ரூத்: 1 : 6 " கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் (நகோமி) மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு, தன் மருமக்களோடேகூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து" நம்முடைய வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை மன அழுத்தத்துக்குள் கொண்டு செல்ல வல்லது என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். விசேஷமாக நம் குடும்பத்தில் ஏற்படும் திடீர் குழப்பங்கள், திடீர் மரணம், திடீர் வியாதி போன்றவை கடலில் திடீரென்று ஏற்படும் புயலுக்கொத்தவை. நகோமி… Continue reading மலர் 7 இதழ்: 522 பஞ்சத்திற்குப் பின் வரும் பெரும் விருந்து!
Author: Rajavinmalargal
மலர் 7 இதழ்: 521 மேக மந்தாரத்திற்கு பின்னால் வரும் வானவில்!
ரூத்: 1: 3 - 5 " நகோமியின் புருஷனாகிய எலிமெலேக்கு இறந்து போனான்;அவளும் அவளுடைய இரண்டு குமாரரும் மாத்திரம் இருந்தார்கள். இவர்கள் மோவாபியரில் பெண் கொண்டார்கள்; அவர்களில் ஒருத்தி பேர் ஒர்பாள், மற்றவள் பேர் ரூத்; அங்கே ஏறக்குறையப் பத்துவருஷம் வாசம் பண்ணினார்கள். பின்பு மக்லோன் கிலியோன் என்னும் அவர்கள் இருவரும் இறந்துபோனார்கள்; அந்த ஸ்திரீ தன் குமாரர் இருவரையும் தன் புருஷனையும் இழந்து தனித்தவளானாள். எலிமெலேக்கு என்னும் எப்பிராத்தான், அப்பத்தின் வீடாகிய பெத்லெகேமிலே பஞ்சம் வந்தபோது,… Continue reading மலர் 7 இதழ்: 521 மேக மந்தாரத்திற்கு பின்னால் வரும் வானவில்!
மலர் 7 இதழ்: 520 உடைந்து போன கனவுகளா?
ரூத்: 1 : 3 " நகோமியின் புருஷனாகிய எலிமெலேக்கு இறந்து போனான்;அவளும் அவளுடைய இரண்டு குமாரரும் மாத்திரம் இருந்தார்கள்." அப்பத்தின் வீடாகிய பெத்லெகேமில் பஞ்சம் ஏற்பட்டதால், எலிமெலேக்குத் தன் குடும்பத்தைக் கூட்டிக்கொண்டு மோவாபை நோக்கி சென்றான் என்று பார்த்தோம். அவன் கண்களில் அக்கரை பச்சையாகத் தோன்றியது. சில வேதாகம வல்லுநர்களின் கணிப்பில் அவர்கள் அங்கேயே குறைந்தது 10 வருடங்கள் தங்கியிருக்கக்கூடும் என்று பார்க்கிறோம். 10 வருடங்கள் என்பது ஒரு குடும்பம் அந்த ஊரில் வசதியாக வாழத்தொடங்க… Continue reading மலர் 7 இதழ்: 520 உடைந்து போன கனவுகளா?
மலர் 7 இதழ்: 519 தாகம் தீர்க்காத கடல் நீர்!
ரூத்: 1: 2 அந்த மனுஷனுடைய பேர் எலிமெலேக்கு, அவன் மனைவியின் பேர் நகோமி, அவனுடைய இரண்டு குமாரரில் ஒருவன் பேர் மக்லோன், மற்றொருவன் பேர் கிலியோன்; யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராகிய எப்பிராத்தியராகிய அவர்கள் மோவாப்தேசத்திற்குப் போய் அங்கே இருந்துவிட்டார்கள். எங்களுடைய திருமண வாழ்க்கையின் முதல் 20 வருடங்கள் நாங்கள் பல மாகாணங்களுக்கு செல்ல வேண்டியதிருந்தது. ஒவ்வொருமுறையும் ஒரு புது ஊருக்கு செல்லும்போது, சாமான்களை பார்சல் பண்ணுவது, வீடு தேடி அலைவது, பிள்ளைகளுக்கு ஸ்கூல் தேடி அலைவது,… Continue reading மலர் 7 இதழ்: 519 தாகம் தீர்க்காத கடல் நீர்!
மலர் 7 இதழ்: 518 பாலும் தேனும் ஓடும் தேசத்தில் பஞ்சமா?
ரூத்: 1: 1 "நியாதிபதிகள் நியாயம் விசாரித்துவரும் நாட்களில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று ". தேசத்திலே கொடிய பஞ்சம்! அத்தியாவசிய பொருட்களுக்குத் தட்டுப்பாடு ! ஒருவேளை நான் அந்த நாட்களில் வாழ்ந்திருந்தேனானால், கர்த்தர் வாக்குத்தத்தம் பண்ணிய கானான் தேசத்தில் எப்படி பஞ்சம் உண்டாகலா? பாலும் தேனும் ஓடும் தேசத்தையல்லவா நமக்குக் கொடுத்தார்? இந்த தேசத்தில் பஞ்சம் உண்டாகும் என்று கர்த்தர் ஒருநாளும் கூறவில்லையே, ஏதோ தவறு நடந்து விட்டது போலும் என்றுதான் எண்ணியிருப்பேன். நீங்கள் எப்படி? கர்த்தரின்… Continue reading மலர் 7 இதழ்: 518 பாலும் தேனும் ஓடும் தேசத்தில் பஞ்சமா?
மலர் 7 இதழ்: 517 இந்த ருசிக்கு இணையேதுமில்லை!
ரூத்: 1: 1 நியாதிபதிகள் நியாயம் விசாரித்து வரும் நாட்களில்... ஞாயிற்றுக்கிழமை காலைதோறும் நாங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் பிரட் டோஸ்ட் பண்ணுவது எனக்கு வழக்கம். இப்பொழுதெல்லாம் 7 வகை தானியங்களால் செய்யப்பட்ட பிரட் கிடைக்கிறது. இரண்டு துண்டு பிரட்டுக்கு நடுவே வேர்க்கடலை பட்டரை தடவி, வாழைப்பழத்தை துண்டுகளாக நறுக்கி வைத்து டோஸ்ட் செய்வது மிகவும் ருசியாக இருக்கும்! இது ருசியாக மட்டும் அல்ல, நன்றாக பசியும் தாங்கும் ஏனெனில் இதில் நமக்குத்தேவையான புரதச் சத்து அதிகம்… Continue reading மலர் 7 இதழ்: 517 இந்த ருசிக்கு இணையேதுமில்லை!
மலர் 7 இதழ்: 516 நம்மை மறவாத தேவன்!
நியாதிபதிகள்: 16: 28 "அப்பொழுது சிம்சோன் கர்த்தரை நோக்கி கூப்பிட்டு: கர்த்தராகிய ஆண்டவரே, நான் என் இரண்டு கண்களுக்காக ஒரே தீர்வையாய்ப் பெலிஸ்தர் கையிலே பழிவாங்கும்படிக்கு இந்த ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும், தேவனே பலப்படுத்தும் என்று சொல்லி.." சில நாட்களுக்கு முன்பு என்னுடன் வேதாகமக் கல்லூரியில் படித்த ஒரு நண்பர் போன் பண்ணினார். 36 வருடங்கள் கழித்து அவருடைய குரலைக் கேட்டபோது என்னால் யார் என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை. நான் உங்களோடு படித்தேனே உங்களுக்கு ஞாபகம்… Continue reading மலர் 7 இதழ்: 516 நம்மை மறவாத தேவன்!
மலர் 7 இதழ்: 515 மெய்யான விடுதலை!
நியாதிபதிகள்: 16: 21 பெலிஸ்தர் அவனைப் பிடித்து, அவன் கண்களைப் பிடுங்கி, அவனைக் காசாவுக்குக் கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைத்துக்கொண்டிருக்க வைத்தார்கள். தெலீலாளின் மடியில் நித்திரை அடைந்த சிம்சோன் தூக்கத்திலிருந்து எழுந்த போது , நம் வாழ்க்கையில் நாம் எடுக்க வேண்டிய முக்கியமான முடிவுகளை நாம் நம் கண்களின் இச்சையின்படி எடுப்போமானால் என்ன நடக்கும் என்று மட்டும் அவனுக்குத் தெளிவாக விளங்கியது! அவன் தெலீலாளின் பிடியில் இருந்தபோது மூன்று காரியங்கள் நடந்தது என்று… Continue reading மலர் 7 இதழ்: 515 மெய்யான விடுதலை!
மலர் 7 இதழ் 514 முடியோடு சேர்ந்து வளர்ந்த பலம்!
நியாதிபதிகள் 16: 22 அவன் தலைமயிர் சிரைக்கப்பட்ட பின்பு திரும்பவும் முளைக்கத் தொடங்கிற்று. சில நேரங்களில் தலைமுடியை சற்று அதிகமாக டிரிம் பண்ணிவிட்டு, ஐயோ அதிகமாக வெட்டிவிட்டோமே, வளர இன்னும் எத்தனை மாதங்கள் ஆகுமே என்று கவலைப்படுவதுண்டு. ஆனாலும் ஆச்சரியப்படும்படியாய் வெட்டிய முடி வளர்ந்து விடுகிறது. அப்படித்தான் நம்முடைய கதாநாயகன் சிம்சோனின் வெட்டிய முடி வளர ஆரம்பித்தது. சிம்சோனின் வாழ்க்கையில் முடி வளர ஆரம்பித்தது சரீரப்பிரகாரமாக அவனுக்குக் கிடைத்த பரிசு மட்டுமல்ல ஆவிக்குரிய பரிசும்தான்! நாம் சிம்சோனின்… Continue reading மலர் 7 இதழ் 514 முடியோடு சேர்ந்து வளர்ந்த பலம்!
மலர் 7 இதழ்: 513 பலவிதமான கட்டுகள்!
நியாதிபதிகள் 16: 6, 7 தெலீலாள் சிம்சோனைப் பார்த்து; உன் மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது, உன்னைச் சிறுமைப் படுத்த உன்னை எதினாலே கட்டலாம் என்று நீ எனக்குச் சொல்லவேண்டும் என்றாள். அதற்கு சிம்சோன்; உலராத பச்சையான ஏழு அகணிநார்க் கயிறுகளாலே என்னக் கட்டினால், நான் பலட்சயமாகி, மற்ற மனுஷனைப்போல் ஆவேன் என்றான். பெரியவர்கள் நம் வீடுகளில் அடிக்கடி 'ஒரு கால்க்கட்டு போட்டால் எல்லாம் சரியாகிவிடும்' என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம். அவர்கள் திருமண பந்தத்தையே கால்க்கட்டு என்றனர்!… Continue reading மலர் 7 இதழ்: 513 பலவிதமான கட்டுகள்!
