1 இராஜாக்கள்: 2:1-4 தாவீது தன்னுடைய மரண காலம் சமீபித்தபோது, அவன் தன் குமாரனாகிய சாலொமோனுக்குக் கட்டளையிட்டு சொன்னது: நான் பூலோகத்தார் யாவரும் போகிற வழியே போகிறேன், நீ திடன்கொண்டு புருஷனாயிரு....... மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி, நீ உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும், சாட்சிகளையும் கைக்கொள்ள, அவர் வழிகளில் நடக்கும்படிக்கு அவருடைய காவலைக் காப்பாயாக. தாவீது ராஜாவின் கடைசி நாட்கள் நெருங்கிய வேளையில், அவன் தன் குமாரனாகிய சாலொமோனுக்கு தன்னுடைய சிங்காசனத்தை மட்டும் அல்ல,… Continue reading இதழ்:1521 வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையின் இரகசியம்!
Month: September 2022
இதழ்:1520 உன்னுடைய விலைமதிப்பை நீ அறிவாயா?
1 இராஜாக்கள் 1:15 அப்படியெ பத்சேபாள் பள்ளியறைக்குள் ராஜாவினிடத்தில் போனாள், ராஜா மிகவும் வயது சென்றவனாயிருந்தான்... 1 இராஜாக்கள் படிக்க ஆரம்பித்திருக்கிறோம். இந்த புத்தகம் பெலவீனமாகவும், வயது முதிர்தவராகவும் இருந்த தாவீது ராஜாவுடன் ஆரம்பிக்கிறது. இந்த வேளையில் அவனுடைய குடும்பத்தில் யார் அடுத்ததாக சிங்காசனம் ஏறுவது என்ற சண்டைகள் ஆரம்பித்து விட்டன. அவர்கள் ஒவ்வொருவருக்கும் தகப்பன் தாவீதாக இருந்தாலும் அவர்களுடைய தாய் வேறு என்று நமக்குத் தெரியும். இந்த வேளையில் சாலொமோனின் தாயாகிய பத்சேபாள், தேவனுடைய தீர்க்கதரிசியாகிய… Continue reading இதழ்:1520 உன்னுடைய விலைமதிப்பை நீ அறிவாயா?
இதழ்:1519 இயேசுவே எங்கள் மாலுமியாயிரும்!
1 ராஜாக்கள் 1:1 தாவீது ராஜா வயது சென்ற விர்த்தாப்பியானபோது, வஸ்திரங்களால் அவனை மூடினாலும், அவனுக்கு அனல் உண்டாகவில்லை. தாவீது ராஜாவின் வாழ்க்கையை பல வாரங்கள் நாம் படித்து விட்டோம். இன்று அவருடைய வாழ்வின் கடைசிப் பகுதியைப் பார்க்கிறோம். இன்றைய மருத்துவ மேன்மைகள் இல்லாத அந்த கால கட்டத்தின் வழக்கப்படி ராஜாவிற்கு பணிவிடை செய்யவும், அவனுடைய சரீரத்துக்கு அனல் கொடுக்கவும் சூனேம் ஊராளாகிய அபிஷாகை கொண்டு வந்தார்கள். இது தவறான உறவுக்காக அல்ல என்று வேதம் நமக்கு… Continue reading இதழ்:1519 இயேசுவே எங்கள் மாலுமியாயிரும்!
இதழ்:1518 கர்த்தருடைய செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் உண்டு!
சங்: 51: 8 நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூறும். தேவனாகிய கர்த்தர் ஏன் தாவீதை நேசித்தார்?என்ற தலைப்பின் கடைசி பாகம் இன்று! கடந்த வாரத்தில் கர்த்தர் நம்மோடு பண்ணின உடன்படிக்கையில் மாறாதவர் என்று பார்த்தோம். அவர் வார்த்தை மாறாது! அவர் சொன்ன யாவற்றையும் நிறைவேற்றுவார். இன்று இதை தெளிவாக நம்முடைய மனதில் கொண்டு இந்த வசனத்தை நாம் மறுபடியும் படிக்கப்போகிறோம். தாவீது தான் தேவனாகிய கர்த்தருடன் கொண்டிருந்த அந்த… Continue reading இதழ்:1518 கர்த்தருடைய செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் உண்டு!
இதழ்:1517 ஐயோ! இருதய மாற்று சிகிச்சையா?
சங்: 51: 7 - 11 நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன். என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன். நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூறும். என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.தேவனே சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை… Continue reading இதழ்:1517 ஐயோ! இருதய மாற்று சிகிச்சையா?
இதழ்:1516 அவர் வாக்கு மாறிடாரே! நம்பி வா!
சங்: 51: 9 - 11 என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.தேவனே சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும். தேவனாகிய கர்த்தர் ஏன் தாவீதை நேசித்தார்? என்ற தலைப்பில் இன்று பத்தாவது நாளாகப் படிக்கிறோம். சில வருடங்களுக்கு முன்னால் நானும் என் மகனும் பிஸினஸ் விஷயமாக வெளியூர்… Continue reading இதழ்:1516 அவர் வாக்கு மாறிடாரே! நம்பி வா!
இதழ்:1515 எங்கள் கிணற்று நீரின் ருசி உங்களுக்குத் தெரியுமா?
சங்: 51:8 நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூறும். தேவனாகிய கர்த்தர் தாவீதை ஏன் நேசித்தார்? என்ற தலைப்பின் 9 ம் பாகம் இன்று பார்கிறோம். உலகம் கொடுக்கக்கூடாத சந்தோஷம் ஒன்று உண்டு என்பது என்னைபோல நீஙகளும் அறிவீர்கள் என்று நம்புகிறேன். அதுமட்டுமல்ல இந்த சந்தோஷத்தை உலகம் நம்மிடமிருந்து பறிக்கவும் முடியாது.ஆனால் சில நேரங்களில் நம்முடைய வாழ்க்கையை நாமே ஆளுகை செய்து கொள்ளலாம் அங்கு கர்த்தர் தேவையில்லை என்று நாம்… Continue reading இதழ்:1515 எங்கள் கிணற்று நீரின் ருசி உங்களுக்குத் தெரியுமா?
இதழ்:1514 பரிசுத்தம் பெற உம்மண்டை நிற்கும் பாவி நான்!
சங்:51:7 நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன். என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன். தேவனாகிய கர்த்தர் ஏன் தாவீதை நேசித்தார்? என்பதின் 8 வது பாகம் இன்று. தாவீது இந்த அன்புக் கடிதத்தின் முதல் சில வசனங்களில், தான் வழிதவறிப் போன இந்த நிலையில் கர்த்தருடைய கிருபை தனக்குக் கிடைக்க வேண்டுமென்று கெஞ்சுகிறான். தேவனுடைய மிகுந்த இரக்கங்களால் தன்னை ரட்சிக்க வேண்டுமென்று வேண்டுகிறான். தன்னுடைய பாவத்திலிருந்து முற்றிலும் சுத்திகரிக்கப்பட்டு, தன்னைக் குற்றப்படுத்தும்… Continue reading இதழ்:1514 பரிசுத்தம் பெற உம்மண்டை நிற்கும் பாவி நான்!
இதழ்:1513 ஞானம் என்னும் புத்தகத்தின் முதல் அத்தியாயம்??
சங்:51:6 இதோ உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர். அந்தக்கருணத்தில் ஞானத்தை எனக்கு தெரியப்படுத்துவீர். தேவனாகிய கர்த்தர் ஏன் தாவீதை நேசித்தார்? இன்று ஏழாவது நாளாக இந்தத் தலைப்பில் தியானிக்கிறோம். நாம் கடைசியாக ஏதேன் என்னும் பரிபூரண அழகானத் தோட்டத்தைப் பற்றிப் பார்த்தோம். அந்த அழகிய சுற்றுபுறத்தில் வாழ்ந்தவர்கள் தான் ஆதாமும் ஏவாளும். தேவனாகிய கர்த்தர் அந்தத் தோட்டத்தில் உள்ள எல்லாவற்றையும் அனுபவிக்க அவர்களுக்கு சுதந்தரம் கொடுத்தாலும், ஒரே ஒரு மரத்தின் கனியை மாத்திரம் புசிக்க வேண்டாம் என்றிருந்தார். வேதம்… Continue reading இதழ்:1513 ஞானம் என்னும் புத்தகத்தின் முதல் அத்தியாயம்??
இதழ்:1512 சொந்தம் என்ற பந்தம் கொண்ட பாவம்!
சங்: 51:5 இதோ நான் துர்க்குணத்தில் உருவானேன், என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள். தேவனாகிய கர்த்தர் ஏன் தாவீதை நேசித்தார்? இன்று ஆறாவது நாளாக இந்தத் தலைப்பை தியானிக்கிறோம். பல வருடங்களுக்கு முன்னால் ஈராக் தேசத்தில் ஏதேன் தோட்டம் இருந்தாகக் கருதப்படும் ஒரு இடம் கண்டுபிடிக்கப்பட்டது. ஒருகாலத்தில் இது பச்சையான சதுப்பு நிலமாக இருந்திருக்கக்கூடும் என்பதற்கு அடையாளமாக இந்த இடம் மிகவும் நீர் வளமோடு ஈரமாக இருந்தது. உலகத்தின் இந்த பகுதியில், காய்ந்த பாலைவனங்கள் அதிகமாகக் காணப்படும்… Continue reading இதழ்:1512 சொந்தம் என்ற பந்தம் கொண்ட பாவம்!
