1 சாமுவேல்: 2: 1 "அப்பொழுது அன்னாள் ஜெபம் பண்ணி" அன்னாளின் குடும்ப வாழ்க்கையைப் பற்றியும், ஆவிக்குரிய வாழ்க்கையைப் பற்றியும் சில வாரங்கள் நாம் படித்துக் கொண்டிருக்கிறோம். அன்னாளின் வாழ்க்கையை ஆழமாக படிக்க ஆரம்பித்த எனக்கு அவள் ஆசீர்வாதமாக இருந்தது போல் உங்களுக்கும் இருந்திருப்பாள் என்று நினைக்கிறேன். இன்றிலிருந்து நாம் அன்னாள் என்ற தாயின் குணநலன்களைப் பற்றி படிக்கலாம். அன்னாளின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கும்போது ஜெபமே அவளுடைய வாழ்க்கையில் ஒரு ஆயுதமாக இருந்தது. ஜெபத்துக்கு எவ்வளவு… Continue reading மலர் 7 இதழ்: 571 இன்று தவறினால் நாளை கண்ணீர்!
Author: Rajavinmalargal
மலர் 7 இதழ்: 570 கருமேகங்கள் கடந்த பின்னர் வரும் ஒளி!
1 சாமுவேல் 1:18 " அப்பொழுது அவள்: உம்முடைய அடியாளுக்கு உம்முடைய கண்களிலே தயை கிடைக்கக்கடவது என்றாள்; பின்பு அந்த ஸ்திரீ புறப்பட்டுப்போய், போஜனஞ்செய்தாள்; அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை. ஒருநாள் நான் மேகம் இருட்டிக் கொண்டு வருவதைக் கண்டேன். அந்தக் கரு மேகத்துடன் வந்தது புயல் போன்ற காற்று! மரங்கள் ஒடிந்து விழுவது போல ஆடிக்கொண்டிருந்தபோது வந்தது பெருமழை! அந்த மழையில் நனைந்து கொண்டு சில பறவைகள் மரத்தின் மேல் அமர்ந்திருந்து என் கவனத்தை ஈர்த்தது. சில… Continue reading மலர் 7 இதழ்: 570 கருமேகங்கள் கடந்த பின்னர் வரும் ஒளி!
மலர் 7 இதழ்: 569 உள்ளம் பேசுதலே ஜெபம்!
1 சாமுவேல்: 1: 13 " அன்னாள் தன் இருதயத்திலே பேசினாள்; அவளுடைய உதடுகள் மாத்திரம் அசைந்தது, அவள் சத்தமோ கேட்கப்படவில்லை;" அன்னாள் தன்னுடைய கனவுகள் நொறுங்கிப் போனவளாய், இருதயம் உடைந்தவளாய், தேவனுடைய சமுகத்துக்கு வந்தாள். அவள் மேல் எறியப்பட்ட வார்த்தைகள் அவளை அம்பு போல குத்தின. எந்த மனிதராலும் புரிந்து கொள்ள முடியாத நிலையில் வேதனை நிறைந்தவளாய், கண்களில் நீர் பனிக்க தன் 'இருதயத்திலே பேசினாள் ' என்று பார்க்கிறோம். அன்னாளின் ஜெபத்தைப் பற்றி நாம்… Continue reading மலர் 7 இதழ்: 569 உள்ளம் பேசுதலே ஜெபம்!
மலர் 7 இதழ்: 568 பொருத்தனை என்றாலே பயம்!
1 சாமுவேல் 1: 11 ".... ஒரு பொருத்தனை பண்ணினாள்" பொருத்தனை என்ற வார்த்தையைக் கேட்டவுடன் என் நினைவுக்கு வருவது முரட்டுத்தனமான யெப்தாவின் பொருத்தனைதான் (நியா:11;30 ). நாம் அவனைப் பற்றியும், அவனுடைய பொருத்தனைக்கு பலியான அவன் குமாரத்தியைப் பற்றியும் பல நாட்கள் படித்தோம். பொருத்தனை என்ற வார்த்தை என்னைப் பொருத்தவரையில் சற்று பயமூட்டும் வார்த்தையே. அநேக நேரங்களில் உணர்ச்சிவசமாக நான் இதை செய்ய மாட்டேன், அதை செய்ய மாட்டேன் என்று நாம் கர்த்தரிடம் பொருத்தனை செய்துவிட்டு,… Continue reading மலர் 7 இதழ்: 568 பொருத்தனை என்றாலே பயம்!
மலர் 7 இதழ்: 567 ஐயோ மறதியா?
1 சாமுவேல்: 1: 11 "சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி,.." மறதி! இப்பொழுதெல்லாம் அநேக காரியங்கள் மறந்து போய் விடுகின்றன என்று நான் அடிக்கடி புலம்புவதுண்டு! எதையோ சொல்ல வேண்டும் என்று நினைத்தேனே மறந்து போய் விட்டதே அல்லது எதையோ வாங்க வேண்டும் என்று நினைத்தேனே மறந்து போய் விட்டதே, ஐயோ, அவரை நன்றாகத் தெரியும் பெயர் தான் மறந்து போய் விட்டது! இப்படிபட்ட வாசகங்கள்… Continue reading மலர் 7 இதழ்: 567 ஐயோ மறதியா?
மலர் 7 இதழ்: 566 கண்களின் பனித்துளி ஆத்துமத்தின் வானவில்!
1 சாமுவேல்: 1: 10 அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: அன்னாளிடமிருந்து அந்தரங்க, அர்த்தமுள்ள ஜெபம் செய்வது எப்படி என்று கற்றுக் கொள்ளலாம் என்று சில நாட்களுக்கு முன்னர் யாராவது கூறியிருந்தால் நான் நம்பியிருக்க மாட்டேன். ஆனால் நான் இந்த தியானத்துக்காக வேதத்தைப் படித்த போது அன்னாளின் வாழ்க்கை மூலம் பரம பிதாவிடம் அந்தரங்கமாய் ஜெபிப்பது எப்படி என்று கற்றுக் கொண்டேன். அதனால் நாம் சில நாட்கள் அன்னாளின் ஜெபத்தைப் பற்றி… Continue reading மலர் 7 இதழ்: 566 கண்களின் பனித்துளி ஆத்துமத்தின் வானவில்!
மலர் 7 இதழ்: 565 நாம் நிற்கும் பூமி ஆடிப் போனால்?
1 சாமுவேல் 1: 9 " சீலோவிலே அவர்கள் புசித்துக் குடித்தபின்பு, அன்னாள் எழுந்திருந்தாள்..." நாம் கர்த்தருடைய ஆசாரியனான ஏலியின் பெருந்தன்மையைப் பற்றிப் படித்தோம். இன்றையிலிருந்து சில நாட்கள் நாம் அன்னாள் தேவனுடைய சமுகத்தில் ஏறெடுத்த ஜெபத்தைப் பற்றிப் பார்க்கலாம் "என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்?" (சங்:42:5) என்று கூறிய சங்கீதக்காரனைப் போல என்றாவது உன் வாழ்க்கையில் உன் ஆத்துமா கலங்கியிருக்கிறாயா? அன்னாள் பல நாட்கள் வண்டியில் பிரயாணம் பண்ணி கர்த்தருடைய… Continue reading மலர் 7 இதழ்: 565 நாம் நிற்கும் பூமி ஆடிப் போனால்?
மலர் 7 இதழ்: 564 தவறை ஒப்புக்கொண்டால் அவமானமா?
1 சாமுவேல்: 1:17 "அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்." என்னுடைய 39 வருட ஊழிய அனுபவத்தில் அநேக கிறிஸ்தவ தலைவர்களைப் பார்த்திருக்கிறேன். தவறு செய்தவர்கள் தாங்கள் செய்த தவறை ஒப்புக் கொள்வதே இல்லை ஏனெனில் அவ்வாறு ஒப்புக்கொண்டால் அது தங்களுக்கு அவமானம் என்று நினைக்கின்றனர். அது அவமானம் இல்லை பெருந்தன்மை என்பது யாருக்கும் புரிவதே இல்லை! இந்தத் தவறான எண்ணம் ஏன் நம்மில் அனைவரிடம்… Continue reading மலர் 7 இதழ்: 564 தவறை ஒப்புக்கொண்டால் அவமானமா?
மலர் 7 இதழ்: 563 குற்றம் சாட்டும் விரல்!
1 சாமுவேல் : 1:14 " நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய்? உன் குடியை உன்னைவிட்டு விலக்கு என்றான்." நாம் அன்னாளைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறோம். தன்னுடைய கணவனின் அன்பைத் தாரளமாகப் பெற்றிருந்தாலும், அவள் மலடியாயிருந்த படியால் ஒவ்வொரு நாளும் பெனின்னாளில் எறியப்பட்ட சொற்களால் மமடிவுற்றிருந்தாள். ஆனாலும் நம்மில் பலரைப் போல் தன்னுடைய வேதனைக்குக் கர்த்தர் தான் காரணம் என்று பழியைப் போடாமல், அவள் தேவனுடைய சமுகத்தில் தன்னை ஒப்படைத்து முறையிடுகிறாள் என்று பார்த்தோம். ஒருநிமிடம் அன்னாளின் இடத்தில்… Continue reading மலர் 7 இதழ்: 563 குற்றம் சாட்டும் விரல்!
மலர் 7 இதழ்: 562 உரசினால் சேதம் தான்!
I சாமுவேல்: 1: 10 அவள் போய் மனங்கசந்து மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: ஏதோ ஒரு சம்பவத்தில் யாரோ ஒருவர் சண்டையிடும் போது உபயோகப் படுத்தின வார்த்தைகளைப் பற்றி விளக்கிய ஒருவர் உப்புக் காகிதத்தைக் கொண்டு உரசுவது போல இருந்தது என்று விளக்கியது ஞாபகத்துக்கு வருகிறது. உப்புக் காகிதத்தைக் கொண்டு தேய்த்தால் எவ்வளவு கோடுகள் விழுந்து அந்தப் பொருள் பாழாய்ப் போகும் என்று நமக்குத் தெரியும். சில நேரங்களில் நாம் பேசும் வார்த்தைகள் எப்படிப்… Continue reading மலர் 7 இதழ்: 562 உரசினால் சேதம் தான்!
