ஆதி: 26 ,27 “ஏசா நாற்பது வயதானபோது, ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும் , ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும், விவாகம் பண்ணினான். அவர்கள் ஈசாக்குக்கும், ரேபெக்காளுக்கும் மனநோவாயிருந்தார்கள்.” ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று சொல்வர். சிறு பிராயத்தில் நாம் எப்படி வளர்க்கப்படுகிறோமோ அப்படித்தான் நாம் முதிர்வயதில் இருப்போம். சிறுவயதில் சரியான பாதையில் நடத்தி, பிள்ளைகளை உருவாக்குவது ஒரு தாயின் கடமையல்லவா? பல ஆசிரியர்கள் ஒரு மனிதன் உருவாவதற்கு காரணமாயிருந்தாலும், எல்லாரையும் விட சிறந்த… Continue reading மலர்:1 இதழ்:31 ஐந்தில் அல்ல! ஐம்பதிலா?
Author: Rajavinmalargal
ஜெபக் கூடாரம்!
நம்முடைய ஜெபம் தேவனைக் கிரியை செய்ய வைக்கும்! “ எலியா என்பவன் நம்மைப் போல பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழை பெய்யாதப்படிக்கு கருத்தாய் ஜெபம் பண்ணினான், அப்பொழுது மூன்று வருஷமும், ஆறு மாதமும் பூமியின் மேல் மழை பெய்யவில்லை. மறுபடியும் ஜெபம் பண்ணினான் அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது பூமி தன் பலனைத் தந்தது. ( யாக்கோபு: 5: 17,18) நம்மைப் போல தினசரி பாடுள்ள சாதாரண ஒரு மனிதனின் ஜெபத்துக்கு கர்த்தரை கிரியை… Continue reading ஜெபக் கூடாரம்!
மலர்:1 இதழ்:30 ஒரு தாய் பிள்ளைகளுக்குள்ளே காட்டும் பட்சபாதம்!
ஆதி: 25:23 அதற்கு கர்த்தர்; இரண்டு ஜாதிகள் உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது ; இரண்டுவித ஜனங்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும்: அவர்களில் ஒரு ஜனத்தார் மற்ற ஜனத்தாரைப் பார்க்கிலும் பலத்திருப்பார்கள்; மூத்தவன் இளையவனை சேவிப்பான் என்றார். வீட்டில் அநேக பிள்ளைகளோடு வளர்ந்த சிலர், முதல் பிள்ளைக்குத்தான் அம்மாவிடம் பாசம் கிடைக்கும் கடைசி பிள்ளைக்கும் அதில் பங்குண்டு, ஆனால் நடுவில் உள்ள பிள்ளைகளுக்கு எதுவும் கிடைக்காது என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். சொத்து விஷயங்களில் கூட… Continue reading மலர்:1 இதழ்:30 ஒரு தாய் பிள்ளைகளுக்குள்ளே காட்டும் பட்சபாதம்!
மலர்:1 இதழ்:! 29 அன்று நடந்ததது இன்றுமா?
ஆதி: 25: 20 “ மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்; கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார். அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள்”. மறுபடியும் சரித்திரத்தின் சக்கரங்கள் அதே பாதையில் சுழன்றன! சாராளின் மருமகளாகிய ரெபெக்காள் மலடியாயிருந்தாள். சாராள் எத்தனை வருடங்கள் வேதனையிலும், கண்ணீரிலும், நிந்தனையிலும் காத்திருந்து தன் வாழ்க்கையின் பெரும் பாகத்தை வெறுமையாகவே கழித்தாள் அல்லவா? அதே வேதனை இந்த குடும்பத்தில் மறுபடியும் நேரிட்டது. ஒரே ஒரு வித்தியாசம் என்னவெனில்,… Continue reading மலர்:1 இதழ்:! 29 அன்று நடந்ததது இன்றுமா?
மலர்:1 இதழ்:28 வெற்றியின் சின்னம்!
ஆதி:25:1-2 “ ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரியையும் விவாகம்பண்ணியிருந்தான்” ஆபிரகாம் தன் முதிர் வயதில் கேத்தூராள் என்னும் பெண்ணை மணந்து அவள் மூலமாய் ஆறு குமாரர்களைப் பெற்றான் என்று இந்த வேத பகுதியில் பார்க்கிறோம். ஒருவேளை சாராளை இழந்த தனிமை அவனை இன்னொரு பெண்ணிடம் விரட்டியது போலும். தனிமையை போக்க தேவனைத் தேட வேண்டிய வயதில் பெண்ணைத் தேடினான் ஆபிரகாம். தேவன் ஆபிரகாமைத் தெரிந்து கொண்டு அவனைத் திரளான ஜனத்துக்கு தகப்பனாக்குவேன் என்றார். தன்… Continue reading மலர்:1 இதழ்:28 வெற்றியின் சின்னம்!
மலர்:1 இதழ்:27 இது ஒரு கதையல்ல! சத்தியம்!
ஆதி:24 தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்! ஈசாக்கும், ரெபெக்காளும் திருமணத்தில் ஒன்றிணைந்தனர் என்று பார்த்தோம் அல்லவா? இந்த இடத்தில் வேதம் நமக்கு கற்பிக்கிற மகா பெரிய சம்பவம், மணவாளனாகிய கிறிஸ்துவுடன், மணவாட்டியாகிய நாம் ( திருச்சபை) ஒன்றிணைக்கப்படுவது. இந்த திருமண சம்பவத்தை இன்று நாம் படிப்போம். முதலாவது ஆதி: 24:7 ல் , தந்தையாகிய ஆபிரகாம் தன் ஒரே குமாரனாகிய ஈசாக்குக்கு ஒரு மணவாட்டியை அளிக்க விரும்புகிறதைப் பார்க்கிறோம். இதைப் போலத்தான் பிதாவாகிய தேவன் தன் ஒரே… Continue reading மலர்:1 இதழ்:27 இது ஒரு கதையல்ல! சத்தியம்!
ஜெபக் கூடாரம்!
வானத்திலிருந்து அக்கினியை வரவழைத்த ஜெபம்! “சாலொமோன் ஜெபம் பண்ணி முடிக்கிறபோது, அக்கினி வானத்திலிருந்து இறங்கி , சர்வாங்க தகன பலியையும் மற்ற பலிகளையும் பட்சித்தது ; கர்த்தருடைய மகிமையும் ஆலயத்தை நிரப்பிற்று.” ( II நாளாகமம் : 7:1) ஒரு சாதாரண மனிதனின் ஜெபத்திற்கு கர்த்தர் எவ்விதமாக பதிலளிக்கிறார் பாருங்கள்! வாருங்கள் நம் ஜெபக்கூடாரத்துக்குள்! நாம் நம் தேவைகளை தேவனிடம் ஒப்புக் கொடுத்து ஜெபிப்போம். தேவனுடைய வல்லமையான மகிமையின் பிரசன்னம்… Continue reading ஜெபக் கூடாரம்!
மலர்:1 இதழ்: 25 விசுவாசமுண்டு! பொறுமை எங்கே!
ஆதி: 21: 1 – 7 தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்! நாட்கள் உருண்டோடின! கர்த்தர் வாக்குறைத்த படியே சாராள் மேல் கடாட்சமானார். சாராள் தன் முதிர் வயதிலே கர்ப்பவதியாகி ஆபிரகாமுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். அவள் ஏந்திய பாரம், நிந்தனை, வேதனை, அவமானம், மலடி என்ற பட்டம், ஆகாரினால் வந்த நிந்தை அத்தனைக்கும் முடிவாக ஈசாக்கு பிறந்தான். ஆபிரகாம் என்பதற்கு ‘ திரளான ஜனத்துக்கு தகப்பன்” என்று அர்த்தம். சாராளிடம் அவள் கணவன் பேரைக்… Continue reading மலர்:1 இதழ்: 25 விசுவாசமுண்டு! பொறுமை எங்கே!
மலர்:1 இதழ்: 24 உன் சாட்சி என்ன ஆச்சி?
ஆதி: 19: 3 – 38 தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்! லோத்தின் மனைவி சோதோமை விட்டு பிரிய மனதில்லாமல், திரும்பிப் பார்த்து உப்புத்தூணானாள் என்று நேற்று பார்த்தோம். இஸ்ரவேல் நாட்டிலே உப்புக்கடல் எனப்படுகிற கடல் பகுதியை நாங்கள் பார்க்க சென்ற போது, வழியில் தூரமாய் ஓரிடத்தை காண்பித்து சரித்திரத்தின் படி, இந்த இடத்தில் தான் லோத்தின் மனைவி உப்புத்துணாய் நின்றிருப்பாள் என்று எங்கள் வழிகாட்டி கூறினார். Dead sea என்றழைக்கப்படும் உப்புக் கடல் பகுதியில்… Continue reading மலர்:1 இதழ்: 24 உன் சாட்சி என்ன ஆச்சி?
மலர்:1 இதழ்: 23 காத்துக் கொள் உன் பரம அழைப்பை!
ஆதி: 19: 15 – 29 தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்! லோத்தின் குடும்பம் சோதோமை நோக்கி கூடாரம் போட்டனர், பின்னர் சோதோமுக்குள்ளேயே குடியேறினர் என்று நேற்று பார்த்தோம். லோத்தின் குடும்பத்தை உலகப்பிரகாரமான ஆசைகள் பிணைத்திருந்ததால் அவர்கள் ரோமர்: 12:2 ல் கூறப்பட்டுள்ளது போல ‘இந்த பிரபஞ்சத்துக்குரிய வேஷம்’ தரித்து வாழ்ந்தனர்! ஆனால் அதன் விளைவு என்ன தெரியுமா? அவர்கள் சோதோமில் சம்பாதித்த அத்தனையும் கரியாகிப் போயிற்று. தேவன் அந்தப் பட்டணங்களையும், சமபூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின்… Continue reading மலர்:1 இதழ்: 23 காத்துக் கொள் உன் பரம அழைப்பை!
