நியாதிபதிகள் : 4: 9 “அதற்கு அவள்: நான் உன்னோடேகூட நிச்சயமாக வருவேன்….. என்று சொல்லி , தெபோராள் எழும்பி, பாராக்கோடே காதேசுக்குப் போனாள். நாம் இஸ்ரவேலின் தீர்க்கசரியாகிய தெபோராளைப் பற்றிப் படித்துக்கொண்டிருக்கிறோம். கானானானிய ராஜாவாகிய யாபீனின் சேனாதிபதி சிசெராவை எதிர்த்து போராட செல்லும்படியாக பாராக்கிடம் தெபோராள் கூறியபோது, அவன் நீ என்னோடே கூட வந்தால் போவேன்; என்னோடே கூட வராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான் என்று பார்த்தோம். இன்றைய வேதாகமப் பகுதியில் தெபோராள் அவனுக்கு பிரதியுத்தரமாக நிச்சயமாக… Continue reading இதழ்: 1159 யார்தான் போவார் எனக்காக என்றழைக்கும் நேசரின் சத்தம்!
Month: April 2021
இதழ்: 1158 பனித்துளிகள் ஒன்றிணைந்து பனிக்கட்டி ஆவதில்லையா? ?
நியாதிபதிகள் : 4 : 8 “அதற்கு பாராக்; நீ என்னோடே கூட வந்தால் போவேன்; என்னோடே கூட வராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான். இரண்டு கைகள் சேர்ந்து தட்டினால் தான் ஓசை வரும் என்பது தமிழ் பழமொழி. நம்முடைய நாட்டில் எல்லோருக்கும் கிரிக்கெட் பைத்தியம் உண்டு. நம்முடைய அணியின் வெற்றிக்கு, சச்சின் மாதிரி ஒரே ஒரு நல்ல விளையாட்டு வீரன் இருப்பதைவிட, பல நல்ல வீரர்கள் இருக்கும் ஒரு கூட்டணியாக இருப்பது தான் மிகவும்… Continue reading இதழ்: 1158 பனித்துளிகள் ஒன்றிணைந்து பனிக்கட்டி ஆவதில்லையா? ?
இதழ்: 1157 நீ தேவனுடைய பணிக்காக அர்ப்பணிக்கும் நேரம்?
நியாதிபதிகள்: 4:5 ” அவள் எப்பிராயீம் மலைத்தேசமான ராமாவுக்கும், பெத்தேலுக்கும் நடுவிலிருக்கிற தெபோராளின் பேரீச்சமரத்தின் கீழே குடியிருந்தாள்.” இஸ்ரவேல் மக்கள் மனம்போல் வாழ்ந்ததால் பாவம் செய்தனர், அதனால் கர்த்தரால் கைவிடப்பட்டு, கானானிய ராஜாவால் ஒடுக்கப்பட்டனர் என்று பார்த்தோம். இப்படிப் பட்ட வேளையில் கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை இஸ்ரவேலை நியாயம் தீர்க்கும்படியாக எழுப்பினார். இன்றைய வேதாகமப் பகுதியில் தேவனுடைய தீர்க்கதரிசியாகிய தெபோராள், இஸ்ரவேலை நியாயம்தீர்க்கும்படி கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்டவள், ஒரு பேரீச்சமரத்துக்கடியில் குடியிருந்து ஜனங்களை நியாயம் தீர்த்தாள் என்று… Continue reading இதழ்: 1157 நீ தேவனுடைய பணிக்காக அர்ப்பணிக்கும் நேரம்?
இதழ்: 1156 உன்னாலும் தீவட்டி போல ஒளி வீச முடியும்!
நியாதிபதிகள்: 4 :5 ” அவள் எப்பிராயீம் மலைத்தேசமான ராமாவுக்கும், பெத்தேலுக்கும் நடுவிலிருக்கிற தெபோராளின் பேரீச்சமரத்தின்கீழே குடியிருந்தாள்.” நாம் இப்பொழுது, நியாதிபதிகள் படிக்க ஆரம்பித்திருக்கிறோம். இந்த புத்தகத்தின் ஆரம்பத்தில் அற்புதமான பெண்மணி தெபோராளைப் பற்றி படிக்கிறோம். தேவனாகிய கர்த்தரால் , இஸ்ரவேல் மக்களை நியாயம் தீர்க்கும் நியாதிபதியாக நியமிக்கப்பட்டவள். தெபோராளின் வாழ்க்கையை நாம் படிக்கும் இந்த நாட்களில் கர்த்தரால் தெரிந்தெடுக்கப்பட்ட ஊழியக்காரரிடம் என்னென்ன தகுதிகளை கர்த்தர் எதிர்பார்க்கிறார் என்று அறிந்து கொள்ளலாம். நாம் சற்று ஆதியாகமத்தை திரும்பி… Continue reading இதழ்: 1156 உன்னாலும் தீவட்டி போல ஒளி வீச முடியும்!
இதழ்: 1155 கீழ்ப்படிதலை மட்டும் விரும்பும் தேவன்!
நியாதிபதிகள்: 2: 2 நீங்கள் இந்த தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கை பண்ணாமல் அவர்கள் பலிபீடங்களை இடித்துவிடக் கடவீர்கள் என்றும் சொன்னேன்; ஆனாலும் என் சொல்லைக் கேளாதேபோனீர்கள்; ஏன் இப்படி செய்தீர்கள்? நாம் நியாதிபதிகள் புத்தகத்தை ஆரம்பிக்கும்போது இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கை எவ்வாறு மேலும் கீழுமாக இருந்தது என்று நேற்று பார்த்தோம். சரிவர வழிநடத்தத் தலைவர்கள் இல்லாததால் இஸ்ரவேல் மக்கள் தங்கள் வாழ்க்கையை மனம் போன போக்கிலே, சுய இச்சைகளும், சுய ஆசைகளும் இழுக்கும் வழியிலே அமைத்துக் கொண்டனர்.… Continue reading இதழ்: 1155 கீழ்ப்படிதலை மட்டும் விரும்பும் தேவன்!
இதழ்:1154 வாழ்க்கைப் பிரயாணத்தின் அடுத்த கட்டம்!
நியாதிபதிகள்: 21 : 25 அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன் தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான். இன்று நாம் நியாதிபதிகள் புத்தகத்தை ஆரம்பிக்கிறோம். யோசுவா மரித்த பின்னர் இஸ்ரவேல் மக்களை வழிநடத்தும் தலைவர்கள் இல்லாததால், கர்த்தர் நியாதிபதிகளை எழுப்பினார். காலேபுடைய மருமகன் ஒத்னியேல் பல வருடங்கள் இஸ்ரவேலை நியாயம் தீர்த்தார். ஒத்னியேல் நியாயம் தீர்த்த காலத்தில் இஸ்ரவேல் கர்த்தரை பின்பற்றினர், ஒத்னியேலின் மரணத்துக்கு பின்னர், இஸ்ரவேல் மக்களும் பின்வாங்கினர். பின்னர் கர்த்தர் தெபோராளை எழுப்பினார். தெபோராள்… Continue reading இதழ்:1154 வாழ்க்கைப் பிரயாணத்தின் அடுத்த கட்டம்!
இதழ்:1153 தயக்கமின்றி கேள்! நிச்சயமாய் கிடைக்கும்!
யோசுவா: 15: 19 அப்பொழுது அவள் எனக்கு ஒரு ஆசீர்வாதம் தர வேண்டும்; எனக்கு வறட்சியான நிலத்தைத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலத்தையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்.அப்பொழுது அவளுக்கு மேற்புறத்திலும் கீழ்புறத்திலும் நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான். நாம் கடந்த சில நாட்களாக காலேப் என்கிற உலகத் தகப்பனுடைய அடையாளங்களிலிருந்து நம்முடைய பரலோகத்தகப்பனைப் பற்றி அறிந்து கொண்டிருக்கிறோம். முதலாவதாக தேவனாகிய கர்த்தர் நம்மை உள்ளும் புறமும் ஆராய்ந்து பார்த்து, சிறந்தவைகளைத் தெரிந்து கொள்பவர் என்று அறிந்தோம். இரண்டாவதாக தேவனுடைய அன்பு கடலின்… Continue reading இதழ்:1153 தயக்கமின்றி கேள்! நிச்சயமாய் கிடைக்கும்!
இதழ்:1152 உன் உள்ளத்தின் வாஞ்சைகளை அறிந்த தேவன்!
யோசுவா: 15:18 காலேப் (அவளைப்) பார்த்து உனக்கு என்ன வேண்டும் என்றான். யோவான்: 5:6 (இயேசு) அவனை நோக்கி சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார். இயேசு கிறிஸ்துவானவர் இந்த பூமியில் வாழ்ந்த போது, தான் சென்ற இடமெல்லாம் நோயாளிகளை சொஸ்தமாக்கினார் என்று நான்கு சுவிசேஷங்களும் கூறுகின்றன. அப்படிப் பட்ட சம்பவங்களில் ஒன்றுதான் பெதஸ்தா குளத்துக்க்கரையில் 38 வருடங்களாகக் காத்திருந்த ஒரு மனிதனை சுகமாக்கியது. அன்றைய நாட்களில், நோய் என்பது ஒருவனுடைய பாவத்தினால் வரும் தண்டனை என்று… Continue reading இதழ்:1152 உன் உள்ளத்தின் வாஞ்சைகளை அறிந்த தேவன்!
இதழ்: 1151 நாம் கேட்பதற்கு மேலாகக் கொடுக்கும் தகப்பன்!
யோசுவா: 15:18 அவள் புறப்படுகையில் தன் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்க வேண்டும் என்று அவனிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு , கழுதையின் மேலிருந்து இறங்கினாள். நாம் கடந்த சில நாட்களாக காலேப் என்கிற உலகத் தகப்பனுடைய அடையாளங்களிலிருந்து நம்முடைய பரலோகத்தகப்பனைப் பற்றி அறிந்து கொண்டிருக்கிறோம். முதலாவதாக தேவனாகிய கர்த்தர் நம்மை உள்ளும் புறமும் ஆராய்ந்து பார்த்து, சிறந்தவைகளைத் தெரிந்து கொள்பவர் என்று அறிந்தோம். இரண்டாவதாக தேவனுடைய அன்பு கடலின் அளவிட முடியாத பரப்பளவுக்கு ஒப்பானது என்று பார்த்தோம். மூன்றாவதாக காலேபிடத்தில்… Continue reading இதழ்: 1151 நாம் கேட்பதற்கு மேலாகக் கொடுக்கும் தகப்பன்!
இதழ்: 1150 உனக்காய்க் காத்திருக்கும் எதிர்காலம்!
யோசுவா: 15:16 ” கீரியாத்செப்பேரைச் சங்காரம்பண்ணிப் பிடிக்கிறவனுக்கு, என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம் பண்ணிக்கொடுப்பேன் என்று காலேப் சொன்னான்.” நாம் கடந்த சில நாட்களாக காலேப் என்கிற உலகத் தகப்பனுடைய அடையாளங்களிலிருந்து நம்முடைய பரலோகத்தகப்பனைப் பற்றி அறிந்து கொண்டிருக்கிறோம். முதலாவதாக தேவனாகிய கர்த்தர் நம்மை உள்ளும் புறமும் ஆராய்ந்து பார்த்து, சிறந்தவைகளைத் தெரிந்து கொள்பவர் என்று அறிந்தோம். இரண்டாவதாக தேவனுடைய அன்பு கடலின் அளவிட முடியாத பரப்பளவுக்கு ஒப்பானது என்று பார்த்தோம். மூன்றாவதாக காலேபிடத்தில் நம் பரம தகப்பனுடைய அடையாளமாக… Continue reading இதழ்: 1150 உனக்காய்க் காத்திருக்கும் எதிர்காலம்!