ரூத்: 2: 21 “பின்னும் மோவாபிய ஸ்திரீயான ரூத்; அவர் என்னை நோக்கி, என் அறுப்பெல்லாம் அறுத்துத் தீருமட்டும் நீ என் வேலைக்காரிகளோடே கூடவே இரு என்று சொன்னார் என்றாள்.” இஸ்ரவேல் மக்களை பாவத்தில் விழப்பண்ணிய மோவாபிய பெண்களின் மரபில் வந்த இவள், மோவாபைத் துறந்து, தேவனாகிய கர்த்தரை விசுவாசித்து, அவருக்குத் தன்னை ஒப்புக்கொடுத்ததாள் என்று பார்த்தோம். விசுவாசம் மட்டுமல்லாமல் , தைரியத்தோடு அவள் எடுத்த முடிவால் , கர்த்தர் அவள் வாழ்க்கையில் பெரியத் திட்டங்களை நிறைவேற்றினார். ரூத்தின்… Continue reading இதழ்:1655 முன்னோக்கி செல்வேன்! முன்னோக்கி செல்வேன்!
Month: April 2023
இதழ்:1654 அவர் நடத்தும் பாதையில் நடக்கக் கிருபை!
ரூத்: 1 : 16 “அதற்கு ரூத் : நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக் குறித்து,என்னோடே பேச வேண்டாம்;” தாவீதின் கதையைக்கேளுங்க! பிள்ளைகளே தாவீதின் கதையைக் கேளுங்க! இளைஞன் தாவீது, வீரன் தாவீது, இஸ்ரவேலின் தேவனுக்கு பயந்த தாவீது அந்த தாவீதின் கதையைக் கேளுங்க! இந்தப் பாடல் என் காதுகளில் தொனிக்கும் போதெல்லாம், சின்னத் தாவீது எப்படி எட்டடி உயரமுள்ள பெலிஸ்த வீரனின் முன்னால் கூழாங்கற்களோடு தைரியமாக யுத்தத்துக்கு சென்றானோ, அந்தக் காட்சி… Continue reading இதழ்:1654 அவர் நடத்தும் பாதையில் நடக்கக் கிருபை!
இதழ்:1653 ஒரு புறஜாதி பெண்ணிடம் கண்ட விசுவாசம்!
ரூத்: 2: 11 ” அதற்கு போவாஸ் பிரதியுத்தரமாக; உன் புருஷன் மரணமடைந்த பின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், நீ உன் தகப்பனையும், உன் தாயையும், உன் ஜந்மதேசத்தையும் விட்டு, முன்னே நீ அறியாத ஜனங்களிடத்தில் வந்ததும், எல்லாம் எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது.” சில வருடங்களுக்கு முன்னால் நாங்கள் ஊட்டிக்கு காரில் சென்று கொண்டிருந்தோம். போகும் வழியில் மலைப் பாதையில், சாலையின் இரண்டு பக்கமும் வானுயர்ந்த மரங்கள் நின்றன. அவற்றின் நடுவே வானைத்தொடும் நெருப்பு போல… Continue reading இதழ்:1653 ஒரு புறஜாதி பெண்ணிடம் கண்ட விசுவாசம்!
இதழ்:1652 புதிய ஜீவனைத் தருபவர்!
ரூத்: 4:15 ” அவன் உன் ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவனும், உன் முதிர் வயதிலே உன்னை ஆதரிக்கிறவனுமாயிருக்கக்கடவன்”. நாம் நகோமியுடனும், ரூத்துடனும் நாம் மோவாபை விட்டு, பெத்லெகேமுக்குக் கடந்து வந்தோம். மோவாபின் கசப்பை பின் வைத்து, அவர்கள் அறுவடையின் காலத்தில் பெத்லெகேமில் நுழைந்தவுடன் அவர்களுக்கு போவாஸுடைய தாராளமான கிருபையால் அவனுடைய சுதந்தரத்துக்குள் பிரவேசிக்கும் சிலாக்கியம் கிடைத்தது.அவர்களுடைய பசி, தாகம் தீர்க்கப்பட்டது. அவர்கள் பரலோகப் பிதாவினாலும், போவாஸ் என்னும் இரட்சகராலும் ஆசீர்வதிக்கப்பட்டார்கள். போவாஸ் பட்டணத்து மூப்பரின் முன்பு தனக்கு… Continue reading இதழ்:1652 புதிய ஜீவனைத் தருபவர்!
இதழ்:1651 இது சிந்திக்கும் காலம்!
லேவியராகமம்: 25: 25 ” உங்கள் சகோதரன் தரித்திரப்பட்டு, தன் காணியாட்சியிலே சிலதை விற்றால், அவன் இனத்தான் ஒருவன் வந்து , தன் சகோதரன் விற்றதை மீட்கக்கடவன்”. காலையில் கிழக்கு வெளுத்ததுமே ரூத் எழும்பி விட்டாள். இன்று என்ன நடக்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு அவள் உள்ளத்தில் அதிகமாக இருந்தது. தன்னுடைய நாட்டை விட்டு ஒரு புதிய நாட்டுக்குள், புதிய ஜனத்துக்குள் வந்திருக்கிறாள். அன்று என்ன நடக்கப்போகிறது என்று அறியாதவளாய் ரூத், வேலைக்கு செல்லும் மற்ற பெண்களோடு இணைந்து… Continue reading இதழ்:1651 இது சிந்திக்கும் காலம்!
இதழ்:1651 அந்தோ கல்வாரியில் சிலுவை மரத்தில் தொங்கினார்!
எண்ணா:21:7 அதினால் ஜனங்கள் மோசேயிடத்தில் போய்: நாங்கள் கர்த்தருக்கும் உமக்கும் விரோதமாய்ப் பேசினதால் பாவஞ்செய்தோம்; சர்ப்பங்கள் எங்களைவிட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றார்கள்; மோசே ஜனங்களுக்காக விண்ணப்பம் பண்ணினான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காகத் தம்மைத்தாமே சிலுவை பரியந்தமும் தாழ்த்திய நாள் இன்று! அவர் அன்று பட்ட பாடுகள் அனைத்துமே எனக்காகவே, என்னை இரட்சிப்பதற்காகவே என்று நினைக்கும்போது உள்ளம் நன்றியால் நிரம்பி அவரை இன்னும் அதிகமாக நேசிக்க வேண்டும் என்ற உறுதியைக் கொடுக்கிறது! மூன்று… Continue reading இதழ்:1651 அந்தோ கல்வாரியில் சிலுவை மரத்தில் தொங்கினார்!
இதழ்:1650 ஏமாற்றும் வஞ்சக வார்த்தைகள்!
2 சாமுவேல் 11:7 உரியா அவனிடத்தில் வந்தபோது, தாவீது அவனைப் பார்த்து: யோவாப் சுகமாயிருக்கிறானா, ஜனங்கள் சுகமாயிருக்கிறார்களா யுத்தத்தின் செய்தி நற்செய்தியா என்று விசாரித்தான். இந்த மாய வித்தைகள் செய்பவரைப் பார்த்திருப்பீர்கள். நான் ஹை ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்த போது ஒருவர் வந்து அநேக வித்தைகள் செய்தார். நான் அதில் சற்றும் ஈடுபாடு காட்டாமல் உட்கார்திருந்தேன். அவர் என்னிடம் வந்து தன் கைகளில் இருந்த சீட்டுக் கட்டுகளில் ஒன்றை எடுத்து அதில் ஒரு குறியைப் போட வைத்தார்.… Continue reading இதழ்:1650 ஏமாற்றும் வஞ்சக வார்த்தைகள்!
இதழ்:1649 கள்ளத்தனத்தோடு கூட்டாளியா???
2 சாமுவேல் 11:6 அப்பொழுது தாவீது, ஏத்தியனாகிய உரியாவை என்னிடத்தில் அனுப்பு என்று யோவாபினண்டைக்கு ஆள் அனுப்பினான். சில நேரங்களில் நாம் லேசாக தொடும் சிறிய பொருட்களில் நம்முடைய கை ரேகை அச்சு அதிகமாக பதிந்து விடும் அல்லவா? இதன் அர்த்தம் புரிகிறதா? நான் இன்றைய வசனத்தில் ஒரு எச்சரிக்கை மணி அடிப்பதைப் பார்க்கிறேன். நாம் யாரோடு சேருகிறோம், யாரோடு அதிகமாக இருக்கிறோம் என்பது நமக்கு எவ்வளவு முக்கியம் என்று காட்டுகிறது. கள்ளத்தனத்துக்கு கூட்டாளியாகக் கூடாது. பத்சேபாள்… Continue reading இதழ்:1649 கள்ளத்தனத்தோடு கூட்டாளியா???
இதழ்:1648 எல்லை தாண்டும் அக்கிரம செயல்!
2 சாமுவேல் 11: 4 அவள் அவனிடத்தில் வந்தபோது அவளோடே சயனித்தான். அக்கிரமம் என்ற வார்த்தை நமக்கு பிடிக்காத ஒன்று என்பது எனக்குத் தெரியும். ஆனால் இந்த வார்த்தை வேதத்தில் பல இடங்களில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. ஆதியாகமம்: 6:5 ல் மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்று சொல்கிறது. இந்த வார்த்தை தாவீது பத்சேபாளுடைய வாழ்க்கைக்கு மிகவும் பொருந்தும் என்று நினைக்கிறேன். அக்கிரமம் பெருகின இடத்தை நன்மை இல்லாத இடம் என்று சொல்லாமல், நன்மையே தீமையாக மாறின இடம்… Continue reading இதழ்:1648 எல்லை தாண்டும் அக்கிரம செயல்!
இதழ்:1647 இப்படிக்கூட செய்யலாமா?
2 சாமுவேல்: 11:4 அவள் அவனிடத்தில் வந்தபோது அவளோடே சயனித்தான். நாம் பெரிய வாரம் என்று அழைக்கும் லெந்து நாட்களின் கடைசி வாரத்துக்கு வந்திருக்கிறோம். நமக்குள் மறைந்து காணப்படும் பாவங்களை ஆராய்ந்து அவைகளை அறிக்கை பண்ண உதவவே நாம் வேதத்தின் வெளிச்சத்தில் சிலருடைய வாழ்க்கையை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். இன்றைய வேதாகமப்பகுதியை வாசித்தபோது, சக்திவாய்ந்த பதவி மனிதரை ஊழல் செய்விக்காது. மனிதர் தான் சக்திவாய்ந்த பதவியை ஊழல் பண்ணுகிறார்கள் என்று யாரோ எழுதியது கவனத்துக்கு வந்தது. ஒருகாலத்தில் பக்கத்து… Continue reading இதழ்:1647 இப்படிக்கூட செய்யலாமா?
