ரூத்: 1:22 இப்படி நகோமி மோவாபிய ஸ்திரீயான தன் மருமகள் ரூத்தோடுங்கூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவந்தாள்; என் கணவருடைய குடும்பத்தில் எந்த நல்ல காரியங்களிலும் எங்களுக்கு அழைப்பு இருந்ததே கிடையாது. காரணம் நாங்கள் கிறிஸ்தவர்கள் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. கிறிஸ்தவர்கள் என்றாலே தாழ்ந்த ஜாதி என்றும், மேற்கத்திய மதத்தினர் என்றும் எண்ணம் உண்டு! எனக்குத் திருமணமானபோது அவர்கள் என்னிடம் பழகியவிதம் ஏதோ ஒரு அயல்நாட்டுப் பெண்ணை நடத்துவதுபோலத் தான் எனக்கு இருக்கும். இரண்டு அயல்நாட்டு… Continue reading மலர் 7 இதழ்: 532 சாத்தான் நமக்கு வைக்கும் கண்ணி!
Author: Rajavinmalargal
மலர் 7 இதழ்: 531 பற்றிக் கொள்ளும் பசலைக் கொடி போல!
ரூத்: 1: 14 " ரூத்தோ அவளை (நகோமியை) விடாமல் பற்றிக் கொண்டாள். என்னுடைய சிறியத் தோட்டத்தில் ஒரு பசலைக் கொடி வளர்ந்து வருகிறது. அது தானாகவே அருகில் உள்ள ஒரு போகன்வில்லாவை சுற்றி வளைத்துக் கொண்டு படர்ந்து வருகிறது. இன்னும் கொஞ்ச நாளில் அந்த போகன்வில்லாவிடமிருந்து இந்தக் கொடியைப் பிரிக்கவே முடியாது போல உள்ளது! இன்று நான் பசலைக் கொடியைப் பார்த்த போது ரூத் நகோமியைப் பற்றிக் கொண்டாள் என்ற இன்றைய வேதாகம வசனம்… Continue reading மலர் 7 இதழ்: 531 பற்றிக் கொள்ளும் பசலைக் கொடி போல!
மலர் 7 இதழ்:530 கர்த்தரை அறிந்த பெண்களின் சாட்சி!
ரூத் : 1 : 15 அப்பொழுது அவள்: இதோ உன் சகோதரி தன் ஜனங்களிடத்துக்கும் தன் தேவர்களிடத்துக்கும் திரும்பிப் போய் விட்டாளே; நகோமித் தன் மருமக்களைத் திரும்பிப்போங்கள் என்றவுடன் ஏற்பட்ட அழுகை நின்றுவிட்டது! ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து முத்தம் செய்தாயிற்று! ஒர்பாள் மெதுவாகத் திரும்பி மோவாபை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்! தன் ஜனங்களிடத்துக்கும் தன் தேவர்களிடத்துக்கும் திரும்பிப் போய் விட்டாள் என்ற வார்த்தையை நான் ஆழ்ந்து படிக்க ஆவலாகி எபிரேய அகராதிக்கு சென்றேன். அதில் அந்த வார்த்தைகளுக்கு கொடுக்கப்பட்டிருந்த… Continue reading மலர் 7 இதழ்:530 கர்த்தரை அறிந்த பெண்களின் சாட்சி!
மலர் 7 இதழ்: 529 ஓர்பாள் எடுத்த முடிவு தவறா?
ரூத்: 1: 6 "கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் (நகோமி) மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு, தன் மருமக்களோடேகூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து, ரூத்: 1: 7 தன் இரண்டு மருமக்களோடுங்கூடத் தானிருந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்பட்டாள். யூதாதேசத்திற்குத் திரும்பிப்போக அவர்கள் வழிநடக்கையில், " ரூத்: 1: 8 நகோமி தன் இரண்டு மருமக்களையும் நோக்கி: நீங்கள் இருவரும் உங்கள் தாய்வீட்டுக்குத் திரும்பிப்போங்கள்; மரித்துப்போனவர்களுக்கும் எனக்கும் நீங்கள் தயைசெய்ததுபோல,… Continue reading மலர் 7 இதழ்: 529 ஓர்பாள் எடுத்த முடிவு தவறா?
மலர் 7 இதழ்: 528 காயங்களும் தழும்புகளும் ஆறும்!
ரூத்: 1 : 13 "... என் மக்களே கர்த்தருடைய கை எனக்கு விரோதமாயிருக்கிறதினால் உங்கள் நிமித்தம் எனக்கு மிகுந்த விசனம் இருக்கிறது என்றாள்." நாம் நகோமியின் வாழ்க்கையைப் பற்றி படித்துக் கொண்டிருக்கிறோம். அவள் தன் மருமக்களை நோக்கித் தங்கள் குடும்பத்துக்கு திரும்பிப் போகுமாறு கூறியதைப் பார்த்தோம். பிரச்சனைகள், வியாதி, வேதனைகள், ஏமாற்றங்கள்,கடைசியில் மரணம் இவற்றை ஒன்று பின் ஒன்றாய் அனுபவித்த நகோமியின் வாழ்வில் ஏற்பட்ட துன்பங்கள் ஒரு கசப்பான மாத்திரை போல இருந்தது. கணவனையும்,… Continue reading மலர் 7 இதழ்: 528 காயங்களும் தழும்புகளும் ஆறும்!
மலர் 7 இதழ்: 527 இருதயம் வலிமைப் பட ஒரு ஆலோசனை!
ரூத்: 1: 8 - 10 நகோமி தன் இரண்டு மருமக்களையும் நோக்கி: நீங்கள் இருவரும் உங்கள் தாய்வீட்டுக்குத் திரும்பிப்போங்கள்; மரித்துப்போனவர்களுக்கும் எனக்கும் நீங்கள் தயைசெய்ததுபோல, கர்த்தர் உங்களுக்கும் தயை செய்வாராக. கர்த்தர் உங்கள் இருவருக்கும் வாய்க்கும் புருஷனுடைய வீட்டிலே நீங்கள் சுகமாய் வாழ்ந்திருக்கச் செய்வாராக என்று சொல்லி அவர்களை முத்தமிட்டாள். அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அழுது அவளைப் பார்த்து; உம்முடைய ஜனத்தண்டைக்கே உம்முடன் கூட வருவோம் என்றார்கள். என்னுடைய வாழ்வில் நான் இளம் வயதிலேயே ஒன்றுக்கு… Continue reading மலர் 7 இதழ்: 527 இருதயம் வலிமைப் பட ஒரு ஆலோசனை!
மலர் 7 இதழ்: 526 நறுமணம் வீசிய மலர்!
ரூத்: 1: 7 (நகோமி) தன் இரண்டு மருமக்களோடுங்கூடத் தானிருந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்பட்டாள். யூதாதேசத்திற்குத் திரும்பிப்போக அவர்கள் வழிநடக்கையில், " இன்று நான் நகோமியின் வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தபோது பின்வரும் வாசகங்கள் தான் நினைவுக்கு வந்தன! "நாம் வாழும் வாழ்க்கை நாம் பிரசிங்கிக்கிற சிறந்த பிரசங்கம் போன்றது! நம்முடைய வாழ்க்கையின் மூலமாக நாம் என்ன செய்தியை பரப்புகிறோம்! நாம் வார்த்தைகளால் பிரசிங்கிப்பதை ஒருவேளை நம்மை சுற்றியுள்ள மக்கள் விசுவாசியாமல் போகலாம், ஆனால் வாழ்க்கையினால்… Continue reading மலர் 7 இதழ்: 526 நறுமணம் வீசிய மலர்!
மலர் 7 இதழ்: 525 தேவன் திட்டமிட்ட பாதையில்!
ரூத்: 1: 7 (நகோமி) தன் இரண்டு மருமக்களோடுங்கூடத் தானிருந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்பட்டாள். யூதாதேசத்திற்குத் திரும்பிப்போக அவர்கள் வழிநடக்கையில், " சில நாட்களுக்கு முன்பு என்னுடைய வீட்டை சுத்தம் பண்ண ஆரம்பித்தேன். சில நேரங்களில் நாம் எதிர்பார்ப்பதை விட அதிகமாகவே வீட்டில் தேவையில்லாதவைகள் சேர்ந்துவிடுகின்றன. அடுக்கடுக்கான செய்தி தாள்கள் , அப்புறம் படிக்கலாம் என்று சேர்த்து வைத்த மாத இதழ்கள், முக்கியமானவைகள் என்று சேர்த்து வைத்த பலவிதமான விளம்பரங்கள் என்று கழித்துக்கட்ட வேண்டியவை… Continue reading மலர் 7 இதழ்: 525 தேவன் திட்டமிட்ட பாதையில்!
மலர் 7 இதழ்: 524 பொறுமையாயிரு! சோர்ந்து போகாதே!
ரூத்: 1: 6 "கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் (நகோமி) மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு, தன் மருமக்களோடேகூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து, நாம் ரூத் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறோம். அயல் நாட்டில் விதவையாக வாழ்ந்த நகோமி, தன் மருமக்களோடு கூட அப்பத்தின் வீடாகிய பெத்லேகேமுக்கு திரும்பி செல்ல முடிவு செய்தாள் என்று பார்த்தோம். பெண்களுக்கு பொதுவாகவே மனத் தைரியமும், பொறுமையும் அதிகம் என்று நினைப்பவள் நான். சில வருடங்களுக்கு முன்னர் என்னுடைய… Continue reading மலர் 7 இதழ்: 524 பொறுமையாயிரு! சோர்ந்து போகாதே!
மலர் 7 இதழ்: 523 வாழ்வைத் தலைகீழாக்கிய மாற்றம்!
ரூத்: 1 : 6, 7 "கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் (நகோமி) மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு, தன் மருமக்களோடேகூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து, தன் இரண்டு மருமக்களோடுங்கூடத் தானிருந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்பட்டாள். யூதாதேசத்திற்குத் திரும்பிப்போக அவர்கள் வழிநடக்கையில், " பதினேழு வருடங்களுக்கு முன்பு நாங்கள் எங்கள் வாழ்க்கையில் மாற்றத்துக்கான ஒரு முக்கியமான முடிவை எடுத்தோம். வட இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருந்த நாங்கள் இருவருமே வேலையை ராஜினாமா… Continue reading மலர் 7 இதழ்: 523 வாழ்வைத் தலைகீழாக்கிய மாற்றம்!
