2 சாமுவேல் 3:14 .... நான் பெலிஸ்தருடைய நூறு நுனித்தோல்களைப் பரிசமாகக் கொடுத்து, விவாகம் பண்ணின என் மனைவியாகிய மீகாளை அனுப்பிவிடும் என்று சொல்லச் சொன்னான். தாவீது சவுலின் மகளாகிய மீகாளைத் திருமணம் செய்ய சவுல் கேட்டதையெல்லாம் செய்திருந்தான். ஆனால் சவுல் தாவீதைப் பழிவாங்க நினைத்து அவன் மனைவியாகிய மீகாளை வேறொருவனுக்கு விவாகம் செய்திருந்தான். இப்பொழுது சவுல் மரித்த பின் தாவீது தனக்கு நடந்த அநியாயத்தை சரி செய்யப் பார்க்கிறான். இந்த வேளையில் அவனுக்கு ஆறு… Continue reading இதழ்:1646 மற்றவரை அலட்சியப்படுத்தும் பாவம்!
Month: March 2023
இதழ்:1645 சந்தர்ப்பவாதமும் கீழ்ப்படியாமையும் காணப்படுகிறதா?
1 சாமுவேல் 13: 9 அப்பொழுது சவுல்: சர்வாங்கதகனபலியையும் சமாதானபலிகளையும் என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்று சொல்லி, சர்வாங்கதகனபலியைச் செலுத்தினான். நம்முடைய வாழ்க்கையை ஆராய்ந்து தேவனுக்கு பிரியமில்லாத காரியங்கள் நம்மில் காணப்படுமானால் அவற்றை அகற்றிப்போடும்படியாய் சிலருடைய வாழ்வை நாம் படித்துக் கொண்டிருக்கிறோம். சந்தர்ப்பவாதி என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டதுண்டா? சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக உபயோகப்படுத்துபவர்கள் அவர்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசுபவர்களையும்,செயல்படுபவர்களையும் கூட நான் அப்படித்தான் நினைப்பேன். வேதவார்த்தைகளைக் கூட அவர்களுக்கு சாதகமாகத் திறமையாக மாற்றிக்கொள்வார்கள். சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு நான் நடந்துகொள்வேன்… Continue reading இதழ்:1645 சந்தர்ப்பவாதமும் கீழ்ப்படியாமையும் காணப்படுகிறதா?
இதழ்:1644 உன்னை சறுக்கி விடும் செயல்கள் உண்டா?
நியாதிபதிகள்:12: 8,9 அவனுக்குப் பின்பு பெத்லெகேம் ஊரானாகிய இப்சான் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான். அவனுக்கு முப்பது குமாரரும் முப்பது குமாரத்திகளும் இருந்தார்கள். முப்பது குமாரரையும் புறத்திலே விவாகம்பண்ணிக்கொடுத்து, தன் குமாரருக்கு முப்பது பெண்களைப் புறத்திலே கொண்டான். அவன் இஸ்ரவேலை ஏழு வருஷம் நியாயம் விசாரித்தான். சில வருடங்களுக்கு முன்பு நாங்கள் வால்பாறையிலிருந்து திரும்பிய போது, ஒரு பேருந்து எங்களுக்கு வழி கொடுக்காமல் சென்று கொண்டிருந்தது. மழை பெய்ய ஆரம்பித்ததால், நாங்கள் எங்களுடைய காரின் வேகத்தை குறைத்து மெதுவாக… Continue reading இதழ்:1644 உன்னை சறுக்கி விடும் செயல்கள் உண்டா?
இதழ்:1643 உன்னை அடிமைப்படுத்தும் மதுவும் மங்கையும்!
நியாதிபதிகள்: 16:5 அவளிடத்திற்குப் பெலிஸ்தரின் அதிபதிகள் போய்: நீ அவனை நயம் பண்ணி, அவனுடைய மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்றும், நாங்கள் அவனைக் கட்டிச் சிறுமைப்படுத்துகிறதற்கு எதினாலே அவனை மேற்கொள்ளலாம் என்று அறிந்துகொள்; நம்மில் அநேகரை அடிமைப் படுத்திக் கொண்டிருக்கும் இன்னொரு பாவத்தை வேதத்தின் வெளிச்சத்தில் இன்று காண்போம். ஏதேன் தோட்டத்தில் ஒருநாள் சர்ப்பமானவன் ஏவாளின் வருகைக்காகக் காத்துக்கொண்டேயிருந்தான். தனிமையில், தற்காப்பு இல்லாமல் வந்த ஏவாளின் பெலவீனத்தை தாக்கினான்! சர்ப்பம் தந்திரமாக வைத்த வலையில் விழுந்தாள்… Continue reading இதழ்:1643 உன்னை அடிமைப்படுத்தும் மதுவும் மங்கையும்!
இதழ்:1642 திசை மாற வைக்கும் சிற்றின்பங்கள்!
நியாதிபதிகள்: 14: 1 ” சிம்சோன் திம்னாத்துக்குப் போய் திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டு,” நாம் இந்த லெந்து காலத்தில் நம்மிடத்தில் மறைந்து கொண்டிருக்கும் பாவங்களைப் பற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நம்மை ஆராய்ந்து பார்த்து தேவனுக்கு நம்மை முற்றிலும் ஒப்புக்கொடுக்க இந்த நாட்கள் உதவ் இ செய்யும். நாங்கள் ஆந்திராவில் உள்ள கர்நூல் என்ற பட்டணத்தில் பல வருடங்கள் வாழ்ந்தோம். எங்கள் வீட்டுக்கு அருகாமையில் துங்கபத்திரா ஆறு ஓடியது. கடல் போல பரந்திருந்த அந்த… Continue reading இதழ்:1642 திசை மாற வைக்கும் சிற்றின்பங்கள்!
இதழ்:1641 சிந்தையை அடிமைப்படுத்தும் பாவம்!
நியாதிபதிகள் 16: 6, 7 தெலீலாள் சிம்சோனைப் பார்த்து; உன் மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது, உன்னைச் சிறுமைப் படுத்த உன்னை எதினாலே கட்டலாம் என்று நீ எனக்குச் சொல்லவேண்டும் என்றாள். அதற்கு சிம்சோன்; உலராத பச்சையான ஏழு அகணிநார்க் கயிறுகளாலே என்னக் கட்டினால், நான் பலட்சயமாகி, மற்ற மனுஷனைப்போல் ஆவேன் என்றான். பெரியவர்கள் நம் வீடுகளில் அடிக்கடி ‘ஒரு கால்க்கட்டு போட்டால் எல்லாம் சரியாகிவிடும்’ என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம். அவர்கள் திருமண பந்தத்தையே கால்க்கட்டு என்றனர்… Continue reading இதழ்:1641 சிந்தையை அடிமைப்படுத்தும் பாவம்!
இதழ்:1640 பண ஆசை என்ற கொடிய பாவம்!
நியாதிபதிகள்: 16:5 “அவளிடத்திற்குப் பெலிஸ்தரின் அதிபதிகள் போய்: நீ அவனை நயம் பண்ணி, அவனுடைய மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்றும், நாங்கள் அவனைக் கட்டிச் சிறுமைப்படுத்துகிறதற்கு எதினாலே அவனை மேற்கொள்ளலாம் என்று அறிந்துகொள்; அப்பொழுது நாங்கள் ஒவ்வொருவரும் ஆயிரத்து நூறு வெள்ளிக்காசு உனக்குக் கொடுப்போம் என்றார்கள்”. இன்றைய வேதாகமப்பகுதியை வாசிக்கும்போது எப்பொழுதும் பணம் பணம் என்று அலையும் இந்த சமுதாயத்திற்காகவே சிம்சோனின் கதை எழுதப்பட்டது போல எனக்குத் தோன்றியது. நியாதிபதிகள் 16:4 ல் சிம்சோன் தெலீலாளை… Continue reading இதழ்:1640 பண ஆசை என்ற கொடிய பாவம்!
இதழ்:1639 பரியாச வார்த்தைகள் என்னும் பாவம்!
2 சாமுவேல் 6: 20 .. சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதுக்கு எதிர்கொண்டு வந்து, அற்பமனுஷரில் ஒருவன் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போடுகிறதுபோல, இன்று தம்முடைய ஊழியக்காரருடைய பெண்களின் கண்களுக்கு முன்பாகத் தம்முடைய வஸ்திரங்களை உரிந்து போட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எத்தனை மகிமைப்பட்டிருந்தார் என்றாள் அவசர வேலை காரணமாக இரண்டு நாட்கள் இந்த மலரை தொடர முடியாததற்கு வருந்துகிறேன். இந்த லெந்து காலத்தில் நம்மிடம் காணும் பாவங்களை வேதத்தின் வெளிச்சத்தில் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். என்னுடைய சிறிய வயதில்… Continue reading இதழ்:1639 பரியாச வார்த்தைகள் என்னும் பாவம்!
இதழ்:1638 பிறர் மேல் பழிசுமத்தியிருக்கிறாயா?
1 சாமுவேல் : 1:14 ” நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய்? உன் குடியை உன்னைவிட்டு விலக்கு என்றான்.” புண்படுத்தும் வார்த்தைகளைப் பற்றிப் பார்த்த்தோம். இன்று நம்மில் காணப்படும் இன்னொரு பாவத்தைப் பற்றி பார்ப்போம்! தன்னுடைய கணவனின் அன்பைத் தாரளமாகப் பெற்றிருந்தாலும், அவள் மலடியாயிருந்த படியால் ஒவ்வொரு நாளும் பெனின்னாளில் எறியப்பட்ட சொற்களால் மமடிவுற்றிருந்தாள். ஆனாலும் நம்மில் பலரைப் போல் தன்னுடைய வேதனைக்குக் கர்த்தர் தான் காரணம் என்று பழியைப் போடாமல், அவள் தேவனுடைய சமுகத்தில் தன்னை ஒப்படைத்து… Continue reading இதழ்:1638 பிறர் மேல் பழிசுமத்தியிருக்கிறாயா?
இதழ்:1637 ஒருவரை உரசி பற்றவைக்கும் நெருப்பு!
I சாமுவேல்: 1: 10 அவள் போய் மனங்கசந்து மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: அன்று நடந்த சம்பவம் என் உடம்பில் உப்புக் காகிதத்தைக் கொண்டு உரசுவது போல இருந்தது என்று ஒருவர் என்னிடம் கூறியது ஞாபகத்துக்கு வருகிறது. உப்புக் காகிதத்தைக் கொண்டு தேய்த்தால் எவ்வளவு கோடுகள் விழுந்து அந்தப் பொருள் பாழாய்ப் போகுமோ அந்த அளவுக்கு பாதிக்கப் பட்டுவிட்டேன் என்பதே அதின் அர்த்தம். சில நேரங்களில் நாம் பேசும் வார்த்தைகள் எப்படிப் பட்ட நீண்ட பாதிப்பை… Continue reading இதழ்:1637 ஒருவரை உரசி பற்றவைக்கும் நெருப்பு!