நியாதிபதிகள்:13:3,4 “கர்த்தருடைய தூதனானவர் அந்த ஸ்திரீக்குத் தரிசனமாகி, அவளை நோக்கி: இதோ பிள்ளை பெறாத மலடியான நீ கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெறுவாய்.” ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாதபடிக்கும், தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு. மனோவாவின் மனைவி ஒரு உத்தமமானப் பெண். அவளுடையத் தலைமுறையினர் நாற்பது ஆண்டுகள் பெலிஸ்தருக்கு அடிமையாயிருந்தனர். நம்பிக்கையில்லாத தருணத்தில் ஒருநாள் கர்த்தருடைய தூதனானவர் இந்தப் பெண்ணுக்குத் தோன்றி மலடியாயிருந்த அவள் ஒரு பிள்ளை பெறுவாள், அவன் ஒரு விசேஷமான பிள்ளை, கர்த்தருக்கு… Continue reading இதழ்:2515 நம் வாழ்வு முதலில் மாற்றம் காண வேண்டும்!
Month: April 2026
இதழ்:2514 உன் வறண்ட வாழ்க்கையை கர்த்தரிடம் ஒப்புவி! செழிக்கச் செய்வார்!
நியாதிபதிகள்: 13:2,3 “அப்பொழுது தாண் வம்சத்தானாகிய சோரா ஊரானான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பேர் மனோவா, அவன் மனைவி பிள்ளை பெறாத மலடியாயிருந்தாள். கர்த்தருடைய தூதனானவர் அந்த ஸ்திரீக்குத் தரிசனமாகி, அவளை நோக்கி: இதோ பிள்ளை பெறாத மலடியான நீ கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெறுவாய்.” மலடு என்ற வார்த்தைக்கு பயனின்மை, வறண்டது , தரிசுநிலம், என்ற அர்த்தங்களைப் பார்த்தேன். இந்த வார்த்தை பலருடைய வாழ்க்கையில் எவ்வளவு ரணத்தை ஏற்படுத்தியிறது என்பதை அறிவேன். வேதாகமத்தின் காலத்தில்… Continue reading இதழ்:2514 உன் வறண்ட வாழ்க்கையை கர்த்தரிடம் ஒப்புவி! செழிக்கச் செய்வார்!
இதழ்:2513 மலர்ச்செடிகளால் மூடப்பட்ட குழியில் நாம் தவறி விழுவதில்லையா?
நியாதிபதிகள்: 13:1 இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் அவர்களை நாற்பது வருஷமளவும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுத்தார். இன்று நாம் சிம்சோனின் வாழ்க்கையைப் பற்றிப் படிக்க ஆரம்பிக்கிறோம். அடுத்த சில வாரங்கள் நாம் சிம்சோனின் வாழ்க்கையில் முக்கிய இடத்தைப்பிடித்த நான்கு பெண்களைப் பற்றிப் படிக்கப்போகிறோம். ஆதியாகமம் முதல் நாம் படிக்கும்போது வேதம் நமது பார்வையில் ஒரே புத்தகம் போலத் தொடர்ச்சியாய் இருப்பதுதான் எனக்கு இந்த வேதாகமத்தில் மிகவும் பிடித்தது.வேதாகமத்தை கருத்தோடு படிக்கும் உங்கள்… Continue reading இதழ்:2513 மலர்ச்செடிகளால் மூடப்பட்ட குழியில் நாம் தவறி விழுவதில்லையா?
இதழ்:2512 சில நேரங்களில் நம்முடைய சரிவை நம்மாலேயேத் தடுக்க முடிவதில்லை!
நியாதிபதிகள்:12: 8,9 அவனுக்குப் பின்பு பெத்லெகேம் ஊரானாகிய இப்சான் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான். அவனுக்கு முப்பது குமாரரும் முப்பது குமாரத்திகளும் இருந்தார்கள். முப்பது குமாரரையும் புறத்திலே விவாகம்பண்ணிக்கொடுத்து, தன் குமாரருக்கு முப்பது பெண்களைப் புறத்திலே கொண்டான். அவன் இஸ்ரவேலை ஏழு வருஷம் நியாயம் விசாரித்தான். ஒருமுறை முன்பு நாங்கள் வால்பாறையிலிருந்து திரும்பிய போது, ஒரு பேருந்து எங்களுக்கு வழி கொடுக்காமல் சென்று கொண்டிருந்தது. மழை பெய்ய ஆரம்பித்ததால், நாங்கள் எங்களுடைய காரின் வேகத்தை குறைத்து மெதுவாக சென்றோம்.… Continue reading இதழ்:2512 சில நேரங்களில் நம்முடைய சரிவை நம்மாலேயேத் தடுக்க முடிவதில்லை!
இதழ்:2511 வெகு சீக்கிரம் உன் கண்ணீரைத் துடைப்பார்!
நியாதிபதிகள்: 11:38 “அவள் தன் தோழிமார்களோடும் கூடப்போய், தன் கன்னிமையினிமித்தம் மலைகளின்மேல் துக்கங்கொண்டாடி,” இந்தப் புதிய மாதத்தைக் காணச்செய்த தேவனுக்குக் கோடான கோடி ஸ்தோத்திரங்கள்! கடந்த மாதத்தில் நான் கடந்து வந்த கடினமான பாதையில் என் தேவன் என்னோடிருந்ததற்காக அவரை உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஸ்தோத்தரிக்கிறேன்! என்னுடைய பள்ளிப்படிப்பின் கடைசி ஆண்டில் நானும் என்னுடைய நெருங்கிய தோழிகளும் ஒருநாள் முழுவதும் சென்னையை சுற்றிபார்க்கப் புறப்பட்டோம். அந்த நாள் முழுவதும் நாங்கள் சிரித்த சிரிப்பை வாழ்க்கையில் மறக்கவே முடியாது. எல்லாவற்றுக்கும்… Continue reading இதழ்:2511 வெகு சீக்கிரம் உன் கண்ணீரைத் துடைப்பார்!
