Tamil Bible study

இதழ்:2559 அன்றாட வேலைகள் மத்தியில் வேதம் வாசிக்கிறோமா?

1 சாமுவேல் 25:34 ... உனக்குப் பொல்லாப்புச் செய்ய எனக்கு இடம்கொடாதிருக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் ஜீவனைக்கொண்டு மெய்யாய்ச் சொல்லுகிறேன்.. நம்மில் எத்தனை பேர் ஒருநாளில் ஒன்றுக்கு இரண்டு வேலையை செய்துகொண்டு பிள்ளைகளோடு இருக்கக் கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம்?  ஒவ்வொருநாளும் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றுகூட நமக்குத் தெரியவில்லை! நம்முடைய வேலைகளுக்கே நேரம் ஒதுக்கத் தெரியாதபோது வேதம் வாசிப்பதும், ஜெபிப்பதும் நமக்கு சாத்தியமா என்ன? அபிகாயில், தாவீது என்ற இருவரின் வாழ்க்கையிலிருந்து நாம் இன்னொரு பாடம்… Continue reading இதழ்:2559 அன்றாட வேலைகள் மத்தியில் வேதம் வாசிக்கிறோமா?

Tamil Bible study

இதழ்:2558 அவர் மேற்பார்வையிடுவார்! கலங்காதே!

1 சாமுவேல் 25:33 ... என் கையே பழிவாங்காதபடிக்கும், நீ இன்றையதினம் எனக்குத் தடை பண்ணினபடியினால், நீயும் ஆசீர்வதிக்கப்படுவாயாக! ஆலோசனையைக் கொடுப்பதும், ஆலோசனையை ஏற்றுக்கொள்வதும் ஒரு நல்ல உறவுக்கு தேவையான அஸ்திபாரம் என்று அபிகாயில், தாவீதின் வாழ்க்கையிலிருந்து பார்த்தோம். இன்றைய வசனத்தில் தாவீது அபிகாயிலிடம், ' என்னுடைய வாழ்வில் யார் எதற்கு பொறுப்பு என்று சற்று ஞாபகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி அபிகாயில்' என்று கூறுவது போல்  உள்ளது! கண்ணுக்கு கண் என்ற வேத வசனத்தை இறுகப்பிடித்துக் கொண்டு… Continue reading இதழ்:2558 அவர் மேற்பார்வையிடுவார்! கலங்காதே!

Tamil Bible study

இதழ்:2557 உன் ஆலோசனை ஒருவர் மேல் பனி போல் இறங்க வேண்டும்! கல்லைப் போல அல்ல!

1 சாமுவேல் 25:33  நீ சொல்லிய யோசனை ஆசிர்வதிக்கப்படுவதாக; நான் இரத்தம் சிந்த வராதபடிக்கும்..... நீ இன்றைய தினம் எனக்குத் தடை பண்ணினபடியால் நீயும் ஆசிர்வதிக்கப்படுவாயாக! நமக்கு யாராவது யோசனை சொன்னால் நாம் எப்பொழுதும் நல்ல அர்த்தத்தில் எடுத்துக்கொள்வதுண்டா என்று இன்றைய வசனம் என்னை சிந்திக்க வைத்தது. நண்பர்களுக்கு இடையிலாகட்டும், உறவினருக்காகட்டும் ஆலோசனை சொல்வது என்பது ஒரு கடினமான காரியம். அவர்களே யோசித்து நல்ல முடிவு எடுக்கட்டும் நாம் தலையிடக் கூடாது என்றுதான் நினைப்போம். கணவன் மனைவிக்குள்ளும்,… Continue reading இதழ்:2557 உன் ஆலோசனை ஒருவர் மேல் பனி போல் இறங்க வேண்டும்! கல்லைப் போல அல்ல!

Tamil Bible study

இதழ்: 2556 புத்தி உன்னைத் பாதுகாக்கும்!

1 சாமுவேல் 25: 33  நீ சொல்லிய யோசனை ஆசிர்வதிக்கப்படுவதாக. அபிகாயில் சொன்ன யோசனையை தாவீது ஏற்றுக்கொண்டான் என்று பார்த்தோம். இன்றைய வசனத்தைப் படிக்கும்போது தாவீதின் குமாரனாகிய சாலொமோன் நீதிமொழிகளில் கூறியது நினைவிற்கு வந்தது நல்யோசனை உன்னைக் காப்பாற்றும்; புத்தி உன்னைப் பாதுகாக்கும் (நீதி:2:11) எத்தனையோமுறை நாம் பேசிவிட்டு பின்னர் யோசிக்கிறோம். ஆனால் இன்று அபிகாயிலின் வாழ்க்கையின் மூலம், யோசித்தபின்னர் பேசுவதைப் பற்றி வேதத்திலிருந்து அறிகிறோம். நாம் ஒரு காரியத்தைக் குறைவாகப் புரிந்து கொண்டு பேசும்போது என்ன… Continue reading இதழ்: 2556 புத்தி உன்னைத் பாதுகாக்கும்!

Tamil Bible study

இதழ்:2555 இன்று உன் உறவுகளை பெலப்படுத்து!

1 சாமுவேல் 25: 35 அவள் தனக்குக் கொண்டுவந்ததைத் தாவீது அவள் கையிலே வாங்கிக்கொண்டு, அவளைப்பார்த்து; நீ சமாதானத்தோடே உன் வீட்டுக்குப் போ. இதோ நான் உன் சொல்லைக்கேட்டு, உன் முகத்தைப்பார்த்து, இப்படிச் செய்தேன் என்றான். இதை எழுதும்போது ஒரு கட்டிட வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தேன். ஒரு பிளாக்குக்கு மேலாக இன்னொரு பிளாக்கை வைத்து ஒவ்வொரு சுவராக ஒரு கட்டிடம் உருவமைந்தது!  இன்றைய வேதாகமப்பகுதி,  தாவீதுக்கும், அபிகாயிலுக்கும் நடுவே ஏற்ப்பட்ட உறவு, வெற்றிகரமாக கட்டி முடித்த ஒரு… Continue reading இதழ்:2555 இன்று உன் உறவுகளை பெலப்படுத்து!