சங்கீ: 16: 1 “தேவனே என்னைக் காப்பாற்றும். நான் உம்மை நம்பியிருக்கிறேன்” நாம் கடந்த வாரம் மிரியாமைப்பற்றிப் படிக்க ஆரம்பித்தோம்! அவள் பார்வோன் குமாரத்தியிடம் ஞானமாய் பேசி குழந்தையின் தாயே குழந்தையை வளர்க்கும் திட்டத்தைக் கொடுக்கிறாள். ஞானமுள்ளவள் மட்டுமல்ல, மிரியாமை ஒரு திடமான, தைரியமான பெண்ணாகக் கூட இங்கு காண்கிறோம். இந்த சம்பவம் நடந்த போது மிரியாமுக்கு ஏழிலிருந்து பத்து வயதுக்குள் இருந்திருக்கும் என்று கருதுகின்றனர்! நாணலினால் செய்த பெட்டியில் அவள் தம்பி மோசே நைல் நதிக்கரையில் வைக்கப்பட்டபோது, யார்… Continue reading இதழ்: 1050 இந்த வயதில் எங்கிருந்து வந்தது இந்த தைரியம்!
Month: November 2020
JOYFUL HOPE
On this Sunday the approach of Advent brought a joyful hope as our Pastor preached on the theme ‘ Joyful Expectation of Christ’s coming’. Neither the Pandemic nor the Storm could suppress the joyful hope! Did I say Joyful hope? what is it? Hope is to wish for something with the expectation of its fulfillment.… Continue reading JOYFUL HOPE
இதழ்:1049 இத்தனைத் தெளிவு எங்கிருந்து வந்தது?
சில நாட்கள் நாம் மோசேயின் தாயாகிய யோகெபெத்தைப் பற்றிப் பார்த்தோம். பின்னர் பார்வோன் குமாரத்தியைப் பற்றியும் பார்த்தோம். இன்று முதல் மோசேயின் தமக்கையாகிய மிரியாமைப் பற்றி ஒரு சில நாட்கள் படிப்போம். குழந்தை மோசேயை நாணல் பெட்டியில் வைத்து நைல் நதியோரமாய் நாணல் நிறைந்த கரையில் மிதக்க வைத்து, குழந்தையின் அக்காவாகிய மிரியாமை தூரத்தில் இருந்து காவல் காக்கும்படி செய்தாள் யோகெபெத். மிரியாமுக்கு அப்பொழுது பத்திலிருந்து பதின்மூன்று வயதிற்குள் இருக்கும். யார் அந்த நதிக்கரையோரமாக வருவார்களோ? யார்… Continue reading இதழ்:1049 இத்தனைத் தெளிவு எங்கிருந்து வந்தது?
இதழ்: 1048 மோசேயை நமக்களித்த ஒரு தாய்!
யாத்தி:2: 5,6 அப்பொழுது பார்வோனுடைய குமாரத்தி நதியில் ஸ்நானம் பண்ண வந்தாள்.அவளுடைய தாதிகள் நதியோரத்தில் உலாவினார்கள்; அவள் நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியைக் கண்டு, தன் தாதியை அனுப்பி அதைக் கொண்டுவரும்படி செய்தாள். அதைத் திறந்தபோது பிள்ளையைக் கண்டாள்; பிள்ளை அழுதது; அவள் அதின்மேல் இரக்கமுற்று இது எபிரேயர் பிள்ளைகளில் ஒன்று என்றாள்.” இன்று பார்வோன் குமாரத்தியைப் பற்றி சற்று சிந்திக்கலாம்! மோசே பிறந்த போது யார் பார்வோனாக இருந்தார் என்பதைக் குறித்து பல கேள்விகள் உள்ளன! பார்வோன் குமாரத்தியின்… Continue reading இதழ்: 1048 மோசேயை நமக்களித்த ஒரு தாய்!
இதழ்:1047 உன்னையே பிரதிபலிக்கும் உன் பிள்ளைகள்!
எண்ணா: 26: 59 “ அம்ராமுடைய மனைவிக்கு யொகெபெத் என்று பேர்; அவள் எகிப்திலே லேவிக்கு பிறந்த குமாரத்தி; அவள் அம்ராமுக்கு ஆரோனையும், மோசேயையும், அவன் சகோதரியான மிரியாமையும் பெற்றாள்” யோகெபெத்தை நாம் பொறுப்புள்ள ஒரு தாயாகவும், பெலசாலியான ஒரு தாயாகவும் பார்த்தோம். இந்த தாய் தன்னுடைய பிள்ளைகளுக்கு மட்டும் அல்ல, இஸ்ரவேல் மக்களுக்கு எவ்விதமாய் ஒரு ஆசீர்வாதமாக இருந்தாள் என்று பார்க்கலாம். யோகெபெத் வாழ்ந்த சமயம் இஸ்ரவேல் மக்கள் அடிமைத்தனத்தில் இருந்தனர். அவர்கள் மேல் கடினமான சுமை சுமத்தப்பட்டது. அப்படிப்பட்ட சமயத்தில்… Continue reading இதழ்:1047 உன்னையே பிரதிபலிக்கும் உன் பிள்ளைகள்!
இதழ்: 1046 பெண் என்றால் மலர் அல்ல!
யாத்தி :2:2, 9 “அந்த ஸ்திரி (யொகெபேத்) கர்ப்பவதியாகி, ஒரு ஆண் பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளதென்று கண்டு அதை மூன்று மாதம் ஒளித்து வைத்தாள்........ பார்வோனுடைய குமாரத்தி அவளை நோக்கி, நீ இந்தப் பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய் அதை எனக்கு வளர்த்திடு; நான் உனக்கு சம்பளம் கொடுக்கிறேன் என்றாள். அந்த ஸ்திரி பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய் அதை வளர்த்தாள்” பெண்கள் என்றாலே ஒரு பெலவீனப்பாண்டமாக உலகத்தார் நினைக்கிறார்கள். அது உண்மையா??? சரீரப்பிரகாரமாய் ஒருவேளை இருக்கலாம்! ஆனால் ஆவிக்குரிய வாழ்க்கையிலும், விசுவாசத்திலும்,… Continue reading இதழ்: 1046 பெண் என்றால் மலர் அல்ல!
இதழ்:1045 பிள்ளைகளே ஒரு தாய்க்குப் பெருமை!
யாத்தி:2:1,2 “லேவியின் குடும்பத்தாரில் ஒருவன் லேவியின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம் பண்ணினான். அந்த ஸ்திரி கர்ப்பவதியாகி, ஒரு ஆண் பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளதென்று கண்டு அதை மூன்று மாதம் ஒளித்து வைத்தாள். நாம் சிப்பிராள், பூவாள் என்ற மருத்துவச்சிகளின் தேவ பயத்தினால் எகிப்தில் வாழ்ந்த இஸ்ரவேல் மக்களை தேவனாகியக் கர்த்தர் பாதுகாத்தார் என்று பார்த்தோம். எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் அவர்களை கடின உழைப்பினால் வாதித்தான், ஆனாலும் இஸ்ரவேல் மக்கள் பலுகிப் பெருகினார்கள். அதனால் பார்வோன், புதிதாய்… Continue reading இதழ்:1045 பிள்ளைகளே ஒரு தாய்க்குப் பெருமை!
ஜெபமே ஜெயம்!
சஙீதம் 27: 4 கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன், நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும்..... கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன். தேவனுடைய மகிமையைக் காண தாவீது ஜெபித்த ஜெபம்! இன்று சனிக்கிழமை! நாம் ஒருமனதாக ஜெபிக்கும் நாள்! இன்றைய வேதாகம வசனத்தில் தாவீது தேவனுடைய பிரசன்னத்தை நாடி ஏறெடுத்த ஜெபத்தைப் பார்க்கிறோம். தேவனுடைய பிரசன்னத்தில் தங்கியிருக்கும்போது கிடைக்கும் ஆனந்த அனுபவம் உங்களுக்கு உண்டா? தாவீதை தேவனாகியக் கர்த்தர் அதிகமாக நேசித்தார். தாவீது தன்னுடைய வாழ்வில்… Continue reading ஜெபமே ஜெயம்!
இதழ்:1044 சமுகத்தொண்டால் ஆசீர்வாதம்!
யாத்தி:1: 20, 21 “இதினிமித்தம் தேவன் மருத்துவச்சிகளுக்கு நன்மை செய்தார். ஜனங்கள் பெருகி மிகுதியும் பலத்துப் போனார்கள். மருத்துவச்சிகள் தேவனுக்கு பயந்ததினால் அவர்கள் குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார். சிப்பிராள் , பூவாள் என்ற இரு எபிரேய மருத்துவச்சிகள் பார்வோனுக்கு பயப்படாமல், தேவனுக்கு பயந்ததினாலே, அவர்கள் இருவரும் எபிரேயருக்கு பிறந்த ஆண்பிள்ளைகளை பார்வோன் கட்டளைப்படி கொலைசெய்யாமல் காப்பாற்றினர் என்று பார்த்தோம். கர்த்தருக்கு பயந்த பயம், ஞானமுள்ள வார்த்தைகள் இவையே அவர்கள் பார்வோனுக்கு முன்னால் உபயோப்படுத்திய ஆயுதம் என்று பார்த்தோம். இந்த… Continue reading இதழ்:1044 சமுகத்தொண்டால் ஆசீர்வாதம்!
இதழ்:1043 ஏற்றகாலத்தில் பேசிய ஞானமுள்ள வார்த்தைகள்!
யாத்தி:1: 18, 19 “அதினாலே எகிப்தின் ராஜா மருத்துவச்சிகளை அழைப்பித்து,; நீங்கள் ஆண்பிள்ளைகளை உயிரோடே காப்பாற்றுகிற காரியம் என்ன என்று கேட்டான். அதற்கு மருத்துவச்சிகள் பார்வோனை நோக்கி; எபிரேய ஸ்திரிகள், எகிப்திய ஸ்திரிகளைப் போல அல்ல, அவர்கள் நல்ல பலமுள்ளவர்கள்; மருத்துவச்சி அவர்களிடத்துக்கு போகுமுன்னமே அவர்கள் பிரசவித்தாகும் என்றார்கள்” “கடந்த இரு மாதங்களாக நாம் ஆதியாகமத்தை ஆராய்ந்து படித்தோம். ஆதாமிலிருந்து, யோசேப்பு வரை பலருடைய வாழ்க்கை நம்மை ஆழமாக சிந்திக்கத் தூண்டியது. என்னோடு ஆதியாகமத்தில் பயணித்த நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பீர்கள்… Continue reading இதழ்:1043 ஏற்றகாலத்தில் பேசிய ஞானமுள்ள வார்த்தைகள்!