ஆதி:24:67 அப்பொழுது ஈசாக்கு ரெபெக்காளைத் தன் தாய் சாராளுடைய கூடாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அவளைத் தனக்கு மனையாக்கிக் கொண்டு அவளை நேசித்தான். நம்முடைய முற்பிதாக்களான ஆபிரகாம், சாரளுடைய காலம் வேகமாய்க் கடந்தது. ஆதியாகமம் 23 ம் அதிகாரத்தில் சாராள் 127 ம் வயதில் மரித்துப் போவதையும் அவளை அடக்கம் பண்ண ஆபிரகாம் ஒரு நிலத்தை வாங்குவதையும் பற்றிப் படிக்கிறோம். ஈசாக்கு வளர்ந்து திருமண வயதை அடைந்து விட்டான்! ஆதி 24 ம் அதிகாரம் நமக்கு ஈசாக்கும், ரெபெக்காளும் திருமணத்தில்… Continue reading இதழ்: 1012 ஒரு மணவாளன் தன் மணவாட்டியை நேசித்த கதை!
Month: October 2020
இதழ்: 1011 காத்திருக்க பொறுமை உண்டா?
ஆதி: 21: 1 ஆபிரகாம் முதிர்வயதாயிருக்கையில், சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்திலே அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். ஆபிரகாம் சாராளின் வாழ்க்கைச் சக்கரத்தில் நாட்கள் உருண்டோடின! கர்த்தர் வாக்குரைத்த படியே சாராள் மேல் கடாட்சமானார். சாராள் தன் முதிர் வயதிலே கர்ப்பவதியாகி ஆபிரகாமுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். அவள் ஏந்திய பாரம், நிந்தனை, வேதனை, அவமானம், மலடி என்ற பட்டம், ஆகாரினால் வந்த நிந்தை அத்தனைக்கும் முடிவாக ஈசாக்கு பிறந்தான். ஆபிரகாம் என்பதற்கு ‘… Continue reading இதழ்: 1011 காத்திருக்க பொறுமை உண்டா?
இதழ்: 1010 உன் சந்ததி உன்னைப் பிரதிபலிக்கும்!
ஆதி: 19: 29 தேவன் அனதச் சமபூமியின் பட்டணங்களை அழிக்கும்போது, தேவன் ஆபிரகாமை நினைத்து லோத்து குடியிருந்த பட்டணங்களைத் தாம் கவிழ்த்துப் போடுகையில், லோத்தை அந்த அழிவின் நடுவிலிருந்து தப்பிப்போகும்படி அனுப்பி விட்டார். லோத்தின் மனைவி சோதோமை விட்டு பிரிய மனதில்லாமல், திரும்பிப் பார்த்து உப்புத்தூணானாள் என்று கடந்த வாரம் பார்த்தோம். இன்று இஸ்ரவேல், மட்டும் யோர்தான் நாடுகளில் கடல் மட்டத்திலிருந்து 400 அடி கீழே ஓடும் உப்புக்கடல் அல்லது Dead sea என்றழைக்கப்படும் ஆற்றின் பகுதியில் எங்கேயோ… Continue reading இதழ்: 1010 உன் சந்ததி உன்னைப் பிரதிபலிக்கும்!
ஜெபமே ஜெயம்!
வாதையை நிறுத்திய ஜெபம்! 2 சாமு: 24:25 “அங்கே தாவீது கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும், சமாதான பலிகளையும் செலுத்தினான். அப்பொழுது கர்த்தர் தேசத்துக்காக செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார்; இஸ்ரவேலின் மேலிருந்த அந்த வாதை நிறுத்தப்பட்டது.” ஒவ்வொரு சனிக்கிழமையும் நாம் தேவனுடைய சமுகத்தில் நம் ஜெப வேண்டுதல்களோடு வருகிற நாள். இன்றைய வேத வசனத்தில், தாவீது செய்த ஜெபத்துக்கு தேவன் பதிலளித்து இஸ்ரவேலின் மேலிருந்த வாதையை நீக்கிப்போட்டார் என்று வாசிக்கிறோம். அன்பின் தேவனுடைய பிள்ளைகளே இன்று… Continue reading ஜெபமே ஜெயம்!
இதழ்: 1009 பின் நோக்கேன் நான்! பின் நோக்கேன் நான்!
ஆதி:19: 26 அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து உப்புத்தூண் ஆனாள். லோத்தின் குடும்பம் சோதோமை நோக்கி கூடாரம் போட்டனர், பின்னர் சோதோமுக்குள்ளேயே குடியேறினர் என்று நேற்று பார்த்தோம். லோத்தின் குடும்பத்தை உலகப்பிரகாரமான ஆசைகள் பிணைத்திருந்ததால் அவர்கள் ரோமர்: 12:2 ல் கூறப்பட்டுள்ளது போல ‘இந்த பிரபஞ்சத்துக்குரிய வேஷம்’ தரித்து வாழ்ந்தனர்! ஆனால் அதன் விளைவு என்ன தெரியுமா? அவர்கள் சோதோமில் சம்பாதித்த அத்தனையும் கரியாகிப் போயிற்று. தேவன் அந்தப் பட்டணங்களையும், சமபூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின் எல்லா குடிகளையும்,… Continue reading இதழ்: 1009 பின் நோக்கேன் நான்! பின் நோக்கேன் நான்!
இதழ்:1008 சிற்றின்பங்கள் என்னும் சேற்றில் ஒரு கால்!
ஆதி: 19: 1 அந்த இரண்டு தூதரும்சாயங்காலத்திலே சோதோமுக்கு வந்தார்கள். லோத்து சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தான். இரக்கமும் கிருபையுமுள்ள தேவனாகிய கர்த்தர் நம்மை இந்தப் புதிய மாதத்தை காணச் செய்த தயவுக்காக அவரை ஸ்தோத்தரிப்போம். அவர் தமது கிருபையினால் இந்த மாதம் முழுவதும் நம்மோடிருந்து காத்து வழி நடத்தும்படியாய் ஒரு நிமிடம் நம்மைத் தாழ்த்தி அவரிடம் ஒப்புவிப்போம்! லோத்துவின் குடும்பத்தை எகிப்தின் ஆடம்பரம், ஆஸ்தி , பட்டண வாழ்க்கை, சுகபோகம் என்ற பல ஆசைகள் கட்டியிருந்தன. அதனால்… Continue reading இதழ்:1008 சிற்றின்பங்கள் என்னும் சேற்றில் ஒரு கால்!
