1 சாமுவேல் : 1:14 ” நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய்? உன் குடியை உன்னைவிட்டு விலக்கு என்றான்.” நாம் அன்னாளைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறோம். தன்னுடைய கணவனின் அன்பைத் தாரளமாகப் பெற்றிருந்தாலும், அவள் மலடியாயிருந்த படியால் ஒவ்வொரு நாளும் பெனின்னாளில் எறியப்பட்ட சொற்களால் மடிவுற்றிருந்தாள். ஆனாலும் நம்மில் பலரைப் போல் தன்னுடைய வேதனைக்குக் கர்த்தர் தான் காரணம் என்று பழியைப் போடாமல், அவள் தேவனுடைய சமுகத்தில் தன்னை ஒப்படைத்து முறையிடுகிறாள் என்று பார்த்தோம். ஒருநிமிடம் அன்னாளின் இடத்தில் நம்மை வைத்துக்… Continue reading இதழ் 2580 ஆள் காட்டி விரல் ஒருவர் மேல் சுமத்தும் பழி!
Author: Rajavinmalargal
இதழ் 2580 ஆள் காட்டி விரல் ஒருவர் மேல் சுமத்தும் பழி!
1 சாமுவேல் : 1:14 ” நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய்? உன் குடியை உன்னைவிட்டு விலக்கு என்றான்.” நாம் அன்னாளைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறோம். தன்னுடைய கணவனின் அன்பைத் தாரளமாகப் பெற்றிருந்தாலும், அவள் மலடியாயிருந்த படியால் ஒவ்வொரு நாளும் பெனின்னாளில் எறியப்பட்ட சொற்களால் மடிவுற்றிருந்தாள். ஆனாலும் நம்மில் பலரைப் போல் தன்னுடைய வேதனைக்குக் கர்த்தர் தான் காரணம் என்று பழியைப் போடாமல், அவள் தேவனுடைய சமுகத்தில் தன்னை ஒப்படைத்து முறையிடுகிறாள் என்று பார்த்தோம். ஒருநிமிடம் அன்னாளின் இடத்தில் நம்மை வைத்துக்… Continue reading இதழ் 2580 ஆள் காட்டி விரல் ஒருவர் மேல் சுமத்தும் பழி!
இதழ்:2579 உப்புக் காகிதத்தைக் கொண்டு உரசுவது போன்ற வார்த்தைகள்!
I சாமுவேல்: 1: 10 அவள் போய் மனங்கசந்து மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: ஏதோ ஒரு சம்பவத்தில் யாரோ ஒருவர் சண்டையிடும் போது உபயோகப் படுத்தின வார்த்தைகளைப் பற்றிக் கூறிய ஒருவர் அதை , உப்புக் காகிதத்தைக் கொண்டு உரசுவது போல இருந்தது என்று விளக்கியது ஞாபகத்துக்கு வருகிறது. உப்புக் காகிதத்தைக் கொண்டு தேய்த்தால் எவ்வளவு கோடுகள் விழுந்து அந்தப் பொருள் பாழாய்ப் போகும் என்று நமக்குத் தெரியும். சில நேரங்களில் நாம் பேசும் வார்த்தைகள்… Continue reading இதழ்:2579 உப்புக் காகிதத்தைக் கொண்டு உரசுவது போன்ற வார்த்தைகள்!
இதழ்:2578 என் போஜனத்தை புசிக்க மறந்த நாட்கள்!!!!
1 சாமுவேல்: 1: 9,10 “சீலோவிலே அவர்கள் புசித்துக் குடித்தபின்பு அன்னாள் எழுந்திருந்தாள்; ஆசாரியனாகிய ஏலி கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நிலையண்டையிலே ஒரு ஆசனத்தின்மேல் உட்கார்ந்திருந்தான். அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: என்ன குடும்பம் இந்த எல்க்கானாவின் குடும்பம் ! நேசித்து மணந்த அன்னாள் ஒருபுறம்! பிள்ளை பெற்றுக் கொடுக்க மணந்த பெனின்னாள் ஒருபுறம்! பிள்ளைகளை பெற்றுக் கொடுத்தாலும் அவளால், எல்க்கானாவின் மனதில் இடம் பிடிக்க முடியவில்லை, அதனால் அவள் கணவனின்… Continue reading இதழ்:2578 என் போஜனத்தை புசிக்க மறந்த நாட்கள்!!!!
இதழ்:2577 ஜாடைமாடையாய் பேசி யாரை வார்த்தைகளால் குத்துகிறாய்?
1 சாமுவேல்: 1:6 கர்த்தர் அவள் கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளை மிகவும் விசனப்படுத்தினாள். இன்று காலையில் நான் என்னுடைய குடும்பத்திற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்திய போது, ஒரு நல்ல குடும்பத்துக்கான அஸ்திபாரம் போட நாம் எவ்வளவு கடினமாக பாடுபட வேண்டியிருந்தது என்று சிந்தித்தேன். மிகவும் சிறிய சம்பளத்துடம் ஊழியம் செய்த நாட்களில் கூட என்றுமே மற்றவரைப் பார்த்துப் பொறாமைப் படாமல், எங்களிடம் உள்ளதை வைத்து, பிள்ளைகளைப் படிக்க வைத்து, குடும்பத்தை ஒரு… Continue reading இதழ்:2577 ஜாடைமாடையாய் பேசி யாரை வார்த்தைகளால் குத்துகிறாய்?
இதழ் 2576 குடும்பத்தை ஆட்டி வைக்கும் கீறல்!
1 சாமுவேல் 1: 4, 5 ” அங்கே எல்க்கானா பலியிடும் நாளிலே, அவன் தன் மனைவியாகிய பெனின்னாளுக்கும், அவளுடைய எல்லாக் குமாரருக்கும் குமாரத்திகளுக்கும், பங்கு போட்டுக் கொடுப்பான். அன்னாளைச் சிநேகித்தபடியினால், அவளுக்கு இரட்டிப்பான பங்கு கொடுப்பான்.” இந்த புதிய மாதத்தைக் காணச்செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்! இந்த மாதத்தை அவருடைய கிருபையால் காத்து நம்மை வழி நடத்த வேண்டுமென்று ஒரு கணம் ஜெபிப்போம்! சில வருடங்களுக்கு முன்னர் ஒருமுறை என்னுடைய கார் சர்வீஸுக்கு சென்ற போது சஸ்பென்ஷனில்… Continue reading இதழ் 2576 குடும்பத்தை ஆட்டி வைக்கும் கீறல்!
இதழ் 2575 உன் வாழ்வு பயனற்றுக் காணப்படுகிறதா?
1 சாமுவேல் 1: 2 பெனின்னாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள்; அன்னாளுக்கோ பிள்ளை இல்லை. என்னுடைய வாழ்க்கையில் என்றாவது நான் ஒன்றுக்குமே உதவாதவள் என்று எண்ணியிருக்கிறேனா என்ற எண்ணம் தான் எனக்கு இதை வாசித்தவுடன் வந்தது. உங்கள் வாழ்க்கையில் ஏதாவது அப்படி நடந்தது உண்டா? யாராவது உங்களை உதவாக்கரை என்று திட்டியதால் நான் ஒன்றுக்குமே உதவாதவன் அல்லது உதவாதவள் என்ற எண்ணம் வந்திருக்கலாம்.! ஒருவேளை உங்கள் கணவர் உங்களைக் கைவிட்டதாலோ, அல்லது சரீரப்பிரகாரமாக கொடுமை செய்ததாலோ நான் உபயோகப்படுத்தப்… Continue reading இதழ் 2575 உன் வாழ்வு பயனற்றுக் காணப்படுகிறதா?
இதழ்:2574 துணியை அரிக்கும் பூச்சி போன்றது பொறாமை!
1 சாமுவேல்: 1: 2 அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்; ஒருத்திபேர் அன்னாள், மற்றவள்பேர் பெனின்னாள். தமிழில் ‘இக்கரைக்கு அக்கரை பச்சை’ என்னும் பழமொழி ஒன்று உண்டு. நம்மில் பலருக்கு அடுத்தவர் வாழ்க்கையைப் பார்த்து பொறாமைப் பட்டே பழக்கம். பக்கத்து வீட்டு கிணற்றில் உள்ளத் தண்ணீரைப் பார்த்ததும் நம்மில் பலருக்குத் தாகம் எடுக்கும். இங்கு தான் நம்முடைய அன்னாளின் வாழ்க்கை ஆரம்பமாகிறது. ஒரு கணவனை மணந்த இரு பெண்கள் ஒரே வீட்டில் வாழ்ந்ததால் எதுவுமே சம நிலையில்… Continue reading இதழ்:2574 துணியை அரிக்கும் பூச்சி போன்றது பொறாமை!
STUDY ON THE BOOK REVELATION!
"வெளிப்படுத்தலின் காட்சி அமைப்பு " என்றத் தலைப்பில் இன்று காலை மூன்றாவது வீடியோ வெளியாகியுள்ளது! தயவு செய்து இதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! கடினமான இந்தப் புத்தகத்தைப் படிக்க மற்றவருக்கும் நீங்கள் உதவலாம்! Thank you!
இதழ்:2573 இந்தப் பிரச்சனை உனக்கும் உண்டா?
1 சாமுவேல்: 1: 2 அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்; ஒருத்தி பேர் அன்னாள் இரண்டு மனைவிமார்! ஒரு கணவன்! ஒரு குடும்பம்! நான் இதைப்பற்றி சற்று யோசித்தபோது எப்படி ஒரு பெண் தன் கணவனை இன்னொருத்தியோடு பங்கு போட்டுக் கொண்டு ஒரே வீட்டுக்குள் வாழ முடியும் என்று என்னால் சிந்தித்துப் பார்க்கவே முடியவில்லை. என்னைக் கேட்டால், என்னால் நிச்சயமாக இப்படி வாழ முடியவே முடியாது. ஆனால் இன்று பல நாடுகளில், பல குடும்பங்களில் இன்றும் இப்படிப்பட்ட… Continue reading இதழ்:2573 இந்தப் பிரச்சனை உனக்கும் உண்டா?
