2 சாமுவேல் 12: 4 அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான். அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்கு சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல், அந்த தரித்திரனுடைய ஆட்டுக் குட்டியைப் பிடித்து அதைத் தன்னிடத்தில்வந்த மனுஷனுக்கு சமையல் பண்ணுவித்தான் என்றான். ஆதியாகமத்தில் நாம் ஆபிரகாமின் குடும்பமும், லோத்தின் குடும்பமும் பலுகிப் பெருகிப்போனதைப் பார்க்கிறோம். இருவரும் பெரிய ஆஸ்தியை சேர்த்துவிட்டனர், அவர்களுடைய ஆடு மாடுகளுக்கு இடம் கொள்ளவில்லை. அதனால் ஆபிரகாம் தன்னுடைய குமாரனைப்போல இருந்த… Continue reading இதழ்: 1456 லோத்தும், தாவீதும் செய்த ஒரே மாதிரி செயல்!
Month: June 2022
இதழ்: 1455 உன்னை முற்றிலும் அறிவார்!
2 சாமுவேல் 12: 4 அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான். அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்கு சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல், அந்த தரித்திரனுடைய ஆட்டுக் குட்டியைப் பிடித்து அதைத் தன்னிடத்தில்வந்த மனுஷனுக்கு சமையல் பண்ணுவித்தான் என்றான். நாத்தான் தாவீதிடம் ஒரு கதையுடன் வந்ததைப் பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது ஏழை, பணக்காரனுடைய கதை! அந்த பணக்காரனிடத்தில் ஒரு வழிப்போக்கன் உணவைத்தேடி வருகிறான். அவன் எந்த வேளையில் வந்தான், எப்படிப்பட்ட நிலையில்… Continue reading இதழ்: 1455 உன்னை முற்றிலும் அறிவார்!
இதழ்: 1454 எண்ணிப்பார் அவர் செய்த உபகாரங்களை!
2 சாமுவேல் 12:4. அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான். அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்கு சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல்..... வீட்டுக்கு விருந்தினராக வந்தவர்களை உபசரிப்பது நம்முடைய நாட்டின் கலாசாரம் அல்லவா? நம்மைப்போல பல தேசங்களில் இந்த கலாசாரம் காணப்படுகிறது. ஒருதடவை நாங்கள் நேபாள தேசத்துக்குப் போனபோது ஏதோ ஒரு கிராம தகராறு காரணமாக எங்களுடைய கார் தலைநகருக்குள் போக அனுமதிக்கப்படவில்லை. இரவு பொழுது போயிற்று! எல்லா ஹோட்டல்களும் நிறைவாகி மூடப்பட்டன! என்ன… Continue reading இதழ்: 1454 எண்ணிப்பார் அவர் செய்த உபகாரங்களை!
இதழ்:1453 இரக்கம் காட்டினால் இரக்கம் பெறுவாய்!
2 சாமுவேல் 12: 3 தரித்திரனுக்குத் தான் கொண்டு வளர்த்த ஒரே ஒரு சின்ன ஆட்டுக்குட்டியைத் தவிர வேறொன்றும் இல்லாதிருந்தது. அது அவனோடும் அவன் பிள்ளைகளோடுங்கூட இருந்து வளர்ந்து, அவன் வாயின் அப்பத்தைத் தின்று, அவன் பாத்திரத்திலே குடித்து, அவன் மடியிலே படுத்துக் கொண்டு, அவனுக்கு ஒரு மகளைப்போல இருந்தது. வேதம் எனக்கு மிகவும் பிரியமான புத்தகமாயிருப்பதின் காரணங்களில் ஒன்று வேதத்தில் காணும் வாழ்க்கை மூலம் நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள் தான்! ஏனெனில் அன்று அவர்கள் வாழ்க்கையில்… Continue reading இதழ்:1453 இரக்கம் காட்டினால் இரக்கம் பெறுவாய்!
இதழ்: 1452 நித்திய வாழ்வு மட்டுமே அழியாதது ! செல்வம் அல்ல!
2 சாமுவேல் 12: 2 ஐசுவரியவானுக்கு ஆடுமாடுகள் வெகு திரளாயிருந்தது. சென்னையில் 2015 ல் வெள்ளம் வந்தபோது தன்னுடைய இரண்டு மாடி வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும், இரண்டு கார்களையும் இழந்த ஒரு தம்பதியர் நாங்கள் ஒருவரையொருவர் இழக்கவில்லையே என்று கடவுளுக்கு நன்றி சொன்னது என் நினைவை விட்டு விலகவில்லை! இன்றைய வேதாகம வசனம் ஆடுமாடுகள் வெகு திரளாயிருந்த ஒரு ஐசுவரியவானைப் பற்றி கூறுகிறது. இவன் வெறும் ஆடுகளை மாத்திரம் வைத்திருந்ததாகவோ அல்லது மாடுகளை வளர்த்தவனாகவோ அல்ல… Continue reading இதழ்: 1452 நித்திய வாழ்வு மட்டுமே அழியாதது ! செல்வம் அல்ல!
இதழ்:1451 நாம் பணக்காரராய் வாழ முடியும்!
2 சாமுவேல் 12: 1 ... ஒரு பட்டணத்தில் இரண்டு மனுஷர் இருந்தார்கள். ஒருவன் ஐசுவரியவான், மற்றவன் தரித்திரன். இன்று நாம் இந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிற கதையைப் படிக்க ஆரம்பிக்கிறோம். இதை முதலில் வாசிக்கும்போது தாவீதிடம் அவன் பத்சேபாளுடன் செய்த பாவத்தையும், உரியாவை கொலை செய்ததையும் குறித்து கண்டிக்கவே இந்தக் கதை சொல்லப்பட்டது என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் இதை முழுதும் வாசித்து முடிக்கும்போதுதான் இந்தக் கதை தாவீதுக்கே சொல்லப்பட்டது போல இருந்தாலும் உங்களுக்காகவும், எனக்காகவுமே… Continue reading இதழ்:1451 நாம் பணக்காரராய் வாழ முடியும்!
இதழ்:1450 தப்பிப் போன குமாரனைத் திருத்தும் தேவன்!
2 சாமுவேல் 12: 1-4 ... ஒரு பட்டணத்தில் இரண்டு மனுஷர் இருந்தார்கள். ஒருவன் ஐசுவரியவான், மற்றவன் தரித்திரன். ஐசுவரியவானுக்கு ஆடுமாடுகள் வெகு திரளாயிருந்தது. தரித்திரனுக்குத் தான் கொண்டு வளர்த்த ஒரே ஒரு சின்ன ஆட்டுக்குட்டியைத் தவிர வேறொன்றும் இல்லாதிருந்தது. அது அவனோடும் அவன் பிள்ளைகளோடுங்கூட இருந்து வளர்ந்து, அவன் வாயின் அப்பத்தைத் தின்று, அவன் பாத்திரத்திலே குடித்து, அவன் மடியிலே படுத்துக் கொண்டு, அவனுக்கு ஒரு மகளைப்போல இருந்தது. அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான்.… Continue reading இதழ்:1450 தப்பிப் போன குமாரனைத் திருத்தும் தேவன்!
இதழ்:1449 அநாதி தேவன் உன்னை அழைக்கும் சத்தம்!!!!
2 சாமுவேல் 12:1 கர்த்தர் நாத்தானைத் தாவீதினிடத்தில் அனுப்பினார். இவன் அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி.... தாவீது, பத்சேபாள் இருவருடைய வாழ்விலும் முக்கியமான ஒரு இடத்தைப் பிடித்தவர் தான் இந்த தேவனுடைய மனுஷனான நாத்தான். இன்றைய வேதாகம வசனம் நமக்கு மூன்று காரியங்களை கூறுகிறது. அனுப்பினார், வந்து, நோக்கி என்ற மூன்று வார்த்தைகளை கவனியுங்கள்! தாவீது பத்சேபாளின் கணவனாகிய உரியாவை நடத்திய விதம் கர்த்தரின் மனதை புண்படுத்தியது. தாவீது செய்த எல்லா அநியாயங்களும் கர்த்தரின் பார்வையில் பட்டன. ஆதலால்… Continue reading இதழ்:1449 அநாதி தேவன் உன்னை அழைக்கும் சத்தம்!!!!
இதழ்:1448 உன்னைக் காணும் கண்கள்!
2 சாமுவேல் 11:27 .... தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பாயிருந்தது. இப்பொழுதெல்லாம் என்னால் எதையும் கூர்ந்து பார்க்கவே முடிகிறதில்லை. அதோ பார் ஒரு அழகான பறவை அந்த மரத்தின் மேல் இருக்கிறது என்று என் கணவர் சொன்னால் மேலே பார்த்துவிட்டு எதையும் காணாமல் கண்களை அகற்றி விடுவேன். ஆனால் நம்முடைய தேவனாகிய கர்த்தர் நாம் பார்ப்பது போல அல்ல, வித்தியாசமாகப் பார்க்கிறார். இதைத்தான் நாம் கர்த்தரின் பார்வையில் என்று வாசிக்கிறோம். கர்த்தரின் பார்வை என்ற… Continue reading இதழ்:1448 உன்னைக் காணும் கண்கள்!
இதழ்:1447 உன் குடும்பம் உனக்கு அடகு வைக்கப்பட்ட பொருளா?
2 சாமுவேல் 11:27 .... தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பாயிருந்தது. எனக்கு நம்முடைய டிவி யில் பார்க்கவே பிடிக்காத ஒரு நிகழ்ச்சி எது என்றால் அது அரசியல்வாதிகளின் பேச்சுதான்.அவர்கள் எந்தக் கட்சியினராகவும் இருக்கட்டும், யாருமே நேரிடையாக ஆம் அல்லது இல்லை என்ற பதிலை சொல்லவே மாட்டார்கள். இந்த குத்துசண்டை வீரர்கள் தலைக்கு வரும் ஆபத்தை கையால் தடுப்பதுபோல சுற்றி வளைத்து பேசுவார்கள். இங்கே வேதம் சுற்றி வளைத்து பேசவில்லை. நேரிடையாக, தாவீது செய்த இந்தக்… Continue reading இதழ்:1447 உன் குடும்பம் உனக்கு அடகு வைக்கப்பட்ட பொருளா?