அன்பின் சகோதர சகோதரிகளே,
கடந்த ஒரு மாத காலமாக வேதாகம தியானத்தை தொடர முடியாதற்கு வருந்துகிறேன். நான் பணி புரியும் நிறுவனத்தின் சார்பாக கௌத்தமாலா என்ற நாட்டுக்கு சென்றதாலும், பின்னர் அங்கிருந்து அமெரிக்கா தேசத்தில் என் மகள் வீட்டுக்கு வந்ததாலும் என்னால் தொடர்ந்து எழுத முடியவில்லை.
நான் யோசுவாவின் வாழ்க்கையைப் பற்றித் தொடருமுன் ஒருசில நாட்கள் எனக்கும், மற்றும் பலருக்கும் பிடித்த சில தியானத் துளிகளை மறுபடியும் வெளியிட விரும்புகிறேன்.
தேவனாகிய கர்த்தர் உங்கள் ஒவ்வொருவருடனும் இருந்து மிகவும் ஆசீர்வாதமான பண்டிகை காலத்தை கொடுக்கும்படியாக ஜெபிக்கிறேன்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்
