தனித்திருந்து எறேடுக்கும் ஜெபம்! லூக்கா: 5:16 “அவரோ வனாந்தரத்தில் தனித்து போய் ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார்” ஒவ்வொரு சனிக்கிழமையும் நாம் தேவனுடைய சமுகத்தில் நம் ஜெப வேண்டுதல்களோடு வருகிற நாள். இன்றைய வேத வசனத்தில், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வனாந்திரத்தில் தனித்திருந்து ஜெபித்தார் என்று பார்க்கிறோம். கர்த்தராகிய இயேசு ஜனங்களுக்கு போதித்து, சுகமாக்கி, அநேக அற்புதங்களைச் செய்த போது, அவரைப்பற்றிக் கேள்விப்பட்டு திரளான ஜனங்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். அப்படிப்பட்ட மிகவும் பரபரப்பான, ஓய்வில்லாத வேலைகளில் கூட அவர் தனித்து… Continue reading ஜெபமே ஜெயம்!
Month: October 2020
இதழ்:1029 எப்பிராத்தா எனப்பட்ட பெத்லெகேமே!!!
ஆதி: 35: 19 – 20 “ ராகேல் மரித்து பெத்லேகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்கு போகிற வழியில் அடக்கம் பண்ணப் பட்டாள்.அவள் கல்லறையின் மேல் யாக்கோபு ஒரு தூணை நிறுத்தினான்; அதுவே இந்நாள் வரைக்கும் இருக்கிற ராகேலுடைய கல்லறையின் தூண். ராகேலுக்கு பிரசவ வேதனை கடுமையாக இருந்ததையும், அவள் பிறந்த குழந்தைக்கு பெனோனி என்று பேரிட்டதை யாக்கோபு மாற்றி பென்யமீன் என்று பேரிட்டான் என்று பார்த்தோம். ராகேல் தான் மறுபடியும் கர்ப்பவதியாய் இருப்பதை அறிந்தவுடன் பெரு மகிழ்ச்சி அடைந்திருப்பாள். ஏனெனில்… Continue reading இதழ்:1029 எப்பிராத்தா எனப்பட்ட பெத்லெகேமே!!!
இதழ்:1028 பென்…ஓ…னி என்ற வேதனையின் கதறல்!
ஆதி: 35:16 – 19 “ பின்பு பெத்தேலை விட்டு பிரயாணம் புறப்பட்டார்கள். எப்பிராத்தாவுக்கு வர இன்னுங்கொஞ்சம் தூரம் இருக்கும்போது ராகேல் பிள்ளை பெற்றாள். பிரசவத்தில் அவளுக்கு கடும்வேதனை உண்டாயிற்று. பிரசவிக்கும்போது அவளுக்கு கடும் வேதனையாயிருக்கையில் மருத்தவச்சி அவளைப் பார்த்து , பயப்படாதே, இந்த முறையும் புத்திரனைப் பெறுவாய் என்றார். மரணகாலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது அவள் அவனுக்கு பெனோனி என்று பேரிட்டாள் . அவன் தகப்பனோ அவனுக்கு பென்யமீன் என்று பேரிட்டான்.” நேற்று நாம் ரெபெக்காளின் தாதி மரித்து… Continue reading இதழ்:1028 பென்…ஓ…னி என்ற வேதனையின் கதறல்!
இதழ்: 1027 இந்த தெபோராளை நீங்கள் சந்தித்ததுண்டா?
ஆதி: 35:8 “ ரெபேக்காளின் தாதியாகிய தெபோராள் மரித்து, பெத்தேலுக்கு சமீபமாயிருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழ் அடக்கம் பண்ணப் பட்டாள், அதற்கு அல்லோன்பாகூத் என்ற பேர் உண்டாயிற்று.” நாம் நேற்று யாக்கோபை விட்ட போது, அவன் தன் குமாரரிடம் இன் வாசனையை நீங்கள் இந்த இடத்தில் கெடுத்து விட்டீர்களே என்று புலம்பக் கூடிய அளவுக்கு, லேவியும், சிமியோனும் மூர்க்கமாய் நடந்தனர் என்று பார்த்தோம். ஆனால் ஆதி: 34 லிருந்து, 35 க்குள் போகும்போது, தேவனை விட்டு விலகி இருந்த இந்த குடும்பம்… Continue reading இதழ்: 1027 இந்த தெபோராளை நீங்கள் சந்தித்ததுண்டா?
இதழ்:1026 இவர்களை விட அவர்களே மேல்!
ஆதி: 34:30,31 அப்பொழுது யாக்கோபு, சிமியோனையும், லேவியையும் பார்த்து: இந்த தேசத்தில் குடியிருக்கிற கானானியரிடத்திலும், பெரிசியரிடத்திலும் என் வாசனையை நீங்கள் கெடுத்ததினாலே என்னைக் கலங்கப் பண்ணினீர்கள்; நான் கொஞ்ச ஜனமுள்ளவன், அவர்கள் எனக்கு எதிராக கூட்டங்கூடி, நானும் என் குடும்பமும் அழியும்படி என்னை வெட்டிப்போடுவார்களே என்றான்.அதற்கு அவர்கள்: எங்கள் சகோதரியை அவர்கள் ஒரு வேசியைப்போல நடத்தலாமோ என்றார்கள். தீனாள் ஆடம்பரத்தைத் தேடிப் பட்டனத்துக்குள் சென்றபோது அங்கே பணக்கார வாலிபன் சீகேமின் வலையில் விழுந்ததைப் பார்த்தோம். அதன் பின்பு தீனாளைப்… Continue reading இதழ்:1026 இவர்களை விட அவர்களே மேல்!
இதழ்: 1025 அவர்கள் செய்தால் நாமும் செய்வதா???
ஆதி: 34:13 அப்பொழுது யாக்கோபின் குமாரர் தங்கள் சகோதரியாக தீனாளை சீகேம் என்பவன் தீட்டு படுத்தினபடியால், அவனுக்கும் அவன் தகப்பன் ஏமோருக்கும் வஞ்சகமான மறுமொழியாக... யாராவது உங்களை வஞ்சகமாக ஏமாற்றிய கசப்பான அனுபவம் உங்களுக்கு உண்டா? பொய்யை உண்மையைப்போல சித்தரித்து கூறி நம்ப வைத்து கழுத்தறுக்கப்பட்ட அனுபவம் உண்டா? இவர்கள் பேசுவது உண்மையா அல்லது பொய்யா என்று நம்மை திணற வைக்கக் கூடிய அளவு பேசுகிறவர்கள் பலரை நம் ஒவ்வொருவர் வாழ்விலும் கண்டிருப்போம்! நான் நிச்சயமாகப் பார்த்திருக்கிறேன்! யாக்கோபின்… Continue reading இதழ்: 1025 அவர்கள் செய்தால் நாமும் செய்வதா???
ஜெபமே ஜெயம்!
இரண்டத்தனையான ஆசீர்வாதத்தை கொடுத்த ஜெபம்! யோபு:42:10 “யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார்; யோபுக்கு முன்னிருந்த எல்லாவற்றைப் பார்க்கிலும், இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்கு தந்தருளினார்” வாருங்கள் இந்த சனிக்கிழமையும் நாம் ஒன்றுபட்டு ஜெபிப்போம்! யோபு தனக்காக அல்ல, தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்த போது, கர்த்தர் அவனுடைய தேவையை இரண்டத்தனையாய் சந்தித்தார். நம்மையே பற்றியே சிந்திக்காமல், தேவனுடைய சமுகத்தில் நாம் நம்மை சுற்றி உள்ள மக்களுக்காக, தேவையிலும், கஷ்டத்திலும் உள்ளவர்களுக்காக, வாதையினால் பாதிக்கப்பட்ட… Continue reading ஜெபமே ஜெயம்!
இதழ்:1024 சிக்கி விடாதே! சிக்கி விட்டால் அவமானம்!
ஆதி: 34:2-4 அவளை ஏவியனான ஏமோரின் குமாரனும், அத்தேசத்தின் பிரபுவுமாகிய சீகேம் என்பவன் கண்டு அவளைக் கொண்டுபோய், அவளோடே சயனித்து அவளைத் தீட்டு படுத்தினான்.அவனுடைய மனம் யாக்கோபின் குமாரத்தியாகிய தீனாள் மேல் பற்றுதலாயிருந்தது; அவன் அந்தப் பெண்ணை நேசித்து, அந்தப் பெண்ணின் மனதுக்கு இன்பமாய்ப் பேசினான்.சீகேம் தன் தகப்பனாகிய ஏமோரை நோக்கி: இந்தப் பெண்ணை எனக்கு கொள்ள வேண்டும் என்று சொன்னான். நேற்று நாம், தீனாள் தன் கூடாரத்தின் பாதுகாப்பையும், தேவனின் சித்தத்தையும் விட்டு வெளியேறி அத்தேசத்து பெண்களோடு… Continue reading இதழ்:1024 சிக்கி விடாதே! சிக்கி விட்டால் அவமானம்!
இதழ் 1023 ஆடம்பரத்தைத் தேடிய மகள்!
ஆதி:34:1 “ லேயாள் யாக்கோபுக்கு பெற்ற குமாரத்தியாகிய தீனாள் தேசத்துப் பெண்களைப் பார்க்க புறப்பட்டாள்.” யாக்கோபு தன்னுடைய சகோதரனாகிய ஏசாவை எதிர்கொண்டு தன்னுடைய உறவைப் புதுப்பித்த பின்னர் ஏசா தான் வந்த வழியேத் திரும்பிப் போனான். யாக்கோபு சீகேமுடைய பட்டணத்துக்கு அருகே சென்று அந்தக் கானானியப் பட்டணத்துக்கு எதிரே சாலேம் என்னும் இடத்தில் கூடாரம் போட்டான். கானான் தேசத்துக்குள் நுழையும்போதே யாக்கோபின் குடும்பத்தில் என்ன நடக்கிறது பார்க்கலாம்! நாம் நம் வாழ்க்கையில் என்றாவது தவறான முடிவுகள் எடுத்து பின்னர் அதற்காக… Continue reading இதழ் 1023 ஆடம்பரத்தைத் தேடிய மகள்!
இதழ் 1022 உறவுக்கு விலை உண்டோ?
ஆதி: 32: 27, 28 “ அவர் உன் பேர் என்ன என்று கேட்டார்; யாக்கோபு என்றான்.அப்பொழுது அவர்; இனி உன் பேர் யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும், தேவனோடும், மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்.” யாக்கோபின் குடும்பத்தார் தேவன் காட்டிய புதிய வாழ்வைத் தேடி,தொடர்ந்து நடந்தனர். அவர்கள் எதிர்காலத்தை எதிர்நோக்கி செல்லும்போது இதோ ஏசா 400 பேர் கொண்ட பெரிய படையோடு யாக்கோபை எதிர்கொண்டு வருகிறான் என்று. யாக்கோபுக்கு தான் ஏசாவை ஏமாற்றி பிறப்புரிமையைப் பறித்தது தான் ஏசாவின் கோபத்துக்கு காரணம்… Continue reading இதழ் 1022 உறவுக்கு விலை உண்டோ?