், சகோதரி மிரியம், பார்வோன் குமாரத்தி, அவன் மனைவி சிப்போராள் என்ற பல பெண்கள் அவன் வாழ்க்கையை பாதுகாத்து, வளர்த்து, நேசித்து வந்தனர் என்று பார்க்கிறோம்.… Continue reading மலர்:1இதழ்: 78 நல்லதொரு குடும்பம்!
மலர்:1இதழ்: 77 தலைக்கு வந்த ஆபத்து!
யாத்தி:4: 20, 24, 25 அப்பொழுது மோசே தன் மனைவியையும், தன் பிள்ளைகளையும் கழுதையின் மேல் ஏற்றிக் கொண்டு எகிப்து தேசத்துக்கு திரும்பினான்.... வழியில் தாங்கும் இடத்தில் கர்த்தர் அவனுக்கு வெளிப்பட்டு அவனைக் கொல்லப் பார்த்தார். அப்பொழுது சிப்போராள் ஒரு கருக்கான கல்லை எடுத்து, தன் புத்திரனுடைய நுனித்தோலை அறுத்து, அதை அவன் கால்களுக்கு முன்பாக எறிந்து நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன் என்றாள். நாம் டிசெம்பர் மாதம் முதல் வாரத்தில், மோசேயின் மனைவியாகிய சிப்போராளைப்… Continue reading மலர்:1இதழ்: 77 தலைக்கு வந்த ஆபத்து!
மலர்:1இதழ்: 76 2011 புத்தாண்டு சிறப்பு மலர்!
யோவான்: 14: 6 “அதற்கு இயேசு; நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” கடந்த மாதம், நானும் என் மகனும், தென்னிந்தியாவில் உள்ள பல மாகாணங்களில் உள்ள எங்கள் ஊழிய மையங்களுக்கு, கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள , காரில் பிரயாணப்பட்டோம். எங்களுடைய காரில் GPS என்ற வழி காட்டும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஒருநாள் நாங்கள் தேசிய நெடுஞ்சாலை ஒன்றில், நான்கு வழி சாலையில் வந்து கொண்டிருந்த போது எங்களுடைய வழிகாட்டும் கருவியிலிருந்து… Continue reading மலர்:1இதழ்: 76 2011 புத்தாண்டு சிறப்பு மலர்!
