ஆதி: 34:2-4 “அவளை ஏவியனான ஏமோரின் குமாரனும், அத்தேசத்தின் பிரபுவுமாகிய சீகேம் என்பவன் கண்டு அவளைக் கொண்டுபோய், அவளோடே சயனித்து அவளைத் தீட்டு படுத்தினான். அவனுடைய மனம் யாக்கோபின் குமாரத்தியாகிய தீனாள் மேல் பற்றுதலாயிருந்தது; அவன் அந்தப் பெண்ணை நேசித்து, அந்தப் பெண்ணின் மனதுக்கு இன்பமாய்ப் பேசினான். சீகேம் தன் தகப்பனாகிய ஏமோரை நோக்கி: இந்தப் பெண்ணை எனக்கு கொள்ள வேண்டும் என்று சொன்னான்.” நேற்று நாம், தீனாள் தன் கூடாரத்தின் பாதுகாப்பையும், தேவனின்… Continue reading மலர்:1 இதழ்: 42 நான் எப்படியாவது அடைந்தாக வேண்டும்!
Author: Rajavinmalargal
மலர்:1 இதழ்: 41 மதியற்ற பெண்!
ஆதி:34:1 “ லேயாள் யாக்கோபுக்கு பெற்ற குமாரத்தியாகிய தீனாள் தேசத்துப் பெண்களைப் பார்க்க புறப்பட்டாள்.” நாம் நம் வாழ்க்கையில் என்றாவது தவறான முடிவுகள் எடுத்து பின்னர் அதற்காக மிகவும் வருந்தியதுண்டா? நம்மில் சிலர் திருமணத்தில் கூட அவசர முடிவு எடுத்ததினால், நம் வாழ்நாள் முழுவதும் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கலாம். சிறு காரியங்களில் நாம் எடுக்கிற முடிவுகள் கூட நமக்கு பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். நாம் எடுக்கிற எந்த முடிவும்,… Continue reading மலர்:1 இதழ்: 41 மதியற்ற பெண்!
மலர்:1 இதழ்: 39 தனிமையா? தோல்வியா?
ஆதி: 32: 27, 28 “ அவர் உன் பேர் என்ன என்று கேட்டார்; யாக்கோபு என்றான். அப்பொழுது அவர்; இனி உன் பேர் யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும், தேவனோடும், மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்.” யாக்கோபின் குடும்பத்தார் தேவன் காட்டிய புதிய வாழ்வைத் தேடி,தொடர்ந்து நடந்தனர். அவர்கள் எதிர்காலத்தை எதிர்நோக்கி செல்லும்போது இதோ ஏசா 400 பேர் கொண்ட பெரிய படையோடு யாக்கோபை எதிர்கொண்டு வருகிறான் என்று. யாக்கோபுக்கு தான் ஏசாவை… Continue reading மலர்:1 இதழ்: 39 தனிமையா? தோல்வியா?
அன்பின் சகோதர சகோதரிகளே, கடந்த ஒரு மாத காலமாக வேதாகம தியானத்தை தொடர முடியாதற்கு வருந்துகிறேன். நான் பணி புரியும் நிறுவனத்தின் சார்பாக கௌத்தமாலா என்ற நாட்டுக்கு சென்றதாலும், பின்னர் அங்கிருந்து அமெரிக்கா தேசத்தில் என் மகள் வீட்டுக்கு வந்ததாலும் என்னால் தொடர்ந்து எழுத முடியவில்லை. நான் யோசுவாவின் வாழ்க்கையைப் பற்றித் தொடருமுன் ஒருசில நாட்கள் எனக்கும், மற்றும் பலருக்கும் பிடித்த சில தியானத் துளிகளை மறுபடியும் வெளியிட விரும்புகிறேன். தேவனாகிய கர்த்தர் உங்கள் ஒவ்வொருவருடனும் இருந்து… Continue reading
மலர் 2 இதழ் 164 இதோ பார்! வெற்றி உன் பக்கம்!
யோசுவா: 8:1 நீ பயப்படாமலும், கலங்காமலும் இரு; நீ யுத்த ஜனங்கள் யாவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து ஆயிபட்டணத்தின்மேல் போ, இதோ, ஆயியின் ராஜாவையும், அவன் பட்டணத்தையும், அவன் நாட்டையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன். அமெரிக்கா தேசத்தின் ஆரிசோனா மாநிலத்தில் இருக்கும், ’தி கிராண்ட் கேனன்’ என்ற உலகப்புகழ் பெற்ற மலைக் கணவாயைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உலகத்திலேயே மிகப் பெரிய, மிக அழகான கணவாய் இது என்றால் மிகையாகாது. சிவப்பு நிறத் துணியை மடித்ததுபோல சிவப்புக் கற்களான பாறைகள்… Continue reading மலர் 2 இதழ் 164 இதோ பார்! வெற்றி உன் பக்கம்!
மலர் 2 இதழ் 163 எழுந்திருக்க எனக்கு பெலன் தாரும்!
யோசுவா: 8:1 ”… நீ யுத்த ஜனங்கள் யாவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து ஆயிபட்டணத்தின்மேல் போ,..” என்னுடைய எண்பது வயதான அப்பா படுக்கையில் இருக்கிறார்கள். இருதயக் கோளாரினால் பாதிக்கப்பட்ட அவர்களால் தானாக எழும்பவோ அல்லது எதையும் செய்யவோ முடியாது. இந்திய ராணுவத்தில் இருந்த அவர்களுடைய கைகளில் நல்ல பெலன் இருக்கிறது, மனதில் தைரியம் இருக்கிறது ஆனால் கால்களும், சரீரமும் பெலனிழந்து போய்விட்டன. இரண்டு மூன்று தடவை தானாக எழும்ப முயற்சி செய்ததால் கீழே விழுந்து விட்டார்கள். இன்று காலையில்… Continue reading மலர் 2 இதழ் 163 எழுந்திருக்க எனக்கு பெலன் தாரும்!
மலர் 2 இதழ் 160 தோல்விகள் என்னும் பள்ளத்தாக்கு!
யோசுவா 7:26 ..” அவன்மேல் இந்நாள் வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இப்படியே கர்த்தர் தன் கோபத்தின் உக்கிரத்தை விட்டு மாறினார்; ஆகையால் அவ்விடம் இந்நாள்வரைக்கும் ஆகோர் பள்ளத்தாக்கு என்னப்படும். ஒசியா: 2:15 அவளுக்கு திராட்சத்தோட்டங்களையும், நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்.” நான் முதன்முறையாக ஆகானின் கதையை என்னுடைய சன்டே ஸ்கூலில் கேட்ட ஞாபகம் இருக்கிறது! அன்று எனக்கு பழைய ஏற்பாட்டின் தேவன் மீது அதிக பயம் வந்தது. கடவுள் ஆகானுக்கு மட்டும் அல்ல,… Continue reading மலர் 2 இதழ் 160 தோல்விகள் என்னும் பள்ளத்தாக்கு!
மலர்: 2 இதழ்: 159 ஒளித்து வைக்கப்பட்ட சிற்றின்பம்!
யோசுவா: 7:21 ”கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும், நான் கண்டு அவைகளை இச்சித்து, எடுத்துக்கொண்டேன். இதோ அவைகள் என் கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைந்திருக்கிறது. பலநாட்களாக நாம் ஆகானைப்பற்றி படித்துக்கொண்டிருக்கிறோம். இஸ்ரவேலின் சேனையில் ஒரு போர்வீரனாக, தேவனாகிய கர்த்தரின் சித்தப்படி எரிகோவை அழிக்கப் புறப்பட்ட இந்த வீரன், பொருளாசை என்ற சலனத்துக்கு சற்று இடம் கொடுத்ததால், அவன் நோக்கம் தடுமாறி, கண்களால் கண்ட பொருட்களை இச்சித்து,… Continue reading மலர்: 2 இதழ்: 159 ஒளித்து வைக்கப்பட்ட சிற்றின்பம்!
மலர்: 2 இதழ்: 156 பாவத்தின் நுழைவாயில் நம் கண்களே!
யோசுவா: 7:21 ”கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும், நான் கண்டு……” ஆதி:3:6 அப்பொழுது ஸ்திரியானவள் அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியை தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு…. கர்த்தரால் மனிதனுக்காக உருவாக்கப்பட்ட ஏதேன் தோட்டத்தில் புத்தியை தெளிவிக்கும் என்று ஒரு கனியைக் காட்டி வஞ்சகம் பேசி சாத்தான் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கண்ணி வைத்து தன் வலையில் விழ வைத்தான். நாம்கூட… Continue reading மலர்: 2 இதழ்: 156 பாவத்தின் நுழைவாயில் நம் கண்களே!
மலர்: 2 இதழ்: 155 மிகமிகச் சிறிய சிற்றின்பமும் தவறா??
யோசுவா: 7:20 அப்பொழுது ஆகான் யோசுவாவுக்கு பிரதியுத்தரமாக: மெய்யாகவே நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்; இன்னின்ன பிரகாரமாக செய்தேன். போன வருடம் நவம்பர் 3ம் தேதி, ராஜாவின்மலர்களின் 53 வது இதழாக, ஒரே ஒரு கணம் சிற்றின்பம் தவறா? என்ற தலைப்பில் யோசேப்பின் வாழ்க்கையிலிருந்து எழுதியிருந்தேன். எனக்கு ஆச்சரியமூட்டும் உண்மை என்னவெனில், இந்த ஒருவருட காலமும், மிகவும் அதிகமாக என்னுடைய வாசகர்களால் வாசிக்கப்படுகிற இதழ் அதுவேயாகும். நாம் பாவம் செய்வது தவறு என்று… Continue reading மலர்: 2 இதழ்: 155 மிகமிகச் சிறிய சிற்றின்பமும் தவறா??
