Bible Study

மலர் 1 : இதழ் 4 : கைவிடாத தேவன்

  ஆதி 4: 16 - 24      தயவுசெய்து வேதாகமத்தை வாசியுங்கள்!   தேவன் ஆதாமுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது ஒரு மனைவி, ஆனால் லாமேக்கு தேவனுக்கு கீழ்ப்படியாமல் இரண்டு பெண்களை  மணந்து, தேவன் அமைத்த திருமணம் என்கிற புனித அமைப்பை அவமதித்தான் என்று நேற்று பார்த்தோம்.   லாமேக்கின் முதல் மனைவி ஆதாள், யாபாலை பெற்றாள். அவன் கூடாரங்களில் வாசம் பண்ணுகிறவர்களுக்கும், மந்தை மேய்ப்பவர்களுக்கும் தகப்பனானான். அவன் சகோதரன் யூபால் கின்னரக்காரருக்கும், நாதசுரக்காரருக்கும் தகப்பன் என்று வாசிக்கிறோம்.… Continue reading மலர் 1 : இதழ் 4 : கைவிடாத தேவன்

Bible Study

மலர்: 1 இதழ்: 3 கைவிடாத தேவன்

ஆதி: 4: 1 - 25 வேதம் கூறுகிறது ஏவாள் இரு குமாரரைப் பெற்றாள் என்று. அவள் குமாரன், ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், மற்றும் காயீன்  நிலத்தைப் பயிரிடுகிரவனானான். அவர்கள் கர்த்தருக்கு காணிக்கை கொடுக்க வந்த போது,  கர்த்தர் காயீனுடைய காணிக்கையை அங்கீகரிக்காமல் போனதால் அவன் உள்ளம்  ஆபேலின் மேல் பொறாமை கொண்டது. பொறாமையின் விளைவால் ஆத்திரமடைந்த காயீன், தன் சகோதரனைக் கொன்றான். வேதத்தை ஆராய்ந்து பார்க்கும் போது காயீன் தன் குற்றத்துக்காக வருந்தவில்லை, தன் தண்டனைக்காக… Continue reading மலர்: 1 இதழ்: 3 கைவிடாத தேவன்

Bible Study

மலர்: 1 இதழ்: 2 கைவிடாத தேவன்

ஆதி: 5:5   தயவுசெய்து வேதாகமத்தை வாசியுங்கள்! ஏதேன் தோட்டத்தின் நிகழ்வுகளிருந்து நாம் என்ன கற்றுக் கொண்டோம்? ஏவாளின் பெண்மையின் சக்தி ஆதாமை பாவத்துக்குள்ளாகியது என்பதுதான். அதன்பின்பு ஆதாம் 930  வயதுவரை வாழ்ந்தான். ஏவாளும் சுமார் 900 வருடங்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்று தெரிகிறது.  இந்த நீண்ட காலத்தில்  எத்தனை முறை தன்னுடைய கீழ்ப்படியததால் வந்த தண்டனையை நினைத்து குமுறியிருப்பாள். ஒரு நிமிட சோதனைக்கு இடம் கொடுத்ததால் விளைந்த பலனை தன்னுடைய பிள்ளைகள் தலைமுறை தலைமுறையாக அனுபவிப்பதைப் பார்த்து வேதனையுற்றிருப்பாள். … Continue reading மலர்: 1 இதழ்: 2 கைவிடாத தேவன்

Bible Study

மலர் 1 இதழ் 1 கைவிடாத தேவன்

ஆதி: 3:17     தயவுசெய்து வேதாகமத்தை வாசியுங்கள். தேவனால் ஆண்களுக்கு துணையாக படைக்கப்பட்ட பெண்களாகிய நாம் அன்பையும், ஆதரவையும், பாசத்தையும்  அள்ளி வழங்கும் ஆற்றலோடு உருவாக்கப்பட்ட நாம் எவ்வள்ளவு ஜாக்கிரதையுள்ளவர்களாய் தேவன் நமக்கு கொடுத்திருக்கிற தாலந்துகளை ஆக்கும் சக்தியாக பயன்படுத்த வேண்டும். அந்த சக்தியை அழிவிற்கு பயன்படுத்தக்கூடாது என்பதற்கு இந்த வேதாகமப் பகுதியே பாடமாக அமைகிறது. ஒரே ஒரு நிமிடம் ஏதேன் தோட்டத்துக்குள் வாருங்களேன்! ஏவாள் தன கையில் ‘ புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியை தெளிவிக்கிறதற்கு… Continue reading மலர் 1 இதழ் 1 கைவிடாத தேவன்